Tuesday 29 January 2008

புளியம்பழத்தில் இத்தனை நன்மைகளா !!

புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.
நாம் உபயோகிக்கும் புளியைத் தரும் புளியமரம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது. ஆனால், தொன்று தொட்டு இந்தியாவில் உபயோகப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தோன்றியதாக, கருதப்படுகிறது. புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று. பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம்.
விஞ்ஞான ரீதியாக Leguminosae (Fabaceae) குடும்பத்தை சேர்ந்த Tamarindus India 'L' என்று குறிப்பிடப்படுகிறது. உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு வளரும் புளியமரம், குளிரைத் தாங்காது. ஆனால் கடற்கரை ஓரங்களில் கூட வளரும். அதிகமான கவனிப்பும் தேவையில்லை. சிறு செடிகளாக இருக்கும் போது உரங்கள் தேவை. விதையை நட்டு உருவாகும் புளிய மரங்கள் 6-8 வருடங்களில் பலன் தரும். செடியாக நடப்பட்ட மரங்கள் காய்க்க 3-4 வருடங்கள் போதும். மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது.

தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பரவலாக காணப்படும் புளியமரங்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் ஓங்கி வளர்ந்து நிழல் தருகின்றன.

‪‎புளியம்பழம்‬ 3-8 அங்குல வளைந்த மேல் ஓட்டுக்களில் அடங்கியிருக்கும். ஒரு ஓட்டில் (Pods) ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை விதையை மூடிய விழுதாக பழங்கள் இருக்கும். புளிப்பும் இனிப்பு கலந்த பழங்கள், அமிலமும் சர்க்கரையும் சேர்ந்தவை. நன்றாக பழுத்தவுடன் மேலோடுகள் உடையும் நிலையில் இருக்கும். சுலபமாக மேலோட்டை உடைக்கலாம். நன்கு வளர்ந்த புளியமரம், ஒரு வருடத்திற்கு 160 கிலோ வரை, சராசரியாக தரும்.

நாம் புளி என்று வழக்கமாக சொல்வது புளியம் பழத்தைத்தான். புளியில் கால்சியம், வைட்டமின் 'பி' நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணமூட்டவும், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது.

புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று. ரசம், குழம்பு, சாம்பார், புளிக்குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். ஆந்திராவில் புளியால் ஆன "பச்சிபுளுஸ" பிரசித்தம். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் புளியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
தென் அமெரிக்காவில் புளியால் ஆன "Tamarindo" எனும் பானம் மிகவும் விரும்பப்படுகிறது.
புளி மட்டுமல்ல, கொழுந்து‬, புளி இலைகளும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. ஆப்பிரிக்க தேச ஜிம்பாப்வேயில் இலைகள் சூப்பிலும், பூக்கள் சலாட்களிலும் உபயோகப்படுகின்றன.

புளியங்கொட்டைகள்‬ . . .
இவற்றில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன. வறுக்கப்பட்ட கொட்டை, காப்பிக் கொட்டைகளுக்கு பதிலாக கலப்படம் செய்யப்படுகிறது.
புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன் ஸில் இலைகள் 'டீ' யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுகிறது. ஆயுர் வேதத்தில் வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு புளி பயன்படுகிறது. அமெரிக்கா மருந்துகள் தயாரிக்க வருடத்தில் 90,000 கிலோ புளியை இறக்குமதி செய்கிறது.


மருத்துவ பயன்கள் . . .
* புளி சூட்டைத் தணிக்கும். புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.
* புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.
* புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.
* புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும்.
* புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.
* இளம் பச்சை நிறத்தில் இருக்கும் புளியங்கொழுந்து இலைகளை பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட உடலுக்கு பலம் உண்டாகும்.
* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட கண்களைப் பற்றிய நோய்கள், புண்கள் ஆறும்.
* புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, ‪#‎கண்‬ வலி ஆகியவை நீங்கும்.
* புளியம்பூவை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டுவர பித்தம்‬வாந்தி‬, வாய்க் கசப்பு ஆகியவை தீரும்.
* புளியை குழம்புபோல் கரைத்து, அதனுடன் 2 பங்கு உப்பு சேர்த்து காய்ச்சி கொதிக்க வைத்து, இளம்சூடாக இருக்கும் நேரத்தில் அடிபட்டதால் ஏற்பட்ட ‪ வீக்கத்தில்‬ தடவிவர இரண்டொரு வேளையில் அது கரைந்துவிடும்.
* புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள்‬நாக்கில் தடவிவர அதன் வளர்ச்சி கரையும்.
* புளியம்பழம், கரிசலாங்கண்ணி இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு 8 நாட்கள் சாப்பிட்டு வர அடிதள்ளல் குணமாகும்.
* புளியை தினமும் ரசத்தில் சேர்ப்பதால் மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றின் வேகத்தை அது கட்டுப்படுத்தும். உணவில் அளவோடு புளியை சேர்த்துவர ஜீரண சக்தி அதிகரிக்கும்.
மது‬ அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.
* புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள்‬ கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.
* புளியங்கொட்டையின் மேல் தோலை பொடித்து‪ சீதக்கழிச்சலுக்கு‬ உட்கொள்ள கொடுக்க அது தீரும். இதனுடன் மாதுளம் பழத்தோலையும் பொடித்து உட்கொள்ள கொடுக்கலாம்.
* புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி, 250 & 300 மில்லி கிராம் அளவு தேன் அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர‪ புண்கள்‬நீர்க்கடுப்பு‬வெள்ளை‬வெட்டை‬கழிச்சல்‬ஆகியவை குணமாகும்.
* புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.
* புளிய மரப்பட்டையையும், சிறிது உப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு எரித்து சாம்பலாக்கி, அதில் 100 - 200 மில்லி கிராம் அளவு தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்றுப்புண்‬ ஆகியவை குணமாகும்.
* புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர‪ தொண்டைப்புண்‬ குணமாகும்.
* புளியம்பட்டையை பொடி செய்து புண்களின் மீது தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசிவர அந்த புண் ஆறும்.
* புளிய மரப்பட்டையும் மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு 'டானிக்' புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள்குஷ்டரோகத்திற்கு‬ உபயோகப்படுகின்றன.
* புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி,  பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர‪ தாதுவிருத்தி‬ உண்டாகும்.
* புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும். புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம்‬தலைச்சுற்றல்‬தீரும்.
* புளியம் பூக்களை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும்.
* ஜீரண சக்தியை உண்டாக்கும் புளி மலத்தை இளக்கக் கூடியதும் கூட! என்றாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால் ‪‎நரை‬ , வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை விரைவில் ஏற்படும்.

தொழிலியல் பயன்கள் . . .
புளியம்பழம் பாத்திரங்களை துலக்க உபயோகிக்கப்படுகிறது. துணிகளுக்கு சாயம் போடுவதில், மஞ்சளுடன் சேர்ந்து புளி உபயோகிக்கப்படுகிறது. பழச்சதையிலிருந்து பெக்டின் (Pectin) எடுக்கலாம். பழத்திலிருந்து புளிப்பொடி, புளிச்சத்து, புளி ரசம் தயாரிக்கப்படுகிறது.
புளிக்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு துணிக்கு மெருகூட்டவும். சணல் நூல் தயாரிப்பிலும் செயற்கை இழைகள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரி உபயோகத்திற்கு சோளமாவை விட புளியம் பொடி 300 பங்கு மலிவானதாகவும், மேலானதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

புளியங்கொட்டை தோலிலிருந்து 'டானின்' எடுக்கப்பட்டு தோல் பதனிடல், ஓட்டு பலகை தயாரிப்பில் பயனாகிறது. புளியங்கொட்டை எண்ணெய் வார்னிஷ், பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் (Furniture) தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது.

புளியை பற்றிய சில நம்பிக்கைகள் . . .
புளிய மரத்தின் கீழே வேறு செடிகள் வளராது. இரவில் புளி மரத்தின் கீழே படுத்து உறங்குவது கூடாது. ஆடு, மாடுகள், குதிரை இவற்றை இம்மரத்தின் கீழ் கட்டக் கூடாது.

புளி அதிகமாக காய்த்தால், மாங்காய் உற்பத்தி குறையும்.
புளிய மரம் அதன் சுற்றுப்புறத்தை இன்னும் சூடாக்கும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி.
..

தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

No comments:

Post a Comment