Tuesday 1 August 2017

கோயம்புத்தூர்வேளாண்மைப் பல்கலையில் சிறப்பு பயிற்சி!!!



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், பழம், காய்கறிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, ஆகஸ்ட் 3ல் நடைபெறுகிறது.
கிணத்துக்கடவு அருகே கோதவாடி பிரிவில் உள்ள, கோயம்புத்தூர் விற்பனைக் குழுவின் உணவு பதப்படுத்துதல் மையத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், ஊறுகாய், பலவகையான பழ ஜாம், தக்காளி கெட்சப், பழரசம், ஊறுகனி, தயார் நிலை பானம், பழ பார் உள்ளிட்டவை தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆர்வம் உள்ளவர்கள் ரூ.750 செலுத்தி, இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு, அறுவடை பின் சார் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியரை நேரிலோ அல்லது 0422 – 6611268, 1340 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று, வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment