Wednesday, 9 November 2016

அதிரடியாய் அறிவித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி !!


Image result for modiகார்ப்பரேட்டுகளின் கைகூலியாக வேலை செய்யும்  அரசு பொதுமக்கள் மீது அதிரடியாய் ஒரு அறிவிப்பை ஏற்ப்படுத்தி பதட்டமடைய செய்துள்ளது. இரவு 8 மணிக்கு அறிவிப்பை வெளியிட்டு 12 மணிக்குமேல் 500, 1000 ரூபாய்கள் செல்லாது என அறிவித்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

*இதற்கு அப்பாவி பொதுமக்கள் தங்களது எதிர்பையும், அவஸ்தையையும் வெளிப்படுத்தி காரி உமிழ்கின்றனர்....
*கொடுமை என்னவென்றால் தந்தி டிவி என்ற அயோக்கிய ஊடகம் மோடி ஒலிக என்ற கோசமிடும் நபரை பின்னுக்கு தள்ளி அறிவிப்பு வரவேற்க்க தக்கது எனகூறும் நேரலை பதிவை வெளிப்படுத்துகிறான் என்பது வேதனையே...
அலைமோதிய ஏடிஎம் மையங்கள்*
*அறிவித்த நேரத்தில் இருந்து தற்போதுவரை அலைமோதுகிறது ஏடிஎம் மையங்கள்.
*நூறு ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு முதல் ஐந்து பரிவர்த்தனையை கடந்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 22 ரூபாயை பரிகொடுக்கும் பொதுமக்கள்.
*பல ஏடிஎம் மையங்கள் Service unavailable என எச்சரிக்கிறது பொதுமக்களை.
*நகரங்களில் இது கொடுமை செய்யறால் ஏடிஎம் இல்லாத கிராமங்களின் நிலை அதோகதிதான்.
மெடிக்கல்சென்டர்
பணமாற்றம் குறித்த மோடியின் அறிவிப்பில் MEDICAL CENTER ம் ஒன்று. ஆனால் அதிலும் வாங்கப்படுவதில்லை 500,1000 ரூபாய் நோட்டுக்கள்.
முக்கிய மருந்துகள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளி எத்தனை உயிர்களை பறிக்க போகிறதோ இந்த அறிவிப்பு.
*ஹோட்டல்களில் உணவருந்தியவர்களை பிச்சைகாரணாக்கிய  அரசு.
*கையில் 4000 இருந்தும் அவன் பிச்சைக்காரன்.
பெட்ரோல்பங்க்
அறிவிப்பு வெளியானதும் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுவிட்டன. பல பெட்ரோல் பங்குகளில் 500,1000 முழுவதற்கும் நிரப்ப வேண்டும் என நிர்பந்தமும் செய்கிறார்கள் பங்க் நிர்வாகிகள்.
பலன் யாருக்கு? பாதிப்பு யாருக்கு?*
கார்ப்பரேட்டுகளின் கைகூலி மோடி என்பது அனைவரும் அறிந்ததே. இதில் பலனடைந்தவர்கள் ஏராளம். அது மோடியின் அறிவிப்பிலும் வெளியாகியுள்ளது இப்படி "அறிவிப்பின் முன்னறிவிப்பு சிலருக்கு மட்டும் தெரியும்"
*ஆம் கார்ப்பரேட்டுகளின் முதலாலிகளாகிய அம்பானி, அதானி முதல் பாபா ராம்தேவ் போன்ற தேச தியாகிகள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த அறிவிப்பு.
*கருப்புப்பண அதிபர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த அறிவிப்பு...
*மோடிமுதல் பாஜக வின் கேடிகள் அனைவருக்கும் முன்பே அறிவிக்கப்பட்டிருக்கும் இதன் முன்னறிவிப்பு.
*இதை சற்றும் எதிர்பாராமல் தற்போது நிர்கதியாய் நிற்பதெல்லாம் சாதாரண பொதுமக்களே...
*கடந்த வருடம் இதே தருணத்தில் பணமிருந்தும் ஆகாயத்தை பார்த்த பிச்சைக்காரனாக மாற்றியது செயற்கையான வெள்ளப்பெருக்கு.
தற்போதும் பணமிருந்தும் சாப்பாடு, மருத்துவம் என அனைத்தையும் இழந்த பிச்சைக்காரனாக மாற்றியுள்ளது ஆட்சி செய்ய திராணியற்ற மோடி அரசு...
*சட்டம்ஒழுங்கின்நிலை*
*நாளை திருமணத்தை நடத்தவிருக்கும் பெற்றோர்களின் நிலை என்ன?
*நாளை தனியார் மருத்துவமனைகளில் அனுபதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் நிலை என்ன?
*லட்சக்கணக்கான பேட்சுலர், மற்றும் மாணவர்களின் உணவு, மற்றும் போக்குவரத்தின் நிலை என்ன?
வங்கி ஒருநாள் விடுமுறை, ஏடிஎம் மையங்கள் இரண்டு நாட்கள் விடுமுறை, பணமாற்றத்திற்கு மோடி அறிவித்த பெட்ரோல் பங்குகளும், மெடிக்கல் சென்டர்களிலும் கூட வாங்காத சூழ்நிலை. இதுவெல்லாம் மக்களின் எண்ணத்தை எங்கே கொண்டு செல்லும்?
ஆத்திரத்தின் உச்சத்தில் இவையெல்லாம் அடித்து நொறுக்கப்படும். ஆகவே தகுந்த நடவடிக்கைகளை காவல்துறை எடுத்தால் பல விபரீதங்களிலிருந்து காக்க இயலும்.
ஆடத்தெரியாதவன் தெரு கோணல் என்பானாம், அந்நிய நாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்திய நாட்டின் பணத்தை முடக்குகிறது புத்திசாலியான மோடி அரசு.
இந்த அறிவிப்பு கருப்புப்பணத்தை மீட்பதற்கான முயற்சியல்ல....
மாறாக தேசத்திற்கெதிரான பெரும் செயல் பின்னணியில் நடைபெறப் போகிறது என்பதற்கான அடையாளம்!
இந்திய மக்களை திசைதிருப்பும் மோடி அரசுக்கு எதிராக அனைவரும் பின்னனி குறித்து விளிப்படைய செய்ய எங்களால் இயன்ற இந்திய மக்களுக்கு எச்சரிக்கை மணியாகவே இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம்.

No comments:

Post a Comment