Saturday 26 August 2017

கற்பழிப்பு வழக்கில் பாலியல் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது !!

மிகப்பெரிய கலவரத்துக்கு காரணமான தேரா சச்சா சவுதா பஞ்சாப் அடிப்படை வாதஅமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்,.
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு  மினரல் வாட்டர் பெண் உதவியாளர்வயது 51,பஞ்சாபி,நடிகர்,பாடகர், டைரக்டர்,சாமியார்,2015,லில் நூறு இந்திய பிரபலமானவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர், காங்கிரஸ்,ஆதரவாளர், இவருடைய மருமகள், காங்கிரஸ் தலைவரின் மகள்,பஞ்சாபில் சிர்சாவில் உள்ள தேரா சச்ச சவுதா ஆசிரமத்தில் தங்கியுள்ள பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக பஞ்சாப், அரியானா ஐகோர்ட் நீதிபதிக்கு முகவரியில்லாத புகார் கடிதம் வந்தது.
மே 2002புகார் கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் சிர்சா மாவட்ட செசஷன்ஸ் கோர்ட்டிற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
செப்டம்பர் 2002,
சிர்சா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் விசாரணையில் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உண்மை தான் என அறிக்கை அளித்ததன் பேரில் வழக்கு சி.பி.ஐ. யிடம் ஒப்படைத்தது ஐகோர்ட்.
டிசம்பர் 2002,
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மீது சி.பி.ஐ. பாலாத்காரம் செய்ததாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்தது.
ஜூலை 2007
கடந்த 1999-2001-ம் ஆண்டுகளில் தங்களை பலாத்காரம் செய்ததாக இரண்டு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலம் அம்பாலா கோர்ட்டில் சி.பி.ஐ. குர்மீத் ராம் ரஹீம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
செப்டம்பர் 2008
குர்மீத் மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.) பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்தது.

2009-2010
குர்மீத் மீது இரண்டு பெண்கள் அளித்த புகார் தொடர்பாக அவர்களின் வாக்குமூலத்தை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் பதிவு செய்தது.
ஏப்ரல் 2011
குர்மீத் மீதான பலாத்கார வழக்கை சி.பி.ஐ.சிறப்பு கோர்ட் அம்பாலா கோர்ட்டில் இருந்து பஞ்ச்குலா கோர்ட்டிற்கு மாற்றி உத்தரவிட்டது.
ஜூலை 2017,
குர்மீத் ராம் ரஹிம் மீதான வழக்கை தினசரி விசாரிக்க பஞ்சகுலா கோர்ட் உத்தரவிட்டது.
2013 வரை,
 மத்திய அரசின் இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு,மோடி அரசு வந்ததும் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
ஆகஸ்ட் 17, 2017
பஞ்சகுலா கோர்ட்டில் வழக்கின் அனைத்து விசாரணைகள், சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு 25-ம் தேதி வெளியிடம் என தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 25, 2017
பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என பஞ்ச்குலா கோர்ட் அறிவித்தது. தண்டனை விவரம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது.
இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 30 பலி.கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு மினரல் வாட்டர் வசதியுடன் ஒரு பெண் உதவியாளர் ,மேலும் பிரத்யேக டிவி, நாளிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment