Wednesday 12 December 2018

பிஜேபி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது

5 மாநில தேர்தல் முடிவுகள் பிஜேபி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது , நரேந்திர மோடி செல்வாக்கை இழந்துள்ளார். பெரும் தோல்வி, படுதோல்வி...
Image result for 5 மாநில தேர்தல் முடிவுகள்இப்படி ஒரு வரி விமர்சனம் எல்லாம் நான் எப்போதுமே செய்தது இல்லை. political science and statistics இதற்குள் இருக்கும் உண்மைகளைத் தேடுவதே சரி என்று எண்ணுபவன் நான். வெற்றி தோல்வியை ஆய்வு செய்வதில் தான் வெற்றி எத்தகையது? தோல்வி எதனால்? உண்மையில் யார் பலசாலி ? நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பது உண்மையா? என்ற அனைத்துக் கேள்விக்கும் சரியான தெளிவான விடை நமக்குக் கிடைக்கும். எனவே மீம்ஸ் , கேலிகள் தாண்டி உண்மையைத் தேடுவது எப்போதுமே நல்ல விஷயம். குறைந்த பட்சம் மாணவர்களுக்கு , இளையவர்களுக்கு அந்தக் குணம் வேண்டும்.
எனவே இந்த 5 மாநில தேர்தல் எத்தகையது என்பதைத் தெளிவாக அதேநேரம் கொஞ்சம் எளிமையாகப் பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------
மிசோரம் : (40 தொகுதிகள்- ஆட்சி அமைக்க 21தேவை)
வெற்றி பெற்றிருப்பது Mizo National Front 26 தொகுதிகள் வெற்றி. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 5 தொகுதிகள் மட்டுமே பெற்று எதிர்க்கட்சி ஆகும் தகுதியை இழந்து நிற்கிறது. பிஜேபி 1 தொகுதியில் வெற்றி பெற்று தனது முதல் கணக்கை தொடங்கியுள்ளது , இதர கட்சிகள் 8 .
தமிழகத்தில் அதிமுக திமுக போல காங்கிரஸ் , Mizo National Front இரண்டு கட்சியும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மாறி ஆட்சியை கைபற்றி வரும் மாநிலம். மொத்தம் 40 தொகுதிகள் - ஆனால் வாக்காளர்கள் 768,181 மட்டுமே. (தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 5 அளவே உள்ள மாநிலம்.). Aizawl நகரத்தில் மட்டும் நீங்கள் தேர்தல் வேலை செய்தால் போதும் அதில் மட்டும் 11 தொகுதிகள் இருக்கிறது - Lunglei , Champhai இந்த மூன்று நகரங்களில் ஒழுங்கா தேர்தல் வேலை பார்த்தால் போதும் வெற்றி.
காங்கிரஸ் 30 .2 % வாக்குகள் , MNF 37 .6 % வாக்குகள் , இதர கட்சிகள் தனி வேப்பாளர்கள் என்று 27% வாக்குகளைப் பிரிக்க , பிஜேபி 8% வாக்குகளைப் பெற்றுள்ளது. (இதுவரை பிஜேபி 2% வாக்குகள் கூட கிடையாது இந்த மாநிலத்தில்.Tuichawng , tuipui இரண்டு காங்கிரஸ் தொகுதியிலும் 48% , 35% என்ற அளவில் பிஜேபி வாக்குகளை வாங்கி வளர்ந்துள்ளது. Hachhek ,Lawngtlai , Palak, Serlui ,Siaha ,Thorang , Tuivawl போன்ற தொகுதிகளில் 15% க்கும் மேல் வளர்ச்சியை காட்டியுள்ளது பிஜேபி. இந்த மாநிலத்தில் வெற்றியைத் தோல்வியை தாண்டி இது தான் மிக முக்கியம். ஏன் ?
மேலே நான் கூறியவை எல்லாம் தாண்டி ஒரு உண்மை உண்டு. இது எல்லாமே எண்கள்... இந்த எண்கள் தீர்மானிக்கும் வலு யாரிடம் இருக்கிறது அங்கே? என்று நீங்கள் கேட்டால் அது Presbyterian Church மற்றும் அதன் இணை கிருஷ்டவ அமைப்புகளிடம் தான் உள்ளது. மிசோரம் தேர்தலை முடிவு செய்வது ஏறக்குறைய Presbyterian Church முக்கிய பங்களிக்கும். இந்தியாவின் 87% கிருஸ்தவர்கள் வாழும் மாநிலம் மிசோரம். இங்கே புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் 9% அளவிற்கும் இந்துக்கள் 2.75% அளவிற்கும் இருக்கிறார்கள். இஸ்லாம் 1.3%. தமிழகம் போல் வெறும் 2சதவீதம் வாக்குவங்கி கூட இல்லாத பிஜேபி - கிருஸ்தவ சர்ச்சுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் தேர்தலில் 8% வாக்கு வங்கியை உயர்த்தியுள்ளது பெரிய விஷயம்.
இது எப்படி பிஜேபிக்கு எதிராகத் தீர்ப்பு, தோல்வி , நம்பிக்கை இழப்பு???? இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தீர்ப்பு மட்டுமே. அப்படிக் கூறுவது தான் சரி. பிஜேபி என்ற கட்சியை பொறுத்தவரை நல்ல தீர்ப்பு தான் இது. 1.கட்சி முதல் முறையாக MLA சீட் , அத்துடன் 8% வாக்குகள். 2.காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான நபர் வெற்றி.
-------------------------------------------------------------------
அடுத்து ராஜஸ்தான் (199தொகுதிகள் - ஆட்சி அமைக்க 100தேவை) :
பிஜேபி தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் சரத்பவார் (nationalist congress party ) , அஜித் சிங் (Rashtriya Lok Dal ), சரத் யாதவ் (Loktantrik Janata Dal ) என்று நின்று தேர்தலை சந்தித்தன. பிஜேபி : 73 தொகுதிகள் வெற்றி . காங்கிரஸ் : 99 தொகுதிகள் வெற்றி + கூட்டணி கட்சியான Rashtriya Lok Dal : 1 இடத்தில் வெற்றி.
அப்போ இது பிஜேபிக்கு தோல்வி தானே??? மக்கள் நம்பிக்கையை ஆட்சி செய்த பிஜேபி இழந்துள்ளது தானே????
சீட்டு எண்ணிக்கையில் தோல்வி என்றாலும் இது பின்னால் இருக்கும் விவரங்கள் கொஞ்சம் தெளிவாகத் தேடினால் உண்மை அறியலாம். தற்போது பிஜேபி வாங்கிய வாக்கு சதவீதம் 38 .8 % , காங்கிரஸ் வாங்கிய வாக்கு சதவீதம் 39 .3 %. இரண்டுக்கும் வெற்றி வித்தியாசம் வெறும் ௦.5 % வாக்குகள் மட்டுமே. ஆனால் 2013 ல் பிஜேபி ஆட்சியைப் பிடித்த போது 45.17% வாக்குகள் பெற்றது - எதிர்த்து நின்ற காங்கிரஸ் 33.07% ஆக இரண்டுக்கு வெற்றி வித்தியாசம் ஏறக்குறைய 12 % . எனவே 2013ல் வெற்றி பெற்ற கட்சி கூடுதல் 12% அளவிற்கு வாக்குகள் பெற , இந்தத் தேர்தலில் அது வெறும் ௦.5 % கூடுதல் வாக்கு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மிக மிகச் சின்ன வித்தியாசத்தில் வெற்றி. ஆக பிஜேபிக்கு பெரும் பின்னடைவு என்று கூறுவது அவசியமற்றது. ஏறக்குறையத் தனித்து நின்று இதை பிஜேபி செய்திருப்பது முக்கியம்.
ஆனால் பிஜேபி 26 தொகுதிகள் குறைவாக வாங்கியுள்ளது? அதில் இரண்டு காரணம் முக்கியம்.
01. Rashtriya Loktantrik Party இந்தக் கட்சி உருவாக்கி வேகமாகப் பிரச்சாரத்தில் இறங்கினார் Hanuman Beniwal அவர்கள். இவர் முன்னாள் பிஜேபி தலைவர் - ஊழல் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டவர். இவர் பிரசாரம் செய்த இடங்களில் 5 , 6 லட்சம் மக்கள் கூடினர். மிகப் பிரமிப்பை ஏற்படுத்தினார்- ஒரு பக்கம் இவர் காங்கிரஸ் உதவியுடன் இந்த அளவிற்கு பணத்தை செலவு செய்து வேலை செய்கிறார் என்று செய்திகள் வர. விஷயம் இது தான் இவர் பிஜேபி வலுவான தொகுதிகளில் தனது வேப்பாளர்களை நிறுத்தினார் Hanuman Beniwal- ஜாட் சமஊகத்தின் வாக்குகளை ஏறக்குறையப் பல இடங்களில் பிரித்தார். இவர் மொத்தமாகப் பிரித்த வாக்குகள் 8,56,038 .
பிஜேபி ௦.5 % அளவிற்கு வாக்குகளைக் குறைவாக பெற்றது என்றால் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசம். ஆனால் Hanuman Beniwal பிரித்த வாக்குகள் மட்டும் 8 லட்சம். பிஜேபி பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதாகக் கூறும் காங்கிரஸ் - காங்கிரஸ் தான் இந்து வாக்குகளை ஜாதி வைத்துப் பிரித்து வெற்றியைப் பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். இதே யுக்தியைத் தான் சென்ற குஜராத்திலும் அப்படியே வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி பிஜேபி வெற்றியைக் கடினமாக்கியது காங்கிரஸ். (தலித் பிரதிநிதியாக ஜிக்னேஷ் மேவானி , படேல் சமூகத்தின் வாக்கைப் பிரிக்க ஹர்திக் படேல் , OBC வாக்குகளைப் பிரிக்க அல்பேஷ் தாகூர் என்று திடீர் புரட்சியாளர்களை உருவாக்கி வாக்குகளைப் பிரித்து காட்டியது காங்கிரஸ்.)
02.பிஜேபி மீது இஸ்லாமியர் , கிருஷ்தவர்கள் வெறுப்பை வர வைப்பதற்கு என்றுமே வேலை செய்யும் காங்கிரஸ் கம்யுனிஸ்ட் கூட்டணி , கடந்த 10வருடமாக பிஜேபி பட்டியலின மக்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரானது என்ற தோற்றத்தை உருவாக்க வரிந்து கட்டி வேலை செய்கிறது. செய்தித் தாள்களில் வெட்ட வெளிச்சமாக பிஜேபி ஆளும் இடங்களில் தலித் தாக்குதல் என்றால் சப்தம் அதிகம் வரும் அளவுக்கு வேலைத் தீவிரமாக செய்கிறார்கள். இதை உணர்த்தியுள்ளது ராஜஸ்தான்.
சுமார் 34 SC தொகுதிகளில் 32தொகுதிகளை வென்ற பிஜேபி இந்த முறை 3ல் ஒரு பகுதி இடத்தை மட்டுமே பெற்றது. 25 ST தொகுதிகளிலும் இதே நிலை தான். மொத்தமாக 22இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. இது பிஜேபி வருத்தப்படவேண்டிய விஷயம் என்பது கண்கூடு. இதில் எச்சரிக்கை அவசியம். செய்தி நிறுவனங்களைப் போலியான செய்திகளைப் பரப்பும் நபர்களை ஒடுக்கவில்லை என்றால் இது விசமாக மாறும்.
------------------------------------------------------------------------------
அடுத்து தெலுங்கானா(119தொகுதிகள் - ஆட்சி அமைக்க 60தேவை) :
மாநிலம் உருவாகக் காரணமான TRS தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி தான் ஆட்சிக்கு வரும் என்று பலருக்கும் தெரியும். இங்கே காங்கிரஸ் கூட்டணி , தெலுங்கானா ராஷ்டிரிய சமதி இரண்டுக்கும் தான் போட்டி என்றாலும் பெரிய போட்டியாக இருக்கப் போவது இல்லை. எனவே இங்கே சந்திரசேகர ராவ் சம போட்டி யாருமே இல்லை என்பது நிதர்சனம்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமதி : 88 இடங்கள். காங்கிரஸ் : 19 இடங்கள். காங்கிரஸ் கூட்டணியாக தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 தொகுதிகள். அடுத்து மதம் வைத்து அரசியல் செய்யவோ தேர்தலைச் சந்திக்கவோ கூடாது என்று இருந்தாலும் அதைத் தான் பிரதானமாகக் கொண்ட All India Majlis-E-Ittehadul Muslimeen கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இங்கே பிஜேபி தனித்து நின்று 1 இடத்தில் வெற்றி. ஆனால்
தெலுங்கானா ராஷ்டிரிய சமதி வாக்கு சதவீதம் 46.9 % , காங்கிரஸ் 28.4 % வாக்குகள். வெற்றி வாக்கு வித்தியாசம் சுமார் 18 .5 %. மிகப் பெரிய வித்தியாசம். பிஜேபி வாங்கியுள்ள வாக்கு சதவீதம் 7%(1450456 ). வாக்கு சதவீத அடிப்படையில் பார்க்கும் போது பிஜேபி இங்கே மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மையே தவிர இங்கே பிஜேபி பின்னடைவு என்று கூறுவது ஏற்புடையது அல்ல. சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்று கூறினால் தகும் தவிரப் பின்னடைவு என்பது எல்லாம் சுத்த முட்டாள்தனமாகக் கருத்து.
இந்த மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள கட்சியும் காங்கிரசுக்கு அதன் கூட்டணிக்கு எதிராக நின்று தான் வெற்றியைப் பெற்றுள்ளன. தவிர இங்கே பிஜேபி அல்ல பிரதான எதிர்க் கட்சி. எனவே இங்கேயும் காங்கிரஸ் கூட்டணி தோல்வி என்று கூறவேண்டுமே அன்றி பிஜேபி தோல்வி என்று எழுதுவது செய்தியாளர்கள் தந்திரமே அன்றி வேறு இல்லை.
--------------------------------------------------------------------------
அடுத்து சட்டீஷ்கர்(90தொகுதிகள் - ஆட்சி அமைக்க 46தேவை) :
இதில் நிச்சயம் பிஜேபி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வெளிப்படையாக மக்களிடம் நம்பிக்கையை இழந்துள்ளது என்று தெளிவாக தெரிகிறது. இந்த உண்மையை பிஜேபி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் அது 10% அளவிற்கு வித்தியாசம் என்றால் நிச்சயம் கட்சி நன்மதிப்பு கெட்டுள்ளது என்று பொருள்.
பிஜேபி 33% வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 43% வாக்குகளைப் பெற்றுள்ளது. அத்துடன் கூட்டணி என்பதால் காங்கிரஸ் 68இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது இங்கே. இது ஏற்றுக்கொள்ள வேண்டிய வெற்றி. இங்கே காங்கிரஸ் நன்கு வேலை செய்துள்ளது. பிஜேபி அனைத்து வகையிலும் தோல்வியை சந்தித்துள்ளது. பிஜேபி வாங்கிய இடங்கள் 15மட்டுமே. கட்சி பணியிலும் , தேர்தல் பணியிலும் , ஆட்சியிலும் என்று அனைத்து விதமாகவும் கட்சி பலவினமாகியுள்ளது பிஜேபிக்கு இங்கே.
---------------------------------------------------------------------------
அடுத்து மத்திய பிரதேஷ் (230தொகுதிகள் - ஆட்சி அமைக்க 116தேவை):
பிஜேபி 109 இடங்களிலும் , காங்கிரஸ் 114 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் வாக்கு சதவீத அடிப்படையில் பிஜேபி 41 % , காங்கிரஸ் 40 .8 % என்று வாங்கியுள்ளன. இங்கே அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் 15 ஆண்டுகளாக தொடந்து ஆட்சியில் இருக்கும் கட்சியை அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறினாலும் வாக்கு சதவீதம் கூறுவது படி பார்த்தார் எந்த பாதிப்பும் இல்லாமல் தான் பிஜேபி இருக்கிறது அங்கே என்பது தெரிகிறது. ஆம் 2003 ல் பிஜேபி ஆட்சியைப் பிடித்த போது 42.50% வாக்குகளை வைத்திருந்தது. 15வருடங்கள் ஓடியுள்ளது இன்றும் ஏறக்குறை 41.0 % அது தொடர்கிறது. எனவே பிஜேபி இன்றும் அங்கே வழுவான கட்சியாக தான் நிற்கிறது. பின்னடைவு என்பது எல்லாம் சுத்த பிதற்றல்.
இங்கே தமிழகத்தில் RK Nagar இடைத்தேர்தலில் 13கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்த திமுக முக்கிய எதிர்க்கட்சி வாங்கிய வாக்கு 12% கூட கிடையாது. திமுக வாக்கு எங்கே சென்றது???? ஆனால் பிஜேபி வாக்கு வங்கி என்பது அப்படியானது அல்ல. அது முன்வைக்கும் இந்துத்துவா சித்தாந்தம் வழுவாக வேருன்றி நிற்கிறது என்பது தான நிதர்சனமான உண்மை. இதனால் தான் ராகுல் ஆரம்பித்து அனைவரும் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர்.
அடுத்து குவாலியர் மேயராக இருந்த SAMEEKSHA GUPTA பிஜேபியில் இருந்து விலகித் தனித்து போட்டியிட்டு GWALIOR SOUTH தொகுதியில் தோல்வியை தழுவினார். இதில் விஷேசம் என்னவென்றால் இங்கே காங்கிரஸ் வெற்றி என்பது அல்ல காங்கிரஸ் 121வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. SAMEEKSHA GUPTA பிரித்த வாக்குகள் 30745. இதே போல் DHEERAJ PATERIA என்ற நபர் பிஜேபி கட்சியில் இருந்து விலகித் தனித்து JABALPUR NORTH தொகுதியில் போட்டியிட்டார். இங்கே காங்கிரஸ் வெற்றி. பிஜேபி தோல்வி. இரண்டு கட்சிக்கும் வாக்கு வித்தியாசம் 570வாக்குகள். DHEERAJ PATERIA தனித்து பிரித்தக் வாக்குகள் 29479. இப்படி மாநிலம் முழுவதும் பிஜேபி கட்சி நபர்களை ஒரு பட்டியல் போட்டு வாங்கி அவர்களைத் தனித்து நிறுத்துவது மூலம் வாக்குகளைப் பிரித்து வெற்றியை உறுதிசெய்துள்ளது காங்கிரஸ்.
ஆனால் உத்தமர்கள் வாழும் காங்கிரஸ் என்று கம்யுனிஸ்ட் திமுக சொல்லும். அதுவும் அரசியல். வாக்கு வங்கி தந்திர அரசியல் தான் தவிர அரசுக்கு எதிராக மக்கள் மன நிலையைக் கட்டுவதாக இல்லை என்பது இதன் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு தந்திரம் செய்தும் இன்றும் மத்திய பிரதேஷ் பிஜேபி கோட்டையாக தான் உள்ளது என்பது தான் நிதர்சன உண்மை.
-------------------------------------------------------------------------
இறுதியாக : இப்போ மனசாட்சியை தொட்டு கூறுங்கள் பிஜேபி படுதோல்வி என்று ????
ஆக 5 மாநில தேர்தல் உணர்த்தும் உண்மை என்னவென்றால். சட்டீஸ்கர் மாநிலம் தவிர்த்து மிசோரம் , தெலுங்கானா இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் வீழ்ச்சி , அந்த மாநிலங்களில் பிஜேபி 8% அளவிற்கு வளர்ந்துள்ளது. ராஜஸ்தான் , மத்தியபிரதேஷ் இரண்டிலும் பிஜேபி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இன்றும் பிஜேபி தான் பிரதான விருப்பமான கட்சியாக உள்ளது - சாதிய பிரிவினைகள் மூலம் குஜராத் பார்முலாவை கொண்டு இந்துக்கள் வாக்குகளைச் சிதறடிக்கும் வேலையை வெளிப்படையாகச் செய்து காங்கிரஸ் மிகச் சொற்ப வித்தியாசத்தில் கூட்டணி கட்சிகளுடன் போராடி சின்ன வித்தியாச அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. இது நாகரீகமான வெற்றி கூட கிடையாது.
இந்த நிலை அப்படியே தொடரும் என்றால் பிஜேபி தன் வாக்கு வங்கியை இந்த அளவிற்குத் தக்கவைத்தாலே 280-290 தொகுதிகளை நாடாளுமன்ற தேர்தலில் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் தவிர தோல்விக்கு வாய்ப்பே இல்லை. 370 என்ற அந்த எண்ணிக்கையில் தொகுதிகள் குறையும் தவிர பிஜேபி இன்றும் தனி பெரும் கட்சியாக நிற்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தை உருவாக்கினால் இது மிக மிக எளிது.
இஸ்லாமிய வேப்பாளர் நிறுத்து பிஜேபி இந்து மதவாத கட்சி. ஆனால் மனித நேயமக்கள் கட்சி , முஸ்லிம் லீக் எல்லாம் மதசார்பிணமி கட்சி... மிசோரம் போன்ற மாநிலங்களில் சர்ச்சுகள் அதன் மதவாத தலைவர்கள் அரசியல் முடிவுகளை நிர்ணயம் செய்யலாம் அது சமத்துவம் ஆனால் பிஜேபி இந்துக்களுக்கு குரல் கொடுத்தால் இந்துத்துவ தீவிரவாதம் ???? ஜாட் , படேல் , தலித் என்று இந்துக்களின் வாக்குகளை ஜாதி கொண்டு எப்படிப் பிரிக்கலாம் என்று அலையும் காங்கிரஸ் நல்லவர்கள் !
உண்மையில் கொஞ்சம் கூடக் கொள்கை என்பதோ குறைந்தபட்ச நியாயமோ இல்லாத வெற்றி பெறவேண்டும் அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எப்படியாவது பதவிக்கு வரவேண்டும் என்று துடிக்கும் சரத்பவார் , திமுக ஸ்டாலின் , தெலுங்கு தேசம் என்று அப்பட்டமாக காங்கிரஸ் கட்சி சேர்த்து கொண்டு அரசியலைச் சந்திக்கலாம். ஆனால் மக்கள் முன் கேள்விகள் எழும் அப்போது அவமானம் நிச்சயம்.
நரேந்திர மோடி - எதிரில் அவரை எதிர்த்து நிற்கும் பிரதமர் வேப்பாளர் யார் !!! இப்படி மட்டும் கேள்வி விவாதம் எழுந்தால் தேர்தல் முடிவு குழந்தை கூட சொல்லும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment