Tuesday, 22 January 2008

விமானத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் கருப்பு பெட்டி பற்றிய விழிப்புணர்வு தவகல்!!

விமானத்தில் உள்ள கறுப்பு பெட்டி என்றால் என்ன ?


“கறுப்புப் பெட்டி” என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.

விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும்.
 அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம். 

இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும்.
 
ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும்.
 
பெரிய கறுப்புப் பெட்டிக்கு ஆங்கிலப் பெயர் Flight data recorde r (பறப்பின் தகவல் பதியி). இது விமானம்
 பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்கு ஆங்கிலப் பெயர் (Voice recorder) இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும். 

கறுப்புப் பெட்டி உருவான வரலாறு: 
கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார்.
 
ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆய்வில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார். 


கறுப்புப் பெட்டி குறித்த அதிசயத் தகவல்கள் : 
* கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கறுப்பு அல்ல, செம்மஞ்சள் நிறம். 
* ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். 
* கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிக்கா, டைட்டானியம் (Titanium) “ஸ்டைன்லெஸ் ஸ்டீல்” (Stainless steel) ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான். 
* விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” (Beep) சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது. 
* இது 2000 பாரன்ஹீட் (2000 °F) வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது. 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 17 January 2008

கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது பற்றிய வரலாற்று பார்வை !!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சாய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வரும் இதன் விலை எரிபொருள் விலையில் பல மாற்றத்ததை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

கச்சா எண்ணெய் என்பது பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் மற்றும் கரிம பொருட்களின் கலவையாகும். நீர்ம நிலையில் உள்ள எண்ணெய் பொருளான, இது பல்வேறு நாடுகளிலில் பல கால கட்டங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஒரு இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்காக தோண்டிய குழியில் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய் கிடைத்ததாக சுட்டிக்காட்டுகின்றன வரலாற்று பதிவுகள்.

இதனை தொடர்ந்தே அரபு நாடுகள் முழுவதும் எண்ணெய் வளங்கள் குறித்து ஆராயப்பட்டது.

அதில் baku என்ற இடத்தில் அதிகளவிலான எண்ணெய் வளங்கள் இருந்ததை வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

அதன் பிறகு கச்சாய் எண்ணெய் பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மண்ணெண்ணெய்யாக பயன்படுத்தப்பட்டது.

கிபி 826 -ல் பெர்சியன் ரசவாதி ஒருவர் கச்சா எண்ணெய்யை அலம்பிக் என்ற வடிகலனை பயன்படுத்தி எரியும் திரவமான பெட்ரோலை கண்டறிந்தார். இப்படி பலவகையான எரிபொருட்கள் கச்சா எண்ணெயிலிருந்து புழக்கத்திற்கு வந்தன.

அதன் பிறகு பல வணிக ரீதியான பயன்பாட்டில் கச்சா எண்ணெய் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 1856 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் தான் முதன் முதலில் வணிக ரீதியான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது. ?சர்வதேச சந்தையில், கச்சாஎண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. எனினும் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகளை அந்த அளவிற்கு குறைக்காமல் வெறு மனே ஒரு ரூபாய், 2 ரூபாய் என கண்துடைப்புக்காக குறைக்கும் அறிவிப்புகளை மோடி அரசு வெளியிட்டு வருகிறது.கடந்த 2014 ஜூன் முதல் இதுவரை கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் குறைந்துள் ளது. கடந்த 7 வாரங்களில் மட்டும் விலை 36 சதவீதம் குறைந்துள்ளது.

அதிக சப்ளை மற்றும் தேவைப்பாடு குறைவு காரணமாக எண்ணெய் விலை குறைந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் சீனா இரண்டாவது இடத் தில் உள்ளது. அந்நாடு கடந்தடிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்துள் ளது. விலை சரிவை வாய்ப்பாக பயன்படுத்தி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் அந்நாடு இறக்குமதியை அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் ஒரு பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெய் சராசரி விலை 40 டாலர் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தியை குறைத்து, அளவுக்கதிகமான சப்ளையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது.

படிப்படியாக விலை குறைந்துதற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பேரல் விலை 45 டாலர் என்ற அளவிற்கு பெருமளவில் சரிந்துள்ளது.சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்கும் நிலையில் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் சீனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஆனால் அப்படியொரு முயற்சியை இந்தியாவில் மோடி அரசுஎந்தவிதத்திலும் மேற் கொள்ளவில்லை.

ஏற்கெனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங் களுக்கு அனுமதி அளித்து, அரசு தனது கட்டுப்பாட்டை கைவிட்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு பெட் ரோல் விலை தொடர்பாக இந்த மோசமான காரியத் தை செய்தது. அரசு வந்ததும் டீசல் விலை கட்டுப் பாட்டு அதிகாரத்தையும் கைவிட்டது.

இதன் விளைவாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தபோ தெல்லாம் இந்தியாவில் தாறுமாறாக பெட்ரோல் – டீசல் விலைகள் அதிகரிக்கப் பட்டன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.93 என்ற அளவை தொட்டது. இது சில்லரை விற்பனையில் 80ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு சர்வ தேச விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், அந்த வீழ்ச்சிக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகள் குறைக்கப்பட வில்லை.

மாறாக, இன்னும் கடுமை யான தாக்குதலை அரசு கட்டவிழ்த்துவிட்டது. சர்வதேச விலை வீழ்ச்சியால் தானாகவே பெட்ரோல் – டீசல் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டபோதிலும், அவற்றின் மீது அதிகப்படி யான உற்பத்தி வரியையும் கலால் வரியையும் அடுத் தடுத்து மூன்றுமுறை விதித்துஉத்தரவிட்டது. இதன் விளைவாக பெட்ரோல் – டீசல் விலைகள் பெருமளவுக்கு குறையாமல் உச்சத்திலேயே நீடிக்கின்றன. இதன்காரண மாக ஏற் கெனவே ஏற்றப்பட்ட அனைத்துவிதமான விலை களும் அதே உயர்விலேயே நீடிக்கின்றன.

இதனிடையே விலைக் குறைப்பு என்ற பெயரில் அவ்வப்போது ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை குறைப்பதாக அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது ரூ.2 குறைக்கப்படும் என தெரிகிறது. அப்படியே குறைக்கப் பட்டாலும், சர்வதேச சந்தை மதிப்பின்படி உள்ளூரில் வெறும் ரூ.30 முதல் 40 வரைவிற்கப்பட வேண்டிய பெட் ரோலுக்கு இரண்டு மடங்கு கூடுதல் விலை தரவேண்டிய நிலையே நீடிக்கிறது.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்

Tuesday, 15 January 2008

மகர ஜோதி என்ற பெயரில் ஆன்மீக மோசடி....?

பொய்யைக் காப்பாற்ற இன்னொரு பொய்.
மகர ஜோதி என்ற பெயரில் ஆன்மீக மோசடி செய்யும் ஐயப்ப தேவஸ்தானமும், கேரள அரசாங்கமும்.

மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து அதன் மூலம் தம் குடும்ப வாழ்க்கையை நடத்திச் செல்ல முற்படுபவர்கள் பலர்.


இப்படிப் பட்டவர்கள் பல மதங்களிலும் இருக்கிறார்கள் ஆனால் பெரும்பாலான மதங்களே மூட நம்பிக்கையாகவே இருக்கிறது என்பதும் நிதர்சனம்.

கத்தம், கந்தூரி, மந்திரித்தல், பேயோட்டுதல், தர்காவில் கூப்பாடு போடுதல் என்று முஸ்லீம் பெயர் தாங்கிகள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதைப் போல் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றுவதற்குப் பல வழிகளைக் கையால்கிறார்கள்.

அந்த வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த சில புரோகிதர்கள் மக்களிடம் இருந்து பணத்தைக் கரந்து கொள்ள ஏற்படுத்திக் கொண்ட வழிதான் இந்த மகர ஜோதி.

மகர ஜோதி என்ற இந்தப் பொய் ஜோதியைப் பற்றிய உண்மையான தகவலை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் இது கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட நாடகமாகும்.

மகர ஜோதி என்றால் என்ன?

இந்தியாவின் தென் மாகாணமான கேரளாவில் இருக்கும் சபரி மலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குக் கிழக்கே மலை நடுவில் தெரியும் ஒளிக் கற்றையை மகர ஜோதி என்று அழைக்கிறார்கள்.

ஐய்யப்பனை கடவுளாக(?) வணங்கும் இந்து மக்கள் இந்த ஒளியை கடவுள்தான் ஒளியாகத் தெரிகிறார் என்று நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும் கேரள திருவிதாங்கூர் சபரி மலையான் கோயில் தேவசம் போர்ட்டுக்கும் கேரள அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

பக்தர்களிடமிருந்து காணிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் தங்க ஆபரணங்களும் இந்த போர்டுக்கு வருவாயாக கிடைக்கிறது.

ருசி கண்ட தேவசம் போர்ட்டு நிர்வாகமும் இந்த ஒளியை கடவுளின் ஒளியாகத்தான் இதுவரைக்கும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது.

மகர ஜோதி கடவுளின் செயலா? அல்லது காடையர்களின் செயலா?


மகர ஜோதி என்ற பெயரில் கடவுளுடன் தொடர்பு படுத்தப் படும் குறிப்பிட்ட தீப்பந்தம் எவ்வாறு தோன்றுகிறது என்ற உண்மைச் செய்திகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பலரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டும் மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கை காரணமாக ஐயப்பனை தரிசிக்க வரும் பக்க கோடிகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது.

உலகத்திலேயே அதிகமான கடவுள்(?)களை கொண்ட ஒரு மதமாக அல்லது அதிகமான கடவுள்களை(?) வணங்கும் மதத்தினராக இந்துக்கள் தான் இருப்பார்கள்.

கண்டதையும் கடவுளாக வணங்கும் இவா்களின் மடமைத் தனத்தினால் தான் இந்த ஐயப்ப(?)னும் கடவுளாக மாறிவிட்டார்.

(மலையில் (மனிதர்களினால் எறிக்கப்படும்) மகர ஜோதி - படத்தைப் பார்க்கவும்.)


கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட அற்ற ஐயப்ப தேவசம் போர்டும் கேரள அரசும் ஐயப்பனை கடவுள்(?) என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் அதே நேரம், ஐயப்பன் பெயரால் பொய்யான தீப்பந்தத்தை உருவாக்கி அது பொய்யன்று தங்களுக்கு தெரிந்த நிலையிலேயே மக்களை ஏமாற்றுவதுதான் வேடிக்கையான விஷயம்.

பூனைக் குட்டி வெளியில் வந்தது எப்படி?

கடவுளின் செயல் என்று கண்ணாம் பூச்சி ஆட்டம் காட்டப்பட்ட ஐயப்பனின் மகர ஜோதி பற்றிய உண்மை மக்களுக்கு மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதும் ஆடிப்போனது. ஐயப்பனின் தேவசம் போர்டும், கேரளாவின் ஆளும் அரசும்.

மகர ஜோதி பற்றிய ஆய்வை மேற்கொண்ட கேரளாவின் மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ் கே பெரிய விலார் அவர்களை இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி சேவையான விஜய் டி.வி மகர ஜோதி தொடர்பாக ஒரு பேட்டி எடுத்தது அந்தப் பேட்டியில் மகர ஜோதி என்ற பெயரில் ஐயப்ப கோவில் நிர்வாகம் நடத்தும் நாடகத்தை தாம் எவ்வாறு வெளியில் கொண்டு வந்தோம் என்ற தகவலை அவர் எடுத்துரைத்தார் அந்த வீடியோவை இங்கே பதிவு செய்கிறோம்.


மகர ஜோதியின் உண்மைத் தன்மை பற்றிய கேரள மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ் அவர்களின் பேட்டியின் வீடியோவைக் காண.....


மகர ஜோதி என்ற பித்தளாட்டம் பாகம் 01

மகர ஜோதி என்ற பித்தளாட்டம் பாகம் 02




கேரள ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு நிர்வாகத்தின் ஆலோசனையின் பிரகாரம் கேரளாவின் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் கேரள வனத்துறை ஊழியர்களுடன், அரச தரப்பினரும் சேர்ந்து ஆடும் நாடகமே இந்த மகர ஜோதி என்பது.


சபரி மலையின் பொன்னம்பல மேட்டில் எறியும் இந்த மகர ஜோதி என்ற பொய்யான ஜோதியை மேற்கண்ட அணைத்து தரப்பினரும் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

(மகர ஜோதி பித்தளாட்டம் நடக்கும் இடம் இதுதான் - படத்தைப் பார்க்கவும்.)


ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி ஐய்யப்ப பக்தர்கள் இந்த மகர ஜோதியைக் காண்பதற்காக கேரளா, ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு, புதுவை, டெல்லி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக் கணக்கான மக்கள் வந்து கேரளாவின் இடுக்கி மாவட்டம் புல்மேடு வனப்பகுதியில் இருந்து இந்த மகர ஜோதியை(?) காண்பார்கள்.

புல் மேடு பகுதியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் இருந்து தீபம் தெரிவதைப் போன்ற காட்டி உருவாகுவதினால் அங்கு வரும் பக்தர்கள்(?) அந்த காட்டி வானத்தில் இருந்துதான் தெரிகிறது என்று நம்புகிறார்கள்.

ஆனால உண்மையில் அது கேரள வனத்துறை மற்றும் காவல் துறையின் உதவியுடன் நடத்தப் படும் நாடகம் தான்.

தீபம் உருவாகும் விதம்.

கேரள வனத்துறை மற்றும் காவல் துறை உதவியுடன் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி மலை உச்சியில் கற்புரகக் கற்றைகளை பெரிய பாத்திரித்திற்குள் வைத்து எறிக்கிறார்கள். மூன்று முறை எறிக்கப்படும் இந்த கற்புரக தீ உருவாக்க நிகழ்ச்சியில் முதல் தடவை எறித்ததும் கொஞ்ச நேரத்தில் வேறு ஒரு பாத்திரத்தினால் அதனை மூடி விடுவார்கள்.

பின்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவைகளும் முதல் தடவை செய்ததைப் போலவே செய்வார்கள்.

மூன்ற தடவை இப்படி செய்ததும் அதனை அனைத்து விடுவார்கள்.

இந்த நிகழ்வை இரகசியமாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டார் கேரள பத்திரிக்கையாளர் மனோஜ் கே பெரியவிலார்.

அதன் பின்னர் கேரளாவைச் சோ்ந்த சில அமைப்புகள் இந்த மகர ஜோதி ஏற்றும் நிகழ்வைத் தடுக்க முற்பட்ட போதும் போலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டார்கள்.

அதே போல் இன்னும் சில அமைப்புகள் பத்திரிக்கையாளர் மனோஜ் உடன் சென்று அதே தினத்தில் மகர ஜோதி எறிக்கப்படும் முன்பு தாங்கள் ஒரு தீயை எறித்தார்கள் இதுதான் மகர ஜோதி என்று அன்றும் மக்களும் நம்பினார்கள். பல மீடியாக்களும் இதனை ஒளிபரப்பினார்கள்.

ஆனால் தேவசம் போர்ட் நிர்வாகமோ அது மகர ஜோதி அல்ல என்று மறுத்துறைத்தது. ஏன் என்றால் அந்த தீயை அவா்கள் செட்அப் செய்தவர்கள் எறிக்கவில்லை என்பது அவா்களுக்குத் தான் தெரியும்.

மனிதக் கேடிகளின் வேலையே மகர ஜோதி !

சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பொய் ஜோதி தொடர்பாக டெகல்கா இணையதள ஆங்கில பத்திரிக்கை (21.06.208) அன்று வெளியிட்ட பரபரப்புத் தகவல் இதோ.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடியை ஆரம்பித்தனர்.

கற்பூரத்தை மூட்டை மூட்டையாகத் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மனோஜ் அவா்களின் குழு முயன்றது.

1973-இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது, கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச்சட்டப் படி எந்தக் குற்றமும் அந்தக் குழு செய்யவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து, வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தியது அந்தக் குழு..

இப்போது ஐய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரரு மகேஸ்வரர், ஆம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறார் என்று ஒப்புக்கொண்டார்; தேவஸ்வம்போர்டு தலைவர் கி.கே.குப்தனும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத் துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் ஆமோதித்துவிட்டார்.

ஆக மொத்தத்தில் ஒரு பொய்யை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு அரசாங்கமே இந்த நாடகத்தை முன்னின்று நடத்துகிறது.

பொது மக்களே ! அறிவு ஜீவிகளே !




இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளையும், பொய்யையும், அயோக்கியத்தனத்தையும் தன் கொள்கையாக கொண்ட மதங்களை நம்புவதை விட்டு விட்டு மூட நம்பிக்கைகளற்ற தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி உங்களை அழைக்கிறோம்.




விரைந்து வாருங்கள் உங்களுக்கான நேரான வழி தூய்மையான திருமறைக் குர்ஆனிலும் நபியவர்களின் வாழ்கை வழிகாட்டுதலிலும் நிறைந்திருக்கிறது.


அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் வாழச் செய்வானாக!

-RASMIN M.I.Sc.
 source-http://rasminmisc.blogspot.com/2011/03/blog-post.html

Sunday, 13 January 2008

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு/ மஞ்சுவிரட்டு பற்றிய சிறப்பு பார்வை..

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு,கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டு நடத்தப்படுகின்றது. 

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு(ஜல்லிக்கட்டு) :
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு.ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும்.
ஜல்லிக்கட்டு பெயர்க்காரணம் :

ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது.புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது.பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை பண்டைக் கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வாள், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை கையாள்வதில் மட்டுமின்றி, துள்ளித்திரியும் காளைகளை துணிந்து அடக்கும் இளைஞர்கள் பற்றி கலித்தொகையில் கொல்லேறு தழுவல் என குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறியலாம். 

வரலாறு 

15ஆம் நூற்றாண்டில் எருதுச்சண்டை ஸ்பெயின் நாட்டில் உருவானது. மெக்சிகோ, பெரு, கொலம்பியா மற்றும் வெனின்சுலா போன்ற நாடுகளுக்கும் பரவியது. அங்கு மாடோ மனிதனோ இறப்பது பொதுவானதென்றே கருதப்படுகிறது.எனவே, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விளையாட்டுபோல் அல்ல ஜல்லிக்கட்டு. 
ஸ்பெயின் நாட்டில்கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் "Bull Bitting" என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது. எனவே, இவ்விளையாட்டில் நமக்கு மட்டுமே மரபுரீதியான தொன்மையான நீண்ட அனுபவம் உள்ள விளையாட்டுக்கு மட்டுமே பிரதானமான இடமுண்டு. இதில் மனிதனுக்கோ காளைக்கோ மரணம் சம்பவிக்காமல் காக்கப்படுகிறது. முழுக்க முழுக்கப் பார்வையாளர்களின் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.ஜல்லிக்கட்டு எப்படி துவங்கியது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வீர விளையாட்டாகவே இன்றளவும் கருதுகின்றனர். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் தை மாத துவக்கத்தை தென் மாவட்ட மக்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.


ஜல்லிக்கட்டு சிறப்பம்சம்: 
இவ்விளையாட்டு உண்மையில் காளைகள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கெனவே தனிக்கவனம் கொண்டு வளர்க்கப்படுவது இதன் சிறப்பம்சம். இந்தக் காளைகள் வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது அவற்றின் மீதான கற்பனைகளை விரிக்கிறது. இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரமறவர் குல இளைஞர்களின் குருதியோடும் சுவாசத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு. இக்கூற்று மிகையாகத் தெரிந்தாலும் தைமாதம் முழுவதும் இந்த இளைஞர்களின் சுவாசமே வீரத்தை விருத்திப்படுத்துவதில் மையம் கொள்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களில் உள்ள "கோவில்மேட்டுப்" பகுதி இவ்விளையாட்டினை நிகழ்த்தும் களப் பரப்பாகவே கண்ணுக்குத் தெரிகிறது. மேலும் இந்த விளையாட்டின் மூலம் காளைகளுக்குத் தேவையற்ற வலியோ தீங்கோ இரத்தக் காயங்களோ ஏற்படுவதில்லை. அந்த அளவிற்கு இதனை நடத்தும்போது விதிமுறைகளில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு பார்வையில், மேலோட்டமாக மனிதன் காளைகளோடு மோதும் முரண்பட்ட விளையாட்டாகத் தோன்றினாலும் உண்மை அதுவன்று. எதிரிக்கு எதிரி போர்க்களத்தில் நண்பனாவதுபோல் இரண்டு வீரர்களும் வீரம் காட்டி விளையாடும் நுட்பம் இதில் மறைந்துள்ளது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளைப் பின்தொடர்ந்து வீரர்கள் குறித்த தூரத்தில் ஓடி விளையாட்டுக் காட்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறார்கள். இதனை மாடு பிடிக்கும் விழா என்றும் கூறுவதுண்டு. உண்மையில், பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது மூன்றாம் நூற்றாண்டில் அவர்களது நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த மேட்டுப்பட்டி எனும் இடத்தில் காணப்படும் குகைச்சித்திரத்தில் ஒரு தனி மனிதன் ஒரு காளையை அடக்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறம் மஞ்சு விரட்டு :
'மஞ்சு விரட்டு' என்று மறுபெயரிட்டு இது அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறது இவ் விளையாட்டு என்பதே இதன் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. திறந்த மைதானத்தில் 'காளை' தனிமையில் விடப்படுகிறது. ஆயுதங்கள் இல்லாத மனவலிமை கொண்ட வீரர்கள் அதனை விரட்டிப் பிடித்து அடக்குவார்கள் என்பது நிஜம். அப்போது காளையின் இரண்டு கொம்புகளையும் தமது உரமேறிய கைகளால் மடக்கிப் பிடித்து அடக்கும் வீரர்கள், கொம்பில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணியிலுள்ள பரிசை வென்று மகிழ்வார்கள். வலிமையைப் பறைசாற்றும் இவ்விளையாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவதுகூட ஒருவகையில் காதல் பயிரிடும் களமாகிறது. ஒரு நல்ல வீரம் நிறைந்த ஆண்மகனைக் காதலனாகப் பெறவே இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டுவருகிறது. எனக்குச் சரியாக நினைவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதை நான் அறிகிறேன்.






காளையை அடக்கும் வீரதமிழர்கள் :
பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன்பின்
இவர்கள் களம் காணும் வீரத் திருவிழாதான் இந்த ஜல்லிக்கட்டு. நூற்றுக்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான காளையர்கள், லட்சக்க ணக்கான பார்வையாளர்கள் கூடுவதால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமமே களை கட்டும். இதில் வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு
கவுரவமும் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சி யில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவிவிட்டால் விழுப் புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.
மாடுபிடிப் போரில் காளையை அடக்கிய வீரன் காதல் நிரம்பிய அழகிய கன்னிகையிடமிருந்து காதல் பரிசாக மோதிரத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்கிறது நமது பழைய வரலாறு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதனையே இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது.


காளை வளர்க்கும் உரிமையாளர்பயிற்சி!!
நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.

அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆவதாக அவற்றின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. அதேசமயம் பிடிபட்டு விட் டால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். எனவே தான், ஜல்லிக்கட்டு தமிழர் களின் வீரத்தோடு மட்டுமின்றி உணர்வோடு கலந்ததாகவும் விளங்கி வருகிறது.
அதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப் பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும். எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்னதாக காளைகள், காளை யர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்துவதே தனி கலை

பயிற்சிக்கு பின் அரங்கேற்றம் தொடங்கும் காளைகள் சுமார் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் அந்த காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லாமல் தொடர்ந்து வீட்டில் வைத்தே குடும்பத்தில் ஒருவரை போல் பராமரிக்கின்றனர். பாசமாக வளர்த்த காளை இறந்து விட்டால், அவற்றிற்கு வீட்டருகே கோயில் கட்டி வழிபாடு நடத்துவதையும் பல கிராமங்களில் காண முடிகிறது. இப்படி சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து வரும் (கி.மு.2000) ஜல்லிக்கட்டிற்கு எதிராக தற்போது கிளம்பியுள்ள அத்தனை தடைகளையும் தாண்டி, அதனை தொடர்ந்து நடத்தும் ஆற்றல் தமிழர்களுக்கு கிடைத்ததற்கு காளைகள் மீதான பாசம், காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரம், காளைகளால் கிடைக்கும் கவுரவம் ஆகியவை தான் காரணம் என்பதை உணர முடிகிறது.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை.ஆவரங்காடு, மற்றும் தேனீமலை , தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன ஏறுதழுவல் புகழ்பெற்றது.



ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டின் பல முறைகள்:

சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. 

1. வாடி மஞ்சுவிரட்டு: மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று  அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். இம்முறை தஞ்சாவூர், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

2. விரட்டு மஞ்சுவிரட்டு அல்லது 
வேலி மஞ்சுவிரட்டு: இம்முறையில், பல காளைகள் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஓட விடப்படும்.அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும்,  இந்த காளைகளை அடக்க பல இளைஞர்கள் களத்தில் இறங்கி தத்தம் வீரத்தை காட்டுவர். இது பொதுவாக மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் விளையாடப்படுகிறது.

3. வட மஞ்சுவிரட்டு: 
தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
என் கருத்து :


1. காளைகளை சித்திரவதை செய்வதாக கூறப்படும் கருத்தை மாற்ற, காளைகளை திடலில் விடும் முன்பு, மருத்துவர்கள் அவைகளை பரிசோதித்து அவை எவ்வித சித்திரவதைகளுக்கும் உட்படவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

2. இந் நிகழ்ச்சிகளை வீதிகளில் நடத்த விடாமல் ஒரு விளையாட்டு திடலில் தக்க பாதுகாப்புடனும், பார்வையாளர்களை உயரிய இடங்களில் பத்திரமாக அமர வசதிகளுடன் நடத்தப்படவேண்டும்.

3. இதை ஒரு சமுதாய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றி, இதற்கு ஒரு புது வடிவத்தையும், புதுப்பொலிவையையும் அளிக்க வேண்டும்.

4. பிற விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்று இவைகளை நடத்தவும் பெரிய வர்த்தக அமைப்புகள் நிதியளித்து ஊக்குவிக்கவேண்டும்.

5. கேரளத்தில் நடைபெறும் படகு விழா போன்று இந்த விளையாட்டையும் பிற நாட்டினர் வந்து கண்டு களிக்க ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியாக அமைக்கவேண்டும்.
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்து மதத்தோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதக்கூடியது அல்ல என்பதைத் தங்களுக்கு முன்வைக்கிறேன். கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவருவதால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Tuesday, 8 January 2008

திருக்குறள் பற்றி எனக்குள் எழும் கேள்விகள் !! ஒரு சிறப்பு பார்வை..


'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்' - குர்ஆன் 14;4

'மனிதர்களாகிய நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும். இது முந்தைய வேதங்களிலும், இப்றாகிம்,மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. - குர்ஆன் 87- 16,17,18

மேற் கண்ட குர்ஆன் வசனத்தின் படி செம் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியிலும் நிச்சயமாக வேதமும், தூதரும் வந்திருக்கலாம். அது திருக் குறளும், திருவள்ளுவரும் ஆக கூட இருக்கலாம். ஆனால் கடைசி வேதமான குர்ஆன் இறங்கிய பிறகு இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களின் சட்டங்களை பின் பற்ற வேண்டும் என்ற கட்டளை முஸ்லிம்களுக்கு இடப் படவில்லை. அவர்களை கட்டுப் படுத்தக் கூடிய வேதம் குர்ஆன் ஒன்றுதான். இனி  கீழே  உள்ள திருக்குறளைப் பற்றிப் பார்ப்போம்.

நன்றி மறப்பது நன்றன்று - நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடு

மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன்தந்தை
என்னோற்றான் கொல் என்சொல்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் - தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

படிக்கும் காலங்களில் மனனம் செய்ததை எடுத்து எழுதியுள்ளேன். ஏதும் தவறுகள் இருப்பின் திருத்தி வாசிக்கவும. இது போன்ற பல குறள்களை நான் படிக்கும் போது இவ்வளவு எளிமையாக இரண்டு அடிகளில் சொல்ல வந்த கருத்தை திருக்குறள் எவ்வளவு அழகாக விளக்குகிறது என்று வியந்து போவேன். அதிலும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதன் சட்டங்கள் பலதும் அமைந்துள்ளது இதற்கு மேலும் சிறப்பு. திருக்குறளின் பல கருத்துகள் குர்ஆனோடு ஒத்துப் போவதையும் பல இடங்களில் பார்க்கிறோம். குர்ஆனில் இறைவன் சொல்லக் கூடிய பல உதாரணங்கள் திருக் குறளிலும் வருவதைப் பார்த்து நான் சில நேரம் ஆச்சரியப் பட்டுப் போவேன்.

இது போன்று எண்பது சதவீத குறள்கள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும் படியாக அமைந்துள்ளது. இதில் குறைந்த எண்ணிக்கையில் சில குறள்கள் உலகத்தார் அனைவருக்கும் பொருந்தாததாகவும், சில அறிவியல் கருத்துக்களோடு மோதுவதாகவும் உள்ளது.எனவே அது போன்று வரக் கூடிய கருத்துக்கள் திருவள்ளுவருக்குப் பிறகு சேர்க்கப் பட்ட இடைச் செருகலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. ஒருக்கால் என் எண்ணம் தவறாக கூட இருக்கலாம் பைபிள்,தௌராத்,ஜபூர் போன்ற இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களை நம்பச் சொல்லும் குர்ஆன், அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து மாற்றப் பட்டதால் அதை பின் பற்றக் கூடாது என்றும் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளை செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.' - 2;75

'இது இறைவனிடமிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவன் பெயரால் பொய் கூறுகின்றனர்.' - குர்ஆன் 3;78

மேற்கண்ட வசனங்களின் மூலம் இறை வேதங்கள் பலவும் மனிதக் கரங்களால் மாசு படுத்தப் பட்டுள்ளன என்று விளங்க முடிகிறது. ஆது போன்று நான் நினைக்கும் ஒரு சில குறள்களை பட்டியலிடுகிறேன். குறளை புரிந்து கொண்ட விதத்தில் ஏதும் தவறுகள் என்னிடம் தென் பட்டு நண்பர்கள் சுட்டிக் காட்டினால் தவறை திருத்திக் கொள்கிறேன்.

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.
இது பெண்ணடிமையை வலியுறுத்துகிறது. கணவன் அவன் எவ்வளவு அரக்கனாக இருந்தாலும் அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கூறுவதை நடை முறைப் படுத்த இயலாது. இத்தகைய பெண்களால் மழை பெய்விக்க முடியும் என்றால் உலகில் வறட்சி நிலவும் இடங்களில் இவர்களை பயன் படுத்திக் கொள்ளலாம் அல்லவா! இறைவனை வணங்க வேண்டும் என்று பல குறள்களில் சொல்லும் அறிவுறுத்தும் வள்ளுவர் இந்த குறளில் கணவனை வணங்கினாலே போதும் என்று தன் கருத்திலேயே மாறு படுகிறார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.

விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.


இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Friday, 4 January 2008

தொப்பையை குறைக்க எளிய வழிகள்!! ஒரு சிறப்பு பார்வை..

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.
மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். 
அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.
1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.
2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.
6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.
7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.
9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.
10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.
11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.
12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.
13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 3 January 2008

மஞ்சள் காமாலை பற்றிய சிறப்பு பார்வை...

மஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் ஆளையே கொன்று விடும். கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: நம் நாட்டில் பெரும்பாலும் ‘கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ’ என்ற வைரசின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது.
மஞ்சள் காமாலை உருவாக காரணம் 
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத்தோற்றுவிக்கிறது.
இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.
மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?
ரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம். மேலும், கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும்.
ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம். 

மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும், கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். 
கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பிணிகளுக்கு `கல்லீரல் அழற்சி பி வைரசால்' பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். 

இதற்காக, வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மஞ்சள் காமாலைக்கு  நிறந்தரதீர்வு !!
பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கீழாநெல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
  • கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
  • கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்
  • காலையில் வெறும் வயிற்றில் 30 மிலி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.
  • சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு குணமாகும்.
  • நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
  • துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம்
  • பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்
  • காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
  • பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
  • எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.
  • புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
  • நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.


இந்நோயால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும். மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண் ணெய் பயன்படுத்தக் கூடாது. மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக்  கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்கவும். மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.
தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல்.

Wednesday, 2 January 2008

சர்க்கரை நோய்க்கு நபிவழி மருத்துவமும்!! ஒரு மருத்துவ பார்வை..


"நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80)

மேற்கண்டபடி நோய்க்கான நிவார ணத்தை தானே தருவதாக அல் லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.  இதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.

கடந்த 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் வளர்ச்சி கண்டு வரும் யுனானி மருத்துவம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமு றையை அடிப்ப டையாகக் கொண் டுள்ளது.  எவருடைய வாழ்க்கை முறை சுன்னத்தான (நபி வழி) அடிப்படையில் அமைந்திருக்கிறதோ அவர்களுக்கு யுனானி மருத்துவம் அற்புதமான முறையில் பலனளிக் கும் என்பது திண்ணம்.
முஸ்லிம்கள் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்திலிருந்தும், நேரம் தவறி உண்ணும் பழக்கத்திலிருந்தும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது இஸ்லாம்.


ஒரு முஸ்லிம் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற நிலை யில் உணவுப் பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும். நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளது குறிப்பிடத்தக் கது.

நன்றாகப் பசித்த பின்னர்தான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. ஒருவருக்கு விருப்பமான உண வாக இருந்தாலும் அதை மூச்சு முட்ட உண்பதை தவிர்க்கச் சொல்கி றது இஸ்லாம்.
ஒரு முஸ்லிமின் சுன் னத்தான உணவுப் பழக்கம் என்பது, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்ட பின்னர் சுமார் அரை மணி நேரம்வரை நீர ருந்தக் கூடாது.
உணவின் சுவைக்காக மசாலாப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின் றன. ஆனால் தக்காளி, புளி, தேங்காய், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உணவை நன்றாக மென்று அரைத்து அதன்பின் உட் கொள்ள வேண்டும். இது உணவை விரைந்து செரி மாணமாக்கும். தரையில் அமர்ந்து உண்பது சிறப் பானதாகும்.


ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளை க்கு 6 முதல் 8 மணி நேரங்கள் வரை கண்டிப்பாக தூங்க வேண்டியது அவசியம். நீரிழிவு நோயாளி மதிய உணவுக்குப் பின் உடனடி யாக ஒரு மணி நேரமா வது தூங்குவது அவசியமாகும்.

ஆலிவ் (ஒலிவம்) எண் ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை பாதுகாக்க முடியும். ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்ப்பதும், பாதாம் எண்ணெயின் சில துளிகளை பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிக ளுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

நீரிழிவு நோயாளி உணவில் வினிகரை (காடி) சேர்த்துக் கொள்வது நல்லது. ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவுக்கு வினிகரை வழக்கமான சமையல் மற்றும் மசாலா பொருட்களோடு சேர்த்துக் கொண்டால் அற்புதமான முறையில் ஜீரணக் குறைபாடுகள் நீங்கும். ஒரு நீரிழிவு நோயாளி தேவையற்ற வகையில் உடலை வருத் திக் கொள்வதையோ மனஉளைச்சல் அடை வதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் வகை யில் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் (நன்மை தீமைகள்) அனைத்தும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கி றது என்பதை முஸ்லிம்கள் மன தார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயா ளிகள் சுத்தமான தேன், மாதுளை, கருப்பு திரா ட்சை, பேரீ ட்சை, அத்திக் காய், ஆலிவ் காய் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

நீரிழிவு நோயாளி ஒருவர் மேற்கண்டபடி நபிவழியி லான இயற்கை உணவுகளுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால் நிச்சயமாக நீரிழிவு நோயின் காரணமாக உண்டாகும் கிட்னி, இருதயம், நுரையீரல், மூளை, கண்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோய் என்பதை மருத்துவத்துறை மெட்டா போலிக் டிஸ்ஆர்டர் என்று அழைக்கிறது. அதாவது உடலுக்கு தேவையான இன்சூலின் சுரக்காமல் போவது அல்லது இன்சூலினை சுரக்கச் செய்யும் செல்கள் செயல்படாமல் போவதாகும். இதன் விளைவால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடும். 

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகளவு தாகம், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். நீரிழிவு நோய் என்பது இன்றைய நிலையில் மனிதர் களை மெல்ல மெல்லக் கொல்லும் மிகப்பெரும் ஆபத்து களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மருத்துவ உலகம் இது குறித்து எச்சரிக்கை செய்கின்றது.
எனவே நீரிழிவு நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ள மேற்சொன்ன நபிவழியில் அமைந்த உணவு முறையை கட்டுப்பாட்டோடு கடைபிடித்தால் சந்தோ ஷமாக,   ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

நன்றி - டாக்டர் ஹக்கீம் சையத் ஷா. ஷோய்புதீன், ஷிஃபா யுனானி ஹர்பல் கிளினிக்.

தொகுப்பு : மு .அஜ்மல் கான் .

Monday, 31 December 2007

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்!!

அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Saturday, 29 December 2007

You know Matser Skillful Techniques Man in thwe World?

Prophet Muhammad (Peace Be Upon Him) proved to master skillful techniques with which he accomplished his goals in delivering the message of Islam in the whole world. 
  The Perfect Man
  The Most Cultured Man
  The Sincere
  The Modest
  The Humble
  The Polite
  The Austere
  The Moderate
  The Gentle
  The Kind
  The Truthful
  The Just
  The Merciful
  The Forgiving
  The Generous
  The Hospitable
  The Charitable
  The Peaceful
  The Friendly
  The Most Persistent Person
  The Contented
  The Most Educated
  The Courageous
  The Most Loved
  The Rational
  The Champion of Equality
  The Most Practical
  The Most Impartial
  The Most Self-Disciplined
  A – non – Racist and World Leader...

By  : M.Ajmal Khan.