திருப்பூரைச் சேர்ந்த மாணவி பூஜா, பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நவம்பர் ஒன்றாம் தேதி பூஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட, காய்ச்சலை வியாதி என்று தவறாக புரிந்து வைத்திருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பூஜாவை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சலை வியாதி என தவறாகப் புரிந்துகொண்டு, 'ஒரு நாளைக்கு இரு வேளை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுநாள் காய்ச்சல் அதிகரிக்க, சின்னம்மை வந்தது போல பூஜாவின் உடல் முழுக்க தடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மறுநாளே, ராமநாதபுரத்திலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேரம் போகப் போக, பூஜாவின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு உடலின் அடிப்படை இயக்கத்தை உணராத டாக்டர்களும் பூஜாவின் பெற்றோரும் மிரண்டுபோனார்கள். பூஜாவின் சருமம் கொஞ்சம் கொஞ்சமாக உரிந்து உதிர ஆரம்பித்தது. தீக்குளித்த உடம்பு போல சருமம் கருகி, சற்றும் அடையாளம் காணமுடியாத வகையில் பூஜாவின் தோற்றம் மாறியது. மகளின் இந்த நிலைமையைக் கண்டு ஒருபக்கம் அதிர்ச்சியும் மறுபக்கம் குழப்பமும் கொண்ட பூஜாவின் பெற்றோர் உடனடியாக கோவையில் உள்ள மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
உடல் முழுக்க காயங்களுடன் வந்தடைந்த பூஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு புதிதாக ஒரு மருந்தை உட்கொள்ளுவதால் வரக்கூடிய ஒருவகை கொடூரமான ஒவ்வாமை நோய் வந்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த செய்தி சமீபத்தில் நான் விகடனில் பார்த்தது.
ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம்
உடல் முழுக்க காயங்களுடன் வந்தடைந்த பூஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு 'ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம்' (Stevens–Johnson syndrome) எனும் அரியவகை நோய் வந்திருப்பதாக தெரிவித்தனர். புதிதாக ஒரு மருந்தை உட்கொள்ளுவதாலும், பிற நோய்த்தொற்றுகளாலும் வரக்கூடிய ஒருவகை கொடூரமான ஒவ்வாமை நோய்தான் இந்த ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம். 'கண்கள், சருமம், உறுப்புகளைப் பாதித்து, உடல் முழுக்க ரணத்தை ஏற்படுத்தும் இந்த அரியவகை நோயை உடனடியாக சரிசெய்வது முக்கியமாகும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும்' என்பது மருத்துவர்கள் கூறும் அறிவுரை.
பூஜாவுக்கு உதவுங்கள்...
பூஜாவின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பில் அவரை வைத்திருப்பது அவசியமாகும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பூஜாவின் பெற்றோர் தங்கள் சக்திக்கும் மீறி இதுவரை 2.5 லட்ச ரூபாயை மருத்துவத்துக்காக செலவழித்துள்ளனர். தற்போது பூஜாவை முழுமையாகக் குணப்படுத்த மேற்சிகிச்சைக்கு 5 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. நிதி திரட்டும் இணைய சேவையான Edudharma பூஜாவுக்காக மருத்துவ நிதி உதவி வேண்டுகிறது. https://www.edudharma.com/campaigns/pooja-medical-allergy எனும் தளம் வாயிலாக நம்மால் ஆன பண உதவியைச் செய்வதன்மூலம் பூஜாவின் உயிரைக் காப்பாற்ற முடியும். 'பூஜாவின் நிலைமையைப் பொறுத்தவரை, நேரம் பொன்னானது. நேரம் போகப் போக அவரின் நிலைமை மோசமடையக் கூடும் என்பதால், அவருக்கு உடனடியாக தகுந்த சிகிச்சையை வழங்குவது கட்டாயமாகும். இதை மனதில்கொண்டு நல்ல உள்ளம் படைத்த அனைவரும் முடிந்தவரை நன்கொடை செய்து பூஜாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டுகிறோம். பூஜா இக்கொடும் நோயிலிருந்து மீள பிரார்த்திப்போம்" - Edudharma.
நிதி அளிக்க இங்கே செல்லவும்https://www.edudharma.com/campaigns/pooja-medical-allergy.
யாரையும் குறைகூறுவதற்காக நான் இந்த பதிவை பகிரவில்லை.
ஏனென்றால் இந்த பிரச்சினைக்கான அடிப்படை காரணம் நமது அறியாமை தான். இந்த மாணவிக்கு ஏற்பட்ட நிலை உங்களில் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று தான் இந்த பதிவை பகிர்கிறேன். காய்ச்சலை வியாதி என தவறாகப் புரிந்துகொண்டதே இத்தகைய அவல நிலைக்கு காரணம். உண்மையில் நம் உடல்தான் நமது சிறந்த மருத்துவர் என்கிற உண்மையை புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
சரி காய்ச்சல் ஒரு நோயா?
காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காகவும் உடம்பில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்முறைதான் காய்ச்சல்.
உடம்பில் ஏன் கழிவுகள் தேங்குகின்றது?
உடலின் தினசரி பராமரிப்பு வேலை தடைப்படும்போது கழிவுகள் தேங்கும். இத்தகைய கழிவின் தேக்கத்தை உடல் வேறு ரூபத்தில் வெளியேற்ற முயற்சிக்கும்போது உபத்திரவங்கள் ஏற்படுகின்றது. அந்த உபத்திரவங்களைத்தான் நாம் வியாதி என்று அழைக்கிறோம்.
டீ காப்பி போன்றவற்றை அருந்தும் பழக்கம் இருந்தால் உடலின் தினசரி பராமரிப்பு வேலை தடைப்படும்,
தொடதற்க்கெல்லாம் மருந்துக்களை உட்கொண்டாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
பிடிக்காத உணவை உண்டாலும், பிடித்தமான உணவுகளை ஏதேனும் காரணத்திற்காக உண்ணாமல் இருந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
இரவு தாமதமாக தூங்கினாலும் (9 மணிக்கு மேல்), தூங்கும் இடத்தில் சுத்தமான காற்றோட்டம் (ஒருமுறை சுவாசித்த காற்ற மறுபடியும் சுவாசிக்காத சூழல்) இல்லாதிருந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
ரசாயன கொசு விரட்டிகள் உள்ள அறையிலோ, ஜன்னல் இல்லாத அல்லது ஜன்னல் பூட்டப்பட்ட அறையில் தூங்கினாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
உடல் கேட்கும் ஓய்வை கொடுக்காமல் இருந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
மனதிற்கு பிடித்தவற்றை தவிர்த்துவிட்டு பிடிக்காத விஷயங்களில் ஈடுபட்டு வந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
இந்த https://youtu.be/2KBDw_QGwNY முகவரியில் “ஏன் குளிர்காலத்தில் நமது உடலில் பலவித உபத்திரவங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள்!” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தினசரி நமது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்ற நமது அறியாமை காரணமாக போதிய ஒத்துழைப்புகொடுக்காமல் இருக்கும்போது கழிவின் தேக்கம் ஏற்படும். அவ்வாறு தேங்கும் கழிவுகளின் வெளியேற்றத்தை வியாதி என கருதி அதை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம். அத்தகைய சூழலில் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் கரைத்துவிடும்.
இந்த கட்டியை தான் இன்றைய மருத்துவ உலகம் புற்று (கேன்சர்) என்று பெயர்சூட்டி நம்மை அச்சுறுத்துகிறது. நமக்கு கற்பிக்கப்பட்டது போல கேன்சர் என்பதும் நோயல்ல கழிவின் தேக்கம்தான். கேன்சர் கட்டிகளை கூட புற்று என்று குறிப்பிடாமல் புற்றுநோய் என்று குறிப்பிடுவதால் அதனை நாம் நோய் என்று தவறாக புரிந்துகொள்கிறோம். இதுவும் ஒரு மருத்துவ அரசியல் தான் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/h7fzziFAGU0 முகவரியில் “கேன்சர் என்பது நோயா? கட்டியா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)
இப்போது புரிகிறதா ஏன் இன்றைய வியாபார மருத்துவ உலகம் உடலில் ஏற்படும் சாதாரண காய்ச்சலிற்கு டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா, எபோலா,... என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது பெயர் வைத்து தொடர்ச்சியாக நம்மை அச்சுறுத்தி வருகிறார்கள் என்று?
உடலில் வலி ஏற்பட காரணம்
காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தியும் ஜீரண சக்தியும் தேவைப்படும். அப்போதுதான் பசியின்மை மற்றும் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குத்தான் தலைவலி ஏற்படுகிறது. பசிக்கவில்லை என்றால் நாம் உணவை உண்ணாமல் இருப்போம். அப்போதுதான் அந்த ஜீரண சக்தியையும் உடலின் பராமரிப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.
இதைப் புரிந்துகொள்ளாமல் தலைவலி ஏற்பட்டதும் டீ / காப்பி போன்றவற்றை அருந்துகிறோம் அல்லது மாத்திரையின் உதவியை நாடுகிறோம். இவற்றை எடுத்துக்கொள்வதால் நமது பராமரிப்பு சக்தி இயக்கசக்தியாக மாறிவிடுகின்றது. இவ்வாறு செய்வதால் உடலின் பராமரிப்பு வேலையும் தடைபடுகிறது. இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.
யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் கேன்சர் கட்டிகள் ஏற்படுகிறதில்லை. யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா, எபோலா, Coma (விபத்துக்களால் ஏற்படும் Coma அல்ல), Cancer, Blood Cancer போன்ற உபத்திரவங்கள் ஏற்படுவதில்லை.
மேலும் காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி அதிக Antibodyக்களையும், வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது.
பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். எனவே நமது உடலே தேவைகேற்ப உடலின் வெப்ப நிலையை சிறிது அதிகப்படுத்தி இந்த கிருமிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் தடுப்பூசி ரூபத்தில் கிருமிகளை உடலில் செலுத்தியதும் உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. (இதுபற்றி இந்த https://youtu.be/iR3Q-TrkXyw முகவரியில் “தடுப்பூசி அவசியம்தானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)
மனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது
நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?
அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,
பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,
பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,
பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,
பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும்,
நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
அடுத்தவர்களுக்கு உதவும்போதும், நேர்மையாக வாழும்போதும், சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,
... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி.
காய்ச்சலை வியாதி என தவறாகப் புரிந்துகொண்டதே இத்தகைய அவல நிலைக்கு காரணம். உண்மையில் நம் உடல்தான் நமது சிறந்த மருத்துவர் என்கிற உண்மையை புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆரோக்கியம் இலவசமே!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்..
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .
No comments:
Post a Comment