Sunday, 27 November 2016

மோடியின் குறி கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி, செய்த பொருளாதார பேரழிவு !!

Image result for மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடி தோற்று விட்டார் என்று பேசுவது சரியான வாதமல்ல. ஏனென்றால் மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.
சிறு வணிகர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரின் பணத்தை வங்கிக்குள்ளும், வரிவிதிப்புக்குள்ளும் கொண்டுவர வேண்டும் என்பது உலக வங்கி, IMF, WTO போன்றவற்றின் நீண்ட கால அழுத்தம். அதைத்தான் மோடி அவசர கதியில் நிறைவேற்றியுள்ளார்.
இப்போதே 4000 ரூபாய்க்கு மேல் கையில் பணமாக வைத்திருப்பது குற்றம் என்பதைப் போன்ற சூழலை உருவாக்கி விட்டனர். இனிவரும் காலங்களில் நாம் வங்கியில் போடாமல் வைத்திருக்கும் ஒவ்வொரு பணமும் கருப்புப் பணம் என்கிற ரீதியான அச்சுறுத்தல் நம் மீது நடைபெறும்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் PAN கார்டு என்பதன் அடிப்படை இதுதான்.
1 சதவீத கார்பரேட் பண முதலைகளின் நலன்களைக் காப்பதற்காகத் தான் 99% மக்களாகிய நாம் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளோம். நாம் வரிசையில் நின்று நாம் படுகின்ற கஷ்டங்கள் எல்லாமே நம் பணத்தை இந்த வங்கிகளுக்கும், வரியாகவும் கொடுப்பதற்கும், அந்த பணத்தை வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனாக கொடுப்பதற்கும் தான்.
இந்தியாவின் So called இடதுசாரி கட்சிகளான CPI-ம், CPM-ம் கூட இந்த உண்மையை சொல்லாமல் Modiன் Failure attempt ஆல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
இது மோடி என்ற தனிப்பட்ட பாசிஸ்டின் முட்டாள்தனமான முடிவாக கடந்து செல்லப்பட்டுவிடக் கூடாது. இதற்கு பின்னால் மிகப் பெரிய அதிகாரவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கான சேவையை காங்கிரசை விட மோடியும், பாரதிய ஜனதாவும் மிகத் துரிதமாக செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
IMF ன் பின்புலத்தில் நடைபெற்ற பொருளாதார மாற்றங்கள் தான் கிரீஸ் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தை நாசமாக்கியது. நம் எல்லோரும் நமக்கான சுயமரியாதையுடனான சுய சார்பு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது இங்கே சிதைக்கப்படுகிறது.
நாளை பொருளாதார சரிவு, வங்கிகள் திவால் என்றெல்லாம் காரணம் காட்டி நாம் மீண்டும் தெருவில் நிறுத்தப்படுவோம்.
தெருவில் காய்கறி விற்போர், பஞ்சு மிட்டாய் விற்போர், பானி பூரி விற்போர் எல்லாம் வரிகட்ட வேண்டும்.
மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் Cashless transaction மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். சிறு வணிகர்கள் கடைகளை மூடி விட்டு ரிலையன்ஸ் Fresh க்கும், வால்மார்ட்க்கும் தரகர்களாக மாற வேண்டும்.
ஆனால் நமக்கு கடனும் கிடைக்காது. கடன் தள்ளுபடியும் நடக்காது. ரேசன் கடைகள் மூடப்படும், விவசாய மானியம் கிடையாது. விவசாயியை அடித்து டிராக்டர்கள் பிடுங்கப்பட்டதும், மாணவர் லெனின் கல்விக் கடனுக்காக அடியாட்களை வைத்து படுகொலை செய்யப்பட்டதும் நமக்கு எப்போதும் நினைவிலிருக்க வேண்டும்.
அம்பானிக்கும், அதானிக்கும், டாடாவுக்கும் கடன் உண்டு. கடன் தள்ளுபடி உண்டு. மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். நிலம் இலவசம். வரி தள்ளுபடியும் உண்டு.
இதற்குத்தான் நம் பணம் வங்கியில் இருக்க வேண்டும். நாம் கடுமையாக உழைத்து சிறுக சிறுக சேர்க்கிற பணத்திற்கு வரியும் கட்ட வேண்டும்.மக்களின் கோபம் சரியான திசையில் போராட்டங்களாக மாற்றப்படாவிட்டால் அனைத்தும் கடைசியில் காங்கிரசுக்கான ஓட்டரசியலில் தான் போய் நிற்கும். பிரச்சினையிலிருந்து நாம் விடுபட முடியாது.

 கிராமங்களை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காகவே, இப்படியொரு செயலில் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி' என 
 புள்ளிவிபரங்களோடு விவரிக்கின்றனர் சூழலியல் அமைப்பின் மருத்துவர்கள் சங்க மருத்துவர் புகழேந்தி . 
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை போதிய அளவில் வராததால், நாடு முழுவதும் பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி அட்டைகளின் மூலமே நடப்பதால், பணப்புழக்கம் இல்லாமல் சிறு வணிகர்கள் அவதிப்படுகின்றனர். 
ஒவ்வொரு நாள் காலையிலும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு பெட்ரோல் பங்குகள் உள்பட யாரும் தயாராக இல்லை. 'புதிய நோட்டை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது' என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், " ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கும்கீழ்தான். 
அவர்களுக்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. காரணம் அவர்கள் மோடி நண்பர்கள்,பாஜக வெற்றிக்கு உதவியவர்கள்.
இதன்பின்னணியில் பல விஷயங்கள் நடக்க இருக்கின்றன.ஆனால் அவை அனைத்தும் மக்களை ,விவசாயிகளை,சிறு வணிகர்கள்,வியாபாரிகளை பாதிக்கும் வகையிலேயே இருக்கும்.இருக்கிறது.அதுதான் மோடியின் திட்டம் .இந்தியாவை பணக்கார நாடாக மற்றவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குகிறார் மோடி.அதனால் இந்தியா இனி இருவேறு இந்தியாவாக மாறி அழிந்து ஆப்ரிக்க,தென் அமெரிக்க நாடுகளைப் போல் வறுமையில் வாட்டும்.சிலர் பில்லியனர்களாகவும் ,பிறர் ஏழைகளாக அலையவுமே மோடி அயராது உழைக்கிறார்.
அதைத்தான் அவர் தான் முதல்வராக இருந்த போது குஜராத்திலும் செய்தார்.
ஒரு புறம் முன்னேறிய பகுதியை மட்டும்  மற்றவர்கள் பார்வைக்கு காண்பித்து விட்டு 90% குஜராத் ஏழ்மையாக உள்ளதை மறைத்தார்.இதற்காகவே அவர் ஊடகங்கள்,மின்னணு கருவிகள்,சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினார்.அதை இந்தியா முழுக்க தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார்.  

" மத்திய நிதி அமைச்சகத்தின் ஆவணங்களில் இருந்தே அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். நமது நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 86 சதவீதமாக உள்ளது. வெளியில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 5 சதவீதம் என்கின்றனர். இவர்களுக்காகத்தான் எளிய மக்களை அரசு வதைக்கிறது. 
2012-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி வரிவிதிப்பின் தலைவர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் பல புள்ளிவிபரங்கள் உள்ளன. அதில், இந்தியாவில் 53 சதவீத மக்களுக்கே வங்கிக் கணக்குகள் உள்ளன என்கின்றனர். 
இதில், பயன்பாட்டில் உள்ளவை 15 சதவீதம்தான். இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் 46 சதவீதம் என்பது முறைசாராத தொழில்களில் இருந்து வருகிறது. இதன்மூலம் 80 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 'புதிய ரூபாய் தாள்கள் செல்லாது' என்ற அறிவிப்பால், நாட்டின் வளர்ச்சி 2 சதவீதமாக குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
அதாவது 7.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறையும் என்கின்றனர். 
நமது நாட்டில் 10 கோடி வணிக கடைகள் செயல்படுகின்றன. 
இவற்றில் 2 சதவீத கடைகள்தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றன. 
அதேபோல், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 121 கோடியில், 83.3 கோடிப் பேர் கிராமத்தில் வசிக்கின்றனர். 
இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 5 ஏ.டி.எம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. இவர்களின் தனிநபர் வருமானம் என்பது 40 ஆயிரத்து 772 ரூபாய் என அரசு சொல்கிறது. 
அதுவே, நகரத்தில் 37.7 கோடிப் பேர் உள்ளனர். இங்கு ஒரு லட்சம் பேருக்கு 31 ஏ.டி.எம்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் தனிநபர் வருமானம் என்பது ஒரு லட்சத்து ஆயிரத்து 303 ரூபாய் ஆகும். இதில் இருந்தே கிராமப் பொருளாதாரம் எந்தளவுக்கு நலிவடையும் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. 
நாட்டின் பணமாக நடக்கும் பரிவர்த்தனை 80 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் 98 சதவீதமான பரிவர்த்தனைகள் பணத்தின் மூலமே நடக்கின்றன. 
இதைவிடக் கொடுமை, இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு அடையாள அட்டையே இல்லை என்பதுதான். இவர்கள் எந்த அடையாளத்தைக் காண்பித்து, வங்கிகள் பணம் பெறுவார்கள். 

அதேபோல், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் அளவு 400 கோடி என்கின்றனர். இந்தத் தொகையானது மத்திய பட்ஜெட்டில் 0.025 சதவீதம்தான். 

இவற்றை ஒழிப்பதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுகளை அரசு அச்சடிக்கிறது. 
மொத்த கறுப்புப் பணத்தின் அளவு 30 லட்சம் கோடி. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன. தவிர, ரியல் எஸ்டேட், நகைகள் எனப் பல வகைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 'வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் 3 லட்சம் கோடி ரூபாய் வந்துவிடும்' என அரசு சொல்கிறது. 
இந்தப் பணம் என்பது மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே. இதனால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை. மீண்டும் பணக்காரர்களுக்கு சலுகை செய்யும் விதமாகவே இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணம் எந்தக்காலத்திலும் நமது நாட்டுக்கு வரப் போவதில்லை. மிகப் பெரிய அளவிலான திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே, ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மோடி" என்கிறார்  மருத்துவர் புகழேந்தி . 

No comments:

Post a Comment