Tuesday 26 May 2015

ஒரு வருட மத்திய ஆட்சி பற்றிய மக்கள் கருத்து !! ஒரு சமூக பார்வை...

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைவதையொட்டி, அரசின் சாதனைகள், 
கொள்கைகளை விளக்கி நாடு முழுவதும் 60 நகரங்களில் ஒரு மாத கண்காட்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆட்சியாளர்கள் நன்றாக விளம்பரம் செய்தால் அவர்களுக்கு ஒட்டு கிடைக்கும். உண்மைய சொன்னால் மட்டுமே மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 


1. தூய்மை இந்தியா திட்டம் என்று குப்பையை தெருவில் கொட்டி அதை பெருக்குற மாதிரி செல்பி எடுத்தது நல்ல விளம்பரம். நாட்டில் உள்ள தொழில்சாலை கழிவுகளால் நீர் மாசுபடுகிராது காவேரி கங்கை மாசுபடுகிறது கங்கையை தூய்மை படுத்த சாத்தியம் இல்லை இபோதைக்கு. நிலம் மாசு படுகிறாது நிலத்தடிநீர் மாசு படுகிறது. சோலைவனமான தேனீ மேற்கு தொடர்சிமலையில் நியுற்றினோ திட்டம் சுற்று சூழலை மாசு படுத்தும் திட்டம்.
 2. ருத்ரா வங்கி திட்டம் நல்ல விளம்பரம் மக்களுக்கு என்ன லாபம் அங்கேயும் தாலிய வச்சு தான் கடன் கொடுப்பார்கள். அப்புறம் என்ன வித்தியாசம்.
 3. 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வேலைக்கு செல்லலாம் அந்நிய கம்பனிகளுக்கு 500 ரூபாய் சம்பளத்துக்கு 5 வருட காண்ட்ராக்ட் போட்டு கொத்தடிமையாய் வேலை வாங்கலாம். பெரிய ஆளுங்கள வேலைக்கு வச்சா நிறைய சம்பளம் தரனும் புரியுது யாருக்கு இந்த லாபம்னு. சில லட்சம் கோடிக்கு பட்ஜட் சில லட்சம் கோடி அந்நிய நாட்டிடம் கடன் வாங்குவீர்கள். இதையெல்லாம் வைத்து ஏழை மாணவர்களுக்கு இலவச கல்விளை கொடுக்க முடியல. எதிர்கால தலைமுறையை மூடர்கள் ஆக்கி அடிமைகள் ஆக்க நினைகிறீர்கள். நல்ல கல்வி பெற்ற தலைமுறை இல்லையெனில் நாடு எப்படி சுயமரியாஷையோடு இருக்கும். அடிமையாய் தான் போகும். இங்கே கருத்து சொல்பவர்கள் தன் பிள்ளைகளை கொத்தடிமைகளாக்க விரும்புவார்களா. 
4.வெளிப்படையான லஞ்ச ஊழலை அரசு கம்பனி பங்குகளை தனியாருக்கும் தனியார் கம்பனி பொருளை அரசாங்கம் அதிக விலை கொடுத்து வாங்கவும் இன்னும் பல தனியார்மயம் என்ற பெயரில் கமிசனாக மாற்றி விஞ்ஞான ஊழல் செய்கிறீர்கள். 
5. விலை வாசியை கட்டுபடுத்துவது பற்றி பேசுவதே இல்லை. பெட்ரோல் டிசல் விலையை தாறு மாறாக உயர்த்துவது. ரயில் சரக்கு கட்டணத்தை உயர்த்துவது அப்புறம் எப்படி விலைவாசி குறையும். 6.ரயில்வே துறையில் அந்நிய முதலீடு முதலீடு செய்தவனுக்கு கொள்ளை லாபம் வேண்டும் உங்களுக்கு கமிசன் வேண்டும் இதனால ரயில் கட்டணம் உயர்ந்து மக்களுக்கு தான் வாழ்கை கஷ்டமாகும். புல்லட் ரயில் திட்டமும் இது போன்று தான் ஜப்பான்காரன் கொள்ளை லாபம் கேட்பான் மக்கள் தான் கொடுக்கணும். எல்லாத்துறையிலும் இப்படி தான் அந்நிய உள்நாட்டு கார்பரேட் எல்லாம் முதலீடு என்ற பெயரில் கொள்ளை லாபம் பார்ப்பான் மக்கள் தான் அதை கொடுக்க வேண்டும்.
 6. மருத்துவ காப்பிடு நல்ல வசூல் மட்டுமே. நோயாளி அதை வாக்குரதுக்குள்ள எவ்வளவு பிடித்தம் லஞ்சம். ஏன் இதற்க்கு பதிலாக ஏழை மக்களுக்கு உயர்தர இலவச சிகிச்சை தரலாமே நோய் உள்ளவன் மட்டும் தானே செலவு வைப்பார் செய்யலாமே. 12 ருபாய் பிரிமியம் என்றால் ஒரு 10 பேர் சேர்ந்தாள் வருடத்துக்கு 120 கோடி நல்ல திட்டமிட்ட வசூல்.
 7.பணமுதலைகளுக்கு 5 சதவீத வரி குறைப்பு. இந்த நிதிபத்ரா குறையை சாதாரண மக்கள் மீது தானே போடுவீர்கள் கட்டண உயர்வு என்ற பெயரில். 
8.சாதாரண மக்களுக்கு வருமான வுச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. 
9.சாதார ஏழை மக்களுக்கு நேரடியாக எந்த திட்டமும் பலனும் இல்லை.
 10.ரயில்வே பிளாட்பாரம் கட்டணம் இரட்டிப்பு ரயில் பயண சீட்டு வாங்கினாலும் பிளாட்பாரம் சீட்டு வாக்கியே ஆகணும் என்ன கொடுமைடா இது. 
11.விவசாய மானியம் ரத்து வட்டி கடன் 4 சதவீதத்தில் இருந்து 11 சதவீதம் உயர்வு. அப்புறம் புதிய ருத்ரா வங்கி தொடங்கி என்னபயன். 12. அந்நிய கம்பனிகளுக்கு வரிகள் தளர்வு இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு. 
13. விவசாயிகளுக்கு 24 மணிநேர தொலைக்காட்சி தகவல். நம்ம ஊரு வயலும் வாழ்வும் மாதிரி. 
14. விவசாய நிலங்களை அரசாங்க திட்டம்னு சொல்லி பிடுங்கி அந்நிய மற்றும் உள்நாட்டு கார்பரேட் கம்பனிகளுக்கு கொடுத்து உங்களுக்கு கமிசன் பெறுவது. விவசாயி அடிமையாய் அந்நிய கம்பனியில் வேலை செய்வது. நிலமும் போச்சு உரிமையும் போச்சு அப்புறமா வேலையும் போயி தெருவுல தான் நிக்கணும் எதிர்கால இந்தியா. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான் . 
16.உங்கள் எதிர்கால திட்டங்களை பார்த்தா கொத்தடிமை இந்தியாவை உருவாகுவது போல் இருக்கிறது.
 17. ஒரு வருசத்துல சாதாரண ஏழை மக்களுக்கு திறமையான விளம்பரங்கள் மட்டுமே. நேரடியாக உருப்படியா எந்த திட்டமும் இல்லை. 
18. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் எந்த திட்டமும் இல்லை. இறக்குமதி தான் அதிகரிச்சு இருக்கு அந்நிய கம்பனிகளுக்கு லாபம் நமக்கு பண செலவு அதிகரித்துள்ளது. இதனால் நாணய மதிப்பு சரிந்து கொண்டுபோகிறது.
 19. பெட்ரோல் விலை தான் எல்லா பொருளின் விலையேற்றத்துக்கு காரணம். எனவே அதன் மீது உள்ள எல்லா வரிகளையும் ரத்து செய்தால் விலைவாசியை கட்டு படுத்தலாம்.
 20. எனவே உங்கள் ஆசியில் பொருளாதார வளர்ச்சி இல்லை மக்களை மயக்க கூடிய திறமையான பேச்சும் விளம்பரமும் மட்டும் தான் வளர்ந்துள்ளது....... 


வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்லுறாங்களே எதில விலைவாசி குறைஞ்சு இருக்கு. விவசாய உற்பத்தி பெருகிருக்கானு பாருங்க, மீடியாக்கள் தான் வளர்ச்சின்னு சொல்லுதே தவிரே உண்மையில எந்த மாற்றமும் இல்லை, அரசு தான் மாறிருக்குது. இவருடைய மனைவி பிரச்னை தீர்க்க முடியாதவர் நாட்டு பிரச்னை தீர்த்து விடுவார். 

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மீட்க முடியாமல் போன ஒரு விஷயமே இவர்களுக்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்டி விட்டது...வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்காததும் ஒரு காரணமாக சொல்லலாம்.

மத்திய அரசுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பை வெறும் 20% சுரங்கங்கள் மூலமே 3லட்சம் கோடி உறுதி செய்தது சாதனை இல்லையா ...? இதேபோல் அலைக்கற்றையில் 1 லட்சம் கோடியை உறுதிசெய்துள்ளது சாதனையில்லையா .... ? ஊழல் புழுக்களின் நடுவில் ஊழலற்ற ஆட்சி சாதனையில்லையா.....? ப்ரோக்கர் இல்லாத விமான இறக்குமதி பிரான்சுடன் கயோபமிட்டது சாதனையில்லையா .? கனடாவிடம் 5 ஆண்டுக்கு உரேனிய ஒப்பந்தம் சாதனையில்லையா ..? போர்க்கால அடிப்படையில் எமன் நாட்டில் மக்களை மீட்டது சாதனையில்லையா ....? நேப்பாள பூகம்பத்தில் முதலில்சென்று உலகப்பாராடைப்பெற்றது சாதனையில்லையா ..? மேகின் இந்தியா திட்டத்திற்கு அமெரிக்க ஜெர்மனி சைனா ஜப்பான் நாடுகளுடன் ஒப்பதமிட்டது சாதனையில்லையா ...? 13 கோடி மக்களை வங்கிக்கணக்கில் இணையவைத்தது சாதனையில்லையா ....? அனைத்துக்கும் மேல் நாட்டுக்காக வீட்டைதுறந்த முதல் பிரதமர் என்பது சாதனையில்லையா..? கோடிகளை சுருட்டியவர்களுக்கு மோடி ஒரு கேடி ... புரிந்தும் புரியாதவர்கல்போல் நடிப்பவர்கள் பேடி .... எதிப்பவர்கள் ஜில்லா கேடி மக்களுக்கு அவர் உயிர்நாடி.

