மரங்களின் அழிப்பு பற்றியும், மழைப்பொழிவு குறைவிற்கான காரணங்கள் பற்றியும், பூமி வெப்பமயமாதல் பற்றியும் ஏராளமான கட்டுரைகளும், பதிவுகளும் தினமும் இணையங்களில் வெளிவருகின்றன. அவற்றில் பல தெரியாத தகவல்களையும், நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் விரிவாக விளக்கியுள்ளனர். இதில் எனக்கு தெரிந்த ஒரு தகவலையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆடைகள் தயாரிக்க இப்போது செயற்கையிழைகள் அதிகமாக பயன்படுத்தப்படுங்கின்றன. இந்த செயற்கையிழைகள் தயாரிக்கப் பெரும்பாலும் மரக்கூழ்கள்(Wood Pulp) தான் பயன்படுத்தபடுகின்றன். இப்போது செயற்கையிழைகளினால் தயாரிக்கப்படும் ஆடைகளை தான் நாம் அனைவரும் விரும்பி அணிகின்றோம். எனவே செயற்கையிழைகளின் தேவைகள் பலமடங்கு அதிகமாகின்றது. அதற்காக வெட்டப்படும் மரங்களும் அதிகம்.
இந்த செயற்கையிழைகள்(Rayon or Staple Fibre) பலமுறைகளில் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் பைன், புருஸ் மற்றும் ஹெம்லாக்(Pine, Spruce and Hemlock) போன்றமரங்களில் மூலம் தயாரிக்கப்படுகின்றன். மூங்கிலும்(Bamboo) இந்த செயற்கையிழை தயாரிப்பில் முக்கியபங்கு வகிக்கிறது.
இந்த செயற்கையிழையானது 1884-ஆம் ஆண்டு ஹொன்ட் ஹிலாரி டி சார்டோனட்(Count Hilaire de Chardonnet) என்ற பிரஞ்சு நாட்டினரால் நைட்ரோசெல்லுலோஸ்(Nitrocellulose) என்ற வேதியல் பொருளில் இருந்து உருவாக்கினார். பின்பு பிரஞ்சு அரசின் பணஉதவியுடன் உலகின் முதல் செயற்கையிழை தொழிற்கூடத்தையும் உருவாக்கினார். பிற்காலத்தில் இவர் செயற்கையிழையின் தந்தை(Father of Rayon) என்றைழைக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இந்த செயற்கையிழை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஆனது. நாளைடைவில் இந்த செயற்கையிழை தயாரிக்கும் முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு செலவுகளை குறைத்தனர். பெரும்பாலான செயற்கையிழைகள் பின்வரும் மூன்று முறைகளில் தயாரிக்க படுகின்றன.
1)விஸ்கோஸ் ரேயான்(Viscose Rayon)
2)குப்புரோமினியம் ரேயான்(Cuprammonium Rayon)
3)ஸ்பானிபைடு செல்லுலோஸ் அசிடேட்(Saponified Cellulose Acetate)
இந்த செயற்கையிழைகள் தாயாரிக்கும் முறை, உபயோகப்படுத்தும் விதம் மற்றும் அதன் தரத்தினை கொண்டு மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1)ஹய் வெட் மாடியூல் ரேயான்(High wet modulus rayon-HMW)
2)பாலினோஸ் ரேயான்(Polynosic Rayon)
3)ஸ்பெசலிட்டி ரேயான்(Specialty Rayons) இவை இன்னும் சில உட்பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றன.
இந்த செயற்கையிழையால் தயாரிக்கப்ப்டும் சில பொருட்கள்:
1)அணிபவை: பிளவுஸ், துணிகள், ஜாக்கெட், லிங்கரி, லைனின் மெட்டீரியல், ஸ்போட்ஸ் ஆடைகள், சூட்ஸ், டை, வொர்கிங் கிளாத்
2)வீட்டு உபயோகங்கள்: பெட்சீட், பிளாங்க்ட், கர்டெயின், டிராபெரிஸ், சீட்ஸ், ஸ்லிப்கவர்ஸ், டேபிள் கிளாத்
3)இண்டஸ்டிரியல் உபயோகங்கள்: சேப்டி கிளாத்கள், கையுறைகள், மெடிக்கல் மற்றும் சர்ஜரிக்கல் கிளாத்கள்
இந்த செயற்கையிழை தயாரிப்புகள் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதவது இவற்றின் தேவைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் செயற்கையிழை தேவைகளில் 90% தேவையை கீழ்கண்ட பத்து நாடுகள் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றன. 1)சீனா, 2)வெஸ்ட் யூரோப், 3)இந்தியா, 4)இந்தோனேசியா, 5)யு.எஸ்.ஏ, 6)தைவான், 7)துருக்கி, 8)ஜப்பான், 9)தாய்லாந்து, 10)கொரியா.
உலக அளவில் செயற்கையிழை ஏற்றுமதியில் நாம் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். உலக நாடுகளின் செயற்கையிழை தேவைகளில் 26% நாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோம்.
மேலே செயற்கையிழையின் தேவைகளையும், அதன் வகைகளையும் பார்த்தோம். இந்த செயற்கையிழை தயாரிக்க மூலப்பொருள்(Raw Material) மரங்கள்(wood) தான். கீழ்கண்ட செய்முறையை(Process Flow) நீங்கள் பார்த்தால் உங்களுக்கு புரியும்.
வருடத்திற்கு வருடம் இந்த செயற்கையிழையின் தேவைகள் பல மடங்காக அதிகரித்து வருகின்றது. கடந்து ஐந்து வருடங்களில் இதன் தேவைகள் இருமடங்காக உயர்ந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செயற்கையிழையின் தேவைகள் அதிகமானால் அவை தயாரிக்க வெட்டப்படும் மரங்களின் தேவையும் அதிகம் ஆகும்.
சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த செய்தி ஜப்பானில் செயற்கையிழை தயாரிக்க மரங்கள் பற்றக்குறை ஏற்பட்டுள்ளதாம். அவை வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருளான() மரங்களை இறக்குமதி செய்கின்றன.
உலகின் செயற்கையிழை தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் ஆஸ்திரியா நாட்டில் இருந்துதான் தனக்கு தேவையான மரங்களில் 50% இறக்குமதி செய்கின்றது.
செயற்கையிழை தயாரிப்பில் விஸ்கோஸ் ஸ்டேபிள் பைபர்(Viscose Staple Fibre-VSF) என்ற பெயருடன் ஆதித்யா பிர்லா குருப்பின்(Aditya Birla Group) நிறுவனங்கள் இந்தியாவில் நாக்தா(Nagda), கரிகார்(Harihar), கராச்சி(Karach-Gujarat) போன்ற இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு மெட்டீரியல் கேட்டலாக்(Material Catalog) பண்ணும் பிரஜெக்ட்டில் நானும் இருந்தேன். அப்போது அந்த நிறுவனத்திற்கு தேவைதான் மூலப்பொருளான(Raw Material) மரங்களையும் கேட்டலாக் பண்ணினோம். அப்போது தான் இவர்கள் எவ்வளவு மரங்களை அழிக்கிறார்கள் என்று தெரிய முடிந்தது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலான மரங்களை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்வதாக சொன்னார்கள். அங்கு பணி புரிந்த நன்பர் ஒருவர் சொன்னது "வெகுவிரைவில் எங்களுக்கும் மரங்களின் பற்றாக்குறை வரும்" என்பதாகும்.காகிதங்களும் இந்த மரகூழ்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த காகிதங்கள் மீண்டும் மறுசுழற்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த செயற்கையிழைகளால் தயாரிக்கப்படும் ஆடைகள் மறுசுழற்ச்சிக்கு பாயன்படுத்துவது இல்லை என்பதும் ஒரு கவலையான விசயம்.
எனவே இந்த நாகரீக உலகில் நாளொரு மேலாடையும், பொழுதொரு புத்தாடையுமாய் உடுத்துபவர்களே!!!.. இதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:
Post a Comment