Saturday 12 July 2014

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 600 அடி உயர சிலை தேவைதானா?

statue-of-unityநேரு குடும்பத்திற்கு இணையாகவும் மாற்றாகவும், ‘முன்மாதிரி’ யாகக் காட்டவும் ஒரு தலைவரை முன்னிறுத்த வேண்டிய தேவை பா.ஜ.கவுக்கு எழுந்துள்ளது. முன்னமே மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, மக்களால் மதிக் கப்படும் தலைவராகவும் அதே நேரம், இந்து மதவாதத்தில் ஊறிய வராக வும் உள்ள ஒரு தலைவரை பா.ஜ.க கண்டுபிடித்து கையிலெடுத்து விட்டது. அவர்தான் சர்தார் வல்ல பாய் பட்டேல்.
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு தலைவரை உயர்த்திப் பிடிக்கும் உத்திகளை இந்திய தேசியக் கட்சி களிடம் காணலாம். அது அவர்களுடைய அக்காலக் கட்டத்தின் தேவையைப் பொறுத்து நிகழும். அண்ணல் அம்பேத்கரை அலட்சியப்படுத்திய கட்சி காங்கிரசு கட்சி. அவர் வாழுங்காலத்தில் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தது. நேருவின் அமைச்சர வையில் உறுப்பு வகித்தாலும் அம்பேத்கர் புறக்கணிக் கப்பட்டார். ஆனால் அதே அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை காங்கிரசுக் கட்சிக்கு 1990க்குப் பிறகு ஏற்பட்டது.


காந்தி, நேரு போன்ற தலைவர்களின் மீதான பற்று குறைந்து போய், காங்கிரசின் ‘சுதந்திரப் போராட்ட தியாகச் சாயம்’ வெளுத்து வந்த நிலையில், ஒவ்வொரு தரப்பு மக்களையும் தன் வாக்குவங்கி வளையத்துக்குள் வைக்கும் உத்தியாக அம்பேத்கரை காங்கிரசு உயர்த்திப் பிடித்தது. இத்தகைய போக்கை கம்யூனிஸ்ட்டு கட்சிகளிடமும் காணலாம்.  பா.ஜ.க இப்போது   சர்தார் வல்ல பாய் பட்டேலை முன் நிறுத்து வதன் கராணம் என்ன ? இங்கே  மக்களின்  கருத்துகளை காண்போமே!! 

 மக்கள்  சிந்தனை :
  •  சில  அடிப்படையான கேள்விகளை  மக்கள்   சர்தார் பட்டேலைப் பற்றி    கேட்கின்றனர் .
  • சர்தார் பட் டேல் உண்மையிலேயே மதச் சார் பற்றவரா? 
  • ஒரு துணை பிரதமர் மற் றும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் தன் கடமைகளை ஆற்றினாரா?
  •  1948இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி எழுந்த வகுப்புக் கலவரங்களை அவரால் சமாளிக்க முடிந்ததா?
  • கடந்த கலவரங்களும் அதற்கு பட்டேலின் எதிர்வினையும் அவரு டைய நிர்வாகத் திறனுக்குச் சான்று கூறுகின்றனவா?
  •  காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் என்ற முறையில் காந்தியைப் படு கொலையிலிருந்து காக்க, கொலை முயற்சிகள் முன்னமே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனத் தெரிந்திருந்தும், என்ன ஏற்பாடுக ளைச் செய்திருந்தார்?
  •  கொலையாளிகள் உறுப்பு வகித்த மதவாத அமைப்புகளிடம், காந்தியின் கொலைக்கு முன்னும் பின்னும், கரிசனம் காட்டியமைக்கு என்ன காரணம்? இந்துக்களையும், முஸ்லிம்களையும் பட்டேல் சமமா கத்தான் கருதினாரா?
  • முஸ்லிம்களை இந்து மதவாதிகளும், கோப முற்ற இந்து மக்களும் தாக்கிய போது அதை வரவேற்கும் போக்கு பட்டேலிடம் காணப்பட என்ன காரணம்? 
  • நேருவுக்கும் பட்டே லுக்கும் இடையிலான முரண் பாடுகள் தெரிந்தவை; தன்னைத் தலைவராக உருவாக்கிய காந்தியா ருடன் பட்டேல் முரண்பட என்ன காரணம்?
  •  இந்தியா முழுவதும் இருந்த சமஸ்தானங்கள் வல்லபாய் பட்டேலின் அருமுயற்சியால் தான் இந்தியாவுடன் ஒருங்கிணைக் கப்பட்டனவா?
  • உள்துறைச் செயலர் வி.பி.மேனன் மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு அல்லாமல் சமஸ்தானங் களையும், மன்னர் ஆட்சிப் பகுதிகளையும் இணைத்ததில் பட்டே லின் பங்கு என்ன?
 இக்கேள்விகளுக்கு வரலாறு புதைத்து வைத்திருக்கும் பதில்கள் வெளிப்படும் போது, வல்லபாய்பட்டேல் அளவுக்கு அதிகமாகப் புகழப்பட்டிருக்கிறார்; மிகைப்படுத்திக் காட்டப் பட்டிருக்கிறார் என்ற உண்மை தெளிவாகாமற்போகாது. அப்படிப் பட்ட மிகைத் தோற்ற உருவாக்கத்திற்கும் அவர் மதவாத அரசியல் சார்பு கொண்டிருந்தார் என்பதன்றி, வேறு காரணங்கள் இல்லை என்பதும் புலனாகும்.

இவற்றிக்கு விடை  அறிய  கிழே உள்ள சுட்டியை காண்க http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/26595-2014-05-09-09-33-
http://www.sinthikkavum.net/2013/10/rss.html

http://tamilnewsbbc.com/2013/11/06/சர்தார்-வல்லபாய்-பட்டேல்.htm


சர்தார் வல்லபாய் படேலுக்கு 600 அடி உயரத்தில் சிலை !!
 நவம்பர் 1ஆம் நாள், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயர இரும்புச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடை பெற்றது. உலகிலேயே உயரமான இச்சிலை நர்மதை அணையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், நர்மதை மாவட்டத் தில் கேவடியா என்ற தீவுப் பகுதி யில் 2,603 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது.


வல்லபாய் படேல் குஜராத்தில் பிறந்தார் என்பதற்காக சிலை வைக்கும் மோடி, தேசத் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்காதது ஏன்?
மகாத்மா காந்தியை கொன்றது கோட்சே. அவன் ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன்.மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்லப் பிள்ளை. ஆர்.எஸ்.எஸ்.காரனான கோட்சேவால் கொல்லப்பட்ட காந்திக்கு மோடி சிலை வைப்பாரா?காந்திக்கு சிலை வைப்பதை மோடியிடம் எதிர்பார்ப்பது, கசாப்புக் கடைக்காரனிடம் ஜீவ காரூண்யத்தை எதிர்பார்ப்பது போலாகும். 

சிலைகளின் நிலை என்ன?
 காக்கைகளும், குருவிகளும் தலைவர்களின் சிலைகளில் எச்சமிட்டு அலங்கோலமாக தலைவர்களின் சிலை கிடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோமே!

சிலைக்கு  ரூ.2000 கோடி செலவிட வேண்டுமா? 
 அதற்குப் பதிலாக சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒரு தொழிற்கூடம் நிறுவி, அதற்கு "வல்லபாய் படேல் தொழிற்கூடம் என்று பெயர் வைத்திருக்கலாமே!அந்த தொழிற்கூட முகப்பில் படேலுக்கு ஆறு அடியில் ஒரு சிலை வைத்து கௌரவப் படுத்திருக்கலாமே?

நாடு இன்று இருக்கும் நிலையில் ஒரு சிலை வைக்க ரூ.2000 கோடி செலவு செய்ய வேண்டுமா?
கோயில் கட்டாதே; கழிவறை கட்டு என்று கூறிய மோடி, ரூ.2000 கோடியில் சிலை வைப்பதற்குப் பதிலாக கழிவறைகளை கட்டியிருக்கலாமே!இதுதான் நரேந்திர மோடியின் சாதனையா? இவர்தான் நவபாரதத்தின் சிற்பியா?

சிலை வைப்பதால் என்ன பலன்? 
குஜராத்தில் பழைய இரும்பு  அதிகமாக கிடைகிறது. இதைக்கொண்டு  குறைந்தது  1000 கோடியை இவர்களால்  ஆட்டைய  போடா முடியும். 

இரு சமூகத் தினரிடையே கலவரம் ஏற்படுத்த வேண்டுமானால், ஒரு சமூகத் தலைவரின் சிலையை உடைத்தால் போதும், உடனே கலவரத் தீ பற்றி விடும்.

பிறகு அந்த சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். ஆக உயிரோடு இருக்கும்போது, பாதுகாப்பு போட வேண்டும். இறந்த பிறகும் சிலைக்கு பாதுகாப்பு போட வேண்டும். இதுதானே இன்றைய நிலை!
சிலை வைப்பதற்கென்றே பிறந்தவர் கலைஞர் என்று எண்ணினோம். அவரையும் மிஞ்சிவிட்டார் மோடி!
வல்லபாய் படேலுக்கு ஒரு சிலை வைக்க ரூ.2000 கோடிக்கு சிலை வைக்கவேண்டாம்  என்பது மக்கள் கருத்து.

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment