Friday, 11 July 2014

செவிலியதினமும் ,செவிலியர்நிலையும்பற்றிய ஒரு சிறப்பு பார்வை !!

செவிலியதினமும் செவிலியர்நிலையும் செவிலிய தினம் கொண்டாடபடும் இந்த நாளில் இன்றைய மருத்துவதுறையில் மருத்துவமனையின் முதுகெலும்பு என வர்ணிக்கபடும் செவிலியர்களையும் செவிலியதுறையையும் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
தொகுப்பூதியம் என்ற பெயரில் உழைப்பு சுரண்டல்:
Image result for செவிலியம் எThe Government should act as a model employer and ensure that its employees are treated fairly in appointment and promotion, என்பது சுப்ரீம் கோர்ட்டின் ஆணை. கிராமபுறங்களில் செவிலியர்களின் சேவை மக்களுக்கு நிரந்தரமாக தேவை என்ற சூழல் உள்ளபோதும் தமிழகம் முழுவதும் உள்ள 1600 மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கங்கள் நிரந்தர செவிலியர்பணி இடங்களை தோற்றுவிக்காமல் தொகுப்பூதியம் என்ற பெயரில் செவிலியர்களிடம் உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது. வெறும் 48 கோடி ஒதுக்கினால் தமிழகம் முழுவதும் ஒரு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு ஒரு நிரந்தர செவிலியரை அரசால் நியமிக்க இயலும். ஆனால் இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை எடுத்த முயற்சிக்கு கைகொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிதி துறை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவர்களது ஊதியம் ஏறும் போது மகிழ்ச்சி அடையும் அதிகாரிகளுக்கு இருப்பது போல் தான் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் குழந்தை குடும்பம் இருக்கிறது என்பதை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்தபடி உயர்வு இந்த படி உயர்வு என 80000 சம்பளம் வாங்கும் நபர்களின் ஊதியத்தை ஒரு லச்சம் ஆகுவதற்கு ஒப்புதல் கொடுக்கும் நிதி துறை தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்த்ரதிற்கு புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கதிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கொடுமையின் உச்சம்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் இலவசமாக பிரசவம் பார்க்கபடும் என்று மார்தட்டி கொள்ளும் அரசாங்கமும் அதிகாரிகளும் இந்த பெருமைக்கும் பேருக்கும் யார் அடிப்படை காரணம் என்பதை மறந்து விடுவது மட்டுமல்ல சுட்டி காட்டுவதும் கெடையாது. இத்தனைக்கும் போதுமான செவிலியர்கள் இல்லாத காரணத்தால் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒரு தொகுப்பூதிய செவிலியரே ஒரு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்த கூடுதல் பணி நேரத்திற்கு அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து எந்த கூடுதல் நிதியும் வழங்கபடுவது கெடையாது.
மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் செவிலியர்களின் நிலை
மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் செவிலியர்களின் எண்ணிகை மிக மோசமான அளவில் உள்ளது, 1975 ஆம்ஆண்டு எத்தனை நிரந்தர செவிலியர் பணி இடங்கள் இருந்ததோ அதே அளவில் தான் இன்றும் பெரும்பாலான மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் உள்ளது. உதாரணமாக ஈரோடு அரசு மருத்துவ மணியில் உள்ள 608 படுக்கைகளுக்கு வெறும் 80 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். நாகைபட்டினம் அரசு மருத்துவமனையில் 445 படுக்கைகளுக்கு வெறும் 51 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை மூன்று ஷிபிட்திற்கும் சேர்த்து என்பது நாம் கவனிக்க வேண்டும். NABH சிறப்பு அந்தஸ்து பெற்ற நாமக்கல் அரசு மருத்துவமனையில் 313 படுக்கைகளுக்கு வெறும் 43 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசால் அறிவிக்கபட்ட மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்டமருத்துவமனைகளை தரம் உயர்த்தபடும் என்று அறிவிக்கையில் புதிதாக 1160 தொகுப்பூதிய செவிலியர் பணி இடங்கள் அறிவிக்கபட்டன. ஏன் இந்த செவிலியர்களுக்கு அங்கு நிரந்தர தேவை இல்லையா, இல்லை தமிழகதில் போதுமான அளவில் தொகுப்பூதிய செவிலியர்கள் இல்லையா என்று தெரியவில்லை, அதே அரசு ஆணையில் மருத்துவர்களை மட்டும் நிரந்தரமாக பணி அமர்த்தி உள்ள அரசு எதற்காக செவிலியர்களிடம் பாராமுகமாய் நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை. இதற்கு முழு காரணமும் நிதி துறையின் ஒப்புதல் இல்லாதது தான்.
கட்டடங்கள் செய்யுமா சேவை
எல்லா மருத்துவமனைகளிலும் எங்கு பார்த்தாலும் உயர உயர கட்டங்கள் கட்டும் பணி மட்டும் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் வெறும் கற்களும் செங்கலும் சேவை செய்யாம என்பதை சிந்திக்க வேண்டும். புதிய கட்டிங்கள் திறக்க படுகிறது ஆனால் அங்கு பணிபுரிய செவிலியர் பணி இடங்கள் உரூவாக்க படுவது கெடையாது. மதுரை, மற்றும் தூத்துகுடியில் புதியதாக திறக்கபட்ட 300 மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கட்டிடங்களுக்கு இன்னும் செவிலியர்களை நியமனம் செய்யவில்லை.
காற்றில் பறக்க விடப்படும் இந்திய மருத்துவகவுன்சில் விதிகள்:
பெரும்பாலான மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் MCI விதிப்படி செவிலியர்களை நியமிக்காமல் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் பொழுது மட்டும் இல்லாத செவிலியர்களை இருப்பதாக தவறாக கணக்கு காண்பிக்க படுவதால் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் நோயாளிகள் சரியான மருத்துவ சேவை கிடைக்காமல் உயிர் இழக்கும் ஆபாயமும் உண்டு.
துப்புரவு பணியாளர்களை விட குறைந்த ஊதியம்
சென்னை ஸ்டான்லி மற்றும் MMC ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வெறும் 5500 ஊதியம் மட்டுமே வழங்கபட்டு வருகிறது, இவர்கள் தலைமையான DME யில் பணி புரியும் வாட்ச்மென் ஊதியம் 6000 ரூபாய், SWEEPER, SANITARY WORK ஊதியம் 7500 ரூபாய்
வருடத்திற்கும் இரண்டு முறை ஊதியம்
தொகுப்பூதியம் என்ற காரணத்தால் அரசில் இருந்து செவிலியர்களுக்கு நிதி ஒதுக்குவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நிதி வந்த பிறகும் கூட அலுவலக ஊழியர்களின் அலச்சியதாலும் லஞ்சம் கொடுத்தால் தான் ஊதியம் தரப்படும் என்ற சூழலில் அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையை தான் வழங்கபடுகிறது.
செவிலிய துறை பற்றிய சமுதாயத்தின் பார்வை
ஒரு துறை அல்லது ஒரு படிப்பு நல்ல படிப்பா அல்லது
சமுதாயத்தால் மதிக்கபடும் படிப்பா என்பதற்கு ஒரு அளவுகோல் எது எனில் தான் பயின்ற கல்வியை தனது குழந்தைகளும் கற்க வேண்டும் என பெற்றோர் நினைப்பதுதான்.
அப்படி பார்த்தல் செவிலிய துறையில் பணி புரியும் செவிலியர்கள் 100 இக்கு 99% சதவிதம் பேர் யாரும் தனது குழந்தைகளை செவிலியம் படிக்க அனுப்புவது கெடையாது.
ஒரு மருத்துவர், ஒரு என்ஜிநியர் இவர்கள் எல்லாம் தனது கல்வியை தனது வாரிசுகளுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் செவிலியர்கள் அவ்வாறு பெருமைகொள்வார்களா ?
சேவை சேவையாக இருக்க அதற்குரிய மதிப்பும் மரியாதையும் குடுக்கபடவேண்டும், துப்புரவு தொழிலாளிக்கும் எனக்கும் ஊதியம் ஒன்று என்றால் என்ன சேவை ? அந்த தொழிலை நான் அவமதிக்கவில்லை ஆனால் எங்கள் துறை அவமதிக்கபடுகிறது அந்த வேதனை
MCI விதியும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரமும்
MCI விதி என்றால் என்ன ?
இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) என்பது மருத்துவ கல்லுரி, மற்றும் மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு முதல் செவிலியர்கள், மருத்துவர்கள் பேராசிரியர்கள், அடிப்படை ஊழியர்கள் என அனைத்து துறையினரும் போதுமான அளவில் உள்ளனரா எனவும், மேலும் செவிலியர்-நோயாளி-படுக்கைகள் ஆகியவற்றின் விகிதசாரம் போதுமான அளவில் உள்ளதா எனவும்,நோயாளிகள் ஊழியர்கள் என அனைவர்க்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கபட்டு உள்ளதா எனவும் ஆய்வு செய்து அதன் பின்னர் அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை பொறுத்து அங்கு ஓராண்டிற்கு எத்தனை மருத்துவகல்லுரி மாணவர்களை (MBBS-PG) சேர்க்கலாம் என்பதற்கு அனுமதி அளிப்பார்கள். மேற்கண்ட விசயங்களில் குறைகள் இருக்கும் பட்சத்தில் அந்த கல்லூரியின் மருத்துவகல்லுரி மாணவர்களின் எண்ணிகையை குறைக்கவோ, அல்லது கல்லூரியின் அங்கிகாரத்தை ரத்து செய்யவோ செய்வார்கள்.
அரசு மருத்துவ கல்லூரிகள் செய்வது என்ன ?
பொதுவாக நாம் நினைப்பது எத்தனை மருத்துவ கல்லுரி மாணவர்களை எடுத்தால் நமக்கு என்ன என்று என்ன தோன்றும். ஆனால் பிரச்னை அதுவல்ல இந்திய மருத்துவகவுன்சில் ஆய்வுக்கு வரும்போது மருத்துவமனையில் MCI விதிப்படி இல்லாமல் குறைவாக உள்ள செவிலியர்களின் எண்ணிகையை MCI க்கு தெரிவிக்காமல் தேவையான அளவில் செவிலியர்கள் இருப்பது போல் போலியாக கணக்கு காண்பிக்கபடுகிறது.
உதாரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் கடந்த 2012 ஆண்டு நடந்த ஆய்வின் போது வெறும் 130 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே அங்கு பணி புரிந்தாலும் 247 பேர் பணி புரிவதாக கணக்கு காண்பிக்கபட்டு உள்ளது. மேலும் அவற்றில் 50 செவிலியர்களுக்கு MCI விதிப்படி விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்கபட்டு உள்ளதாக வேறு ஆவணங்களை தயார் செய்து அளித்து உள்ளார்கள்.
இதே போன்று 1200 படுக்கைகள் மற்றும் 150 M.B.B.S மாணவர்கள் சேர்கை கொண்ட திருச்சி அரசு மருத்துவகல்லூரியில் 350 மேற்பட்டோர் பணி புரிய வேண்டிய சூழலில் வெறும் 130 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். இத்தனைக்கும் செவிலியதுறையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் முக்கியமாணவர்கள் பணி புரியும் இடம். அதன் நகல் இங்கு தரபட்டு உள்ளது. இதே போன்று தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை என பட்டியல் நீள்கிறது.
500 படுக்கைகள் கொண்ட திருவாருர் அரசு மருத்துவ கல்லூரிக்கு 247 நிரந்தர செவிலியர்கள் ஆனால் மதுரை அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் 2518 படுக்கைகளுக்கு 307 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த செவிலியர் எண்ணிக்கை மூன்று ஷிஃப்ட்டிர்கும் சேர்த்து என்பதை மறக்கவேண்டாம்.
இங்கு இருக்கின்ற மற்றும் MCI விதிப்படி தேவைப்படுகின்ற செவிலியர்களின் எண்ணிக்கை உங்கள் பார்வைக்கு
மற்றுமொரு விஷயம் செவிலியர்கள் எண்ணிக்கை ACCORDING TO MBBS STRENGTH என்பது மட்டுமல்ல ACCORDING TO BED STRENGTH படியும் இருக்க வேண்டும். சோற்றுக்கே வழி இல்லாதபோது பிரியாணி கிடைக்குமா என்ற கதைதான்.
மேலும் MCI ஆய்வுக்கு வரும் போது அந்த மாவட்டத்தில் உள்ள PHC யிலோ அல்லது GH லோ பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்கலையோ அல்லது அங்கு அரசு செவிலியபள்ளியில் படிக்கும் செவிலிய மாணவிகளையோ தலையில் பெரிய செவிலிய குல்லாவை அணிவித்து போதுமான அளவில் செவிலியர்கள் இருப்பதாக MCI க்கு கணக்குகாண்பித்து விடுகிறார்கள். இது சமந்தமாக நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தயார் செய்த கோப்பு இங்கு இணைத்து உள்ளோம்.
இதனால் தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு பாதிக்கபடுகிறார்கள்.
இவ்வாறு பல மருத்துவகல்லுரிகள் தவறாக போலியான செவிலியர் எண்ணிகையை அளிப்பதால் அங்கு ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்கள் மூன்று மடங்கு அதிகமான செவிலியபணி சுமையை சுமக்க வேண்டியுள்ளது. மேலும் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இங்கு முக்கியமாக இதை ஏன் தொகுப்பூதிய செவிலியர்கள் கவனிக்க வேண்டுமென்றால் நமது தொகுப்பூதிய அரசானை படி இரண்டு ஆண்டு கண்டிப்பாக தொகுபூதியதில் பணி புரிய வேண்டும் அதன் இருக்கிற நிரந்தர செவிலிய காலிபணி இடங்களை பொறுத்து படிபடியாக பணி நிரந்தரம் செய்ய படுவர். அதாவது ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர் பதவி உயர்வு பெற்று ஹெட்நர்ஸ் ஆனாலோ அல்லது செவிலியர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றால் ஏற்படும் காலி பணிஇடங்களை பொறுத்தே நாம் நிரந்தரம் செய்யபடுகிறார்கள்.
ஆனால் மருத்துவகல்லூரிகளில் இல்லாத செவிலியர்களை இருப்பதாக கணக்கு காண்பித்தால் இல்லாத செவிலியர்கள் எவ்வாறு பதவி உயர்வுவோ அல்லது பணி ஓய்வோ பெற முடியும்,
உதாரணமாக செங்கல்பட்டு மருத்துவகல்லூரியில் வெறும் 130 நிரந்தர செவிலியர்களை வைத்து கொண்டு 247 என கணக்கு காண்பிப்பதால் மீதம் உள்ள 117 பணி இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று செல்ல வேண்டிய நிரந்தர பணி இடங்கள். ஆனால் இவ்வாறு காலி பணி இடங்கள் இருப்பதையோ, அல்லது உருவாக்க வேண்டிய தேவை இருப்பதையியோ நிர்வாகம் அரசுக்கு தெரிவிக்க தவறுகிறது அப்படியே தெரிவித்தாலும் நிதித்துறை அதனை தட்டிகழிக்கிறது அல்லது யானைபசிக்கு சோளபொறி போட்டது போல் 200 செவிலியர்கள் தேவை என மக்கள் நல்வாழ்வு துறை கருத்துரு அனுபினால் வெறும் 5 பேரோ அல்லது 10 பேரோ மட்டுமே நிதி துறையால் அனுமதிக்க படுகின்றனர். இதற்கு செவிலிய துறை மீது உள்ள அலட்சியமான போக்கா இல்லை மக்கள் நலன் மேல் உள்ள அக்கறையின்மையா காரணமா என்று தெரியவில்லை.
இங்கு தெரிவித்து இருப்பது மேலோட்டமான விசயங்கள்தான், இது சமந்தமான மேலும் பல்வேறு ஆழமான விசயங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று நமது துறை உயர்அதிகாரிகளிடம் ஒரு வருடத்திற்கு முன்னரே சமர்ப்பித்து விட்டாகிவிட்டது. ஆனால் தீர்வு தான் காணபடவில்லை. இவ்வாறு நியாமான கோரிக்கையை முன்னிறுத்தி செயல்படுவது அரசுக்கு எதிரான செயல் என்பது போல் சிலர் சித்தரிகின்றன்ர், ஆனால் அது அவ்வாறல்ல இது எங்களது உரிமைகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே. இந்திய சுகந்திரம் அடைய போராடியவர்கள் சுகந்திரகாற்றை சுவாசிக்கவும் தங்கள் உரிமைகளை பெறவுமே போராடினார்கள், அதனை அரசுக்கு எதிராக போராடினார்கள் என்றா நாம் கூறுகிறோம்? வெற்றி கதவை திறக்க அனைத்து விதமான வழிகளிலும் முயற்சிகள்மேற்கொள்ளபடுகின்றன .விரைவில் வெற்றி பெறுவோம்.

No comments:

Post a Comment