Tuesday 15 August 2017

யாருக்கு வேண்டும் இதுபோன்ற சுதந்திரம் ?

யாருக்கு வேண்டும் இந்த விடுதலை ? நூறு கோடி மக்கள் வாட, ஒரு பத்தாயிரம் கொள்ளயர்கள் ஆனந்தக் கூத்து நடத்தவோ இந்திய விடுதலை? என்றும் நாம் அடிமைதான்.
சுதந்திரம் க்கான பட முடிவுநமது உழைப்பை உறிஞ்சிவிட்டு பசியையும், குடிக்கும் நீர்ப்பஞ்சத்தையும், அசுத்தக் காற்றையும், உடல் நலச் சீர்கேட்டையும் ,அணு ஆயுத ஆபத்துகளையும் அள்ளிக் கொடுத்துவிட்டு நாய்கள் எல்லாம் நாயகர்கள் வேடமணிந்து வெள்ளை வேட்டியில் வண்ண அங்கிதனில் உலா விட்டிருக்கிறோமே !!!
நமது வரி வட்டி திரை ஊழல் பணத்தில் நாளுக்கு லட்சம் ரூபாய் செலவு செய்யும் மக்கள் மன்ற, சட்டமன்ற உறுப்பினரைகளையும் வைத்துக்கொண்டா விடுதலை கொண்டாடுவது? நமக்கு மானம் இல்லை.
பொது வினியோகத்தை இரத்து செய்யும் அரசியல்வாதிகள் உண்ண வாழ மட்டும் மானியமா? மடையர்களே...
கடைக்கு வந்து காய்கறி, தானியங்கள், பால், வாங்கிப் பாருங்களடா.
பண மதிப்பீட்டு விலக்கு, நீட் தேர்வு, கதிராமங்கலம்,, கீழடி, காவிரி மேலாண்மை, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு, கூடங்குளம், சேவை வரி, , ஊழல், மாட்டிறைச்சி, இந்தித்திணிப்பு, சம்சுகிருத கருவறை முன்னுரிமை, உயர்சாதி ஆதிக்கம், மதவெறியும் தீண்டாமையும், குதிரை பேரம், வணிக வீழ்ச்சி, தமிழக உரிமை பறிப்பு போன்ற எல்லாவற்றிலும் தமிழகத்தை வஞ்சித்துவிட்டு இந்தத் தமிழகத்துக்குச் சுதந்திரமே தேவையில்லை.
ஹிட்லரை ஒரு உலகின் சர்வாதிகாரியாகப் பார்க்காதீர்கள் ..ஒன்றுபட்ட ஜெர்மானியத்தின் உன்னத தலைவன் அவன் .
முசோலினியை இத்தாலியின் கொடுங்கோலனாகக் காணாதீர்கள்; இத்தாலிய வீரத்தை வெளியில் பறையறித்தவனாய் பாருங்கள்..
சேகுவேராவை போராளியாக ஆயுதம் ஏந்திய தீவிரவாதியாகக் காணாதீர்கள். இனமானம் காக்க தன் இறப்பைத் துச்சம் என எண்ணிய மாவீரனாய் காணுங்கள்
பகவத்சிங்கையும், வாஞ்சி நாதன், சந்திரபோசு
இவர்களும் போராளிகள் தானே !!. அது எப்படி?
பிரபாகரன் விடுதலைப் புலிகளின் தலைவனாக மட்டும் பார்க்காதீர்கள்; உலகத்தமிழ் இனத்தின் போர்த்தலைவனாய் ஈழமைந்தனாய்ப் பாருங்கள்.
தமிழர் மானத்தை வீரத்தை எங்கு எப்போது எப்படி யாரிடம் காட்டப் போகிறீர்கள் ? சீனாவிடமா? .பாகிஸ்தானிடமா ? இலங்கையிடமா? இல்லை என்றும் போல் அப்பாவி சராசரி இந்தியாவின் அரசியல் கயவர்களிடமா?
இந்தியா வல்லரசு ..இந்தியாவல்ல அரசு ..
இந்தியாவில் இருப்பது அரசே அல்ல;
தமிழகத்தில் இருப்பது பதவி பணத்திற்கு ஆடும் தலையாட்டிப் பொம்மைக் கூட்டம்;
மொழியை, இனத்தை, நாட்டை, மண்ணையே
மலடாக்கி, மக்களின் உணர்வை புரியாத
கேடுகெட்ட காசி நகரத்துக் காவிமதக் கும்பலே..
நாம் அன்றும் இன்றும் என்றும் அடிமைதான்.
ஆங்கிலேயர் ஆட்சியே இருந்திருக்கலாம்...
"அதுதான் சுதந்திரம்"
பட்டுப்புடவை நெய்தவன் மகளுக்கு புடவை வாங்க காசு கிடைத்தால்,
விதவையான அம்மாவுக்கு நெற்றியில் அழகாக திலகமிட அனுமதித்தால்,
ஏடிஎம்மில் பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைக்கும் தொழிலாளி வீட்டில் விளக்கெறிந்தால்,
அம்மா என்று அழைக்க திருநங்கைக்கு ஒரு உறவு கிடைத்தால்,
தோஷங்களால் தள்ளிப்போகும் மணப்பெண்ணிற்கு சந்தோஷ வரன் கிடைத்தால்,
சுதந்திர நாட்டில் இவர்களுக்கு விடிவுகாலம் கிடைத்தால்
"அதுதான் சுதந்திரம்"

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment