Thursday, 3 May 2012

அரவாணிகள் எனும் மூன்றாம் பாலினம்-ஒரு விழிப்புணர்வு ஆய்வு...

ஆண்கள் பெண்கள் என்ற இருபாலாருக்கும் இடையில் தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கக் கோரி போராடும் ஒரு குழுவாக இன்றைய நாட்களில் நம்முன் தெரியக் கூடிய ஒரு வகையினர் அரவாணிகள்.
தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும் படி கூறும் இவர்கள் ஆரம்பத்தில் தங்கள் பெயருக்காக போராடினார்கள்.
அலிகள் என்று அழைக்கப் பட்டவர்கள் மீடியாக்கள் தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி அதில் வெற்றியும் கண்டார்கள்.
இதே குழு தற்போது தங்களை திருநங்கைகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

அரவாணிகள் என்றால் யார்?

க்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல நாங்கள் மூன்றாவது பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்.உண்மையில் மூன்றாவது பாலினம் என்பது பொய்யாகும்.
இவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள்.
பெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள்.
நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள்.
ஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத் தான் இருக்கும்.இந்தியாவின் மும்மை டெல்லி குஜராத் போன்ற இடங்களில் ஆண்களை அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் சில உடல் அமைப்பிற்கு மாற்றும் செயன்முறையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் மார்பு போன்ற பிறப்பில் தங்களுக்கு இல்லாத சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.அதன் பின் தங்களை பெண்களாக மக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்துகின்றனர்.


அரவாணிகளின் தொழில்(?)உலகுக்கே ஆபத்தானது.

திருநங்கைகள் என்று சொல்லப் படும் இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை.இவர்கள் தங்கள்; முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.அதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பரிப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.
இவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒரு அடி அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும் போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும் வசை பாடுவதும் இவர்களின் தொழில்.இவர்களின் இந்த இழி செயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.இதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப் படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

அரவாணிகள் வாழும் நாடுகள்.
அரவாணிகள் ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக இருந்தார்கள் தற்போது  அதிகமாக இந்தியாவில் தான் உருவெடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்திய நாட்டின் முக்கிய நகரங்களாகிய மும்மை கல்கத்தா குஜராத் டெல்லி சென்னை போன்ற நகரங்கள் இதில் அதிகம் முக்கியத்துவம் பெருகின்றன.
இது தவிர மலேசியா சிங்கப்பூர் இஸ்ரேல் வட தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் அரவானிகள் என்ற பெயரில் இருக்கிறார்கள்.
அரவாணிகள் என்ற பெயரைத் தவிர்த்து இவர்களின் வேலையை செய்யக் கூடிய கேடு கெட்டவர்கள் பலர் அணைத்து நாடுகளிலும் உள்ளனர்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இவர்கள் அழைக்கப் படுவர் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அரசாங்கங்களின் அங்கீகாரத்துடன் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பகிரங்கமாக இந்த அசிங்கத்தை நடத்தி வருகிறார்கள்.இந்தப் பட்டியலில் இருதியா 128வது நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.129வது நாட்டினராக தங்களை அறிவிப்பு செய்யும் படி இலங்கையில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அன்மையில் பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.


சென்ற ஆண்டு (2011) முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2008-ம் ஆண்டு ‘அரவாணிகள் நலவாரியம்’ தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதிதான் திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது,

பெண் என்பது ஒரு பாலினம் ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாவது ஒரு பாலினம் என்று கொள்ளலாம். ஆணும் பெண்ணும் இயற்கையின் படைப்பு என்றால் அரவாணிகளும் இயற்கையின் படைப்புதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடிப்படையான பால் நிலையிலிருந்து திரிபடைந்தவர்களே இந்த அரவாணிகள். ஆரம்பத்தில் ஆணாகப் பிறக்கும் இவர்கள் நாளடைவில் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பெண்மைக்குரிய தன்மையினை அதிக அளவில் பெறுவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. பிறவியில் பெண்ணாகப் பிறப்பவர்கள் ஆணாகத் திரிபடைதலும் உண்டு. எனினும் எண்ணிக்கையில் இது மிகவும் குறைவு.

அரவாணிகள் பலகாலமாக அலி பேடி போன்ற சொற்களால் கிண்டலும் கேலியுமாக அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமின்றி வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள்.

அரவாணிகள் என்போர் இன்று நேற்றல்ல, இதிகாச காலத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். தொல்காப்பியம் ஆண் தன்மை மிகுந்த பெண்களை ‘ஆண் அரவாணி’ என்றும் பெண் தன்மை மிகுந்த ஆண்களை ‘பெண் அரவாணி’ என்றும் விளக்குகிறது. நன்னூல் ஆண் அரவாணியை ‘ஆண்பேடு’ என்றும் பெண் அரவாணியை ‘பெண்பேடு’ என்றும் வகைப்படுத்தியுள்ளது,

மகாபாரதத்தில் அரவாணிகள் பாத்திரங்களாகவே படைக்கப் பட்டுள்ளனர், குருஷேத்திரப் போரில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்தக் குறையும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனித உயிர் தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆரூடம் கூறுகிறது. அர்ஜுனனின் மகன் அரவானை பலியாக்க முடிவு செய்கின்றனர். அதற்கு அரவான் சம்மதித்தாலும் தன் கடைசி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லறவாழ்வில் ஈடுபட்ட பின்புதான் பலிக்களம் செல்வேன் என்று சொல்கிறான். எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். ஒருநாள் இல்லறவாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக்கோலம் பூணுகிறாள் மோகினி. அந்த மோகினியாகத்தான் அரவாணிகள் தங்களை நினைக்கின்றனர். கொலையுண்ட அரவானை கூத்தாண்டவராக நினைத்து வழிபடுகின்றனர்.


கூத்தாண்டவர் திருவிழா

அரவாணிகள் சமூகத்தில் கூத்தாண்டவர் திருவிழா ஒரு சமுதாய சடங்காக நடத்தப்படுகிறது. திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது.
சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானை கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பொழுது விடிந்ததும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிலை வைக்கப்பட்டு கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள கொலைக்களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறது. உயிர்விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை துண்டிக்கப்படுகிறது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து பூ எடுத்து வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக் கோலம் பூணுகின்றனர்.
இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வரும் திருநங்கைகளை ஒன்றிணைக்கும் விழாவாகவும் அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு கலைத்திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இந்த விழா அமைகிறது,
அரவாணிகளை மக்கள் மதிக்கின்ற நிகழ்வுகளும் உண்டு, திருமண விழா குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா கடை திறப்பு விழா போன்ற நற்காரியங்களுக்கு பூசாரியை அழைப்பது போன்றே திருநங்கைகளையும் அழைத்து ஆசி வாங்கிக் கொள்ளும் பழக்கம் மும்பை போன்ற பகுதிகளில் அதிகமாக உள்ளது. அரவாணியிடம் ஆசி பெற்றால் குழந்தை அரவாணியாக மாறாது என்று நம்பிக்கையும் நிலவுகிறது.

http://www.youtube.com/watch?v=5iljkl7nva4&feature=player_embedded


அரசின் திட்டங்கள்
தங்கள் சமூகத்தின் முதல் போராட்டம் என்று அரவாணி சமூகத்தினர் கருதுவது 2004ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனுவைத்தான் வங்கிக் கணக்கு திறப்பது வங்கிக் கடன் பெறுவது தொலைபேசி இணைப்புக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றிற்குத் தகுதியானவராகக் கருதப்பட ஒருவருக்கு தேவையான குடும்ப அட்டை அரவாணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடரப்பட்ட ரிட் மனு அது.ஜுலை 2004ல் சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்ட அறிவிப்பில் அரவாணிகள் அரசு அடையாள அட்டைகளுக்கும் ஆவணங்களுக்கும் விண்ணப்பிக்கும்போது ஆண் அல்லது பெண் இரண்டில் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறியது.

டிசம்பர் 2006ல் அரவாணிகளின் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்று அரவாணிகள் நல்வாழ்வுக்கான துணைக்குழு அமைக்கப்பட்டது. இதனையொட்டி வெளிவந்த அரசாணை பல முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறது, அரவாணிகளுக்கு அனுமதி வழங்காத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கைகள்; அரவாணிகள் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு நிதியுதவிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள்; பால் மாற்று அறுவை சிகிச்சை வேண்டி அரவாணிகள் அணுகும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அறிவுப்பூர்வமான தகவல்கள்; மனநல ஆலோசனை வழங்குவதற்கானப் பயிற்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அடையாள அட்டைகள் குறித்த புகார்களைத் தெரிவிப்பது போன்றவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த அரசு ஆணை தெரிவித்தது.

மே 2008ல் சமூக நலவாழ்வுத் துறையின் கீழ் அரவானி நலவாரியம் அமைக்கப்பட்டது. அதே மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை தமிழகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரவாணிகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கு வழி செய்தது.


கணக்கெடுப்பு

பொதுவாக அரவாணிகளை ‘ஆண்கள்’ பிரிவில் சேர்க்கும் நடைமுறை உள்ளது. ஆனால் ‘தங்களை தனிப்பிரிவாக சேர்த்து தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரவாணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அரவாணிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்கள் பெண்களுக்கு முறையே 1 2 என்ற எண்கள் வழங்கப்பட்டுள்ளன, இப்போது அரவாணிகளை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 3 என்ற எண்ணில் குறிக்கப்படுவார்கள் எனினும் 3ம் எண்ணில் குறிக்கலாம் என்று சம்பந்தப்பட்டவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த எண்ணில் சேர்க்கப்படுவர்.

ஆண் பெண் போலவே அரவாணியும் ஒரு மனித இனமே. அவர்களும் சமமாக கருதப்பட வேண்டும். அரவாணிகள் நலனுக்காக தமிழக அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. அவர்கள் கல்வியறிவு பெறவும் மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறவும் சட்டபூர்வ அந்தஸ்தை பெறவும் அரசு வழி வகை செய்துள்ளது. நீண்டகால போராட்டத்திற்குப் பின்பு இப்போதுதான் சமுதாயத்தில் இவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கி உள்ளது.

மக்கள் அரவாணிகளை அருவருப்பான மனநிலையோடுதான் பார்க்கின்றனர். ஊடகங்கள் அவர்களை கேவலமாக சித்தரிக்கின்றனர். சமூகம் இவர்களை ஒரு இழி பிறவிகளாக கருதி புறக்கணிக்கின்றது. அரவாணிகள் குறித்து பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும் விவாதங்களும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
மற்றவர்களைவிட உழைப்பிலும் அறிவிலும் அரவாணிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. சமுதாயம் தான் அவர்களுக்குரிய வாய்ப்புகளைத் தராமல் ஒதுக்கி வருகிறது. தடைகளைத் தாண்டி அரவாணிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்.
திருநங்கை சமுதாயத்தில் பிறந்து இன்று ஆண் பெண் இருபாலரையும் விஞ்சி விடும் வண்ணம் மிகச் சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து நடனப் பள்ளி தொடங்கி நடனத்தை வளர்த்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.

திருநங்கைகளுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் தர வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டதன் காரணமாக ஊடகங்களில் திருநங்கையே தொகுப்பாளராக வந்து முத்திரை பதித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்குள் இருக்கும் மனத்தடைகளையும் குழப்பங்களையும் உடல் ரீதியான உறவுகள் குறித்தும் தெளிவான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், பிரபலமாக உள்ள அரவாணிகள் களப்பணியாற்றி தங்களைப் போன்றவர்களை வழி நடத்த வேண்டும்,  

அரவாணி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி ஏற்பதில்லை, அவர்களுக்குள் எழும் மாற்றங்களே அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. வலியுடனும், வேதனையுடனும் வாழும் அரவாணிகளைப் புறக்கணிப்பதைத் தவிர்த்து அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.
அரவாணிகளுக்கான தவறான பிம்பத்தை உடைத்தெறிந்து அவர்களது உணர்வு மதிக்கப்படவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அவர்களை அரவாணி என்று குறிப்பிடுவதை விட திருநங்கை என்று அழைப்பதையே விரும்புகின்றனர். பெண்ணியம் போல அரவாணியம் பேசப்பட வேண்டும். அப்போதுதான் திருநங்கையரும் நல்வாழ்வு வாழ வழி பிறக்கும்.

ரவாணிகள் பற்றிய முதல் நாவல் ‘வாடா மல்லி’. எழுதியவர் சு. சமுத்திரம். ஓர் அரவாணி எழுதிய முதல் நாவலாக வெளிவந்துள்ளது ‘முன்றாம் பாலின் முகம்’. எழுதியவர் பிரியா பாபு. ’தமிழகத்தில் அரவாணிகளின் வழக்காறுகள்’ என்னும் ஓர் ஆவணப்படத்தையும் ‘அரவாணிகள் சமு்க வரைவியல்’ என்னும் தொகுப்பையும் வெளியிட்டு தொடர்ந்து அரவாணிகளுக்காக பாடுபட்டு வருபவர்.


 அரவாணிகள் பற்றி இஸ்லாம் கூறுவது ....

அரவாணிகள் குறித்து குர்ஆனில் வசனம் எதுவும் இல்லை! நபிமொழிகளில்
அரவாணிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இவர்கள் அறுவறுப்பான முறையில் பெண்களின்
அங்கங்களைக் கொச்சைப் படுத்தி வர்ணிப்பவர்கள் என்பதால் அரவாணிகளை வீடுகளில்
சேர்க்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். 
நபிமொழித் தொகுப்பு புகாரி நூலில் அறிவிக்கப்பட்ட அரவாணிகளின் செய்தி: 
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4324 

(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 
என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்)
அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு
அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம்
நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்''
என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள்
(பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று
கூறினார்கள். இப்னு உயைனா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த
அலியின் பெயர் 'ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
... மற்றோர் அறிவிப்பில், 'அப்போது நபி(ஸல்) அவர்கள் தாயிஃபை 
முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. 
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5235 


உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 
(ஒரு நாள் என் கணவர்) நபி(ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து
கொண்டிருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப் போல் நடந்து கொள்ளும்)
'அலி' ஒருவனும் இருந்துகொண்டிருந்தான். அந்த 'அலி' என் சகோதரர் அப்துல்லாஹ்
இப்னு அபீ உமைய்யாவிடம், 'நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால், ஃகைலானுடைய  மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை
நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும்
பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று (அவளுடைய மேனி அழகை
வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'இவன் உங்களிடம்
ஒருபோதும் வரக்கூடாது'' என்று கூறினார்கள். 
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5886.
 
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,
ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,
'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்' என்றார்கள்.
அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள்
இன்னாரை வெளியேற்றினார்கள். 
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5887.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: 
அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் 'முன்பக்கம் நான்கு
மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு
மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக
காட்சி தருவதால் 'பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று
கூறினார். 
'தரஃப்' (ஓரம்) எனும் சொல் ஆண்பாலாயினும், அது வெளிப்படையாகக் குறிப்பிடாததால் கான்
'அர்பஉ' (நான்கு), 'ஸமான்' (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக)
ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன. 
பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6834 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,
ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,
'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!' என்றும்
சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி)
அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.
 

தொகுப்பு : .மு.அஜ்மல் கான்.


Wednesday, 2 May 2012

இன்றைக்கு வேலைவாய்ப்புக்கு தடையாக இருக்கும் "தனித்திறன்".-ஒரு அலசல்...

தனித்திறன் என்றால் என்ன? 

னிப்பட்ட ஒரு நபர் பல வகையான திறமைகளை வெளிப்படுத்துவதையே தனித்திறன் என்று கூறுகின்றனர். தலைமையேற்கும் திறன், தகவல் தொடர்பு, மொழி, எழுத்து, பேச்சு திறன், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், விரைந்து முடிவெடுக்கும் திறன், மேலாண்மை திறன், ஒரு விஷயத்திற்கு மற்றவர்களை கவரும் வகையில் பதில் அளிக்கும் திறன், கம்பீரம், நல்ல உடற்கூறு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தன்னகத்தே கொண்ட ஒருவர் தனித்திறன் கொண்டவர் என்று அடையாளம் காணப்படுகிறார்.


இன்றைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு தமிழகத்தில் தொழில் துவங்கி வருகின்றன. இதற்கு, மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு சாதகமான அம்சங்களே காரணம். இதில், திறமையான மனித வளமும் ஒன்று.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் கல்வி தரத்தில் மிகச் சிறந்து விளங்குகின்றன. பொறியியல் சார்ந்த கல்வி இங்கு தாராளமாக கிடைக்கிறது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள் என்ற அளவில் மாநிலம் முழுவதும், ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பொறியியல், கலை, அறிவியல் என பல பாடங்களில், பட்டம், பட்டயப் படிப்புக்களை முடித்து வெளி வருகின்றனர். இன்றைய நிலையில், தமிழகத்தில், படித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 65 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.


ஆனால், தொழில் நிறுவனங்கள் தகுதியுள்ள இளைஞர்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என்று அரசிடம் முறையிட்டுள்ளன. இதனால், முகாம்கள் மூலம் தகுதியான இளைஞர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டது. இதை தொடர்ந்து, 50 கோடி ரூபாய் செலவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் படித்த, திறமையான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு திறமையான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தனியார் நிறுவனங்கள் முறையிடுவதில் உண்மை இருக்கிறது. ஏனெனில், படித்து முடித்து வேலை தேடி வெளியே வரும் பல மாணவ, மாணவியர் தனித்திறன் மிக்கவர்களாக இல்லை. படிப்பில் சிறந்து விளங்கும் இவர்கள், தங்களின் தனித் திறனை வளர்த்து கொள்ளாமல் விட்டுவிடுவதால், வேலை தேடி செல்லும் போது அங்கு நடக்கும் பல்வேறு நேர்காணல்களில் தோல்வியடைந்து விடுகின்றனர்.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா கூறுகையில், "தமிழகத்தில் படித்து வேலைக்கு பதிவு செய்துள்ள நிலையில் 65 லட்சம் பேர் இருந்தும், தகுதியுள்ள இளைஞர்கள் கிடைக்கவில்லை என, தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்' என்றார். எனவே, பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற வேண்டியது தற்போது அவசியமாகிறது. இச்சூழ்நிலையில், "திறமை வாய்ந்த மாணவர்களை கொண்டே இந்தியா பெரும் பொருளாதார வல்லரசாக மாறும்' என, டாக்டர் அப்துல்காலம் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

"ஆழ்ந்து கற்றல் படைப்பாற்றலை தரும்; படைப்பாற்றல் நல்ல எண்ணங்களை வளர்க்கும்; நல்ல எண்ணங்களில் இருந்து அறிவு பிறக்கும்; அறிவு உயர நம் வளம் பெருகும்; நம் வளம் பெருக நாடு உயரும்' என்று டாக்டர் அப்துல்கலாம் குறிப்பிட்டுள்ளதில், படைப்பாற்றல் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர், வெற்றிகரமாக படிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புக்களை செய்து, படைப்பாற்றலுடன் இருந்தால் மட்டுமே, அவர்கள் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது டாக்டர் அப்துல்கலாமின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்நிலையில், தகுதி வாய்ந்த இளைஞர்களை எப்படி உருவாக்குவது, தற்போதுள்ள தகுதியான இளைஞர்கள் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி என்பது தான் தற்போது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.

இது குறித்து பல்வேறு கல்வியாளர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் அளித்த பதில் இதோ:

டாக்டர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., போலீஸ் கமிஷனர், கோவை:

தனித்திறன் தகுதியை மாணவர்கள் தாங்களே தான் வளர்த்து கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்களுக்கு மொழியே பெரும் தடையாக உள்ளது. எனவே, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவற்றில் மொழிப் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்து, பொது அறிவை வளர்க்க வேண்டியது முக்கியம். இதற்கு, தினசரி பத்திரிகைகளை படிக்கலாம். நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். மொத்தத்தில், படிக்கும் பழகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனித் திறன் பயிற்சி என்பது டிகிரி, டிப்ளமா பெற்ற மாணவர்களுக்கு மிக அவசியம். இந்த காலகட்டத்தில், தனித்திறனை வளர்க்கும் பயிற்சியை ஏராளமான நிறுவனங்கள் தருகின்றன. இவற்றில் சிறந்ததை தேர்வு செய்து, படித்த இளைஞர்கள் அங்கு பயிற்சி பெற வேண்டும்.

இன்றைய நிலையில், நம் நாட்டில் அனைத்து தொழில் துறைகளிலும் இளைஞர்களின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. ஒரு டூவிலர் மெக்கானிக்காக இருக்கட்டும்; ஏசி மெக்கானிக்காக இருக்கட்டும்; எலக்ட்ரீசியனாக இருக்கட்டும் அனைவரிடமுமே தொழில் திறன் குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில், தரமான தொழில் திறன் அவசியமாகிறது. பெரும்பாலான படித்த இளைஞர்கள், தங்கள் திறனை வளர்த்து கொண்டு, தனித் திறமையோடு திகழ வேண்டும் என்று நினைப்பதில்லை. படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களே அதிகமாக காணப்படுகின்றனர். இது மாற வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தனித்திறனை வளர்த்து கொள்ளும் பயிற்சியும், அதற்கான முயற்சியும் அவசியம்.

ஒவ்வொரு இளைஞரும் வாழும் கலை குறித்து அறிந்து, அதற்கான பயிற்சியை பெற வேண்டும். எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் திறனை வளர்த்து கொண்டால், அவர்களை வேலை தானாக தேடி வரும். தமிழகத்தை பொறுத்தவரையில், படித்த இளைஞர்கள் அதிகம் இருந்தாலும், தொழில் சார்ந்த பயிற்சி அவர்களிடம் இல்லை. நாம் படித்து விட்டோம்; நல்ல சம்பளத்தில், கவுரவமான வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. இது மாற வேண்டும். சிறிய வேலை என்றாலும் அதை சிறப்பாக செய்து பழக வேண்டும். டயர் கழற்றி மாற்ற வேண்டியது தான் வேலை என்றாலும் கூட, சங்கடப்படாமல் அதை செய்து, அதில் நிபுணத்துவம் பெற வேண்டும்.

படித்த இளைஞர்கள், தாங்கள் படித்ததற்கு தொடர்புடைய வேலை தரும் சிறிய நிறுவனங்களில் கூட, குறைவான சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். ஏன், ஆறு மாதத்திற்கு சம்பளமே இல்லை என்றாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றால், அந்த வேலை குறித்த பயிற்சி கிடைக்கும். இதன் மூலம், அந்த இளைஞர்கள் தன்னை தகுதியாக்கி கொள்ள முடியும். இதை கடைப்பிடிக்கும் ஒரு படித்த இளைஞர், தான் படித்த துறையில் முறையான பயிற்சி பெற்று, அதில் நிபுணத்துவம் (மாஸ்டர்) பெற்றவராகி விடுகிறார். இதை தொடர்ந்து, அந்த இளைஞருக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்பு தேடி வரும். கைநிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற கனவும் நிறைவேறும். மேலும், இப்படி பெறப்படும் பயிற்சியின் மூலம் தாமாகவே தொழில் துவங்கும் தன்னம்பிக்கையும், வாய்ப்பும் படித்த இளைஞர்களுக்கு கிடைக்கும்.

டாக்டர் மன்னர் ஜவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை:

பொறியியல் பாடங்களை பொறுத்தவரையில் ஐ.டி.ஐ., டிப்ளமா, பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ., முடித்தவர்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். டிப்ளமா படித்தவர்கள், மேற்பார்வையாளர்களாக பணியாற்றுகின்றனர். பி.இ., மற்றும் பி.டெக்., படித்தவர்கள் மேலாண்மை பணியும், உயர்கல்வி படிப்பவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்களில், பி.இ., மற்றும் பி.டெக்., படித்தவர்களுக்கு தான் தனித்திறன் பயிற்சி தேவைப்படுகிறது. இவர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள் விரும்புகின்றன. எனவே, பி.இ., - பி.டெக்., படித்த இளைஞர்களுக்கு "சாப்ட் ஸ்கில்' எனப்படும் பயிற்சி அவசியமாகிறது. தகவல் தொடர்பு, தலைமை ஏற்கும் திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன் என பல பயிற்சிகள் இதன் மூலம் கிடைக்கும்.

பட்டம் பெறும் மாணவர்களுக்கு இப்பயிற்சிகளை மத்திய, மாநில அரசுகளே தருகின்றன. 50 மணி நேரம், 100 மணி நேரம் என்ற அளவில் இந்த பயிற்சி தரப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், "எல்காட்' நிறுவனத்தின் மூலம் இப்பயிற்சி தரப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கடந்த ஒரு வருடத்தில் 68 குழுவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,800 பொறியியல் பட்டதாரிகள் தனித்திறன் பயிற்சியை பெற்றுள்ளனர். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, திறமை வாய்ந்த இளைஞர்கள் ஏராளமான அளவில் கிடைப்பர்.

பல்கலைக் கழகத்தில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் இந்த பயிற்சியை பெற்ற மாணவர்களை தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் அழைத்து, வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இப்பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறப்பாக பணிபுரிவதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளும் தனித்திறன் பயிற்சியை தந்து வருகின்றன. இதற்காக, தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, தனித்திறன் கொண்ட சிறந்த இளைஞர்களை பெற்ற மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் வாய்ப்பு அதிகம்.

டாக்டர் பி.கன்னியப்பன், (முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்) துணைவேந்தர், பி.எஸ்.அப்துல்ரகுமான் பல்கலைக்கழகம்:
பொறியியல் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்காக பல வெளிநாடுகளில் "பினிஷிங் ஸ்கூல்'கள் செயல்படுகின்றன. இதன் மூலம், தனித்திறன் பயிற்சிகளை மாணவர்கள் பெற்று, கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் வேலைவாய்ப்பு பெற முடிகிறது. இதேபோல், தமிழகத்தின் ஒவ்வொரு பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் "பினிஷிங் ஸ்கூல்'கள் போல, மாணவர்களை திறமைமிக்கவர்களாக மெருகூட்டும் அமைப்புக்கள் அவசியம். பி.இ., - பி.டெக்., மாணவர்கள், தனித்திறன் பெற வேண்டும் என்றால் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பாடத்திட்டங்களை உருவாக்கும் போது, பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அக்குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். இதன் மூலம், தொழில் நிறுவனங்களின் மனிதவள தேவையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப மாணவர்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்க முடியும்.

பொதுவாக, மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனைகளில் நேரடி பயிற்சி பெறுகின்றனர். இதனால், அவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் போது திறமைமிக்க மருத்துவர்களாக பணியாற்ற முடிகிறது. இதே முறை பொறியியல் கல்வியிலும் பின்பற்றப்பட வேண்டும். பொறியியல் கல்வியை பொறுத்தவரையில், "புராஜக்ட்' என்பது தற்போது ஏட்டளவிலேயே உள்ளது. இதனால், மாணவர்கள் தாங்கள் படித்ததை செயல்முறையில் திறம்பட செய்து பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதை தவிர்க்க, ஒவ்வொரு கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் தொழில் நிறுவனங்களின் அமைப்புக்களை இடம் பெற செய்ய வேண்டும். அதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திலேயே, படிக்கும் காலத்திலேயே, தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் திறனை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும், பட்டப்படிப்பு கற்கும் மாணவர்கள், ஒரு செமஸ்டரை தொழில் நிறுவனங்களில் கழிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலமும், மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் திறனை பெற முடியும்.

டாக்டர் ராமசுப்ரமணியம் (தாளாளர், நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளி, மண்ணிவாக்கம்):
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தும், திறமையான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தனியார் நிறுவனங்கள் கூறுவது உண்மை தான். பல முன்னணி நிறுவனங்கள் நேர்முக தேர்வின் போது தகுதியிருந்தும், அடிப்படை அறிவு இல்லாத நபர்களை தேர்வு செய்துவிட்டு, அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க தனியாக செலவு செய்து கொண்டிருக்கின்றன. இன்றைய இளைஞர்கள் படிப்பு, தேர்வு, மதிப்பெண் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்துவதை போல, தனித்திறன், தகவல் தொடர்பு, மொழித்திறன், உலக அறிவு ஆகியவற்றை வளர்த்து கொள்ள முன்னுரிமை காட்டுவதில்லை என்பதை இது காட்டுகிறது.

படித்து வாங்கிய பட்டத்தை மட்டும் வைத்து கொண்டு, எங்கும் வேலைக்கு செல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் முடித்து வெளியேறும் மாணவர்களில் 25 சதவீதம் பேரும், கலை மற்றும் அறிவியல் பிரிவில் 10 சதவீதம் பேரும் மட்டுமே பணிபுரிய தகுதியானவர்களாக உள்ளனர். தற்போது பல தனியார் கல்வி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப திறன், அடிப்படை திறன் வளர்க்க வகுப்புகள் நடத்துகின்றன. இந்த திறன்களை இளைஞர்கள், பள்ளி மாணவர்களாக இருக்கும்போதே வளர்த்து கொள்ள வேண்டும். இதற்கு பள்ளிகளில் உருவாக்கும் திறன், கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்துவது; மாணவர்களை அந்த நிகழ்ச்சிகளில் மனம்விட்டு பேச செய்வது; திட்டங்களை பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது என, திறன் வளர்க்கும் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

இந்த பயிற்சி கல்லூரிகளிலும் தொடரும் போது, படிப்பை முடித்துவிட்டு பணிக்கு வரும் போது, இளைஞர்கள் 100 சதவீதம் முழு திறனுடன் இருப்பர். இது மட்டுமல்லாமல், உலக அறிவை வளர்த்து கொள்ள பத்திரிகைகள் படிக்க வேண்டும். தினசரி நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலம் அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டும். டிக்ஷனரியில் உள்ளதை போல 65 லட்சம் வார்த்தைகளை தெரிந்து கொண்டால் தான் ஆங்கிலம் பேச முடியும் என்பது கிடையாது. வெறும் 1,500 வார்த்தைகள் தெரிந்து கொண்டால் கூட ஆங்கிலம் பேச முடியும். இதை எளிமையாக கற்றுக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் துறையில் தனி திறமை பெற வேண்டும் என்ற ஆர்வம், எண்ணம், கடின முயற்சி இளைஞர்களிடம் நிச்சயம் வேண்டும்.

டாக்டர் விஜயன், முதல்வர், சீயோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்:

திறமையான இளைஞர்களை பள்ளிகள் அளவிலேயே உருவாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்யும் போது, பட்டம் பெற்ற சான்றிதழ்களையோ, மதிப்பெண்களையோ பார்ப்பதை காட்டிலும், பள்ளி கல்வியில் எடுத்த மதிப்பெண்களை பார்க்கின்றனர். அடுத்த கட்டமாக, தேர்வுக்கு வரும் நபர்களை இயற்கையான அறிவுடன் புரிந்து படித்தவரா, மனப்பாடம் செய்து படித்தவரா என்று சோதிக்கின்றனர்.

எனவே, மூளை வளர்ச்சியடையும் பருவமான ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பல்வேறு தனித்திறன் பயிற்சிகளை அளிக்க வேண்டும். பாடங்களை அப்படியே போதிக்காமல், மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் வகையில் பாடம் நடத்தும் திட்டத்தை மாற்ற வேண்டும். கேள்வித்தாள் முறைகளிலும் மாற்றம் தேவை. பள்ளி கல்வியின் போது அடிப்படை அறிவுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெறும் வகையில் சமீபத்தில் ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத்திட்டங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் வகையில் அமையும்.

இதை தவிர பள்ளி அளவில் மாணவர்களுக்கு விரைந்து முடிவெடுக்கும் திறனையும், ஒரு விஷயத்திற்கு தலைமையேற்கும் திறன், மொழித்திறன், பேச்சு திறன் ஆகியவற்றை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, மாணவர்களின் பயத்தை போக்க வேண்டும். பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல், மருத்துவம் என்று சென்று கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை ஆராய்ச்சி பக்கம் திருப்ப வேண்டும். அத்துறையில் அவர்களின் ஆர்வத்தை தூண்ட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இளைஞர்களின் தனித்திறன் மற்றும் ஆற்றலை அதிகரிக்க முடியும். இவ்வாறு கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்!


ஒரு வளத்தை உற்பத்தி செய்தல், செலவழித்தல் மற்றும் இடமாற்றுதல் தொடர்பான துறை அறிவே பொருளாதாரம் எனப்படும்.


இவ்வாறு அகராதி(dictionary) இலக்கணம் தருகிறது. ஆனால், அதேசமயம், பொருளாதார நிபுணர்கள், பொருளாதாரம் பற்றி பல்வேறுவிதமான இலக்கணங்களைத் தருகிறார்கள். அவற்றில் ஒரு பொதுவான இலக்கணம் என்னவெனில், ஒரு குறிப்பிட்டளவு வளத்தை, தங்களின் தங்களின் விருப்பம், ஆவல் மற்றும் தேவை ஆகியவற்றுக்கிணங்க, சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, தனிநபர்கள் மற்றும் குழுக்கள் எவ்வாறு முடிவெடுக்கின்றனர் என்பதைப் பற்றி ஆய்வுசெய்வதே பொருளாதாரம் எனப்படும்.

பொருளாதாரம் பற்றிய அறிவானது, நமது ஒவ்வொரு நாளைய வாழ்விலும் மிகவும் பயனளிக்கக் கூடியது. பொருளாதாரத்தைப் படிக்கையில், இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். நிறுவனம், தொழிற்சாலை ஆகியவை தொடர்பான பொருளாதாரம், தேசிய மற்றும் சர்வதேசிய பொருளாதாரம் உள்ளிட்ட பரவலான விஷயங்கள் பொருளாதாரம் தொடர்பான படிப்பில் இடம்பெறுகின்றன.

மேலும், அரசின் கொள்கை முடிவுகள், தேசிய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். பொருளாதாரத்தைப் படிப்பதன் மூலம், நல்ல தகவலறிவு உள்ளவராகவும், சிறந்த முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவராகவும் பரிணமிக்கிறார்.

பொருளாதாரப் படிப்பானது, மைக்ரோ எகனாமிக்ஸ் மற்றும் மேக்ரோ எகனாமிக்ஸ் என்று இருவகைப்படுகிறது.

மைக்ரோ எகனாமிக்ஸ்

ஒரு தனிநபரால், கீழ்மட்ட அளவில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகளால் ஏற்படும் சிறியளவிலான பொருளாதார தாக்கம் பற்றியதே மைக்ரோ எகனாமிக்ஸ். உதாரணமாக, உணவுப் பொருள்களின் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் பற்றி குடும்ப அளவில் முடிவெடுப்பது இதுதொடர்பானதாகும்.

மேக்ரோ எகனாமிக்ஸ்

அதேசமயத்தில், மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, பெரியளவிலான பொருளாதார முடிவுகளைப் பற்றியதாகும். உதாரணமாக, வட்டி விகிதங்கள் மாறினால், அதன் விளைவாக, தேசிய பொருளாதாரத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் மற்றும் தேசிய சேமிப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி விவாதிப்பதாகும்.

பொருளாதார நிபுணர்களின் பணிகள்

பொருளாதாரத்தின் கருத்தாக்கங்களை ஆய்வுசெய்து, பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு வழிமுறைகளை உருவாக்குவதே, ஒரு பொருளாதார நிபுணரின் அடிப்படை செயல்பாடாகும். கார்பரேட்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பொருளாதார நிபுணர்கள், பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதோடு, புள்ளியியல் குறித்தும் விளக்கமளிக்கின்றனர். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை குறிக்கும் விதமாக மாதிரிகளை உருவாக்குவதோடு, தியரிகளையும் அளிக்கின்றனர். ஆடம் ஸ்மித், கெய்னஸ், ஓலின் மற்றும் அமர்தியா சென் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க சிறந்த பொருளாதார மேதைகள்.

தனிப்பட்ட பண்புகள்

இத்துறையில் நுழைய விரும்பும் ஒருவர், கணிதத் திறன், தர்க்க ஆர்வம், சிந்தனை முறைகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் முறைகளை கற்கும் ஆர்வம், பகுப்பாய்வுத் திறன், சிறந்த தகவல் தொடர்புத் திறன், நடப்பு சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

இத்துறையில் நுழைவது எப்படி?

பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பல்வேறு கல்லூரிகளில் பரவலாக வழங்கப்படும் BA., Economics என்ற இளநிலைப் பட்டப் படிப்பில் சேர வேண்டும். அதேசமயத்தில், BA., Economics (Hons.) படிப்பில் சேர, அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளில் பொருளாதார படிப்பில் சேர கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்துறையில் மேற்படிப்பை மேற்கொள்ள விரும்பும் ஒருவர், MA, M.Phil மற்றும் Ph.D வரை செல்லலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம்

டெல்லிப் பல்கலைக் கல்லூரிகளில் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களை, நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. பெயர்பெற்ற கல்லூரியில், முதுநிலைப் பொருளாதாரம் முடித்த முடித்த ஒருவர், வருட சம்பளமாக ரூ.6 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறுகிறார்.

பொருளாதாரம் படித்த ஒருவர், RBI, IDBI, NABARD போன்ற பலவித வங்கிகளிலும், செபி, பொதுக்கொள்கை வகுப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், சந்தை ஆராய்ச்சி, கிராமப்புற மேம்பாடு, இன்சூரன்ஸ் மற்றும் Actuarial பணி, டெமோகிராபிக் ஆய்வு, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற பலவிதமான துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகளை பெறலாம்.

அதிக திறன்வாய்ந்த பொருளாதார நிபுணர்கள், உலக வங்கி, IMF, UNDP மற்றும் UNIDO போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

முக்கிய கல்வி நிறுவனங்கள்

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்களின் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை;

Delhi school of Economics, University of Delhi, Gokhale institute of politics and economics - Pune, JNU - Delhi, Indira Gandhi institute of development research - Mumbai, St. Stephen college - Delhi, Jadavpur university - Kolkatta, St. Xavier college - Kolkatta, St. Joseph college - Bangalore, Brindavan college - Bangalore, Christ college - Bangalore, Presidency college - Kolkatta and Garden city college - Bangalore.

பொறியியல் துறையினருக்கு சிறந்த மென்பொருள் - MATHEMETICA



கணனி மென்பொருட்களுடைய பயன்பாடு நம்முடன் வளர்ச்சியடைந்தே வருகின்றது. தற்போது எந்த தேவையையும் கணனி மென்பொருட்கள் ஊடாக நிவர்த்தி செய்யக்கூடிய வகையின் மென்பொருட்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த கனித மென்பொருளே Mathematica. இந்த மென்பொருளின் ஊடாக விஞ்ஞான மற்றும் கணித, பொறியியல் செயற்பாடு மற்றும் கணனி செயற்பாடுகளை இலகுவாக செய்யலாம்.
வரைபடங்களை 2D, 3D பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல வசதிகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

Mathematica 8.0.4 வரை வெளியிடப்பட்டுள்ளன. மென்பொருளை இலவசமாக பதிவிறக்க Download
இந்த மென்பொருளை வடிவமைத்தவர் Stephen Wolfram இவர் 29.08.1959ம் ஆண்டு பிறந்த பிரித்தானிய விஞ்ஞானியாவர். இந்த Mathematica என்ற பெயரை சிபார்சு செய்தவர் Apple நிறுவனர் Steve Jobs. இந்த மென்பொருள் ஊடாக கணித செய்முறைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்

டிகிரி படிப்பே டிப்ளோமா படிப்பை விட சிறந்த்தது....



பல்வேறு டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிப்பதைவிட அது தொடர்பான பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.


இதற்கேற்ற வகையில், பல்வேறு டிப்ளமோ படிப்புகளை நடத்திய கல்வி நிறுவனங்கள் அது தொடர்பான பட்டப் படிப்புகளுக்கு மாறிவிட்டன. தற்போது ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகியுள்ள நிலையில், பொறியியல் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகளே பெருமளவு தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. அதனால், இன்ஜினியரிங் டிப்ளமோ மாணவர்கள் நேரடியாக லேட்ரல் என்ட்ரி மூலம் பி.இ., இரண்டாம் ஆண்டுப் படிப்புகளில் சேர்ந்து தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளும் நிலை உள்ளது.

டிப்ளமோவை விட டிகிரி படிக்கும் போது ஊதிய நிலையிலும் பெரிய மாற்றம் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் பி.ஜி.டி.சி.ஏ., படிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டிய நிலை தற்போது இல்லை. அதற்கு பதிலாக எம்.சி.ஏ., படிக்கவே மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதையும் சில பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

டிப்ளமோ இன் நர்சிங் படிப்பு, அரசு நர்சிங் கல்லூரிகளுடனேயே நின்று விட்டது. இந்த டிப்ளமோ படிப்பில் சேரும் பெரும்பாலான மாணவியர் அரசுப் பணிகளை மட்டுமே நம்பி இப்படிப்புகளில் சேர்ந்தவர்கள். தற்போது, பி.எஸ்சி., நர்சிங் பட்டப் படிப்புக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் சென்று பணிபுரிவதற்கும் அது உதவியாக இருக்கிறது என்று பல மாணவியர் கருதுகிறனர். அத்துடன் நர்சிங் துறையிலேயே எம்.எஸ்சி., – பிஎச்.டி., என்று படிப்புகளைத் தொடரவும் பட்டப் படிப்பே உதவியாக இருக்கிறது. ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி பாடப்பிரிவில் டிப்ளமோ படிப்புகளை படித்து வந்த காலம் போய், தற்போது அந்தப் பாடப்பிரிவில் பட்டப் படிப்புகளே முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளன.

டிப்ளமோ படிப்பைப் படிப்பதால் ஏதாவது தொடக்க நிலை வேலைக்கு உதவலாமே தவிர, பல்கலைக் கழகங்களில் உயர்நிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு உதவாது. பட்டப் படிப்பு இல்லாத காரணங்களால், திரைப்படத் தொழில்நுட்ப டிப்ளமோ படித்தவர்கள் திரைப்படக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களில் சேருவதற்கு தடையாக இருப்பதாக அத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில், தற்போது பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் துவங்கப்படும் திரைப்படம் சம்பந்தமான தொழில்நுட்பப் படிப்புகள் பட்டப் படிப்புகளாகவே விளங்குகின்றன. இதேபோல, அனிமேஷன் துறையில் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தர பல்வேறு தனியார் நிறுவனங்கள் தனிப் பயிற்சியையும் டிப்ளமோ படிப்புகளையும் நடத்துகின்றன.

குறிப்பிட்ட சில பல்கலைக் கழகங்களிலும் மிகச் சில கல்லூரிகளிலும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய பல்வேறு துறைகளில் பட்டப் படிப்புகள் துவங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அனிமேஷன் குறித்து பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்காக இளநிலைப் பட்டப் படிப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது.

அனிமேஷன் டிப்ளமோ படிப்புக்கு ஆகும் செலவே இந்த அனிமேஷன் பட்டப்படிப்புக்கும் ஆகும். அத்துடன், அவர்களுக்கு படிப்புக்கான சட்டபூர்வ அங்கீகாரமாக பல்கலைக் கழகத்திலிருந்து பட்டச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மூன்றாண்டு பட்டப் படிப்பில் தியரிக்கு மட்டுமல்லாமல், செய்முறை பயிற்சிக்கும் தொழில் நிறுவனங்களில் நேர்முகப் பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், படித்து முடித்த உடன் தொழில் நிறுவனங்களில் பணியில் சேரும் அளவுக்கு மாணவர்கள் தயார் படுத்தப்படுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. வளர்ந்து வரும் முக்கியத்துறையான
அனிமேஷன் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் பெருகி வரும் சூழ்நிலையில், இத்துறையிலேயே முதுநிலைப் பட்டமோ அல்லது குறிப்பிட்ட சில துறைகளில் சிறப்பு மேற்படிப்போ படிக்கவும் இந்த பட்டப் படிப்பு உதவியாக இருக்கும்.

வெளிநாடுகளில் சென்று இத்துறையில் உயர் படிப்பைப் படிப்பதற்கும் இந்தப் பட்டப் படிப்பு அடித்தளமாக இருக்கும். எனவே தான், குறிப்பிட்ட துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்துடன் இருக்கும் மாணவர்கள், டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிப்பதைவிட பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பது வேலைவாய்ப்பு சாத்தியங்களை அதிகமாக்குவதுடன், எதிர்காலத்தில் உயர்கல்வி படிக்க நினைக்கும்போது அதற்கும் உதவியாக இருக்கும் என நினைக்கிறார்கள்.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்திடமிருந்து பட்டம் என்கிற போது, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும் தயக்கமின்றி வேலைக்கு எடுத்துக் கொள்ளவும் ஏதுவாகும் என்றும் பல மாணவர்கள் கருதுகிறார்கள்

பாஸ்போர்ட் கிடைக்க புதிய நடைமுறை அமலாகிறது...


பாஸ்போர்ட்

* படிப்பு, வேலை, விடுமுறை என்று எந்த காரணத்துக்காக வெளிநாடு செல்ல நேரிட்டாலும், பாஸ்போர்ட் அவசியம். அதற்கு எங்கு, எப்படி விண்ணப்பிப்பது...?
* தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களில் பாஸ் போர்ட் அலுவலகங்கள் உள்ளன. நீங்கள் வசிக்கும் பகுதி, எந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் வருகிறது என்பதைக் கண்டறிந்து, உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


* ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதைவிட, தபால் மூலமாக விண்ணப்பிப்பது சிறந்தது. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் பிழையில்லாமல் இருந்தால், ஒரே மாதத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வந்துவிடும்.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், இருப்பிடச் சான்றினையும் இணைக்க வேண்டும். இதற்காக ரேஷன் கார்டு, குடிநீர், மின்சார கட்டண ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி ரசீது உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினுடைய நகல்கள் இரண்டை இணைக்க வேண்டும்.


 ரேஷன் கார்டை மட்டும் முகவரிச் சான்றாக இணைப்பவர்கள், கூடவே, இருப்பிடச் சான்று தொடர்பான வேறு ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.


 பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால், கடைசியாக பயின்ற கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ், அல்லது குற்றவியல் நடுவர் அல்லது சான்றுறுதி ஆணையர் முன்பு எடுக்கப்பட்ட உறுதி ஆவணம் என்று ஏதாவது ஒரு சான்றிதழைப் பயன்படுத்தலாம்.


* பெயர் மாற்றம் செய்து கொண்டவர் என்றால், விண்ணப்பப் படிவத்துடன் உள்ள 'அனெக்ஸர் - இ'(Annexure-E)படிவத்தின்படி தயாரிக்கப்பட்ட உறுதி ஆவணத்துடன், தினசரி செய்தித்தாள் இரண்டில் அது தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பரத்தின் நகலையும் இணைக்க வேண்டும். சமர்ப்பிக்கும்போது அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் கையோடு எடுத்துச் செல்வது நல்லது. தேவைப்பட்டால், உரிய அலுவலர்களிடம் காண்பிக்க வேண்டி இருக்கும். அதேபோல, உங்கள் விண்ணப்பம் தொடர்பான விசாரணைக்கு நீங்கள் அழைக்கப்படும் போது, ஒரிஜினல் ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.


'தட்கல்' எனப்படும் உடனடி முறையிலும் பாஸ் போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென குறிப்பிடப்பட்டுள்ள 14 ஆவணங்களில் ஏதேனும் மூன்று ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் ஒரு ஆவணமானது புகைப்பட அடையாளத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். இத்துடன், சான்றுறுதி (Verification certificate)ஆவணமும் இணைக்கப்பட வேண்டும்.


 வாக்காளர் அடையாள அட்டை, மத்திய மாநில, பொதுத்துறை சார்ந்த நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, உணவுப்பொருள் வழங்கல் அட்டை, வருமான வரி அடையாள அட்டை, வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பதினான்கு விதமான ஆவணங்கள் இதற்கென ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.


* ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பவர்கள், தங்களுடைய கணினியில் அதை சேமித்த பிறகு, பிரின்ட் அவுட் எடுத்து வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து உரிய ஆவணங்களோடு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்லி, ஆன்லைன் மூலமாகவே உங்களுக்குத் தகவல் தரப்படும். அப்போது நேரில் ஆஜராக வேண்டும்.



னியார் நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தி பாஸ்போர்ட் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் மொத்தம் 38 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் அலுவலகங்கள் உள்ளன. பாஸ்போர்ட் அலுவலக பணிகள் அனைத்தும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.




இப்பணிகளை, "அவுட் சோர்சிங்' முறையில், தனியாரிடம் விட மத்திய அரசின் வெளியுற வுத்துறை முடிவு செய்துள்ளது. "பாஸ்போர்ட் சேவா கேந்திரா' என்ற பெயரில், நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள தனியார் மையங்கள், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப் பவர்களின் விண்ணப்பம் சரிபார்ப்பது, விண்ணப்பித்த நபர் பாஸ்போர்ட் வாங்க தகுதியான வர் என்று சான்றிதழ்களுடன் அறிக்கை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளது.




விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் தனியார் மையங்களில் பாஸ் போர்ட் ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவர்.பாஸ்போர்ட் கேட்டு, ஒருவர் விண்ணப்பம் செய்தால், 45 நிமிடத்தில், அனைத்து பணிகளையும் முடித்து விட்டு, அவரை அனுப்பி விடவேண்டும் என்ற கருத்தில் இந்த நடைமுறை வருகிறது. ஆனாலும், பாஸ்போர்ட் வழங்குவது மற்றும் வழங்குவதை தீர்மானிப்பதை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் தான் முடிவு செய்யும்.




பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் விண்ணப்பம், சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் தனியார் ஈடுபடுவது, முதல்கட்டமாக, பெங்களூரு மற்றும் சண்டிகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் சோதனை முறையில், வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.ஒரு வருடம் கழித்து, நாட்டிலுள்ள 38 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும், 80க்கும் மேற்பட்ட "பாஸ்போர்ட் சேவா கேந்திரா' என்ற தனியார் மையங்கள் அமைக்கப்பட்டு, பாஸ்போர்ட் வழங்கும் பணிகளில் தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.




தனியார் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கிவிட்டால், விண்ணப்பம் செய்வோர் போட்டோ மற்றும் சான்றிதழ் நகல்களை கொண்டு வரவேண்டியதில்லை. அவர்களின் உண்மை சான்றிதழ்களை அப்படியே ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் தனியார் மையம் பதிவு செய்துவிடும். புதிய முறை அமலுக்கு வந்துவிட்டால் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிதாக முடியும் காரியமாகிவிடும் என்று கூறப்படுகிறது.


Source : தினமலர்


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும் பாஸ்போர்ட்...

தமிழ்நாட்டில் பாஸ்போர்டுக்கு அப்ளை செய்யும் தொண்ணுதியொம்பதே சொச்சம் சதவீதத்தினரின் கனவு வெளிநாடு போவது. பதினெட்டு வயதாகிவிட்டாலே கேட்கப்படும் அடுத்தக் கேள்வி “பாஸ்போர்ட் அப்ளை பண்ணிட்டியா?”. பாஸ்போர்ட் வந்துவிட்டாலோ “பயணம் எப்போ போற?” கேள்வி வந்துவிடும். அப்படியான கேள்விகளுக்கு முன்னரே பாஸ்போர்ட் கிடைத்தவனின் கண்களில் விமானப்பயணமும், புது வீடும், தங்கைகள் திருமணமும், அம்மாவுக்கு நாலுவடச் சங்கிலியும், தனக்கு ஒரு கைசெயினும் கனவுகளாய் மின்னும். ஏஜண்டுக்குக் காசு கொடுத்து முட்டி மோதி விசா பேப்பர் கையில் கிடைத்து விமானத்தில் பறக்கும் வரையில் அந்த பாஸ்போர்ட் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும்.

அப்படி பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும் பாஸ்போர்ட் வளைகுடா நாடுகளில் நம்மவர்களின் முதலாளிகளிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவது பெரும் சோகம். வளைகுடா நாடுகளில் ஒரு சில கம்பெனிகளைத் தவிர்த்து அனைவருமே வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே பாஸ்போர்ட்டைப் பிடுங்கிக்கொண்டு வேலைக்கான உரிம அட்டையைக் (work permit) கையில் திணித்துவிடுவார்கள். ப்ரியா படத்தில் தேங்காய் சீனிவாசன் “உங்க எல்லோரோட பாஸ்போர்டும் என் கையிலே” என்று சொல்வது போல சொல்லாத குறை மட்டுமே.

முதலாளியின் கைக்குப் போய்விட்டு மீண்டும் விடுமுறைக்குச் செல்லும்போது கிடைக்கும் பாஸ்போர்ட்டைப் பார்க்கும்போது “இது நம்மளோடதா?” என்று எண்ணும் அளவில் இருக்கும் அதன் கதி. பாஸ்போர்ட்டின் மேலே மஞ்சள், பச்சை, வெள்ளை என நமது கம்பெனிக்குப் பிடித்த நிறத்தில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதில் சில அரபி எழுத்துகளும், எண்களும். முன்னட்டை பின்னட்டைகளில் ஸ்டாப்ளர் பின் அடிக்கப்பட்டு இருக்கும். சில காலம் ஆன பாஸ்போர்டுகளில் அடிக்கடி ஸ்டாப்ளர் அடிக்கப்பட்டும் பிய்க்கப்பட்டும் உள்ளிருக்கும் லேமினேஷன் எதற்காகச் செய்யப்பட்டது என்ற அர்த்ததையே இழந்திருக்கும்.

பாஸ்போர்ட் பற்றி ஒரு நண்பர் சொன்ன விஷயம், எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும், அதற்கான சாத்தியங்கள் வளைகுடா நாடுகளில் மிக அதிகமே. நண்பரின் நண்பர் விடுமுறைக்குச் செல்வதற்காக அவரது கம்பெனின் மனிதவளத்துறைக்குச் சென்றிருக்கிறார். பிற வளைகுடா நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை, சவுதியைப் பொறுத்தவரையில் மனிதவளத்துறையில் மண்ணின் மைந்தர்களே அதிகம். ந.நவுடைய கம்பெனியிலும் அவ்வாறே. விடுமுறைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட்டைக் கேட்க, மண்ணின் மைந்தர் பல இடங்களில் குடைந்து தேடியும் இவரது பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இந்த நண்பரும் டேபிளின் இந்தப்புறம் இருந்து தவ்வித் தவ்வித் தேட, ம.மை’ன் நாற்காலியின் காலுக்குக் கீழே எதோ கருப்பாகத் தென்பட்டு என்னவென்று பார்க்க, அது அவரது பாஸ்போர்ட். நாற்காலி ஆடுகிறதென்று ஆட்டத்தை நிறுத்த பாஸ்போர்ட்டை சொருகி வைத்த புண்ணியவானை என்ன சொல்வது. விதியை நொந்தபடியே ந.ந பாஸ்போர்ட்டை வாங்கிச் சென்றிருக்கிறார்.

நேற்றிரவு மனைவியும் குழந்தையும் இந்தியா செல்ல, அவர்களை வழியனுப்பிவிட்டு விமானம் புறப்படும் வரையில் காத்திருந்தேன், எனக்குத் துணையாய் என் இரு நண்பர்களும். உலக அதிசயமாய் ரியாத் விமான நிலையம் நேற்றிரவு ஆள் அவரமே இல்லாமல் இருந்தது. நாங்கள் மூவரும் ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு தமிழர் கையில் பெட்டியுடன் ஓரிடத்தில் நின்றுகொண்டு இருந்தார். சென்னை செல்லும் விமானம் கிளம்ப பதினைந்து நிமிடங்களே இருக்கும் நிலையில் இந்த மனுஷன் இங்கே நிற்கிறாரே, ஒரு வேளை கைப்பையின் எடை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வைத்திருந்ததால் உள்ளே விடவில்லையோ, அப்படி இருந்தாலும் கொஞ்சம் தேவையில்லாத பொருள்களை வெளியில் எடுத்துவிட்டு திரும்ப உள்ளே செல்லலாமே, ஏன் இங்கேயே நிற்கிறார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 

எங்களைப் பார்த்த அந்த நபர் எங்களிடம் வந்தார். என்னவென்று விசாரித்தபோது

“பாஸ்போர்டு தேதி முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க, உள்ளே விட மாட்டேங்கிறாங்க” என்றார்.

நான் பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தபோது அதிசயம்/அதிர்ச்சியாக இருந்தது. பாஸ்போர்ட் காலாவதியாகி எட்டு மாதங்கள் ஆகி இருந்தது. 

“எக்பைரி ஆகி எட்டு மாசம் ஆச்சே, எப்படி கவனிக்காம விட்டிங்க” என்றேன்.

“ஹவுஸ் ட்ரைவரா இருக்கேன், கஃபீல் (முதலாளி) தான் பாஸ்போர்ட் வச்சிருந்தார். இன்னைக்கு தான் எக்ஸிட் ரீஎண்ட்ரி (சவுதி விட்டு வெளியில் சென்று திரும்ப வருவதற்கான விசா) அடிச்சு பாஸ்போர்ட்டையும் கைல கொடுத்தார்” என்றார்.

“எப்படிங்க ரீஎண்ட்ரி அடிக்க முடியும், முதல்ல உங்க விசாவே எட்டு மாசம் எப்படி செல்லுபடி ஆச்சு.” என்றேன்.

“தெரியலிங்க, அவன் தான் அடிச்சுக் கொடுத்தான்”

“இப்போ கஃபீல் எங்கே” என்றேன்.

“ஃபோன் பண்ணேன். ஏர்போர்ட்ல எதோ சவுதி ஆபீஸருக்கு ஃபோன் பண்றேன், அவன் உள்ளே விடுவான்ன்னு சொன்னாரு” என்றார்.

“அப்படியெல்லாம் உள்ளே விட மாட்டாங்க. அப்படி இவங்க விட்டாலும் நம்மூர்ல புடிச்சு கேள்வி கேப்பாங்க. திரும்ப இங்கே வர்றதே சிரமம் ஆகிடும். நீங்க பேசாம திரும்ப போய்ட்டு நாளைக்கே எம்பஸி போய் பாஸ்போர்ட் ரினிவலுக்கு அப்ளை பண்ணுங்க. ரெண்டு நாள்ல கிடைச்சிடும். அதுக்கு அப்புறம் ஊருக்குப் போங்க” என்றோம்.

“எதுக்கும் கஃபீல் ஃபோன் பண்ணி இங்கே ஆபிஸருக்குப் பேசின பிறகு என்ன செய்யலாம்ன்னு பாக்குறேன்” என்றார்.

நாங்கள் மூவரும் ஒரே இடத்தில் நின்று போரடிக்க, சிறிது அங்கிங்கே சுற்றிவிட்டுத் திரும்பி வந்தோம். கொஞ்ச தூரத்தில் அந்தத் தமிழர் கையில் பெட்டியுடன் ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் சென்றுகொண்டு இருந்தார்.

பாஸ்போர்ட் முடிந்து எட்டு மாதம் ஆகியும் அதை கவனிக்காமல் விட்டது யாருடைய தவறு? இரண்டோ மூன்றோ நான்கோ வருடங்களுக்கு முன் கையசைத்து விடை பெற்ற கணவன் நாளை வருவான் எனக் காத்திருக்கும் அவரது மனைவிக்கும், அப்பா வருவாரு புதுச்சட்டையும் கைகெடிகாரமும் வாங்கிட்டு வருவாரு என்ற கனவுகளில் திளைக்கும் குழந்தைகளுக்கும் யார் பதில் சொல்வது? போர்டிங் பாஸ் வாங்கும்போது உள்ளனுப்பப்பட்ட அவரது லக்கேஜுகள் எப்பொழுது கிடைக்கும்? அடுத்த நாளே அவர் பாஸ்போர்ட் ரினிவலுக்கு அப்ளை செய்ய அவரது சூழ்நிலை இடம் கொடுக்குமா? அப்படியே அப்ளை செய்தாலும் எட்டுமாதம் கடந்த பாஸ்போர்ட்டை இந்தியத் தூதரகம் உடனடியாக புதுப்பித்துக்கொடுக்குமா? எல்லாம் முடிந்து உடனடியாக அவர் விடுமுறைக்குச் செல்ல முடியுமா? 

கேள்விகள் பலவாயினும் விடை ஒன்று தான். தெரியல..
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு ( PAN Card)-ஒரு விழிப்புணர்வு பார்வை .....


வீட்டு மனை வாங்குவது, பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவது, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வங்கி டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது எல்லாவற்றும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு ( PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலை.

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

மேலும், இந்தக் கார்டை வாங்கினால் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களுக்குக் விடைகாணும் பொருட்டு, பான்கார்டை வழங்குவதற்காக, மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் பாபுவைச் சந்தித்துப் பேசினோம்.

""மத்திய அரசு 200 77 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது. பத்து இலக்க எண்ணைக் கொண்டது இந்த பான் கார்டு.

பான் கார்டு வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும் என்று பயப்படுகின்றனர். உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



நிரந்தரக் கணக்கு எண் என்ற பத்து இலக்க எண்தான் PAN- (Permanent Account Number). இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வோர் இந் தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ- எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம்.
இந்த பான் கார்டை பெற தரகர்கள் மூலம் வாங்கினால், 200 முதல் 300 ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால், நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை நடுவங்களில் ஏதாவது ஒன்றில் நீங்களே விண் ணப்பித்தால், கட்டணம் 94 ரூபாய் மட்டுமே. இதுதவிர ஆன்லைன் மூலமும் (http://www.utiisl.co.in/) விண்ணப்பிக்கலாம்!


இதற்கு, உங்கள் புகைப்படத் துடன் கூடிய அடையாள ஆவ ணம் ஒன்றின் நகல் அதாவது, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை போன்றவற்றில் ஒன்று. அடுத்து, முகவரிக்கான ஆதாரமாக மின் கட்டண ரசீது, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் ஒன்றும், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.!
விண்ணப்பப் படிவத்தில் ஃபர்ஸ்ட் நேம் , மிடில் நேம், சர் நேம் என் கிற பகுதி இருக்கும். இதில் ஃபர்ஸ்ட் நேம் என்கிற இடத்தில் உங்கள் பெயரையும், சர் நேம் என்கிற இடத்தில் உங்கள் தந்தை யின் பெயரையும் எழுதவும். பொதுவா க தமிழர்கள் ‘மிடில் நேம்’ வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை என்பதா ல், அந்தக் கட்டத் தைக் காலியாக விட்டுவிடலாம்.
திருமணமான பெண்கள் விண் ணப்பத்தில் தந்தை பெயரை மட்டும் தான் குறிப்பிட வே ண்டும். ஏற்கெனவே பான் கார் டு வாங்கிய பெண்கள் திரும ணத்துக்குப் பிறகு முகவரியை மாற்றிக்கொள்வது அவசியம். இந்தியாவைப் பொறுத்த வரை யில் பெற்றோரைக் காப்பாள ராகக் காட்டி, பிறந்த குழந்தை க்கு கூட பான் கார்டு வாங்க முடியும்.





