உலக நாடுகளிலேயே முதல் தடவையா துபாய் தான் மெட்ரோ ரயில்னு சொல்ற பறக்கும் ரயில் திட்டம் கொண்டுவந்திருக்காங்க.! இதில என்ன ஆச்சர்யம்னா உலகத்திலேயே ஓட்டுநர் (டிரைவர்) இல்லாத மெட்ரோ ரயில் திட்டம்ங்க! இது எப்ப ஆரம்பிச்சாங்கனா 09-09-09 இரவு 09 மணி 09 நிமிசம்! அதாவது எல்லாம் 9ல வர மாதிரி. அதேபோல திட்டம் ஆரம்பிச்சதும் 05-05-05.
உலகப் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த சூழ்நிலையிலும் மிகப்பெரும் இத்திட்டத்தை மிகக்குறுகிய காலத்தில் நிறைவேற்றியிருப்பது துபாயின் பொருளாதார வலிமையையும், துபாய் நகர அபிவிருத்திருக்கான தங்கள் அர்ப்பணிப்பையும் அறிந்து கொள்ள முடியும்.
சாலையில் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்த்தல், போக்குவரத்து நேரங்களைக் குறைத்தல், போக்குவரத்தால் ஏற்படும் மாசுகளைக் குறைத்தல், நகருக்குள் எளிதாகச் சென்று வருதல், துபை பன்னாட்டு விமான நிலையங்களையும் வணிக மையங்களையும் இணைத்தல் ஆகிய குறிக்கோளுடன் மெட்ரோ ரயில சேவை தொடங்கிருக்காங்க.
சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள், 5 மிகப்பெரும் கட்டிட நிறுவனங்கள் மற்றும் 150 சிறிய ஒப்பந்தக்காரர்கள் இவங்க மட்டுமே இந்த திட்டத்த முடிச்சதா சொல்றாங்க.
துபாய் மெட்ரோ பற்றி சொல்வதற்கு நிறைய விசயம் இருக்கு அதுல ஒரு சில மட்டும்.

01. திட்ட மதிப்பீடு 20,150 கோடி ரூபாய் ( 15.5 பில்லியன் திராம்)
02. 100% தானியங்கி அதாவது ஓட்டுனர் இல்லாத ரயில்.
03. மெட்ரோ கட்டுமாணம் ஆரம்பித்த தேதி: 05.05.05 பொதுமக்களுக்கு திறந்த தேதி : 09.09.09.
04. மொத்தம் இருக்குற 49 ரயில் நிலய்ங்களில் (red line & green line) 10 தான் திறந்திருக்காங்க.
05. இருக்குற ரயில் நிலயங்களில் இருந்து 720 பேருந்து இனைக்க பட்டிருக்கு.
இதுதாங்க ஜப்பானிலிருந்து கொண்டுவரபட்ட சுரங்க வழி (துளை )அமைக்கும் இய்ந்திரம். மொத்தம் 12.6 கி.மி. மற்றும் 11 ரயில் நிலையங்கள் புமிக்கு அடியில் அமைத்துள்ளார்கள்.
கழுகு பார்வை (கலையரசன் இல்லைங்க)
துபாய் மரினா பக்கம். மொத்தம் 5 கம்பார்ட்மெண்ட் தான்.
financial center station இதுதாங்க.
எவ்வளவு அழகா இருக்கு பாருங்க இதை ஓட்டுரத்துக்கு ஓட்டுனர் தேவை இல்லீங்களாம்.
ஒரு ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் இதுதாங்க.
பூமிக்கு அடியில் இருக்குற காலித் பின் வாளித் ஸ்டேஷன் இதுதாங்க. அதாவது 75அடி ஆழம் உள்ள நிலையம் மேல உள்ள போக்குவரத்துக்கு பாதிப்பு வராம செஞ்சிருக்காங்க.
அழகிய ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம்
சுத்தமாகவும் காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் 10 அழகிய மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்கைஸ்கேனர் இணையதளம் இதனை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ரயில் நிலையங்களில் துபாயில் அமைந்துள்ள முன்னதாக பர்ஜுமான் ஸ்டேசன் என்றழைக்கப்பட்ட காலித் பின் வலீத் ஸ்டேசனும் இடம் பெற்றுள்ளது.
மீயுசியம் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தினுள் துபாயின் பழைய வரலாறை விளக்கும் வகையில் படங்கள் வைக்கப்பட்டு காண்போரை கவரும் வகையில் அழகிய விளக்குகளோடு மின்னுகிறது.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment