Tuesday, 22 August 2017

சென்னை 378 th பிறந்தநாள் !!

Image result for சென்னை 378 th பிறந்தநாள்

கோட்டைல தலமைச்செயலகம்,
கிண்டில கவர்னர் மாளிகை,
பீச் எதிர்ல கமிஷ்னர் ஆபிஸ்,
பக்கத்துல கலக்டர் ஆபிஸ்,
அது பக்கத்துல ஹார்பரு,
குறிப்பா சொல்ல கூவம்,
காசிமேடு மீன் மார்கெட்,
கண்ட சாமான் மோர் மார்கெட்,
பீக் டைம்க்கு எலக்ட்ரிக் டிரெய்ன்,
பிஸி டைம்க்கு சிட்டி பஸ்,
ஹை கிளாஸ்க்கு கால் டாக்சி,
மிடில் கிளாஸ்க்கு மீட்டர் ஆட்டோ,
தடுக்கி விழுந்தா தியேட்டர்,
எழுந்தா நின்னா இ கேஃப்,
பரபரப்புக்கு ஃபீனிக்ஸ்,
என்ஜாயா எக்ஸ்பிரஸ் அவென்யு,
ஷாப்பிங்க்கு ஸ்பென்ஸர் பிளாசா,
சன்டேஸ்க்கு சிட்டி சென்டர்,
மைண்ட்ஃபிரீக் மெகா மால்ஸ்,
மகிழ்ச்சிக்கு மாயாஜால்,
மயிலாப்பூர்ல கபாலீஸ்வரர்,
திருவல்லிக்கேணில பார்த்தசாரதி
அடையார்ல அஷ்டலட்சுமி,
வடபழனில வள்ளி முருகன்,
மாங்காட்டில் காமாட்சி,
வேற்காட்டில் கருமாரி,
மிண்ட் ஸ்ட்ரீட்ல கந்தசாமி,
நங்கநல்லூர்ல ஆஞ்சநேயர்,
செயின்ட் மேரிஸ் பெசன்ட் நகர்,
செயின்ட் பேட்ரிக் ஷெனாய் நகர்,
சி.எஸ்.ஐ. க்கு சின்னமலை,
பெந்தகோஸ்த்க்கு பரங்கிமலை,
தொழுகைக் தவுசண்ட் லைட்டு,
நமாஸ் பன்ன ஐஸ் ஹவுசு,
மந்திரிக்கறதுக்கு கோவளம்,
மாந்த்ரீகத்துக் கொருக்குபேட்டை,
ஃபாரின் ஐட்டம்ஸ் பர்மாபஜார்,
லோக்கல் ஐட்டம்ஸ் பாண்டிபஜார்,
சீப்பா வாங்க சத்யா பஜார்,
ஜாலியா சுத்த ஜாம்பஜார்,
பண்டிக நாளுக்கு டி நகர்,
காய்கறி மார்கெட் கோயம்பேடு,
ரேடியோ மார்கெட் ரிச்சி ஸ்ட்ரீட்டு,
பூக்கட பக்கத்துல ஹைகோர்ட்டு,
டி பி ஹாஸ்பிடல் குரோம்பேட்டை,
தேவர் சிலை தேனாம்பேட்டை
பைக் ஸ்பேர்ஸ் புதுப்பேட்டை,
ஆட்டோ ஸ்பேர்ஸ் ராயப்பேட்டை,
ஆக்ஸிடெண்ட்க்கு அப்பல்லோ,
டெலிவரிக்கு எக்மோர்,
எமர்ஜென்சிக்கு ஜி.ஹெச்.,
எலும்பு ஒடஞ்சா ராயப்பேட்டா,
காத்து வாங்க மெரீனா,
கடல போட பெசன்ட் நகர்,
சுண்டல் விக்க சாந்தோம்,
போட்ல போக முட்டுக்காடு,
டிராஃபிக்குக்கு மவுண்ட்ரோடு,
ஜாகிங்க்கு பீச் ரோடு,
பைக் ரேஸ்க்கு E C R,
ஓவர் ஸ்பீடுக்கு O M R,
MBA -க்கு மெட்ராஸ் யூனிவர்சிட்டி,
M. Tech அண்ணா யூனிவர்சிட்டி,
ஆர்ட்ஸ்க்கு நந்தனம் காலேஜ்,
ஸ்டேட்ஸ்க்கு லயோலா காலேஜ்,
கொயட்டா படிக்க குயின்மேரிஸ்,
சீன் போட ஸ்டெல்லாமேரிஸ்,
சயின்ஸ் படிக்க SITE,
சைட் அடிக்க எத்திராஜ்,
வெளையாட்டுக்கு லா காலேஜ்,
பந்தாக்கு பச்சையப்பாஸ்,
ஃபிரண்ட்ஷிப்பா பிரசிடென்சி,
ஷைனிங்க்கு மெடிக்கல் காலேஜ்,
வைல்டு லைஃப்க்கு வண்டலூர்,
குட்டீஸ்க்கு சில்ட்ரன்ஸ் பார்க்,
பழச பாக்க மியூசியம்,
படிச்சி பாக்க கன்னிமாரா,
ஃபாரினர்ஸ்க்கு மகாபலிபுரம்,
பாமரனுக்கு எம்.ஜி.ஆர் சமாதி,
லவர்ஸ்க்கு காந்தி மண்டபம்,
வி.ஐ.பி. ஸ்க்கு வள்ளுவர்கோட்டம்
சினிமாக்கு கோடம்பாக்கம்,
சித்தங்களங்கினா கீழ்பாக்கம்,
ஏர்போர்ட் மீனம்பாக்கம்,
நல்லதுக்கு நெசப்பாக்கம்,
எங்க ஊரு சென்னைங்க!!
இங்க என்ன இல்ல சொல்லுங்க!!!!
378 th பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்னை !!

No comments:

Post a Comment