Thursday 17 November 2016

ரூ500 கோடியில் செலவில்ஆடம்பர திருமணம் !! 152 வகையான உணவுகள்; ரூ.17 கோடி திருமண புடவை, 500 மாடல் அழகிகள்,500000 விருந்தினர்...

Image result for janardhan reddy daughter marriageபெங்களூருவில் பல கோடி ரூபாய் செலவில் ஜனார்த்தனரெட்டி மகளின் ஆடம்பர திருமணம் 152 வகையான உணவுகள்; ரூ.17 கோடி திருமண புடவை, 500 மாடல் அழகிகள், 500000  விருந்தினர் உள்பட   ரூ500 கோடியில் செலவில்  நடந்தது. மணமக்களை கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்–நடிகைகள் நேரில் வாழ்த்தினர்.

முன்னாள் மந்திரியும், கனிம சுரங்க தொழில் அதிபருமான ஜனார்த்தனரெட்டியின் மகள் பிரமணிக்கும், ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராஜீவ்ரெட்டிக்கும் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று திருமணம் நடந்தது.

பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமான முறையில் நடந்த இந்த திருமணத்திற்காக அரண்மனை மைதானத்தில் தற்காலிகமாக பிரமாண்டமான அரங்குகள், வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தன. திருப்பதி திருமலை கோவில், ஹம்பி கோவில் மற்றும் பல்லாரி கோவில்களின் மாதிரி கட்டிடங்களும் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

கவர்னர் வஜூபாய் வாலா, மந்திரிகள் எச்.கே.பட்டீல், டி.கே.சிவக்குமார், ராமலிங்கரெட்டி, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், துணைத்தலைவர் ஆர்.அசோக், நடிகர்கள் விஷால், புனித் ராஜ்குமார், கணேஷ், சாய்குமார், பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, ஜெயந்தி மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் உள்பட  ஐம்பது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

5 நாட்கள் நடைபெற்ற இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற இசை கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரண்மனை மைதானத்தில் சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் ஜனார்த்தனரெட்டியின் சொந்த ஊரான ‘காலி’ கிராமமே அங்கு வடிவமைக்கப்பட்டு இருந்தது. அரண்மனை மைதானத்தின் நுழைவு வாயிலில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் முக்கிய பிரமுகர்கள் திருமணம் நடந்த கிராமத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த திருமணத்திற்காக ஜனார்த்தன ரெட்டி பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்குமாறு சமூக ஆர்வலர் ஒருவர் வருமான வரித்துறையில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடே பணப்பிரச்சனையால் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ரூ.650 கோடி செலவில் திருமணம் நடத்தி ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளார்.

* திருமணத்துக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் காலத்து அரண்மனை, திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில், ஹம்பி விட்டாலா கோயில், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரியில் உள்ள காலி கிராமம், தாமரைக் குளத்துடன் கூடிய கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டன.

* கடந்த 12-ம் தேதி இரவு நலங்கு நிகழ்ச்சியில் தொடங்கி தினமும் ஒவ்வொரு இரவும் மெஹந்தி, சங்கீதம், நடனம் என விதவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் மணமக்களின் குடும்பத்தினரும், பாஜகவினரும் அதிகளவில் பங்கேற்றனர்.

* முகூர்த்த தினமான நேற்று காலை ஜனார்த்தன ரெட்டி தனது மகளை சாரட் வண்டியில் அமர வைத்து திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில் போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தார்.

* வைரம் மற்றும் தங்கத்தால் ஜரிகை செய்யப்பட்ட சேலை அணிந்திருந்த பிராமணிக்கு முழுவதும் வைரத்தால் ஆன நகைகளை அணிவித்து இருந்தனர். இதேபோல மணமகன் ராஜீவ் ரெட்டி உட்பட இரு குடும்பத்தாரும் முழுவதும் வைரத்தால் ஆன நகைகளே அணிந்திருந்தனர்.

* மகள் திருமணத்தின் காரணமாக ஒட்டுமொத்த பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் குடும்பமே வைரத்தால் மின்னியது. குறிப்பாக பெண்கள் அனைவரும் ஒட்டியானம், காப்பு உட்பட வகைவகையான வைர நகைகளை அணிந்திருந்தனர்.

* அவர் அணிந்த முகூர்த்த புடவையின் விலை மட்டும் ரூ.17 கோடி. தங்க ஜரிகையால் நெய்யப்பட்டிருந்த புடவையில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

 * கடந்த 5 நாட்கள் இரவில் நடைபெற்ற பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட வெற்றிலை பாக்கு ஆகியவற்றின் செலவு மட்டும் ரூ.50 லட்சம். இதில் திருமண தினமான நேற்று மட்டும் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

* வெற்றிலை பாக்கு மடித்து தருவதற்காக 500 மாடல்களும், 500 இளம்பெண்களும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். பாக்குக்கு பெயர் பெற்ற பெல்லாரியில் உள்ள குல்சார் பான் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பெங்களூரு அழைத்துவரப்பட்டு வெற்றிலை பாக்கு வகைகளை உருவாக்கினர்.

* திருமணத்தின் போது விருந்தினர்களை வரவேற்கவும், சிவப்பு கம்பளத்தின் மீது நடக்கும் மணமக்களின் மீது காஷ்மீர் ரோஜா மற்றும் ஆம்பூர் மல்லி பூக்களை தூவுவதற்கு மாடல்கள் வரவழைக்கப்பட்டனர்.

* இதற்காக மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து தலா 500 ஆண் மற்றும் பெண் மாடல்கள் வந்திருந்தனர். இந்த மாடல்களுக்கு வெள்ளை நிற பட்டு வேட்டி சட்டை, வெள்ளை நிற பட்டுப்புடவை மற்றும் கவரிங் நகைகள் சீருடையாக வழங்கப்பட்டது.

* இந்த திருமணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஆகிய ஸ்டைலில் 152 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.


மேலும் காணொளியை யூடூபில்  காண..

https://www.youtube.com/watch?v=xaXHjOPg_LM

No comments:

Post a Comment