சுற்றுலா வாகன ஒட்டியாகிய என் நண்பன் ஒருவனுடைய ஆதங்கம் !!
தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் படும் அவஸ்தைகள் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வெளியூரில் தங்கும் போது பல சமயங்களில் காரில் தான் தூங்கவேண்டும். அந்த கொடுமையை சொல்லியே ஆக வேண்டும். கார் ஒட்டி வந்த களைப்பில் தூங்க முற்ச்சிக்கத்தான் முடியும். தூங்க முடியாது காத்து வரட்டுமே என கண்ணாடியை இறக்கினால் கொசுத்தொல்லை கண்ணாடியை மூடினால் வியர்த்து கொட்டும் அந்த சூழல் சொன்னால் புரியாது அனுபவித்தவனுக்கு தான் தெரியும்.
எங்களோடு பயணிக்கும் விருந்தினர்கள் பலரும் இதை உணர்வதில்லை காரை போல எங்களையும் இயந்திரமாக பார்ப்பவர்கள் தான் அதிகம். வாகனத்தில் பயணிக்கும் போது, சிலர் தண்ணியடித்து மரியாதையை இல்லாமல் பேசுவது என இம்சை வேறு சிலசமயம்!
அவர்கள் தங்கும் விடுதியில் அவர்களின் உடமைகளை எடுத்து கொடுக்கும் ஒட்டல் சிப்பந்திக்கு பகட்டாக பணத்தை வாரி வழங்குவார்கள். அவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் எங்களை சாப்பிட்டாயா என கூட கேட்பவர்கள் வெகுசிலரே.நாங்களும் மனிதர்கள்தான்! கொஞ்சம் மதியுங்கள்.
வாகன ஓட்டுனரின் பாதுகாப்பு...
வாகன ஓட்டுனர்கள் வெளியூர் செல்லும் இடங்களில் தங்க இடவசதி இல்லாத காரணத்தினால் அவர்கள் காரிலேயே அமர்ந்து உறங்குகிறார்கள் இதனால் கொசுக்கடி, காற்று இல்லாத நிலை, இடவசதி இல்லாத நிலை அடுத்தநாள் காலை கண் எரிச்சல் உடல் சோர்வு காரணமாக வாகனத்தை இயக்கி விபத்துக்கு ஆளாகிறார்கள். ஆதலால் பொதுமக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் வாகன உரிமையாளர்கள், ஹோட்டல், காம்ப்ளெக்ஸ் நிறுவனங்கள் ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் குடுத்தால் அவர்கள் புத்துணர்ச்சியுடன் வாகனத்தை இயக்கி விபத்துகளை தவிர்த்திடலாம்...
ஓட்டுனரின்அவல நிலை கேளீர்..
கண் விழித்து காத்திடுவான்''
கவலை மறந்து ஓட்டிடுவான்
எப்போதும் விழித்திருப்பான்
எல்லோர்க்கும் வழி விடுவான்
கவலை மறந்து ஓட்டிடுவான்
எப்போதும் விழித்திருப்பான்
எல்லோர்க்கும் வழி விடுவான்
ஒருவேளை சாப்பாடு
மறுவேளை பெரும்பாடு,
ஊருவிட்டு ஊரு போவான்
இவன் பேரு மட்டும் மறந்திருப்பான்,
மறுவேளை பெரும்பாடு,
ஊருவிட்டு ஊரு போவான்
இவன் பேரு மட்டும் மறந்திருப்பான்,
படுத்த இடம் தூங்கிடுவான்
இவன் படும்பாடு புரியாது,
பள்ளம் மேடு பார்த்திடுவான் உள்ளம் அறிந்து உதவிடுவான்,
இவன் படும்பாடு புரியாது,
பள்ளம் மேடு பார்த்திடுவான் உள்ளம் அறிந்து உதவிடுவான்,
மழை வெயிலில் ஓட்டிடுவான்
மயிரிழையில் உயிர் பிழைப்பான்,
நால்புறமும் கண்ணிருக்கும்
இவன் மனசு மட்டும் வீட்டிலிருக்கும்,
மயிரிழையில் உயிர் பிழைப்பான்,
நால்புறமும் கண்ணிருக்கும்
இவன் மனசு மட்டும் வீட்டிலிருக்கும்,
எல்லோர்க்கும் 'ஒலி'கொடுப்பான்
இவன் 'வலி'மட்டும் விலகாது,
எல்லோர்க்கும் கை கொடுப்பான்
இவன் கை மட்டும் காச்சிருக்கும்,
இவன் 'வலி'மட்டும் விலகாது,
எல்லோர்க்கும் கை கொடுப்பான்
இவன் கை மட்டும் காச்சிருக்கும்,
முன் சீட்டில் இவன் இருப்பான்
பின் சீட்டில் பல உயிர் இருக்கும்,
கண்ணாடியை இவன் பார்ப்பான்
மனக்கண்ணாடி இவனை பார்க்கும்,
பின் சீட்டில் பல உயிர் இருக்கும்,
கண்ணாடியை இவன் பார்ப்பான்
மனக்கண்ணாடி இவனை பார்க்கும்,
யார் யாரோ வருவாங்க போவாங்க..!
இவன் வியர்வை மட்டும்
இவனை விட்டு போகாது,
இவன் வியர்வை மட்டும்
இவனை விட்டு போகாது,
இரவு பகல் ஓட்டிடுவான்
இறுதியிலும் அசரமாட்டான்,
பசி வந்தா தேநீரு
பசி மறக்க தண்ணீரு,
இறுதியிலும் அசரமாட்டான்,
பசி வந்தா தேநீரு
பசி மறக்க தண்ணீரு,
இவன் மனைவியின் கையை விட..!
ஸ்டியரிங்'கைதான் அதிக நேரம் பிடிச்சிருப்பான்,
ஸ்டியரிங்'கைதான் அதிக நேரம் பிடிச்சிருப்பான்,
பாவப்பட்ட ஜென்மம் இவன்
பழி போட்டா தாங்க மாட்டான்,
பழி போட்டா தாங்க மாட்டான்,
இவன் காசுக்காக வண்டி ஓட்டல
வயித்துக்காக வண்டி ஓட்டுறான்..
ஓட்டுனரை நேசிப்போம்
கை கொடுப்போம் காத்திடுவோம்...
வயித்துக்காக வண்டி ஓட்டுறான்..
ஓட்டுனரை நேசிப்போம்
கை கொடுப்போம் காத்திடுவோம்...
வாழ்க்கை பயணமாக இருந்தாலும், வாகன பயணமாக இருந்தாலும் விட்டுக்கொடுப்பவர்கள் நீங்களாக இருந்தால் ஜெய்ப்பதும் நீங்களாகவே இருப்பீர்கள்.
இன்று முதல் நம் நண்பர்கள் அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து சாலை விதிகளை கடைப்பிடித்து அனைவருக்கும் முன்னோடியாக நாம் மாறலாம்.
No comments:
Post a Comment