Tuesday 11 December 2018

RBI யின் அவசரகால கையிருப்பை 10,00,000 கோடியை அரசு வரும் தேர்தலுக்காக !!!

Image result for modi news
உர்ஜித் பட்டேலை யார் நரேந்திர மோடி ஏன் நியமனம் செய்தார்?

ரகு ராம் ராஜன் ஏன் விலகினார் ?


ஏனென்றால் நரேந்திர மோடியும் அவரது அரசும் NPA (வாராக்கடன்) நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். மேலும் ' demonetization' (பணமதிப்பிழப்பை) திட்டமிட்டு கொண்டிருந்தார்கள்.

ஏன் துணை RBI கவர்னர் வைரல் ஆச்சாரியா பிரிவு 7 RBI ACT ஐ குறிப்பிட்டு அரசை எச்சரிக்கை செய்கிறார் ?

யுத்தம், மற்றும் மிகஅவசர காலங்களுக்கு RBI சேமித்து வைத்திருக்கும் 10,00,000+ கோடியை வரும் தேர்தலுக்காக, அரசு RBIயிடம் இருந்து ஆட்டைய போட பார்க்கிறது.

அரசுக்கு ஏன் இந்த பணம் எல்லாம் வேண்டும்?
Demonetizationல் இருந்து இந்த கையாலாகாத அரசு, முட்டாள்தனமாக எதிர்பார்த்த 4,00,000 கோடி லாபம் வரவில்லையென்பதால், வங்கிகள் பணமிருப்பு எல்லாம் மாயமாகி விட்டன.

ஏன் நிறுவனங்கள் வாராக்கடனில் மாட்டுகின்றன ?
ஏனெனில் அவர்களின் தொழில் தவறான பொருளாதார கொள்கைகளால் தோல்வியடைகின்றன.

ஆனால் நரேந்திர மோடியின் கீழ் பொருளாதாரம் மிக சரியாக இருக்கிறது என்று சொல்வதை பற்றி ?
அது உண்மையாக இருந்திருந்தால் RBIயின் Reserve பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் கதை, நரேந்திர மோடி மூலம் சொல்லப்படும் போலி கதைகளில் ஒன்று.

RBI யின் அவசரகால கையிருப்பை அரசு ஆட்டைய போட எத்தனிப்பது எதனால்?

பல பெரு நிறுவனங்களின் வாராக்கடன் தான், குறிப்பாக IL & FS ன் (அதிகாரப்பூர்வமாக) 90,000 கோடி வாராக்கடன் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம். நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி. மற்றும் எந்த இயக்குனரும் கைது செய்யப்படாததே, இதற்கு முக்கிய காரணம் மோடி அரசின் முட்டாள்த்தனமான பொருளாதார முன்னெடுப்பு தான் என்பது தெள்ளதெளிவு .

ஆனால் கடந்த நிதிஆண்டின் லாபமான 58,000 கோடியை ஏற்கனவே RBI கொடுத்தபிறகும் ஏன் கையிருப்பை சூறையாட பார்க்கிறது?
ஏனெனில், பெரும் முதலாளிகள் இழந்த பணம் அவர்களின் வியாபார தோல்விகள் பொருளாதாரத்தில் விழுந்த ஓட்டைகளை நிரப்ப போதுமான அளவு இல்லை.

அரசு அதிக பணம் அச்சிடுவது சாதாரண மக்களுக்கு என்ன விளைவுகளை ?
பணவீக்கத்தை அதிகப்படுத்தும். விலையேற்றம் கடுமையாக இருக்கும்.

ஏன் இந்திய ஒன்றிய அரசுக்கு ஏன் இவ்வளவு பணதேவை மற்றும் மேலும் மேலும் ஏன் அச்சிட வேண்டும்?
GST தோல்வியாகி விட்டது. ஒரு மாதத்திற்கு 1,30,000 கோடி எதிர்பார்த்த வரவில் இருந்து, 90,000 டு 1,00,000 கோடி வரை மட்டுமே வருகிறது. 30,000 அளவிற்கு GST Refundற்கு போய் விடுகிறது. இதை கணக்கிட தெரியாத அளவிற்கு அதிமேதாவிகளாக இந்த அரசு இருந்திருக்கிறது.

GST வசூல் ஏன் குறைந்தது ?
பொருளாதார வீழ்ச்சி ஒரு காரணம். மற்றும் நமது முதலாளிகள் IMF ஆல் மிகவும் கடினமான முறையான வரிவசூல் என்று சொல்லப்பட்ட GST யை ஏமாற்றும் புத்திசாலிகளாக உள்ளனர்.

வணிகம் ஏன் விழுந்தது?

2 மாதத்திற்கு ஒரு பொருளாதாரத்தின் 83 % இரத்ததத்தை உறிஞ்சிவிட்டு, அந்த இரத்தத்தை மீண்டும் பம்ப் செய்ய 6 மாதங்கள் எடுத்துகொண்டால், எதுவும் நடக்காத மாதிரி அந்த மனிதன் ஓடவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. Demonetization இப்படி ஒரு முட்டாள்தனமாக இருந்தது. இது பொருளாதாரம் மற்றும் இந்தியாவின் GDP யில் 2% ஓட்டை விழுந்தது. கிட்டத்தட்ட 3,00,000 கோடி ரூபாய் இழந்து விட்டோம். மேலும் இழப்புகள் தொடரும். ஆனால் அமிதாப் பச்சன், ரஜினி காந்த், கமலஹாசன், RJ பாலாஜி மற்றும் அக்ஷய் குமார் போன்ற பொருளாதார வல்லுநர்களால் அதிபுத்திசாலிதனமான நடவடிக்கை என்று சான்றளிக்கப்பட்டு , ஐஸ்வர்யா ராய் மற்றும் பரேஷ் ராவல் போன்ற மேதைகளால் வழிமொழியப்பட்டது.

உடனடி ஆபத்து என்றால் என்ன?
டெலிகாம் துறை மற்றும் அதன் ஒன்றிணைப்பாளர்கள் இப்போது மூன்று குழுமங்கள் தான் , ஏர்டெல், வோடபோன் IDEA லிமிடெட் மற்றும் ஜியோ. மூன்றும் படு பயங்கர வராக்கடன் அதாவது கிட்டத்தட்ட 8,00,000 கோடி அளவிற்கு சாத்தியம் என்று SBIயின் அக அறிக்கை கடும் எச்சரிக்கை செய்திருக்கிறது.

UPA-2-ஐ விட NDA-2 காட்டும் GDP வலிமையாக தானே உள்ளது ?
முன்னாள் CEA, மோடியின் செல்லம், அரவிந்த் சுப்பிரமணியன் இது குறித்து ஏற்கனவே பேசிய , நிதி ஆயோக் எப்படி மாற்றி மாற்றி, NDA-2வை அதிகப்படுத்தியது, எப்படி சாத்தியமானது என்ற தகவல், விளக்கம் தரும். ஒரு கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கொடு போட்டாச்சு அவ்வளவுதான்.

இந்த குழப்பத்திற்கெல்லாம் யார் பொறுப்பு?

நிச்சயமாக பண்டிட் ஜவஹர் லால் நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தான் பொறுப்பு.

கடந்த 56 மாதங்களில் அதாவது இந்த நான்கே முக்கால் ஆண்டில் இவர்கள் எதையும் செய்ய நரேந்திர மோடியை அனுமதிக்கவில்லை.

சர்தார் படேல் முதல் PMமாக அவர் மறைந்த 1950 வரை இருந்திருந்தால், இதில் எதுவும் நடக்க வாய்ப்பு இருந்திருக்காது.
1952 ல் தானே முதல் தேர்தல் நடந்தது என்று வரலாற்றை நேர்மையாக சொன்னால் அவனை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டு.

யார் பதவி விலக வேண்டும்?
அது ஒரு முட்டாள்தனமான கேள்வி!!! நிச்சயமாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமை மற்றும் தலைவர் பதவிகளில் இருந்து பதவி விலக வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மோடிக்கு 10,00,000+ (பத்து லட்சம்) கோடி கையிருப்பை தூக்கி கொடுத்து அவர் விருப்பியதை செய்ய அனுமதிக்க வேண்டும்.

2019 ல் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

நிச்சயமாக நரேந்திர மோடி, ஏனெனில் அவர் விஷ்ணுவின்11வது_அவதாரம். இவர் இந்துக்களின் ஒரே இரட்சகர்.

இவர் தான் முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க கூடிய பூமி பந்தில் இருக்கும் ஒரே நபர். பசு மாட்டை பாதுகாக்க முடியும்.
இவர் தான் ஏழை, விளிம்புநிலை மக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மீது அக்கறை உள்ள ஒரே ஜீவன். இவர்தான் ராமர் மந்திர் கட்ட முடியும்.


இவர் மட்டும்தான் பூமியில் உள்ள ஒரே நபர், மனைவி, குடும்பம் மற்றும் அவரது 90 வயது தாயை தவிக்க விட்டுவிட்டு வெறும் 10 ஏக்கர் சொத்தில், 5 அடுக்கு பாதுகாப்பில் இருக்க முடியும். அப்போது கூட தனது 90 வயது தாயை பணமதிப்பிழப்பின் போது 4000 ரூபாய்க்காக,
ஒரு பெரிய கேமரா_குழுவுடன் சேர்ந்து வங்கி வாசலில் நிற்க வைக்க முடியும். ஏனெனில் அவர் மட்டும் தான் உலக பயணம், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் மற்றவருடன் பெரிய மீட்டிங்குகள், மற்றும் ராக்-ஸ்டார் வகை நிகழ்ச்சிகள் செய்து இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஏனென்றால் அவர் ஒவ்வொரு மாதமும் வானொலியில் மனதோடு ஒரு பேச்சு என்று பேசுபவர்.

இவர் தான் 126 ராணுவ விமானங்களுக்கு பதிலாக 36 ஜெட் விமானங்களை அதே விலைக்கு வாங்கி கொடுக்க முடியும். ஏன் அதே விலை என்றால், (36 >126) 36 தான் பெரிசு என்று சொல்லி அதையும் குறைவான விலைக்கு வாங்கினோம் என்பது மட்டுமில்லாமல் தனது நண்பரான அணில் அம்பானிக்கு 30,000 கோடியும் கொடுத்து பணத்தை சேமிக்க முடிந்தது என்று உங்களை சமாதானப்படுத்த முடியும்.

ஏனெனில், MA ' ஒட்டுமொத்த அரசியல் அறிவியல் ' மற்றும் ஒரு காணாமல் போன BA வுடன், இவரை விட அதிக தகுதி கொண்ட வேறு எந்த முட்டாளும் இந்த நாட்டை ஆள இன்னும் பிறந்து வரவில்லை.


தொகுப்பு  : மு.அஜ்மல் கான்..

No comments:

Post a Comment