Saturday, 16 December 2017

சாகர் மாலா திட்டம் ஒரு பேரழிவுக்கான திட்டம் !!

No automatic alt text available.2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'சாகர்மாலா' எனும் திட்டம் தற்போது மத்திய அரசால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டம் என்பது துறைமுக மேம்பாட்டுத் திட்டம். தொலைநோக்கு திட்டங்களின் அடிப்படையில் துறைமுகங்களை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வர்த்தகத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். துறைமுக மேம்பாடு தவிர, துறைமுகத்தோடு இரயில் பாதை இணைப்பு, விமான போக்குவரத்து, நீர்வழி இணைப்பு ஆகியவை உருவாக்கப்படும். இதில் குளிர்பதனக் கிடங்குகளும், பொருட்கள் சேமிக்கும் கிடங்குகளும் அடக்கம். இந்தத் திட்டத்தின் மதிப்பு 70 ஆயிரம் கோடி. குஜராத் முதல் ஒரிசா வரை உள்ள கடற்கரைகளில் செயல்படுத்தப்போகும் திட்டம்தான், சாகர்மாலா. இதன் மூலம் பழைய துறைமுகங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாக சில துறைமுகங்கள் நிறுவப்படும். தமிழ்நாட்டுக் கடலோர எல்லையில் இணையத்திலும், சீர்காழியில் தொழிற்சாலை பூங்காக்களும் நிறுவப்படும் என சாகர்மாலா திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் கடலோர மாநிலங்களில் இருந்து மீனவ சமுதாய பேரவையின் முக்கிய தலைவர்கள், பொறுப்பாளர்கள், துறைமுக எதிர்ப்பாளர்கள் எனப் பலர் தலமை தாங்க சாகர்மாலா திட்டத்தை எதிர்த்து நீரோடி முதல் சென்னை வரை பேரணி நடைபெற்றது.




சாகர் மாலா திட்டம் ஒரு பேரழிவுக்கான திட்டம் என்று ஏன் கூறுகிறோம்?


1.திட்டத்தின் மைய மற்றும் முதன்மை நோக்கமே கப்பல் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டும்தான். மற்ற எந்த நோக்கமும் கிடையாது. இதற்காக ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைப்பதாகும்.

2.கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கீழ் வசப்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.


3.கடற்கரைகளில் ஸ்மார்ட் நகரங்கள் மட்டும் அமைக்கப்படும்.

4.சாகர் மாலாவிற்காக லட்சக்கணக்கான கடற்கரை மற்றும் நீர் நிலைகள் மற்றும் நதிகளை ஒட்டியும் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.

5.கடற்கரை கிராமங்கள் மற்றும் நகரங்களில் பாரம்பரியமாக வாழும் மீனவர்கள், உள்நாட்டு நீர் வழித்திட்டங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் முழுமையாக விரட்டியடிக்கப்படுவார்கள்.

6.கடலிலும் கடற்கரைகளிலும் உள்நாட்டு நீர் நிலைகளிலும் உள்ள சூழல் அமைப்பு நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட முழுமையாக எண்ணற்ற சரக்குகளின் போக்குவரத்தினால் மீட்க முடியாதபடி நாசமடையும்.

7.இடைவிடாத சரக்கு போக்குவரத்துடன் ஏற்படுத்தும் சூழல் மாசினால் மீன் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் அழியும் அபாயம் ஏற்படும்.

8.லட்சக்கணக்கான கடற்கரை மீனவர்கள் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

9.நாடு முழுவதும் கடற்கரை மாநிலங்கள், நதிகள் மற்றும் நீர் நிலைகள் உள்ள மாநிலங்களின் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருளாதாரம் அடியோடு சீர்குலையும். லட்சக்கணக்கான மீனவர்களும் விவசாயிகளும் இடம் பெயருவதைத்தவிர வேறு வழியில்லாததால் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக மாறுவதை நோக்கி தள்ளப்படுவார்கள்.

10.சாகர்மாலா தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை சார்ந்து தொடங்கப்படுவதால் நாட்டின் கடற்கரைகள் மட்டுமின்றி, தீவுகளும் கார்பரேட்டுகளின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும் அபாயம் ஏற்படும்.

11.உலக அளவில் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயமாக உள்ள கால நிலை மாற்றம் உள்ளது. தற்போதைய துறைமுகம் சார்ந்த வளர்ச்சியினால் தட்பவெப்ப நிலையும் கடலும் மிகவும் சூடாகும். இதனைத் தொடர்ந்து கடல் அமிலமயமாவதும் தவிர்க்க இயலாமல் போகும்.


இன்னும் எத்தனையோ பாதிப்புகளுக்கும் பேரழிவுகளுக்கும் அடிப்படையாக உள்ள சாகர்மாலா திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே கொள்ளை லாபம் அளிக்கும் திட்டம். நமக்கோ சாகர்மாலா சாவு மணி அடிக்கும், மீள முடியாத பேரழிவுத்திட்டம்..

தொகுப்பு : மு.அஜ்மல் கான்,

No comments:

Post a Comment