ரூ. லட்சத்துக்கு மேல் ஒருவர் தங்க நகை வாங்குபவர்கள்,கட்டாயம் வருமானவரி கணக்கு அட்டை (பான்கார்டு)வைத்திருக்க வேண்டும். வாங்கும் நகைக்கு சதவீதம்வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டும். அதாவது
ஒரு பவுன் தங்க நகை ரூ. 20,906 என்ற நிலையில்இப்போது உள்ளது. இதில் செய்கூலிசேதாரம் ஆகியவற்றை சேர்த்தால் ஒரு பவுன் தங்க நகையின் விலை தோராயமாக ரூ.25,000-ஐ எட்டிவிடும். அப்படி என்றால் ஒருவர் பவுன் தங்க நகை வாங்கினால்அவர் கட்டாயம் ரூ. 2,000 வருமான வரி கட்ட வேண்டும்.



PAN explained.......



PAN is a 10 digit alpha numeric number, where the first 5 characters are letters, the next 4 numbers and the last one a letter again. These 10 characters can be divided in five parts as can be seen below. The meaning of each number has been explained further.
1. First three characters are alphabetic series running from AAA to ZZZ
2. Fourth character of PAN represents the status of the PAN holder.

  •  C — Company
  •  P — Person
  •  H — HUF(Hindu Undivided Family)
  •  F — Firm
  •  A — Association of Persons (AOP)
  •  T — AOP (Trust)
  •  B — Body of Individuals (BOI)
  •  L — Local Authority
  •  J — Artificial Juridical Person
  •  G — Government

3. Fifth character represents first character of the PAN holder’s last name/surname.
4. Next four characters are sequential number running from 0001 to 9999.
5. Last character in the PAN is an alphabetic check digit.
Nowadays, the DOI (Date of Issue) of PAN card is mentioned at the right (vertical) hand side of the photo on the PAN card.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.






Tuesday, 1 May 2012

இந்து தர்மத்தை அழிக்கும் போலி சுவாமிஜிக்கள்-ஒரு பார்வை ...

சுவாமி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் மாஸ்டர் என்றும் தமிழில் குரு, ஆசான் என்றும் பொருள். ஆசான் என்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும் அப்போதுதான் தனது அறிவுத்திறமையின் மூலம் தம்மை பின்பற்றுபவர்களை நல்ல குணத்தை போதிக்க இயலும்!  

இந்துமத நம்பிக்கையின் படி சுவாமி எனப்படுபவர் மதபோதகராவார் இவர் இந்துமத வேதங்களை கற்றுணர்ந்து அதை தெளிவாக மக்கள் முன் எடுத்துவைத்து பாவத்திலிருந்து மக்களை தடுத்து நல்லுணர்வு போதிப்பது இவர்களின் பணியாகும்! ஆனால் இன்று குருக்கள், ஆசான் மற்றும் சுவாமி என்ற சொல்லுக்கான இலக்கணம் காலத்திற்கு ஏற்றார் போன்று முற்றிலும் மாறிப் போய்விட்டது! புது டிரென்டு புது ஸ்டைல் இந்த சுவாமிஜிக்களையும் விட்டுவைக்கவில்லை! இன்று மக்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கக்கூடியவர்கள் ஒழுங்கீணமாக நடந்துக்கொண்டு நல்ல பண்புகளை பெற்றுள்ள மக்களிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவலநிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


பழங்காலத்து சாமியார்களின் நிலை!

கடந்த காலங்களில் (அதாவது 20 வருடங்களுக்கு முன்பு) காவிநிற சாமியார்கள் அழுக்கு நிறைந்த கொண்டையும், தாடியுமாக வாழந்து, உடலை காவிநிற துணியினால் முழுவதுமாக மறைத்தபடி ஏதாவது வேப்ப மர நிழல் கிடைத்தால் போதும் அங்கேயே அமர்ந்திருப்பார்கள். கையில் ருத்ராட்ச மாலை இருக்கும் அருகில் கைத்தடியும் அதில் ஒரு துணி மூட்டையும் இருக்கும்! கேட்பாரற்று அலைந்து திரிவார்கள்!

இடுப்புக்கு கீழே காவி நிற வேஷ்டி அணிந்திருப்பார்கள் மேலும் இடுப்பு மடிப்பில் வாழைப்பழத்தை வைத்திருப்பார்கள். பசி எடுக்கும்போது வாழைப்பழத்தை உறித்து பழத்தை சாப்பிடாமல் தோல் மட்டும் சாப்பிடுவார்கள்!

பரிதாபப்பட்டு ஏன் அய்யா இந்த கோளம் வாழைப்பழ தோலை போய் சாப்பிடுகிறீர்களே என்று யாராவது கேட்டுவிட்டால் உடனே அவர்கள் நான் ஆசையை துறந்தவன், ரூசிக்கு நாம் அடிமையாவதில்லை என்று பதிலளிப்பார்கள்!

வயிறு ஒட்டிக்கொண்டு காணப்படும் கிழிந்த அழுக்கு ஆடையுடன் பார்ப்பதற்கு பரிதாபமாக இருப்பார்கள் அவர்களிடம் யாரும் சென்று குறி கேட்கமாட்டார்கள்! அந்த காலத்து சாமியார்களும் யாரிடமும் கை நீட்டி ஒரு பைசா கூட வாங்க மாட்டார்கள்! கண்ணியமாக வாழ்வார்கள்! வாழ்க்கை முழுவதும் நடை பயணமாகவே நடந்து செல்வார்கள் மரத்தின் நிழலே அவர்களின் உறங்குமிடமாக இருக்கும் அப்படியே கூட மறித்துப்போவார்கள்! வாழும்போது மதிக்காத மக்கள் அந்த சாமியார் மரணித்தவுடன் அந்த மரத்தை தெய்வீகமாக நினைத்து அதற்கு மரத்தடிசாமியார் என்று பெயர் சூட்டி கோவில் கட்டி கொண்டாடுவார்கள்!


இந்தக் காலத்து சாமியார்களின் நிலை!




சிவனைப் போன்று ஜடாமுடி மற்றும் குடுமி கிடையாது அதனால் பேன், ஈறு தொல்லைகள் டென்சன் FREE!

கொண்டைக்கு பதிலாக பெண்கள் போன்ற நீளமான கூந்தல் பேஷன் காரணம் முடியில் சிக்கு விழாது!

தலை முடிக்கு சுத்தனமான தேங்காய் எண்ணை ஆனால் தலையில் பெண்கள் போன்று பூ மடடும் வைப்பதில்லை!

நிறம் மாறாத முடி! (நன்கு கவனித்துப்பாருங்கள் வெள்ளை முடி ஒன்று கூட இருக்காது)

நெற்றியில் அழியாத சந்தனப் பொட்டு,

தினமும் வெல்லாயி போட்ட புதுப்புது காவி உடை!

உடல் முழுவதும் தடவிக்கொள்ள ISI மார்க் சந்தனம்!

உடல் முழுவதும் வாசனை திரவியங்கள்!

குளிர்காலத்தில் இதமான வெண்ணீர் குளியல்!

வெயில் காலத்தில் யோகா பாணியில் மலர் குளியல்!

நடப்பதற்கு சிகப்பு ரத்தினக் கம்பளம்!

கீர்த்தனைகளை போதிக்க புலித்தோல் அமர்வு!

கைகளிலோ தங்கக் காப்புகள்,
கழுத்துக்களிலோ பிளாட்டினம் காசுமாலை
எப்போதும் குளு குளு ஏசி, காய்ந்து போகாத மேக்கப்!

நவீன சுவாமிகளும் அவர்களின் புண்ணகையின் ரகசியமும்....

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதால் இந்தக் காலத்து சாமியார்கள் மரத்தடி நிழலை எதிர்ப்பார்ப்பது கிடையாது ஏன்னா இப்போவெல்லாம் டிரண்டு மாறிடுச்சுல்ல!

குளு, குளு ஏசி உடலில் படுவதால் உடல் சோர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவே தான் மேக்கப் கூட காய் வதில்லை!

வெயில், எறும்புக்கடி, கொசுத்தொல்லை, வெயில் உஷ்ண சூடு, பாச்சான் வண்டுக்கடி என்று எந்த தொந்தரவும் கிடையாது!

தாகம் ஏற்பட்டால் தண்ணீருக்கு பதிலாக யோகா பழரசம்!

சாமியார்கள் ஏன் திருமணம் புரிவதில்லை! அதனால் என்ன அட்வான்டேஜ்



திருமணம் புரிவதாக இருந்தால் கை நிறைய சம்பாதிக்கணும் அப்போதான் பெண் கொடுப்பார்கள் எனவே வேலை வெட்டி தேடி அலைய வேண்டிவரும்!

தாலி கட்டும்போது சாதாரண அய்யர் மந்திரம் ஓதுவார்! ஆனால் இவர்தான் சுவாமிஜி ஆச்சே அப்போ அய்யருககு கட்டுப்பட வேண்டியிருக்குமே மரியாதை குறைந்திடுமே!

மாதாமதம் குடும்பச் செலவுக்கு ஒரு தொகையை மனைவிக்கு கொடுக்க வேண்டிவரும் அதுக்கு கடன் வாங்கி வட்டி கட்டணுமே!

ஜவுளிகடைக்கு சென்று 4 மணிநேரம் காத்துகடந்து மனைவிக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கும் சிரமம் கொஞ்சம் கூட இல்லையே!

வருமானம் ஏதாவது ஒருமாதத்தில் குறைந்துவிட்டால் உடனே குடும்பச் செலவுக்காக மனைவி தட்டிக் கேட்பாளே வாக்குவாதம் முற்றி தகராறுகள் ஏற்படுமே! ஆஹா என்ன டெக்னிக் அய்யா இது!

குழந்தைகளை நால்தோறும் ஸகூலுக்கு கூட்டிட்டு போகனும், டியுசன் பீஸ் கட்டணும் இல்லையென்றால் குழந்தை விடிந்தவுடன் கண்களை கசக்கிக்கொண்டு நிற்கும்!

குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடத்தி, டிரஸ் எடுத்துக் கொடுத்து உற்றார் உறவினர்களுக்கு கடா வெட்டி சோறு போட்டு ஆண்டியாகனும்!

ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று 15,000 செலவு செய்யனும் அதுக்காக கடன் வாங்கி வட்டி கட்டணும் இல்லையென்றால் குழந்தைகள் முகம் சுழிக்கும்!

எனவேதான் இந்த குளு குளு சாமியார்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் மாற்றந்தோட்டத்து மல்லிகை மணக்கிறதா? நாறுகிறதா? என்ற பழமொழிக்கேற்பவும் அலைந்து திரிகிறார்கள். மேலும் எப்போதும் எங்கேயும் கொண்டாட்டம் என்ற பாடலுக்கேற்ப புண்ணகை பூத்த மலர்ந்த முகத்துடன் மக்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்கள்! சிந்தித்துப் பாருங்கள் குறைந்தபட்சம் இவர்களுக்கு ஒரு வண்டு கடித்து வலி ஏற்பட்டால்தானே முகத்தில் துயரம் தெரியும் ஆனால் இவர்களுக்கு சொரணைகூட கிடையாதே வேதனை எப்படி தெரியும்!

நவீன சுவாமிஜிக்களின் அறைகள்....

ஒவ்வொரு அறைக்கும் ஏசி! மொஸைக் & டைல்ஷ் தறை
ஒவ்வொரு அறையிலும் தெய்வீக தன்மையை உணர்வதற்காக கமகமக்கும் கற்பூறம் மற்றும் ஊதுபத்தி வாசனைகள்!

திரும்பும் இடமெல்லாம் கலர் டி.வி. கூடவே டிஷ்!
உறங்குவதற்கு இலவம்பஞ்சு மெத்தை, தலைக்கு, இடுப்குக்கு, காலுக்கு என்று டிசைன் டிசைனாக தலையனைகள்!

சிகப்பு ரத்தின கம்பளத்தில் நடந்து நடந்து கால்கள் வலி ஏற்படுகிறதாம் எனவே கால்களை அமுக்கிவிட இளம் துறவிகள்.

நவீன சுவாமிஜிக்களிடம் மக்கள் மயங்குவது ஏன்?

சமுதாயத்தில் குடும்பத் தகராறுகள், மாமியார் மருமகள் சண்டைகள், சொத்து தகராறு, குழந்தை பாக்கியமின்மை, விதவை கோளம், செவ்வாதோஷத்தினால் திருமணம் தள்ளிப்போடப்பட்டு வயது முதிர்ந்தும் திருமணம் நடைபெறாமை மற்றும் வருமை ஆகிய காரணங்களால் விரக்தியடைந்த மக்கள் எங்கேயாவது நிம்மதி கிடைக்குமா? யாராவது ஆறுதலாக பேசுவார்களா? என்று ஏங்கித் தவிக்கின்றனர் அந்த சூழ்நிலையை இந்த மோசடி அம்பளவான்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை மதிமயங்கச் செய்து தங்களிடம் வருபவர்களை அடிமைகளாக்கி விடுகின்றனர்.

மக்களை மதிமயங்கச் செய்ய நவீன சுவாமிஜிக்கள் (காவிநிற அசாமிகள்) பயன்படுத்தும் மோக வார்த்தைகள்! இதோ படியுங்கள் இந்த வார்த்தைகளை கேட்டால் விரக்தியடைந்த மக்கள் ஏன்தான் மயங்கமாட்டார்கள்!

அன்பே கடவுள்,

கடவுள் அன்பின் வடிவமாக உள்ளார்

நீங்களோ கடவுளின் குழந்தையதாக இருக்கிறீர்கள்!

கடவுளின் குழந்தைகளே நீங்கள் அன்பின் தூதுவர்கள்!

எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள்! அன்பாய் இருங்கள்!

ஆசிரமம் எங்கு உள்ளதோ அங்கு சுவாமி இருப்பார்!

சுவாமிஜி உங்களுடன் இருக்கிறார்!

உங்கள் உள்ளத்தில் இருக்கிறார்..

கடவுள் இருக்கும் இடமே சுவாமியின் இருப்பிடம்!

நீ ஒரே ஒரு தடவை சுவாமிஜியை சந்தித்துப்பார்

அப்புறம் நீ அவருடைய தீவிர பக்தனாயிடுவாய்

உன் கவலைகள் அனைத்தும் உன்னை விட்டு விலகும்

இதோ தனது பிறந்த நாளை ஒட்டி ஒரு பிரபலமான கிழட்டு சுவாமிஜி மக்களுக்கு வழங்கிய அறிவுரைகளைக் கேளுங்கள்:

அன்பே சிவம். சிவமே அன்பு.

அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார்.

ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள்.

உங்களிடம் ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.

தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனியாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக் கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்


ஒவ்வொருவர் வாழ்விலும் நான்கு நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமையைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்..

முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்

இந்த சுவாமிஜிக்களின் போதனைகளை அவர்களுடைய லீலைகளை வைத்து சற்று கவனமாக சிந்தித்துப்பாருங்கள்

சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள்

முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்

அதாவது சுவாமிஜிக்களின் ஆசிரமங்களில் நடக்கும் லீலைகளை முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருக்க வேண்டும்! பாவத்தை கண்டும் காணாமல் அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக இருக்க பழக வேண்டும், தங்களிடம் பழக பழக ஆற்றல் வெளிப்படும் அதாவது இவர்களின் லீலைகள் தொண்டர்களுக்கு வெளிப்படுமாம்! என்ன கொடுமை அய்யா இது!


சுவாமிஜிக்களிடம் வரும் செல்வந்தர்கள் நடிகர்கள்!

எப்போதுமே சுவாமிஜிக்களுக்க அரசியல் செல்வாக்கு அமோகமாக இருக்கும் எனவேதான் சில செல்வந்தர்கள் தங்களுக்குத் தேவைகளை அரசியல்வாதிகளிடம் காரியம் சாதிக்க இந்த சுவாமி (அசாமிகளை) நாடுகிறார்கள் அதற்கு சில கணிசமான ஊக்கசத் தொகை இந்த சுவாமிகளின் சன்னிதானத்தில் கொட்டப்படுகிறது! (Income Tax இல்லாத அன்பளிப்பு வருமானம்)

சினிமா நடிகர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் கடவுள் பயம் இருக்கத்தான் செய்யும் எனவேதான் தாங்கள் சம்பாதிக்கும் பாவமான வருமானத்தை கண்டு நரக பயம் ஏற்பட்டு அதை போக்கிக்கொள்ள இந்த பாவிக்களிடம் சென்று பாவ விமோச்சம் தேடுகிறார்கள் மேலும் சினிமாவில் ஹீரோயினிக்களை பற்றி சொல்லவா வேண்டும் புது நடிகை வந்துவிட்டால் பழைய நடிகையின் மார்க்கெட் குறைந்துவிடுகிறதே என்ன செய்வது தங்கள் வருமானம் பாதிக்கப்படக்கூடாதே எனவே இந்த ஆசாமிகளை நாடுகிறார்கள்! இந்த ஆசாமிகள் கை காட்டுபவருக்கு கூட கால்சீட் கிடைக்கிறதே!

சுவாமிஜிக்கள் விமானத்தில் ஏறுவதற்கும் உலகச் சுற்றுப் பயணம் செய்வதற்கும் எந்த இடையுறுகளும் கிடையாது இவர்களை யாரும் செக்கிங் செய்வதில்லை அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு எனவேதான் சில பெரும் வணிகர்கள் இவர்களின் நட்பை பலப்படுத்திக்கொள்கிறார்கள். விலைமதிப்பற்ற சட்ட விரோதமான பொருள்கள் கூட சுவாமிஜிக்களின் சூட்கேஸ் மூலம் கடத்தப்படலாமே!

முடிவுரை

மக்களே கீழ்கண்ட உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளை சற்று செவிதாழ்த்தி கேளுங்கள் நல்லுணர்வு பெற முயலுங்கள்!


(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கின்றான் அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும் ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (அருள்மறை குர்ஆன் 4:120)

மக்களே இதோ கீழ்கண்ட அருள்மறை வசனத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடையை சிந்தித்துப்பாருங்கள்


அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் 31:10)

வை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 31:11)

மக்களே ஸலாம்! உங்கள் மீது அமைதி உண்டாவதாக!

நம்முடைய ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு அஞ்சி வாழ்ந்து மடிந்தாரோ அதுபோன்று நாமும் நம் ஆதிபிதாவின் மார்க்கமான இஸ்லாம் எனும் அமைதியின் பக்கம் திரும்பி இம்மை மற்றும் மறுமையில் வெற்றி பெற்று சுவனம் செல்ல முற்படுவோமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காடடுவானாக!

ந்த சாமியார்களையும், சுவாமிஜிக்களையும் விட்டுவிடுங்கள் இவர்கள் கேடுகெட்ட ஆசாமிகள்தான்! அருள்மறை குர்ஆனை ஒருமுறையாவது இனிய தமிழ்மொழியில் படித்து நல்லுணர்வு பெறுங்கள்! அதில் உள்ள கருத்துக்கள் உங்கள் உள்ளங்களை அமைதிபடுத்தும் நேர்வழியை உணரச் செய்யும்! முடிந்தவரை முயற்சி செய்து தமிழ் மொழி பெயர்ப்பு குர்ஆனை படித்துப்பாருங்கள்! வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!


நம்மை படைத்த இறைவன் (அல்லா) அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!


பாஸ்போர்ட் வாங்கும் முறை பற்றி விளக்குகிறார் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி




‘‘உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள்தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் நிதானமாக விண்ணப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்துவிடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷனும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலருக்கு எதிர்காலத்தில் வெளிநாடு போகும் வாய்ப்பும் ஏற்படலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?

முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந்ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப்போது மிக எளிதாக்கி விட்டோம்.

ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக்கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட்மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வருமானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ்பெற்ற கம்பெனிகளில் வேலை செய்பவராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.

இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண்ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?

இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையைப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.

யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?

பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியானவர்கள்தான். ஆனால், போலீஸ் விசாரணையில் அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லையென்றாலோ, அல்லது அவர்கள், ஏதாவது சட்டம் மற்றும் தேச விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.

ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?

ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது?

அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது. இதற்குப் போய் எதற்காக டென்ஷனாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!


‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?

முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரியிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார்கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ்வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்றளித்த உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.

1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.

3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)

4. தியாகி அடையாள அட்டை

5. துப்பாக்கி லைசன்ஸ்

6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.

7. ரேஷன்கார்டு

8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.

9. ரெயில்வே அடையாள அட்டை.

10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)

11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.

12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை

13. ஓட்டுனர் உரிமம்.

14. பிறப்பு சான்றிதழ்

பாஸ்போர்ட் கட்டணம்

விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/_