Monday, 11 May 2015

ஊட்டி ரோஜா கண்காட்சியில் 30 ஆயிரம் ரோஜா...


கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவர்களை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டு காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து வாசனை திரவிய கண்காட்சி, நாய்கண்காட்சி ஆகியவையும் நடந்தது.
இன்று ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 14–வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 4 ஆயிரம் வகையான 27 ஆயிரம் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகிறது.

இதில் அரியவகை ரோஜாவான பச்சை, நீளம் மற்றும் சிவப்பு, மஞ்சள் இருவண்ண ரோஜாக்கள், பலவண்ண ரோஜாக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ரோஜா கண்காட்சியில் மேடையுடன் கூடிய பரதநாட்டியம் அலங்கார வடிவம் 30 ஆயிரம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் 16 அடி உயரம், 15 அடி நீளம், 8 அடி அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 ஆயிரம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் 7 அடி நீளம், 6 அடி உயரம், 3 அடி அகலத்துடன் குதிரை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆயிரம் மலர்களை கொண்டு 8 அடி நீளம், 6 அடி உயரம், 3 அடி அகலத்துடன் பிரமாண்ட சிங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதே போல் 2 ஆயிரம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் 5 அடி உயரம், 2½ அடி அகலத்துடன் பாண்டா கரடி வடிவம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
அதன் அருகில் நின்று போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.
இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடக்கிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கண்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 30–ம் சிறியவர்களுக்கு ரூ. 15 வீதமும் வசூலிக்கப்படுகிறது.








40 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
2–வது நாளான நேற்று ரோஜா கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ரோஜா பூங்கா முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தான் காணப்பட்டது. 2 நாட்களில் ரோஜா மலர் கண்காட்சியை 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் உடனுக்குடன் போக்குவரத்தை சீரமைத்தனர்.

பரிசளிப்பு விழா
இந்த நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று மாலை 4 மணியளவில் ரோஜா கண்காட்சி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


சர்வதேச பூங்காக்களில் ஒன்றாக தேர்வு
ஊட்டி ரோஜா பூங்காவில் தற்போது 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் செடிகள் உள்ளன. இதில் 120 ரோஜாக்கள் பாராம்பரியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கோடை விழாவின் ஒரு பகுதியாக இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ரோஜா மலர்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த மலர்களை கொண்டு ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தற்போது இந்த மலர்கள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment