Sunday 16 December 2018

ஐபிசி 497. செக்சன் செல்லாது!! அப்படின்னா...



இந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை பறித்த 377சட்டப்பிரிவு. இன்னொன்று தற்போது ரத்து செய்யப்பட்ட கள்ள உறவு தண்டணை சட்டப்பிரிவு 497. ஆனால் இந்த இரண்டு உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பெரும்பாலானோர் முழுவதுமாகப் புரிந்து கொள்ளவில்லை.

தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு.

தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை, கள்ளக்காதல் தவறு கிடையாது திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை,

பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும், சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான். பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது. சமுதாயம் நினைப்பதைதான் பெண்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. திருமணத்திற்கு மீறிய பாலியல் உறவு குற்றம் கிடையாது. ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட கூடாது. பெண்ணின் எஜமானர் கணவர் அல்ல என்று தீர்ப்பு வாசித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.




கள்ள உறவு குற்றமில்லை என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நாம் சாதாரணமாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்கிறோம். இதன் பின்னணியை யோசியுங்கள். நாடு முழுவதும் அதிகமான பாலியல் வழக்குகள் பா.ஜ.க.வினர் மீதும், நித்யானந்தா போன்ற பல்வேறு சாமியார்கள் மீதும் உள்ளன. இந்தத் தீர்ப்பைக் காரணம் காட்டி அனைவரும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. தீர்ப்பு எதற்காக வழங்கப்பட்டது என்பது அதன்பிறகு தெரியும்..


ஐபிசி 497. அப்படின்னா


மாற்றான் மனைவியுடன் ஒருவன் உறவு கொண்டால் அவனுக்கு மட்டுமே ஐந்தாண்டு சிறை.. பெண்ணை தண்டிக்க முடியாது..இதுதான் ஐபிசி 497 செக்சன் சொன்னது..



''இருவர் சேர்ந்து செய்யும் தவறில் ஆணை மட்டும் தண்டிப்பது சரியில்லை.. பெண்ணையும் தண்டிக்கவேண்டும். அல்லது இருபாலரையும் தண்டிக்கக்கூடாது'' என்று நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வந்தோம்.


இப்போது தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என்று சொல்லி 497 பிரிவையே செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டது.

உடனே நம்ம ஆட்கள் கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல.. எவன் பொண்டாட்டிகூட யார் வேண்டுமானாலும் போய் படுத்துக்கலாம், யாரும் ஒன்னும் கேக்கமுடியாது என்ற ரீதியில் பொங்கி வருகிறார்கள்..அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை.!


_*திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு கிரிமினல் குற்றமல்ல என்று சொன்ன அதே நீதிமன்றம்தான், இந்த மாதிரி, படுக்கையை மாத்தி போடுறது தெரிஞ்சா அதை வெச்சே கணவனோ, மனைவியோ டைவர்ஸ் கேக்கலாம்னு தெளிவா சொல்லியிருக்கு..*_


என்னமோ இந்த தீர்ப்பாலஇனிமே கள்ளக்காதல் வெள்ளமா பெருக்கெடுத்து ஓடும்ற மாதிரி சமூக அக்கறை காட்டி  சீன் போட ஆரம்பிச்சிட்டாங்க.. 

பொங்கறவங்க வீட்ல, ''இது மாதிரி கள்ளக்காதல் நடக்கும்னு பயமா இருக்கா''?ன்னு கேட்டுப்பாருங்க..அடிச்செருப்பால‘ எங்க குடும்பம் ஒன்னும் அப்படிப்பட்ட மட்டமான குடும்பம் இல்லேன்னு சீறிக்கிட்டு பதில் வரும்.. அதையேத்தான் நாங்களும் சொல்லவர்றோம்.. எல்லார் குடும்பமும் கௌரவமான குடும்பம்தான்.


பொண்டாட்டி, புருஷன், அப்பன், அம்மா, புள்ள, பொண்ணு, அக்கா, தங்கச்சின்னு குடும்பத்துல இருக்கிற எல்லா உறவும் தப்பு செய்யவே மாட்டாங்கன்ற நம்பிக்கையிலதான் எல்லாருமே வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.

ஊர்ல எல்லா கடைகளிலும் பல பொருட்களோடு பாய்சனையும் விக்கறாங்க..அதுக்காக எல்லாருமே பாய்சன் வாங்கி குடிச்சிகிட்டு செத்துக்கிட்டு இருக்காங்க? போய்ச் சேரணும்ன்னு விரும்பறவங்கதான் வாங்கி குடிக்கப்போறாங்க..

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment