Monday 3 December 2018

நெதர்லாந்து நாட்டில் 5G நெட்வொர்க் சோதனை !!

நெதர்லாந்து நாட்டில் 5G நெட்வொர்க் சோதனையின் போது பறவைகள் மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாய், கொத்துக் கொத்தாய் இறந்து உள்ளன.சமீபத்தில் வெளியாகிய எந்திரன் 2.0 திரைப்படத்தில் மனிதர்களின் வளர்ச்சியால் அதிகம் உபயோகிக்கும் செல்போன்கள், டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் பறவை உள்ளிட்ட பல உயிரினங்கள் பரிதாபமாக இறக்கின்றன என்ற ஆழமான கருத்தை தெரிவித்து உள்ளனர்.


நெதர்லாந்தில் பறவைகள் இறப்பு :
நவம்பர் 5, 2018-ல் எரின் எலிசபெத் மெடிக்கல் வலைத்தளத்தில்,  நெதர்லாந்து நாட்டில் ஹாக்(Hague) நகரில் நடைபெற்ற 5G அலைக்கற்றை சோதனையால் ஹுஜ்ஜென்ஸ்(Huijgens park) பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்ததுள்ளன என முதலில் செய்தி வெளியாகியது. இதையடுத்தே, சோசியல் மீடியாவில் பறவைகளின் இறப்பு பற்றி வைரலாகியது.
2018 அக்டோபர் 19 முதல் நவம்பர் 3-ம் தேதிக்குள் Hague நகரில் உள்ள பூங்கா பகுதியில் 337-க்கும் மேற்பட்ட Starling பறவைகள் மற்றும் இரு புறாக்கள் மர்மமான முறையில் இறந்தன என்பது உண்மை. இதன் விளைவால் சில நாட்களுக்கு பூங்காவில் நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் The Hague-ல் செய்தி வெளியாகி உள்ளது.
5G சோதனை காரணமா ?
நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்ததற்கு 5G அலைக்கற்றை சோதனையே காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை. ஹுஜ்ஜென்ஸ் பூங்காவை சுற்றி உள்ள பகுதியில் 5G அலைக்கற்றை சோதனை ஏதும் நடைபெறவில்லை என Antennebureau மறுப்பு தெரிவித்து உள்ளதாக The Hague-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
” நெதர்லாந்தில் Huawei நிறுவனம் Hague நகரில் 5G அலைக்கற்றை பயன்பாட்டின் சோதனை செயல்முறையை நிகழ்த்தியதாக ஜூன் 28, 2018-ல் Telecompaper வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. பறவைகள் இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மட்டுமே செய்முறை நடைபெற்றுள்ளது “
பறவைகள் இறந்த மாதத்தில் 5G அலைக்கற்றை சோதனை ஏதும் ஹுஜ்ஜென்ஸ் பூங்காவை சுற்றி உள்ள பகுதியில் நடைப்பெறவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், இதில் இறந்த பறவை இனமானது Starling எனக் கூறப்படுகிறது. 5G சோதனையாக இருந்தால் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு ஏன் எவ்வித பாதிப்பும் நிகழவில்லை என்ற கேள்வி உள்ளது.
காணொளியை  காண  : https://youtu.be/pmxWjgk82VQ

1 comment:

  1. Greetings from the UK. Good luck to you and your faith. Blessings. Love love, Andrew.

    ReplyDelete