Tuesday, 8 November 2016

ஒரு மணி நேரத்தில் 500/1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு !!.


அப்படியானால்..

கிராமத்தானின் நிலைமை?

500 ருபாய் உடன் வெளியூர் பயணம் சென்றவன் நிலை.?

குறைந்தபட்சம் அவன் வீடு சென்று சேரும் வரையாவது நேரம் கொடுத்தீர்களா.?

ATM Card உடன் வெளியூர் பயணம் சென்றவன் நிலை.?

நாளைய சாப்பாட்டுக்கு கையில் 500 ரூபாய் மட்டும் வைத்திருப்பவன் நிலை..?

தினக்கூலிகள் அன்றாடம் காய்ச்சிகளின் நிலை?

வங்கிக் கணக்கு இல்லாதவர்களின் நிலை?

ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டை இல்லாதவனின் நிலை?

ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் நெருங்கிய பிறகு கள்ள நோட்டுக்களை ஒழிக்கப் போகிறேன் என்ற பெயரில் பிரதமர் மோடி வெளியிட்ட திடீர் அறிவிப்பால், கிராமங்களில் உள்ள மக்களின் நிலைமை என்னவாகும்...

தினக்கூலி வேலை செய்பவர்கள் கையில் இருக்கும் 500 ரூபாய் செல்லாத போது நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்...

வங்கிகளில் மாற்றும்போது கைகளில் அதற்குரிய மதிப்பில் 100 ரூபாய் நோட்டுகள் உடனடியாக தரப்படாது..

அது நமது வங்கிக் கணக்கில் வைகப்படுமாம். அப்படியெனில் வங்கிக் கணக்கு இல்லாதவன் சாக வேண்டியது தானா?

மூன்று ஆண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான அனைத்து சேவகங்கள், கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்றும் சேவகங்கள் அனைத்தும் செய்துவிட்டு, திடுதிப்புவென்று உடனடியாக ஒரு அறிக்கை விட்டு கார்ப்பரேட்டுகளை அல்ல சாதாரண மக்களை அல்லவா இவர்கள் வஞ்சிக்கிறார்கள்...

குறைந்த பட்சம் கையில் இருக்கும் காசு 24 மணி நேரங்கள் ஆவது செல்லும் என்று அறிவித்திருக்கலாம்..

ஆனால் சர்வதிகார ஆட்சியில் மக்களின் குரலுக்கு மரியாதை இல்லை.. என்பது உங்களுக்கு தெரியுமா.?*


2000 வருடங்களுக்கு முன்பே சிந்தித்து எழுதிய வள்ளுவர் வாழ்ந்த சமுதாய மக்கள் நாம்....உண்மையை ஆராய இப்பொழுது நாம் கடமைப்பட்டுள்ளோம். 500 மற்றும் 1000 நோட்டுகளை ஒழிப்பதினால் உண்மையிலேயே கள்ள நோட்டுகளும், கருப்பு பணமும் ஒழிந்து இந்தியா வளம் கொழிக்குமா... வல்லரசு ஆகுமா என்றால்....இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முன்பை விட வேகமாவும் வீரியமாகவும் அதிகரிக்கும். பாகிஸ்தான் கள்ள நோட்டுகள் அடிப்பது ஒரு புறம், சினிமா நடிகர்கள், அரசியல்வியாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஊழல் மறுபுறம் என்ற இரு பிரச்சனைகளை சரிசெய்யும் என்ற அடிப்படையில் தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு ஒரு அரசாங்க அதிகாரி மக்களிடம் ஊழல் செய்து 10 கோடி ரூபாய் வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த திட்டத்தின் மூலம் அவரால் இந்த பணத்திற்கு கணக்கு காட்ட முடியாது...முழுப்பணத்தையும் இழக்க வேண்டியிருக்கும்....அதனால் அவருக்கு என்ன பெரிய நஷ்டம்? பெரிதாக ஒன்றுமில்லை...அவர் இன்னும் "ஊழல்" செய்யும் நிலையில், பதவியில் இருக்கிறார்...பணம் போய்விட்ட விரக்தியிலும் கோபத்திலும் முன்பைவிட அதிகமா லஞ்சம் கேட்பார், பழைய 500 செல்லாதுன்னு தெரியாதுங்களா.. புது நோட்டா கொடுங்கன்னு கேட்டா உங்க மனநிலை எப்படி இருக்கும்.... ஒரு கோடி ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தால் இரண்டு சூட்கேஸூகளில் அடக்கமுடியுமென்றால்... புது 2000 ரூபாய் நோட்டுகளுக்கு அவருக்கு ஒரு சூட்கேஸே போதுமானது. இப்படி பல அதிகாரிகள் புற்றீசல் போல கிளம்பினால் மக்களாகிய நம் சிரமங்களை நினைத்து பாருங்கள். எல்லா இடங்களிலும் பல மடங்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அதிகாரிகளுக்கு ஊழல் செய்யும் வாய்ப்பு பறிக்கப்பட்டு உள்ளதா என்றால் இல்லை...அப்படியே ஊழல் செய்து பதுக்கினாலும் அதை கண்டுபிடிக்க வழியுள்ளதா என்றால் அதுவும் இல்லை...GPS-enabled chip புது நோட்டுகளில் இல்லை என்று ரிசர்வ் வங்கியே சொல்லி விட்டது. பிறகு கருப்பு பணம் பதுக்குபவர்களை எப்படி கண்டுபிடிப்பது? பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசாங்கமே கள்ள நோட்டு அடித்து கொடுப்பதால்...புது 500, 2000 நோட்டுகளையும் அடித்து கொடுக்கும்... இன்னும் இரண்டு வருடங்களில் இப்பொழுது இருக்கும் நிலைமை திரும்ப வந்துவிடும். இப்பொழுது நாம் படும் சிரமங்களுக்கு என்ன பதில்? கருப்பு பணத்தை மீட்கிறேன் என்று சவால் விட்டதை பற்றி தொடர்ந்த கேள்விகளால், மோடியின் மிக சிறந்த காய் நகர்த்தல் தான் இது. நாமும் நமக்கு தெரிந்த பேராசைகாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மிகுந்த சந்தோசமடைகிறோம்...இது நம்மை திருப்பி தாக்கும் என்பதை அறியாமல். உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்திருக்க வேண்டும்? புது 500 மற்றும் 2000 ரூபாய் அச்சடிச்திருக்கவே கூடாது. எல்லோரும் 50, 100 ரூபாயை மட்டுமே பயன்படுத்த சொல்லிருக்க வேண்டும். பெரிய தொகை எதுவானலும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக செலுத்த வேண்டும், எல்லா பரிவர்த்தனையும் வங்கிகள் மூலமாக நடக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் இந்த அறிவிப்பு பலன் கொடுத்திருக்கும். மேலும், மேலை நாடுகளில் உள்ளது போல் எந்த அதிகாரிகளையும், மக்கள் நேரடியாக சந்திக்க வேண்டிய சூழலை தவிர்த்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை (Front desk customer representative) மையங்களை உருவாக்கி நமது விண்ணப்பங்களை மற்றும் ஆதாரங்களை அவர்களிடம் கொடுக்கவும், அவர்கள் அதை சரி பார்த்து, பிறகு குறிப்பிட்ட நாட்களில் அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி நம்மிடம் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தால் இந்த அறிவிப்பு பலன் கொடுத்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பல அலுவலங்களுக்கு நம்மை டென்னிஸ் பந்து மாதிரி பந்தாடாமல், அலுவகங்களே ஒன்றுக்கொன்று இணைந்து வேலை செய்ய ஏற்பாடு செய்திருந்தால் இந்த அறிவிப்பு பலன் கொடுத்திருக்கும். இவையெல்லாம் எதுவும் இல்லாமல்...வெகு எளிதாக நம்மையெல்லாம் ஏமாற்றி விட்டார்கள். மிகச்சிறந்த ராஜதந்திரி மோடி. மிகச்சிறந்த கோமாளிகள் மக்கள்.


ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி கொள்ளையடிக்கும் அரசுகள் பிரிட்டிஷ்கால சட்டநடைமுறைகளை அடித்தள மக்களுக்கு கூட மாற்றாமல், நிர்வாகத்தில் நேர்மையை கடைபிடிக்காமல் மக்களை கடைபிடிக்க சொல்கிறது.. இன்றைய சேவைவரியோ 14.5 சதவீதம்.. வரித்தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று முழங்கிய பாஜக வரியை தீவிரப்படுத்தியது தான் கொடுமை..ஜிஎஸ்டியால் வரிகொடுமையிலிருந்து மக்களுக்கு விடுதலையும் கிடைக்கப் போவதில்லை.. தீவிரவாதிகளின் பண பரிவர்த்தனைகள் இன்று சாமானியனை கூட பாதிக்குமளவு சென்றதற்கு சாமானியனா தண்டிக்கப்பட வேண்டும் ???


இந்தியா அரசுக்கு தெரியாமல் வெளிநாட்டு வங்கியில் வெளிநாட்டு பணமாக வைத்து இருப்பதுதான் கருப்பு பணம். ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களுக்கு சொந்தமான கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவந்து அவர்கள் சொன்னது போல் 15 லச்சம் மக்களுக்கு கொடுக்க வேண்டாம். நம் உலக வங்கியில் வாங்கிருக்கும் கடனை அப்படியே திருப்பி செலுத்தலாமே. முடித்தல் மோடி அந்த பணத்தை கொண்டு வரட்டும். இது இருந்த கலர் பேப்பருக்கு பதில் இனொரு கலர் பேப்பர் அவளுவதன். இதில் பாதிக்க படுவது மிடில் கிளாஸ், லோ கிளாஸ் மக்கள்தான் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி அதில் தோற்றுப் போய்விட்டார். அதில் இருந்து தம்மை தற்காக்க இப்படி ஒரு நாடகமாடுகிறார். வங்கிகளில் ரூ100 நோட்டுகள் போதுமானதாக இல்லை. அப்படியான நிலையில் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களை எப்படி வாங்க முடியும்? வாங்கும் பொருட்கள் உற்பத்தி குறைவாகவும், கரன்சி நோட்டுக்கள் உற்பத்தி அதிகமாகவும் இருந்தால் , ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் பின்தங்குகிறது என உணரலாம் ?.முதலில் RBI 500 & 1000 நோட்டுகள் புழக்கத்தை வங்கிகள் மூலமாக குறைக்க வேண்டும். சில்லறை நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இப்படி செய்திருந்தால் தங்கம் வேலை அதிகரிப்பு மற்றும் அன்றாட தேவைகளின் வாங்குவதற்கு சில்லறை பிரச்னை இருக்காது. பொது மக்களுக்கு சிரமம் இருக்காது .. இந்த நடை முறை சரியான வழியில்லை. 1000 & 2000 நோட்டுகளை reserve பேங்க் வெளியிட கூடாது. கருப்பு பணம் அதிகரிக்க மற்றும் இந்தியா ரூபாய் வீழ்ச்சி அடைய இது உதவும்.


இதுவரை பெரிய பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை அனைவரும் கூலாக இருக்கிறார்கள் அப்படியானால் முன்பே இது கசிந்து விட்டதா ? அரசியல் இல்லாமல் இதை சிந்திக்க வேண்டும் நான் யாரையும் குறை சொல்லவில்லை, இது ஒரு நல்ல விஷயம் தான் ஆனால் எங்கோ தவறு நடந்து இருக்கிறது, உஷார் ஆகவேண்டியவர்கள் உஷார் ஆகிவிட்டதை போலவே இருக்கிறது ஒருவேளை எல்லா பணக்காரர்களுக்கும் ஏற்கனவே தகவல் கொடுத்து அரசு உஷார் படுத்தி விட்டதா.....? கன்டைனரில் பணம் இடம் மாறியது இதற்க்காகத்தானா.......? இந்த ஆபரேஷன் ஏழைகளை துன்புறுத்த மட்டும்தானா.....? பங்கு சந்தைகள் வீழ்கிறது, தங்கம் விலை இருக்கிறது, ரூபாயின் மதிப்பு குறைகிறது.....? என்ன நடக்கிறது நமது நாட்டு பொருளாதாரத்தில். இந்த ஆபரேஷன் வெற்றி என்றால் பங்கு சந்தைகள் ஏற்றம் காண வேண்டும், ரூபாயின் மதிப்பு கூட வேண்டும். ஆனால் எல்லாம் தலை கீழாக நடக்கிறதே ஜீ.......?

No comments:

Post a Comment