
* இந்தியாவில் வெறும் 10 சதவிகித மக்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. மீதமுள்ள 90 சதவிகித மக்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு எதுவும் கிடைப்பதில்லை.

மிகக் குறுகிய காலத்திலோ, நீண்ட காலத்திலோ ஓய்வுபெறும் காலத்தை நோக்கிப் பயணிக்கும் லட்சக்கணக்கான நபர்களில் நீங்களும் ஒருவரா? ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடல் உங்களுக்கு மிக மிக அவசியம். உங்கள் ஓய்வுக்காலத்தை நீங்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால், அது பொற்காலமாக இருக்கும். இல்லையெனில், அது மிகக் கொடூரமான காலமாக மாறிவிடும். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் மிகச் சிறிய நடவடிக்கை பொற்காலத்துக்கு உங்களைத் தயார்படுத்தும். உங்களின் பொற்காலத்துக்குத் தயாராவதை எந்தக் காரணம் கொண்டும் தவிர்த்துவிட வேண்டாம்.
இளமையிலேயே திட்டமிடுதல்

25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.12,000 வீதம் ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்தால், ஓய்வு பெறும்போது அது நான்கு கோடி ரூபாயாக பெருகியிருக்கும். அதுவே, மாதம் ரூ.6,000 என 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், அதே நான்கு கோடி ரூபாயை நம்மால் பெற முடியும். வெறும் ஐந்து ஆண்டுகள் வித்தியாசத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் நடக்கிறது என்பதைக் கவனித்தீர்களா? எனவே, எவ்வளவு சீக்கிரமாக நம்முடைய ஓய்வுக் காலத்தைத் திட்டமிடுகிறோமோ, அந்த அளவுக்கு அதில் நன்மை இருக்கிறது.
நியாயமான வருமானத்தை எதிர்பாருங்கள்

ஓய்வூதியத்துக்காகத் திட்டமிடும்போது நியாயமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது மிக நீண்ட காலத் திட்டமிடுதல் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதே நேரத்தில், முதலீடுகளைத் தள்ளிப்போட்டால், மிகக் குறுகிய காலத் திட்டமிடல் எந்தப் பலனையும் தராது. மேலும், அதிகத் தொகையை முதலீடு செய்யவேண்டி வரும். அது உங்களால் இயலாத காரியமாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் உடல்நலப் பிரச்னைகளை மனதில்கொண்டு செயல்படுங்கள். அது, உங்கள் எதிர்காலத்துக்குத் தேவையான உபரி நிதியை உருவாக்க பெரிய அளவில் உதவி செய்வதாக இருக்கும்.
வருமானத்துக்கான வழிகளைக் கண்டறியுங்கள்
ஓய்வுக்குப் பிறகு மாற்று வருமானத்துக்கான ஆதாரத்தை உருவாக்குவது நல்லது. இத்தனை ஆண்டு காலம் செய்த வேலையை வைத்தே உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைப் பெற முடியும். பகுதிநேர ஆலோசகராக, பகுதி நேரப் பணியாளராகச் செயல்படுவதன் மூலம் குறிப்பிட்ட அளவு வருமானத்தைப் பெற முடியும்.
பொழுதுபோக்குக்கு நிதி

சார்ந்திருப்போருக்கான தேவைகள்
உங்கள் துணைக்காகத் திட்டமிடுங்கள்
போதுமான தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ்
எனவே, போதுமான அளவுக்கு கவரேஜ் இருக்கிற மாதிரி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி எடுக்கப்படும் பாலிசி 75 வயது வரைக்கும் நீடிக்கக் கூடியதாக இருந்தால் நல்லது. வயதான காலத்தில் காப்பீடு பெறுவது சிக்கலானதாகவும், அதிகச் செலவானதாகவும் இருக்கிறது. எனவே, முன்னரே பாலிசி எடுத்து அதனைத் தொடர்வது நல்லது.
புத்திசாலித்தனமான முதலீடு
பி.பி.எஃப், இ.பி.எஃப் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற திட்டங்களைக்கொண்ட ஒரு பேலன்ஸ்டு-ஆன போர்ட்ஃபோலியோவை ஏற்படுத்தி முதலீடு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நீண்ட கால அடிப்படையில் நிலையான வருமானத்தை உறுதிப் படுத்துவதற்காக நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் என நல்ல கலவையான முதலீடாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஓய்வுபெறும் காலம் என்பது உங்கள் பணி வாழ்வு மற்றும் விருப்பங் களுக்கு முடிவு சொல்லும் காலம் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் துணையுடன் சேர்ந்து உங்களுடைய வாழ்க்கையை உற்சாகத்துடனும் கொண்டாட்டத்துடனும் வாழ வேண்டிய காலம்.
பலரும் ஓய்வுபெறும் காலத்தை இருண்ட காலமாகப் பார்க்கின்றனர். உண்மையில், அது ஒளிமயமான வசந்த காலம். வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லப்படும் அந்த அற்புதமான காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட இப்போதே திட்டமிடுங்கள்.
தொகுப்பு: அ.தையுபா அஜ்மல் .
No comments:
Post a Comment