Tuesday, 15 November 2016

Economic Surgical Strike பற்றி சிந்திக்க மறுக்கும் அறிவுஜீவிகள் !!

Image result for Economic Surgical Strikeபிரதமர் மோடியின் Economic Surgical Strike பற்றி சில அறிவுஜீவிகள் பல்வேறு கேள்விகளை தொடுத்த வண்ணம் இருப்பதை காணமுடிகிறது.இது கருப்புப்பணத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதால் மாற்றுக்கருத்தில் இருக்கும் அறிவுஜீவிகளும் கூட இதனை ஆதரிப்பது வியப்பளிக்க கூடியதே...!
இந்த அறிவுஜீவிகளிடம் சில கேள்விகளை முன் வைக்கிறோம் இதை அறிவை கொண்டு சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில்...1. தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் 500,1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய் தான்.ஆனால் வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணம் 80 லட்சம் கோடிகள் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன.இது தோராயமாகவே இன்னும் கூடுதலாக  இருக்கலாம் என்பது உண்மையே.ஆக 80 விழுக்காடு தொகையை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மோடி இந்த 15 விழுக்காடு தொகையை மீட்கப் புறப்பட்டுள்ளார்.அதுவும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கான செலவு இதில் நான்கில் ஒரு பகுதியாம்.

2. கருப்புப்பபணம் வைத்திப்பவர்களின் பட்டியலையும், கடனை திருப்பி செலுத்தாத பணமுதலைகளின் பெயரையும் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியும் அவர்களின் நலன் கருதி மத்திய மோடி அரசு அதை வெளியிட மறுத்து வருகிறது.ஆக மல்லையா போன்ற பணமுதலைகளிடம் கருப்புப்பபணம் இல்லை. கருப்புப் பணம் வைத்திருப்பதெல்லாம் நீங்களும் நானும் தான் ஆகவே தான் மோடி அரசு தீடீர் Surgical தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

3. 
பிரதமர் மோடி அறிவாளி என்பதற்கு உதாரணம் தற்போதைய நோட்டு மாற்றம். கருப்புப் பணம் என்றால் வெறும் பணமாக மட்டுமே வைத்திருப்பார்கள் என்று இந்த அறிவாளிக்கு சில அறிவுஜீவிகள் சொல்லியிருக்கும் போல. உண்மையில் பணம் பதுக்குவது என்பதில் பல வகைகளை கையாளுகின்றனர் பண முதலைகள்.தங்கம் முதல் ஆன்லைன் மற்றும் ரியல் எஸ்டேட் வரை தன்னுடைய பேரிலும் பினாமி பேரிலும் நடத்தும் பண முதலைகளிடம் வெறும் 500, 1000 ரூபாய்களாக மட்டுமே இருக்கும் என்பது அறிவார்ந்த விசயமல்ல.பெரும் பணமுதலைகளின் பணம் திரும்பப் பெறப்பட்டு வெள்ளையாக மாறும் என்பது கற்பனையே தவிற வேறில்லை.ஆக திண்டாட்டம் அடைந்தது நடுத்தர சாமானிய மக்களே தவிற பணமுதலைகள் அல்ல என்பதை அறிவுஜீவிகள் சிந்திக்க வேண்டும்.


3. பிச்சைக்காரன் படத்தில் அந்த பிச்சைகாரன் சொன்னதை மோடி நிறைவேற்றியது போல புகலாரம் சூட்டுகின்றனர் சில அறிவுஜீவிகள்.ஆனால் அது உண்மையா அந்த பிச்சைக்காரன் முழுவதுமாக ஒழித்து 100 ரூபாயக இந்தால் மட்டுமே கருப்புப்பணம் ஒழியும் என்ற ஐடியாவை கொடுத்திருப்பான். ஆனால் நம்ம அறிவாளி பிரதமர் புதிய 500 ரூபாய் மட்டுமல்ல 2000 ரூபாயை வெளியிட்டுள்ளார். ஆக கருப்புப்பணத்தின் பதுக்கல் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை சிந்திக்க மறந்து விட்டனர் புகழ்ந்த அறிவாளிகள்.

4. இந்த அறிவிப்பு பணமுதலைகளுக்கும், கருப்புப்பண பதுக்களில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் நடைபெற்றது போல ஒரு மாயயை உண்டாக்க முயற்சி நடைபெற்று அதில் வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது இதை ஆதரிக்கும் அறிவுஜீவிகளின் நடவடிக்கையில் இருந்து காண முடிகிறது.இது பிரதமர் மோடி மட்டுமே முன்னின்று செய்தது போல பிதற்றுவது உங்களது அறியாமையை காட்டுகிறது. 


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்பானியின் ஜியோ சிம் விளம்பரத்தில் நடித்த இதே மோடியை கழுவி ஊற்றியவர்கள் இதற்கு எள்ளி நகையாடுவது வியப்பிற்குரியது.

அம்பானிக்கும் அதானிக்கும் தெரியாமலும், ஆளும் பாஜக வர்க்கத்தின் பெரும் முதலைகளுக்கும், பாபா ராம்தேவ் போன்ற தேச தியாகிகளுக்கும், தெரியாமல் இப்படி ஒரு நிகழ்வு நடத்தப்பட்டிருக்கும் என நீங்கள் நம்பினால் உங்களை போல ஒரு சிறந்த அறிவுஜீவிகள் யாரும் இருக்க இயலாது.

5. சாதாரண புதிய கல்விக் கொள்கை குறித்தே RSS ன் வழிகாட்டுதலின் படி செயல்படும் மோடி அரசு இந்த விசயத்தில் அவர்களிம் பரிசீலிக்கவில்லை என்று நீங்கள் நம்பினாலும், அதில் உள்ளவர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என நினைத்தாலும் உங்களை போல அறிவுஜீவிகளை காண இயலாது.

6. தங்களது அஜண்டாவை முறையாக நிறைவேற்றியுள்ளது RSS. தற்போது புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளில் நம்பருக்கு பதில் சமஸ்கிருத திணிப்பையும், இந்தி திணிப்பையும், செவ்வென செய்து முடித்துள்ளது Rss.இப்போதும் நீங்கள் நம்புங்கள் Rssக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று.

7. அறிவுஜீவிகளின் அறிவுரையில் இதுவும் ஒன்று

*"சாதாரண பொதுமக்களுக்கு இரண்டு நாட்கள்தான் சிரமம்"* ஆனால் நிரந்தரமாய் பாதிக்கப்படுவது பணமுதலைகளாம்.சர்வ சாதாரணமாய் 
பிரதமர் மோடியை போல இவர்களும் சொல்வது வேதனையே.இரண்டு நாட்கள் பயணத்திற்காகவும், பசியுடனும், ஹாஸ்பிடல்களிலும், ரயில்நிலையங்களிலும் அவதிப்பட்டவர்களும், நாளை தாம் வைத்திருக்கும் சொற்ப ஐநூறு மற்றும் 1000 ரூபாய்களை மாற்ற கால்கடுக்க நிற்க போவதும் இந்த சாதாண பாமரமக்களே தவிற நீங்கள் நினைக்கும் பண முதலைகள் அல்ல.


8. உச்சகட்ட அறிவாளிகளின் பதிவாக Whatsapp ல் வலம் வந்தது என்னவெனில் தற்போது வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் நேரடியாக செயற்கைகோள் துணை கொண்டு கண்காணிக்கப்படும் தொழில்நுட்பம் உள்ளதாம்.இதனால் நீங்கள் உங்கள் வீடுகளில் பூமியை தோண்டி பதுக்கி வைத்தாலும் கண்டுபிடித்து விடுமாம்.கேப்பையில் நெய் வடியும்னு மோடி சொன்னா அதையும் நம்பக்கூடிய கூட்டம் இருக்கும் போது இதை நம்பும் கூட்டம் இல்லாமலா போகும்.


9. கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அறிவுஜீவிகளுக்கும், மோடியை நம்பும் ஆதரவாளர்களுக்கும் விரைவில் 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற உறுதியை கொடுக்கிறோம்.


10. நாங்களும் நம்புகிறோம் இது *கருப்புப்பணத்தை மீட்கும் முயற்சியல்ல*

தேசத்திற்கெதிரான மாபெரும் சதியை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதை

11. கார்கில் போரில் சவப்பெட்டியில் ஊழல் செய்தவர்கள் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு வங்கி கணக்கிலும் செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை கொள்ளும் உங்களை போல அறிவுஜீவிகள் இருக்கும் வரை ஊழல்வாதிகளுக்கும், ஆளும் பயங்கரவாதிகளுக்கும் கவலை இல்லை என்பதே வேதனையான உண்மை.

No comments:

Post a Comment