நல்லா இருந்த ரோட்டில் குப்பையை கொட்டி வைத்துக்கொண்டு, அதை கூட்டி அள்ளுவதை போல் படம் எடுத்து எல்லா மீடியாவிலும் குடுத்து வெளியிட வைத்து, தாங்கள் தான் இந்தியாவை சுத்தம் செய்ய வந்தவர்கள் என்று நம்ப முயற்சி செய்தபோதே தெரிந்து விட்டது இவர்களது லட்சணம். 60 ஆண்டு காலம் இந்தியா பாழாய் போய் விட்டமாதிரியும் இவர்கள் வந்து தான் சரி செய்யப்போவதாகவும் மக்களை நம்ப வைக்க தான் முயற்சி செய்கிறார்களே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. இதுவரை நிறைவேற்றிய திட்டங்கள் எல்லாம் பெரும்பாலும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தி்ட்டங்கள் தான் என்று சொல்கிறார்கள்.அது, இவர்கள் போட்ட பட்ஜெட்டிலேயே தெரிந்து விட்டது. பேச்சு மட்டும் பிரமாதமாக பேசி, அதை நன்கு விளம்பர படுத்தி தாங்கள் தான் இந்தியாவை காக்க வந்த ரட்சகன் என்று மக்களை நம்ப வைப்பது, ஆர் எஸ் எஸ் காரர்களை போல் அதிரடியாக இறங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவா கொள்கையை புகுத்துவது, ( காந்தி ஒன்றும் தேசப்பிதா அல்ல என்றும் அவரை விட பட்டேலே சிறந்தவர் என்ற தோற்றத்தை உண்டாக்குவது ) சிறிது சிறிதாக சமஸ்கிருதத்தை புகுத்தி எல்லோரையும் வேத காலத்துக்கு அழைத்து செல்ல முயல்வது, குஜராத்தி தொழில் அதிபர்களை மட்டுமே முன்னேற்றி விட முயற்சிப்பது, தான் ஒரு உலக தலைவர் போன்ற தோற்றத்தை வெளிநாட்டு தலைவர்களிடையே ஏற்படுத்த முயல்வது, அடிப்படையான விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தொழில்களை, அதுவும் முக்கிய சில தொழில் அதிபர்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவை தொழில்வžள நாடாக மாற்ற முயற்சிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குவது, போன்ற வேலைகளை தான் இதுவரை மோடி, மோடி அரசு செய்து வந்திருக்கிறது.
காரணங்கள் 
1. ஆங்கில மீடியாக்கள் அனைத்தும் கார்பரேட் வசம் உள்ளது... கார்பரேட் வசம் உள்ள மீடியாக்கள் 60 % க்கும் மேற்பட்ட மார்க்குகள் கொடுக்கிறார்கள் என்றாலே. மோடி அரசு கார்பரேட் ஆதரவு அரசு என்றே தெரிகிறது...

 2. ஒரு அரசால் கார்பரேட்களுக்கு ஆதரவாகவும், சாமானியன் BPL மக்கள் க்கு ஆதரவாகவும் ஒரே நேரத்தில் ஆட்சி புரிய முடியாது.... ஒருவருக்கு நல்லது செய்தால் இன்னொருவரை பகைத்தே ஆக வேண்டும்.. இது உலக நியதி.... 

3. அந்த வகையில் மோடி அரசு சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையில் இருக்கும் அனைத்து கார்பரேட்களுக்கும் ஆதரவாக தான் உள்ளது...இவர்கள் மூலமாக நிச்சயம் 5 கோடி பேர் நேரடியாக அல்லது மறைமுகமாகவும், 25 கோடி இந்திய ஜனம் நேரடியாக அல்லது மறைமுகமாக வேலைவாய்ப்பு மற்றும் ஆதாயங்கள் பெறக்கூடும்.... மீதி உள்ளவர்களில் பல கோடி மக்கள் அரசு சார்ந்த தொழிலில் உள்ளனர்... ஆனால் 60 % மக்கள், கிட்டத்தட்ட 75 கோடி இந்தியர்கள், விவசாயத்தை, சிறு தொழில்களை, சிறு வியாபரத்தை, சுய தொழில்களை, அமைப்பு சாரா தொழில்களை நம்பி இருப்பவர்கள்...

4. .60 % மக்களை அவ்வளவு எளிதாக சிரிக்க வைத்திட முடியாதுதான்.... எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது... இவர்களது செலவினங்கள் குறைய வேண்டும் என்றால், மின்சார கட்டணம், பெட்ரோல் டீசல் விலை குறைய வேண்டும்... ஆனால் இவைகளின் விலைகள் தாறுமாறாக எகிறுவதால், மக்களின் அன்றாட செலவு எகிறுகிறது... அதனால் இவர்கள் அரசின் மானியங்களை எதிர்பார்க்கும் அவல நிலை... இந்த நிலை, காங்கிரஸ் காலத்தில் இருந்தது போலவே தற்போதும் உள்ளது... 

5. மோடியால் உடனடியாக கார்பரேட் களை பகைக்கவும் இயலாது... மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றால், கார்பரேட் களது சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்... அதிக வரி விதிப்பு செய்ய வேண்டும்... அவர்களது கருப்பு பணத்தையும், நிலம் உச்ச வரம்பு சட்டத்தையும் , பினாமி நிலம் பதிவையும் அமுல் படுத்த வேண்டும்.. .. கார்பரேட் களை பகைத்தால் , மீடியாக்கள் அவர்கள் வசம் உள்ளதால், அவர்கள் அரசையே புரட்டி போட்டு விடுவார்கள்.. [ ஒரு கார்பரேட் கம்பனி வைத்த வரி பாக்கியை கட்ட சொன்னதால் கேஜ்ரிவால் படும்பாடு அனைவரும் அறிந்ததே ]... மத்திய அரசு வருமானம் பெருக விளைஎன்றால் எந்த வளர்ச்சி பணியும் செய்ய இயலாது....மோடி, நிலகரி சுரங்க ஏலம் மூலம் 3 லட்சம் அரசு கஜானாவில் சேர்த்ததாக சொல்கிறார்....சந்தோசம்...அந்த பணம் எப்படி செலவாகிறது?...அதன் மூலம் என்ன வளர்ச்சி பணிகள் செய்ய திட்டம் உள்ளது என்பதனையும் மக்களுக்கு சொல்லலாமே?.....

6. ஒருவேளை மோடி , ராஜயசபாவில் மெஜாரிட்டி கிடைக்கும் வரை அமைதியாக இருக்கிறாரோ என்றும் நினைக்கலாம்... UP , பிகார், போன்றவற்றில் மேஜாரிட்டியும், தமிழகம், வங்கம் போன்றவற்றில் இணக்கமான அரசும் வரும் தேர்தல்களில் அமையும் பட்சத்தில், ராஜயசபாவில் மெஜாரிட்டி கிடைக்கும் , அதன் பின் அதிரடியை ஆரம்பிக்கலாம் என்று மோடி நினைத்தாலும் அதுவும் நடக்காது... மோடி அரசின் தற்போதைய கார்பரேட் ஆதரவு ஆட்சியினால், UP ,மற்றும் பிகாரில் எதிர் கட்சிகள் ஈசியாக ஆட்சிக்கு வந்து விடும்... 

7, உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போல, உள்ளது மோடியின் நிலைமை... நமது நாட்டின் ஜனநாயகம் , மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் தான் நமக்கு எதிரியாகவும் சில நேரம் உள்ளது... 

8, சர்வ அதிகாரம் படைத்த கம்யுனிசம் குறைந்தது ஒரு 20 வருடங்களுக்கு நமக்கு தேவை...அப்போது தான் நாட்டை வளபடுத்த முடியும் என்பது எனது எளிமையான கருத்து....[ மோடியிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது " அதுக்கும் மேல " ..

இந்திய விவசாய நாடு. விவசாயத்தை மேம்படுத்துகிறோம் என்று மோடி அரசு சொல்கிறது. எனக்கு தெரிந்து விவசாயத்திற்கு ஒரு டிவி சேனல் தொடங்கியதை தவிர வேறனொன்றும் செய்ததாக தெரியவில்லை. கேஷ் சிலிண்டர் மானியத்தில் நம்முடைய பணத்தை வாங்கி, நம்மிடமே திருப்பி கொடுப்பது என்ன மானியமோ....ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொண்டதற்கு ஒரு மத்திய அமைச்சர்கூட கண்டனம் தெரிவிக்கவில்லை...சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 2000 கோடியில் சிலை வைக்கிறார்கள்...இந்த பணத்தில் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்....இந்த ஒரு வருடத்தில் 18 முறை வெளிநாட்டு பயணம் செய்திருக்கிறார் மோடி அவர்கள்..இதன் மூலம் நாட்டுக்கு கிடைத்த பயன் என்ன...?

இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு எந்த நன்மையையும் கிடைக்கபோவதில்லை. மாறாக பண முதலைகள் மட்டுமே மேலும் மேலும் வளர்ச்சியடைவார்கள். ஏழை ஏழையாகவே இருக்க வேண்டியது தான். எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் தான்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment