Friday, 20 March 2020

நமது உடம்பில் உள்ள கழிவுகளை சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றுவது பற்றிய சிறப்பு பார்வை !!

 நமது உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியமானது…

2 சிறுநீரகங்கள் (kidney),
2 சிறுநீரகக் குழாய்கள் (ureter),
1 சிறுநீர்ப்பை
(urinary bladder),
1சிறுநீரக குழாய் (urethra)
அடங்கிய சிறுநீரக மண்டல (excretorysystem) மாகும்.
முதுகுதண்டிற்கு அருகில் கடைசி விலா எலும்பிற்கு கீழ் பீன்ஸ் வடிவத்தில், கருஞ்சிவப்புநிறத்தில் உள்ள சிறுநீரகத்தின் அளவு
4.5 x 2.25 அங்குலம் (10.5 x 6.3 cms)
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 10லட்சத்திற்கும் மேற்பட்ட நெப்ரான்கள்(nephrons) உள்ளன.
சிறுநீரகத்திற்க்கு வரும் அசுத்த இரத்தக் குழாய்கள் மிக நுண்ணிய குழல்களாகப் பிரிந்து, நெப்ரான்களுடன் இணைந்து வலைப்பை (கிளாமருலைகள் / glomerulus) போன்ற அமைப்பை உருவாக்கி வடிகட்டியாக செயல்படுகின்றன.
உடலுக்குத் தேவையான சக்தியை செல்கலின் உள்ளிருக்கும் மைட்டோகாண்டிரியா (mitochondria) க்கள் எரித்து இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயு கழிவுகள் நுரையீரல் மூலமாகவும், அமோனியா,யூரியா போன்ற உப்புகள் சிறிதளவு வியர்வை சுரப்பிகள் மூலமாகவும், பெருமளவு சிறுநீரகம் மூலமாக வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
நம் உடலில் உள்ள 3 -3.5 லி இரத்தம் தினம்(24 மணி நேரம்) 200 முறை சிறுநீரகங்களை கடந்து செல்கிறது.
அதாவது தினம் 700லி இரத்தம் சுத்தம் செய்யப் படுகிறது.
இதிலிருந்து சொட்டுசொட்டாக சுமார்
160 -170 லி நீர் பிரித்து எடுக்கப்பட்டு அந்த நீர்மூலமே மீண்டும் மீண்டும் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு இறுதியில்
1.5 - 2.5 லி நீர் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.
இதனை ஈடுகட்ட நாம் குறைந்தது 3 -5 லி நீர் பருக வேண்டும்.

100 மிலி சிறுநீரில் இருக்கும் தாதுக்கள்……
புரதம் 10 -25 மி.கிராம்
யூரிக் ஆசிட் 17 -50 மி.கிராம்.
கிரியாட்டினின் 66 -130 மி.கிராம்.
யூரியாநைட்ரஜன் 800 -1300 மி.கிராம்
குளுகோஸ் 30 மி.கி க்கு குறைவாக.
சோடியம் 25 -50 மிலி சமனாக
பொட்டாஷியம் 16 -80 மிலி சமனாக
யூரோபிலினோஜன் 1 மி.கி க்கு குறைவாக.
போன்றவைகள் உள்ளன.

ஏன் கசாயம் கொடுக்க கூடாது…?
சிறுநீரகங்கள் நம்முடைய துப்புரவுத் தொழிற்சாலை. கிட்டத்தட்ட 10 லட்சம் நெஃப்ரான்களை (ஃபில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கியது சிறுநீரகம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர்களின் சிறுநீரத்தில் உள்ள நெஃப்ரான்கள் ஃபில்டர் செய்ய முடியாமல் பாதிப்பு அடைந்துயிறுக்கும் மற்றும் இரதத்தை சுத்தம் செய்ய முடியால் நெஃப்ரான்கள் அடைப்பட்டு இருக்கும். ஏற்கனவே சர்க்கரைவியாதி,இரத்த அழுத்தம் அதற்க்காக எடுக்ப்பட்ட ஆங்கில மருந்துகளாலும் சிறுநீரக நெஃப்ரான்கள் பாதிப்பு அடைந்து இருக்கும். அதனுடைய மருந்து கழிவுகள் தேங்கி இருக்கும் அதை சுத்தம் செய்யவே சிறுநீரக நெஃப்ரான்கள் பில்டர் செய்ய தினறிகொண்டு இருக்கும் போது அந்த சமயத்தில் போய் கசாயம் மற்றும் கசாய பொடி போன்ற மருந்தை தண்ணீர் அல்லது வெண்ணீரீல் கலந்தோ கொடுத்தால் அது நெஃப்ரான்களால் ஃபில்டர்
செய்ய முடியாமல் மேலும்அடைத்துவிடும் அதனால் தான் கசாயம் கொடுக்க கூடாது. எல்லா மருந்துகளிலும் கழிவுகள் உண்டு அது நெஃப்ரான்களை கடந்து செல்லாது.
கசாயம் கொடுத்து முதலில் உப்பு சத்து குறைவது போலே தெரிந்தாலும் சில நாட்களில் மறுபடிவும் உப்புகள் கூடா ஆரம்பித்துவிடும்.அதனால் நிலைமை மேலும் மோசமாகும்.

ஏன் என்றால் கசாயம் இரத்தத்தில் உள்ள உப்புகளை குறைக்கிறது தவிர சிறுநீரத்தையோ அதில் உள்ள நெஃப்ரான்களையோ பலப்படுத்துவது இல்லை என்பது உண்மை.
நாம சாப்பிடுகின்ற உணவுகள் மற்றும் மருந்துகள் எல்லாவற்றைவும் சிறுநீரகம் தான் (டயாலிஸிஸ்) சுத்தம் செய்ய வேண்டும்.
டயாலிஸிஸ் செய்கிறவர்களுக்கு நாம கொடுக்கிற மருந்து எதுவானாலும் அது
நெஃப்ரான்களை கடந்து செல்ல வேண்டும் அவ்வளவு தான்.
என்னிடம் வரும் சிறுநீரக நோயாளிகள் வைத்தியர் மற்றும் படித்த சித்தா மற்றும் ஆயூர்வேத டாக்டர்கிட்ட போனே அவர்கள் கசாயம்,மாத்திரை,பொடி போன்றவைகள் கொடுத்தார்கள் நாங்கள் சாப்பிட்டோம் முதலில் உப்பு சத்து குறைவது போலே தெரிகிறது. ஆனால் மறுபடியும் உப்பு சத்து கூடிவிடுகிறது என்று சொல்லுகிறார்கள்.
மக்கள் மத்தியில் கசாய மருந்து வேலை செய்யவில்லை என்று நோயாளியின் நிலைமை மேலும் மோசமாகி மறுபடியும் ஆங்கில மருந்துக்கு செல்ல காரணம் இந்த கசாயம் மருந்து கொடுக்கும் முறைகளே…
அதனாலேயே கசாய மருந்துகள் தோல்வியை சந்திக்கின்றன…
சித்தா மற்றும் ஆயூர்வேத மருந்துகள் நவீன மருந்துகளுக்கு இணையாக செயல்பட முயற்ச்சி எடுக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தாழ்மைவுடன் வேண்கிறேன்.
ஆங்கில மருந்து சாப்பிட்டாச்சு.❗
சித்தா மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஆயூர்வேத மருந்து சாப்பிட்டாச்சு.❗
யூனானி மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஓமியோபதி மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஆனால் இரத்ததில் உள்ள உப்பு சத்தை குறைக்க முடியவில்லையே வேற என்ன செய்ய.❓
இறைவன் உதவியால் அவனுடைய கருணையால்……
முழுமையாக குணப்படுத்தலாம். !
சிறுநீரக நோய்யால் பாதித்தவர்களுக்கு………
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது கை, கால், முகம் வீக்கம் சில பேர்களுக்கு ஏற்படும்…
சில பேர்களுக்கு……கை, கால், முகம் வீக்கம் ஏற்படாது.
அவர்களுக்கு நவீன மருத்துவத்தில் உப்பு சத்தை குறைக்க வேண்டும் என்று டயாலிஸிஸ் செய்ய சொல்லுவார்கள்.
வலிவுடனும்……
வேதனையுடனும்……
மன உளச்சல்லுடனும்……
டயாலிஸிஸ் வாழும் காலம் முழுவதும் செய்ய வேண்டும்.
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்.
சிறுநீரகம் செயலிலப்பு Kidney Failure இனி டயாலிசிஸ் தேவையில்லை
அரிஸ்டம் என்ற கசாயம் கிடையாது
இலேகியம் கிடையாது.
கசாயம் பொடி கிடையாது.
சூரணம் என்ற பொடி கிடையாது.
மாத்திரைகள் கிடையாது.
பச்சைஇலை வைத்தியம் கிடையாது.
பஸ்பம் மற்றும் செந்தூரம், பாசண மருந்துகளான மெட்டல் கலவைகள் கலந்த மருந்துகள் கிடையாது.
முற்றிலும் மாறுபட்ட என்னுடைய அனுபத்தில் பல சிறுநீரக நோயாளிகளுக்கு
கொடுத்து பயன் அடைந்த மருந்து.
சிறுநீரகத்தில் உள்ள ஃபில்டர்களான நெஃப்ரான்களை இசியாக கடந்து செல்லும் நெஃரான்களில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை உற்பத்தி செய்யும்.
நெஃப்ரான்களை புதுபிக்கும் பலப்படுத்து சிறுநீரகம் பலப்படும் நன்றாக வேலை செய்வும்.
சிறுநீரக நோயாளிகளை டயாலிஸ்ஸி செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பர்களுக்கு அவர்களுடைய கிட்னி சுருங்கி விடும் அதாவது சிறுநீரகம் சின்னதாக சிறுத்து விடும்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பவர்களும் மருந்து சாப்பிட்டால் டயாலிஸ் செய்யும் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து கொள்ளளாம்.
வாழ் நாளை நீட்டித்து கொள்ளளாம்.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Thursday, 12 March 2020

கொரோனா வைரஸ் (CoronaVirus) பற்றிய விழிப்புணர்வு பதிவு !!

கொரோனா வைரஸ்(CoronaVirus)

கொரோனா வைரஸ் என்பது தடிமன் முதல் மிகவும் கடுமையான நோய்கள் வரை (உ-ம் கடுமையான சுவாச நோய் அறிகுறிகள் SARS) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படுத்தக் கூடிய மிகப்பெரிய வைரஸ் குடும்பமாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



  • கொரோனோ வைரஸின் அறிகுறிகள்!
  • கொரோனோ வைரஸால் ஏற்படும் பாதிப்புகள்!
  • தடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்!
  • கொரோனா சந்தேகங்களும் உலகசுகாதார நிறுவனத்தின் விளக்கங்களும்!
  • கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்தும் தவறுகள்!
  • கொரோனா தொற்றாமலிருக்க தொடாமல் தவிர்க்க வேண்டிய பொருள்கள்!



No photo description available.
மனித கொரோனா வைரஸ் வகைகள்...

இவ் வைரஸ்களின் மேற்பரப்பு கிரீடம் போன்ற கூர்முனைகளைக் கொண்டிருப்பதனால் கொரோனா வைரஸ்கள் என அழைக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ்கள் பிரதானமாக 4 கூட்டங்களாக காணப்படுகின்றன அவையாவன,

  •  அல்பா
  •  பீட்டா
  •  காமா
  •  டெல்டா

மனித கொரோனா வைரஸ் முதன் முதலாக 1960 களின் நடுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

7 வகையான கொரோனா வைரஸ் வகைகள் மனிதர்களைத் தாக்ககூடியவை என அறியப்பட்டுள்ளது.


No photo description available.



பொதுவான மனித கொரோனா வைரஸ் வகைகள்..

1 ) 229E (அல்பா கொரோனா வைரஸ்)
2) NL63 (அல்பா கொரோனா வைரஸ்)
3) OC43 (பீட்டா கொரோனா வைரஸ்)
4) HK01 (பீட்டா கொரோனா வைரஸ்)

ஏனய மனித கொரோனா வைரஸ் வகைகள்

5) MERS-CoV (பீட்டா கொரோனா வைரஸ்)
6) SARS-CoV (பீட்டா கொரோனா வைரஸ்)
7) 2019nCoV 2019 novel கொரோனா வைரஸ்

பொதுவாக உலகலாவிய ரீதியில் 229E, NL63, OC43 மற்றும் HK01 போன்ற கொரோனா வைரஸ்களின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

SARS-CoV (Severe Acute Respiratory Syndrome )

Severe acute respiratory syndrome corona virus முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. இவ் வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் 2002-2003 காலப்பகுதியில் கிட்டத்தட்ட 8098 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 774 பேர் மரணமடைந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் உலகலாவிய ரீதியில் இவ் வைரஸின் தாக்கம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

MERS-CoV (Middle East Respiratory Syndrome Coronavirus )

Middle East Respiratory Syndrome Coronavirus முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு சவுதி ஆரேபியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் பல பிற நாட்டைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் அனைவரும் சவுதி அரேபிய தீகபற்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019nCoV (2019 novel Coronavirus )

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சீனாவில் novel (new) கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டது. இவ் வைரசின் தாக்கம் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரத்தில் அதிகளவு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

அறிகுறிகள் மற்றும்நோயை கண்டறிதல்

அறிகுறிகள் :பொதுவான மனித கொரோனா வைரஸ்களான 229E,NL63,OC43 மற்றும் HKU1 இனால் பொதுவாக தடிமன் போன்ற இலேசான சுவாச குழுாய் நோய்களை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய்கள் பொதுவாக ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.

அறிகுறிகளாவன,

  •  மூக்கு ஒழுகுதல்
  •  தலைவலி
  •  இருமல்
  •  தொண்டைவலி
  •  காய்ச்சல்
  •  உடல் நிலை சரியில்லாதது போன்ற உணர்வு

மனித கொரோனா வைரஸ்கள் சில நேரங்களில் நிமோனியா ,மூச்சுக்குழல் அழற்சி போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்தும்.இருதய நோய் உள்ளவர்கள்,பலவீனமான நோய்எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள்,கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இலகுவாக இந் நோய்த் தாக்கத்திற்குள்ளாவார்கள்.

மற்றய மனித கொரோனா வைரஸ்களான MERS-CoV, SARS-CoV ஆகியவை கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியவை. MERS-CoV அறிகுறிகளில் பொதுவாக காய்ச்சல்,இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை அடங்குவதுடன் அவை பெரும்பாலும் நிமோனியாவுக்கு முன்னேறும். MERS-CoV தொற்றுக்குள்ளானவர்களின் 10 பேரில் 3-4 பேர் மரணமடைந்துள்ளனர்.

SARS-CoV அறிகுறிகளில் பெரும்பாலும் காய்ச்சல் தடிமன் மற்றும் உடல் வலி என்பவை அடங்குவதுடன் அவை பெரும்பாலும் நிமோனியாவுக்கு முன்னேறும்.

உலகெங்கிலும் 2004 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை SARS-CoV வைரஸ் தொற்று பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகளை கண்டறிதல்

உங்களுக்கு கடுமையான நோய்த்தாக்கம் அல்லது MERS இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் உங்களுடைய சுவாச மாதிரிகள் மற்றும் இரத்தத்தின் ஒரு பகுதியை ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வைத்தியரினால் ஆலோசனை வழங்கப்படலாம்.

அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுடைய சமீபத்திய பயண விபரங்கள் மற்றும் விலங்குகளுடனான தொடர்பு பற்றி வைத்தியரிடம் தெரிவித்தல் வேண்டும்.

அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் பெரும்பாலான MERS-CoV நோய்த் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன எனவே MERS-CoV கண்டறிய முயற்சிக்கும் போது பயண வரலாறு, ஒட்டகங்கள் மற்றும் ஒட்டக தயாரிப்புக்களின் பயன்பாடு தொடர்பான விபரங்களை வைத்தியரிற்கு தெரிவிப்பது அத்தியாவசியமானதாகும்.

பரவலடையும்முறை

மனித கொரோனா வைரஸ்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பரவுகின்றது.

  •  இருமல் மற்றும் தும்முவதனால் காற்றில் பரவுகின்றது.
  •  தனிப்பட்ட நெருங்கிய தொடர்புகள் மற்றும் கைகொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம்
  •  வைரஸ் உடைய பொருட்கள் மேற்பரப்பைத் தொடுதல் கைகளை கழுவும் முன் வாய்,மூக்கு,கண்கைளை தொடுவதன் மூலம்.
  •  மல மாசுபாடு (அரிதாக)


No photo description available.



எப்படிபாதுகாத்துக் கொள்வது?

மனித கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாப்தற்கு தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை

பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் தொற்று அபாயத்தைக் குறைக்க முடியும்.

  •  குறைந்தது 20 விநாடிகள் சவர்காரம் இட்டு அடிக்கடி உங்கள் கைகளை கழுவுதல் வேண்டும்.
  •  கழுவப்படாத கைகளால் உங்கள் கண்கள் மூக்கு வாய் தொடுவதை தவிர்க்கவும்.
  • நோய்வாய்பட்டவர்களுடனான நெருங்கிய தொடர்பை தவிர்த்தல்

மற்றவர்களை எப்படிபாதுகாத்துக்கொள்வது?


உங்களுக்கு தடிமன் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் மற்றவர்களைப் பாதுகாக்க முடியும்.

  • நீங்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள்.
  • மற்றயவர்களுடனான நெருங்கிய தொடர்புகளை தவிர்தல்
  • நீங்கள் இருமும் போது அல்லது தும்மும் போது உங்களின் வாயையும் மூக்கையும் திசுவினால் மூடி இருமுங்கள் அல்லது தும்முங்கள் பின் அத் திசுத்தாளை குப்பையில் இட்டு கைகளைக் கழுவுங்கள்.
  • பொருட்கள் மற்றும் மேற்பரப்புக்களை தொற்றுநீக்கியினால் தொற்றுநீக்கம் செய்தல்சிகிச்சை

Image may contain: text
மனித கொரோனா வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. இவ் நோய்கள் தாமாகவே குணமடையும் இருப்பினும் பின்வரும் விடயங்களை மேற்கொள்வதன் மூலம் போக்க முடியும்.

  • வலி மற்றும் காய்ச்சலிற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். (எச்சரிக்கை- குழந்தைகளுக்கு அஸ்பிரின் வழங்க வேண்டாம்)
  • தொண்டைப் புண் மற்றும் இருமலைக் குறைக்க ஈரப்பதமூட்டிய அறை அல்லது சூடான நீரில் குளித்தல்

நீங்கள் இலேசாக நோய்வாய்ப் பட்டிருந்தால்


  •  ஏராளமான நீராகாரங்களை எடுக்கவும்
  •  வீட்டில் தங்கி ஓய்வெடுக்கவும்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.


  தொகுப்பு  : மு.அஜ்மல் கான் 

சினிமா ஆரம்ப காலத்தில் தமிழ் நாட்டு பெண்கள் !!


இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள் ...பெண்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சினிமா என்று தான் கூறவேண்டும். இளைஞர்கள் மத்தியில் பெண்கள் தொடர்பான அவதூறுகளை சினிமா மூலமாக பரப்புகின்றனர். பெண்களை இழுவுபடுத்தும் பாடல்கள், வன்முறையை தூண்டும் வகையிலான பாடல்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்ற


பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலும் தாய், மனைவி, மகள், சகோதரி உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து எழுத வேண்டும். அவர்கள் தங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 12 குற்றச்சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. இழிவான பாடல்கள், வசனங்கள் தான் முக்கிய காரணம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பாடல் வரிகள், திரைப்படங்களில் வரும் உரையாடல்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே உள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.

சினிமாவில் ஆண்கள் பாடல் காட்சியில் உடலை முழுவதுமாக மறைக்க கூடிய உடையை அணிந்தும் அதில் நடிக்கும் நடிகை 20 % துணிகூட இல்லாமல் ஆடுவதும் ஏன்?. பணத்துக்காக இவ்வாறு பெண்கள் நடிப்பதை முதலில் கண்டிக்க வேண்டும். ஆபாசமாக உடை அணியமாட்டேன் என்று எல்லா நடிகைகளும் கூறினால் இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும். காசுக்காக சில பெண்கள் எதற்கும் தாயார் என்பதால் தான் பெண்சமுதாயம் சீரழிகிறது. இன்றைய திரைப்படங்களை வயது வந்த பெண்களுடன் ஒரு தாய் தந்தையர் அமர்ந்து பார்க்கமுடியுமா?. முதலில் எதிர்த்து போராடவேண்டியது நடிகைகளைத்தான்.

தமிழ் நாட்டு பெண்கள் முக்கியமாக சினிமா ஆரம்ப காலத்தில் மிக மிக ஒழுக்கமாக இருந்தனர்.. உடம்ப கூட இயன்றளவு மறைத்து தான் நடிப்பார்கள்.. முதன் முதலில் நடிக்கணும் நடிகையும் கட்டி பிடிக்கும் காட்சி மக்கள் பாத்து முகம் சுளித்தனர்....இது சினிமா வரலாறு. ஆனா சினிமா வில் அதிகம் வருவாய் பொம்பளையின் உடம்ப காட்டி , அதை பிடித்து சல்லாபம் செய்யும் போது அதிகம் மக்கள் குறிப்பாக ஆண்கள் வருவது அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த இழிவான ஆபாச காட்சிகள் வந்தன.. முக்கியமாக அரை குறை ஆடையுடன் பெண் நடிகைகளை ஆடவிட்டு அதன் போக்கு வெற்றி ஆனதால் , மெதுவாக கட்டிப்பிடி , உடம்பை பிடிச்சு படுத்தல் போன்ற காட்சிகளை வைத்தார்கள்.. மக்களும் மெதுவாக பாத்து பாத்து ஆசையால் அலைக்கழிப்பட்டு அடிமை பட்டனர் . அதனால்தான் சினிமா நடிப்பவர்களை ' கூத்தாடிகள்' என்று மக்கள் கேவலமாக அழைத்தனர்.......இதை மாற்ற , நட்சத்திரம் , திரை நட்சத்திரம் எண்டு பெயரை நடிப்பவர்களுக்கு பத்திரிக்கை கார கழிசடைகளுக்கு பணம் கொடுத்து , மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றனர். இப்போது படு கேவலமாக இழிவாக , வள்ளுவர் இருந்தால் தமிழ் நாட்டு ஒழுக்கம் பாத்து செத்துவிடுவார் என்று சொல்லும் அளவு இந்த நடிக்க நடிகைகள் ஒழுக்கம் கேட்டு உள்ளனர்... . நமீதா சில்க் சுமிதா , ஷகீலா , சுன்னி லியோன் போன்ற வலுக்கே ' சினிமா நட்சத்திரம்' என்று மக்கள் சொல்லு மளவுக்கு ஒழுக்கம் மக்களிடம் கெட்டு போயுள்ளது.. எனவே சினிமா நடிகைகளை , பலர் இப்போ, ''' சினிமா வேசிகள் ''' என்றே சொல்கிறார்கள்........ இந்த லட்சணத்தில் , இந்த கதை வேற........!!!!!!!!!!!!


திரை படத் துறை நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் அதே சமயம் காவல் துறையில் உள்ள எண்ணற்ற குறைகள் எல்லாம் காண்பிக்கப்படு கின்றன.ஆகையால் காவல் துறை யுங்களை மாதிரி நல்லவர்கள் வல்லவர்கள் செயல் படுகின்ற காரணிததால் மாற்றம் அவசியம் வேண்டும்

பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளில் நடிக்கும் , இடம்பெறும் பெண்கள் முதலில் கண்டிக்க பட வேண்டும் . இவர்கள் உடன்படாவிட்டால் இவர்களை இழிவு படுத்தும் செயல்கள் நிச்சயம் நின்றுவிடும்.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Sunday, 8 March 2020

இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !!

பெண் சுதந்திரம்’ என்று பேசிக் கொண்டே, மற்ற பெண்கள் சுதந்திரமாக உலா வர முடியாதபடி நடந்து கொள்பவர்கள் மேல் பெரிய நம்பிக்கை இல்லை.. வார்த்தைகளில் இல்லை எதுவும்... வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது எல்லாம்!
உலகில் எத்தனையோ பெண்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. மற்றவர்களை உயர்த்தி இருக்கிறார்கள்! சிலர் கடுமையான போரட்டங்களின் மூலம் அந்த வெற்றியை அடைந்திருக்கலாம். சிலர், புரிய வைத்து அடைந்திருக்கலாம். சிலர் பிரியமானவர்களுக்கு விட்டுக் கொடுப்பதின் மூலம் அடைந்திருக்கலாம். சிலர், விமர்சனம், புகழ் என்று எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்த தன் ஆர்ப்பாட்டமற்ற செயல்பாடுகளின் மூலம் அடைந்திருக்கலாம். இன்னும் சிலர் அமைதியான அகிம்சை முறையால் என பலவேறு வழிமுறையில் வாழ்க்கையின் வெற்றியை அடைந்திருக்கலாம். வெற்றிக்கு ஒரேவழி மட்டும் கிடையாது.
உதாரணமாக சர்க்கரை தண்ணீரில் கரையும். ஆனால், தண்ணீரில் கற்பூரம் கரையாது!.. அதைக் கரைக்க நெருப்பு தேவை. ஆனால் இந்த இரண்டிலும் தங்கம் கரையாது. அதைக் கரைக்க வேறொரு ராஜதிராவகம் தேவை..
அதேபோலத்தான், காரியங்களை சாதிப்பதற்கும் பல வழிகள் இருக்கின்றன.. அவை அந்தந்த சூழலுக்கும் மனிதர்களுக்கும், அந்தந்த மண்ணின் மனிதர்களின் இயல்புக்கும், கலாச்சாரத்துக்கும் தகுந்தபடி இருக்கின்றன.. வெற்றிக்கு ஒரே வழி தான் என்று எதிர்ப்பையும் வெறுப்பையும் காட்டுவோரிடம் ஜாக்கிரதையாகவே இருப்பது நலம்.
அனைத்துப் பெண்களும் நலமாக இருந்தால்தான், அவர்களைச் சுற்றியிருக்கும் இந்த உலகம் நலமாக இருக்கும்.. உலகம் நலமாக இருக்க உங்கள் அனைவருக்கும் இந்த மகளிர் தினத்தில் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

 உங்கள் அ.தையுபா அஜ்மல் 

Saturday, 29 February 2020

சிறு தானிய உணவுற்கு இணை எதுவுமில்லை !!

சிறுதானிய உணவு வகைகள் SiruThaniya Unavu Vagaigalதினை உணவுகளை நினை...
அதற்கு எதுவுமில்லை இணை!
கொரோனா காலத்து பகல் பொழுதுகள் புத்தகங்களை படிப்பதில் தான் கழிகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் பயிலரங்கத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. இன்று படிப்பதற்காக சில நூல்களை எடுத்து வரும்படி எனது உதவியாளரிடம் கூறினேன்.
அவர் அகநானூறு, சீவக சிந்தாமணி, ஐங்குறுநூறு ஆகிய நூல்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அகநானூறு நூலின் 392-ஆவது பாடல் என்னைக் கவர்ந்தது. அந்த பாடல், தலைவியால் விரும்பப்படும் வெற்பன் என்ற மலைநாட்டு தலைவனின் வீரத்தை குறிக்கும் பாடல் ஆகும். இந்த பாடலில் தினையின் சுவையில் மயங்கிய யானை ஒன்று தினை வயலில் மேய்வதாகவும், அதை வெற்பன் கவண் மூலம் கல்லால் தாக்கியதில் வலியை தாங்க முடியாமல் மற்ற யானைகளையும் அழைத்துக் கொண்டு ஓடுவதாக பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பாடலின் விவரம் இதோ....
‘‘கண மழை பொழிந்த கான் படி இரவில்,
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட,
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென,
மறப் புலி உரற, வாரணம் கதற,
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல,
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று,’’
அந்த அகநானூற்றுப் பாடலின் பொருள்:
அவன் மலைநாட்டின் தலைவன் வெற்பன்.
‘‘ பெருமழை பொழிந்து காடே இருண்டுகிடக்கும் நள்ளிரவில் உயர்ந்த கழுதுப் பந்தலில் இருந்துகொண்டு காவல் காக்கும் சேணோன் கவணில் வீசிய கல்லின் அடி பட்டு தினை வயலில் மேய்ந்த யானை தன் இனத்துடன் ஓடும்.
கவண் கல் பாயும் இடியோசை கேட்டு மறம் கொண்ட புலி உறுமும்.
காட்டுக் கோழியின் சேவல் கதறும்.
நனவில் நடுக்கம் கண்டது போல நல்ல மயில் ஆடும்.
இப்படி மலையே நடுங்கும்.
இப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்’’ என்பது தான் அந்த பாடலின் பொருள் ஆகும்.
இந்த பாடலின் மூலம் தினை வகைகளின் பெருமையை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பாடலை படித்தவுடன் தான் தினை உள்ளிட்ட சிறு தானிய உணவு வகைகளின் பெருமை குறித்து உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள்....
அதேபோல் தினை உணவுகளின் பெருமையும் இப்போது தான் நமது மக்களுக்கு தெரியத் தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவிய உணவுக் கலாச்சாரம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றால் பெயர் தெரியாத உணவுகளை உட்கொண்டு என்னென்னவோ நோய்களை வாங்கிக் கொண்டு அவதிப்பட்டு வரும் மக்கள், இப்போது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான தினை, சாமை, வரகு, குதிரவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை உட்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இப்போது தினை, சாமை, வர்கு குதிரவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நானும் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் முறையே சாமை, குதிரவாலி, வரகு, தினை ஆகியவற்றில் ஒன்றால் செய்யப்பட்ட பொங்கலை காலை உணவாக எடுத்துக் கொள்கிறேன். மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றையும் பொங்கலில் சேர்க்கும் போது அதன் சுவை மேலும் கூடும்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து சுடப்படும் தோசையை சாப்பிடுகிறேன். இவை அனைத்துமே ஆங்கிலத்தில் விவீறீறீமீt என்று என்று அழைக்கப்படும் சிறுதானிய உணவு வகைகள் ஆகும்.
தரமான சிறு தானிய வகைகள் கொல்லிமலையில் அதிகமாக கிடைக்கின்றன. வந்தவாசி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.துரை 3 மாதங்களுக்கு ஒருமுறை கொல்லிமலைக்கு சென்று அவருக்குத் தேவையான சிறு தானியங்களை வாங்கி வருவார். அப்போது எனக்குத் தேவையான சிறு தானியங்களையும் வாங்கி வந்து தருவார்.
மேற்கு மாவட்டங்களில் பயணிக்கும் போது கூழ், களி ஆகியவற்றை தயாரித்து சாலையோரங்களில் விற்பனை செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். பாரம்பரிய உணவு தானியங்கள் மீதான மக்களின் ஆர்வம் அதிகரிப்பதையே இது காட்டுகிறது.
சிறு தானிய வகைகள் அனைத்துமே நார்ச்சத்து நிறைந்தவை ஆகும். உடலுக்குத் தேவையான பெரும்பான்மையான சத்துகள் இதில் உள்ளன. ஓட்ஸ், பார்லி போன்ற வெளிநாட்டு உணவு தானியங்கள் சத்து இல்லாதவை; சக்கையானவை. அவற்றுடன் ஒப்பிடும் போது நமது பாரம்பரிய சிறுதானியங்கள் மிகச்சிறந்தவை. அவற்றுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஆகவே, அனைவரும் உடல்நலனைக் காக்க சிறுதானியங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் செய்ய சவுதி அரேபியா அரசு தடை !!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மெக்காவுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கான விசாக்களை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் உள்ள மெக்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கில் இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், சீனாவில் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆபத்தான வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் பரவியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ளவர்களைஅச்சம்கொள்ளவைக்கும் கொரோனா?சவூதி அரேபியா உள்ளவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

சவூதி அரேபியாஅரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .


நோய் தொற்று உள்ளவர்களை தனிமைபடுத்தி 24 மணிநேர தீவிர கண்கானிப்பில் வைத்து சிகிச்சையளித்து கொண்டுள்ளது.

நோய் தொற்று பரவாமலிருக்க அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது .

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் காலை மாலை இரண்டு வேலையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இரயில் நிலையங்கள், விமான நிலையம் என மக்கள் கூடுமிடங்களில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.இதனால், சவுதி அரேபியா மெக்காவுக்குச் செல்வதற்காக வரும் பயணிகளுக்கு விசா விசா வழங்கப்படாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா அரசு மெக்கா, மதீனா புனித பயணங்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சவுதி அரேபியா அரசு “சிறிது காலமாகவே கொரோனா வைரஸ் குறித்த விஷயங்களை கவனித்து வருவதாகவும், கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச நடவடிக்கைகளை தாங்களும் நடிமுறைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில், மெக்காவுக்கு புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதன் மூலம் செயல்படுத்த இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அதனால், மெக்கா மதீனாவுக்கு புனித பயணம் செய்ய சவுதி அரேபியாவிற்குள் நுழைவதை சவுதி அரேபியா அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதனுடன், கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகள் சவுதி அரேபியா வருவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் பகுதியில் நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.

கொரோனா பற்றிய எனக்கு தெரிந்த தகவல்கள்..

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கொரோனா வைரசு பாதிக்கும்.
குழந்தைகள் வயது மூத்தவர்களை அதிகம் பாதிக்கும்.
யாரிடமும் கை குலுக்கி பேச வேண்டாம்.
கூட்டமான இடங்களில் கூட வேண்டாம்.
திரையறங்குகள்,உணவு விடுதிகள்,
காய்கறி கடைகள்,பல்பொருள் அங்காடிகள்,மது அருந்துமிடங்கள் போன்ற கூட்டமான இடங்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
உணவுகளை முடிந்தளவு சமைத்து உண்ணுங்கள்.
உணவில் இஞ்சி பூண்டு மஞ்சள் போன்றவற்றை அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.
உணவு உண்ணும் முன்பு கைகளை நன்கு கழுவிய பின்பு உணவு உண்ணுங்கள்.
சிகரெட் பிடிப்பவர்களை கொரோனா வைரசு அதிகம் பாதிக்கிறது.
நுரையீரல் பாதிப்புள்ளவர்களை அதிகம் பாதிக்கின்றது.
கொரோனா வைரசு ஆனது குளிர்ந்த இடங்களில் அதிகம் பரவவல்லது.
பேஸ் மாஸ்க் எந்நேரமும் அணிந்திருங்கள்.
கையுறைகளையும் அணிந்து கொள்ளுங்கள்.
பொது கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Friday, 28 February 2020

கருங்கோழி பற்றிய ஒரு தவகல் !!


1 கிலோ 1000 ரூபா.! அப்படி என்ன ஸ்பெஷல் இந்தக் கறியில?… மருத்துவர்கள் விளக்கம்! அதிக நோய் எதிர்ப்பு சக்தி!!!!!


கடந்த ஜனவரி மாதம் கிலோ 450 ரூபாய்க்கு விற்பனையான கோழிக்கறி, தற்போது கிலோ 1000 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. கொரோனா வந்தாலும் வந்தது மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவுகள் குறித்தத் தேடல் அதிகமாகி விட்டது. தாங்களே இணையத்தில் தேடியும், மருத்துவர்களின் அறிவுரைப்படியும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கடக்நாத் கோழிகளுக்கு தற்போது மக்கள் மத்தியில் மிகுந்த மவுசு ஏற்பட்டுள்ளது.
கோழிக்கறி, முட்டை என அனைத்தும் கருப்புக் கலரிலேயே இருப்பது தான் இதன் ஸ்பெஷல். இந்தக் கோழியை சொந்தம் கொண்டாடி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என 2 மாநிலங்களும் கட்டிப் பிடித்து உருண்டு பெரிய பஞ்சாயத்தாகி கடைசியில் கோழி மத்தியப் பிரதேச மாநிலத்துக்கே சொந்தம் எனத் தீர்ப்பு கிடைத்தது.
இதையடுத்து இந்தக் கோழிகளை மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் மூலை, முடுக்குகளில் எல்லாம் கொண்டு சேர்க்க ஆரம்பித்து உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கடக்நாத் கோழிகளை இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள், இந்த கருங்கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளது. இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்கள் கட்டுக்குள் இருக்கும்.
ஆஸ்துமா, கல்லீரல் பிரச்சினைகளுக்கும் ஏற்றது. இதன் முட்டைகள் சிறுநீரக, தலைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிறந்தது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் இந்தக் கருங்கோழிக்கறி சிறந்தது என தெரிவித்து இருக்கின்றனர்.
இப்படி ஏராளமான நன்மைகள் இருப்பதால் தற்போது 1 கிலோ கறி 1000 ரூபாய்க்கும் 1 முட்டை 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
கருங்கோழி என்பது உள்ளும் புறமும் எல்லா பாகங்களும் கருப்பாக இருக்கும் ஒரு கோழிவகை. இவை இந்திய மத்தியப் பிரதேச மாநிலக் காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, “கடக்நாத்’ என்றழைக்கப்படும் கோழியினமாகும்.
இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது.இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிடப் பரிந்துரைக்கின்றனர்.
இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், 0.73 – 1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்தக் கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்.இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, டெல்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது.
சீன உட்பட பல்வேறு நாட்டில் மருத்துவத்திலும், உணவிலும் கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Thursday, 27 February 2020

ப்ரதாப் ட்ரோன் வடிவமைப்பின் ‘துரோணாச்சாரியா’ !!


22-year-old Prathap NM has build over 600 drones that can be ...

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கர்நாடகாவின் மாண்டியாவில் பிறந்த பிரதாப்பின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. 18 வயதான அந்த இளைஞர் குறைந்த செலவில், பேரிடர் நிகழ்ந்த இடங்களின் புகைப்படங்களை எடுக்கவும், அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் நோக்கத்தில், மின்னணுக் கழிவுகளில் இருந்து ஒரு ட்ரொனை   வடிவமைத்துள்ளார். அதன் மூலம் சர்வதேச இயந்திர கண்காட்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். 

இந்த பையனுக்கு இப்ப வயது 22 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார்.

"FRANCE Countryல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம்.5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது"
 ஆனால் மறுத்து விட்டார்.

கர்நாடகாவில் பிறந்த இவர் அப்படி என்னதான் சாதித்து விட்டார்? விரைவில் எதிர்பாருங்கள்.....

DRONEBOY Pratap
இவர் சாதனை பற்றி 3 பாகமாக பார்க்கலாம்.

 பாகம் 1

இவர் பிறந்தது கர்நாடக மாநிலத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு குக்கிராமம். தந்தைக்கு விவசாயம். மாத வருமானம் சுமார் Rs.2000/-.
சிறு வயதிலேயே Electronics மேல் விருப்பம்.

 College படிப்பு
+2 படித்துக்கொண்டே Electronics துறையில்
இருந்த தாகத்திற்கும் இவர் தீனி போடத் தவறவில்லை.  பக்கத்தில் உள்ள Cybercafe netcenterல் internet மூலம் drone சம்பந்தமான தகவல்களை திரட்டி உள்ளதைப் பார்த்தால்  மிகவும் பிரமிப்பாக உள்ளது
(Aviation websites , Research websites, Space websites, Roles Roy car Blueprint , Boeing777 Blueprint அனைத்தையும் பிரித்து மேய்ந்துள்ளார்.).

Scientistகள் Emailidக்கு mail அனுப்பி தன் சந்தேகங்களை (Butler Englishல் ) கேட்டிருக்கிறார். (100 mail அனுப்பினால் 1 பதில் வருமாம். அதுவும் கடந்த 2 வருடங்களாகத்தான் English கற்றுக்கொள்ளவே ஆரம்பத்திருக்கிறார்.).

Engg college படிக்க ஆசை. ஆனால்  பணவசதி இல்லை. ஆகையால் Bsc Physics சேருகிறார். பின் மைசூரில் BSc 3வது வருடம்  படிக்கும்போது Hostel Fees கட்டமுடியாமல் வெளியே துரத்தப்பட்டார். தெருவில், நடைஓர platformல், Busstandல் தங்கியுள்ளார். நகரத்தையே பார்த்திராத இவருக்கு மைசூர் Busstand ஒரு palace மாதிரி இருந்தது என்கிறார்.

அங்கு Public toiletல் துணி துவைத்து College படிப்பை தொடர்ந்து இருக்கிறார்.

Tuition எடுத்து அதில் வந்த வருமானத்தில்  (Rs.20க்காக அதிகாலை 2மணிக்கு எழுந்து 16 km நடந்து) எப்படியாவது ஒரு பறக்கும் Machineஐ குறைந்த செலவில் உருவாக்கிட வேண்டும் என தீவிரமாக  எண்ணினார். அப்பொழுது அதன் பெயர் Drone என்பது கூட அவருக்குத் தெரியாது.

Courseல் சேருவதற்கு பணம் கிடையாது என்ற காரணத்தினால் C++ JavaCore  Python Adobe Cloud Computing போன்ற Softwareகளை எல்லாம் சுயமாகக் கற்று , அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார்.

பின் Bombay, Visakappattinam போன்ற ஊர்களில்  மலைமலையாக குவிக்கப்பட்டிருந்த eWaste Scrap yardல் தேடி அலைந்தார்.
இப்படியாக தனது Drone Projectக்கு ஆகும் செலவை 40% வரை குறைத்துள்ளார்.

ஏகப்பட்ட முறை முயன்று தோல்வி அடைந்து பின் மனம் தளராது தனது 80 வது முயற்சியில் வெற்றி பெற்றார்.
அன்று தானே பறப்பது போல இருந்தது என சந்தோசமாக சொல்கிறார்.

 பாகம் 2

IIT நடத்தும் ஒரு Drone Competionல் கலந்து கொள்வதற்காக  unreserved compartmentல் 3 நாள் ரயிலில்  டில்லிக்கு பயணம் செய்கிறார். சரியான Shoes கிடையாது. சரியான Dressகிடையாது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் கலந்து  கொண்ட அந்த போட்டியில் 2 வது பரிசு கிடைக்கிறது. அவரது உற்சாகம் பீறிட்டுக் கொள்கிறது.

"ஜப்பானில் இதே மாதிரி ஒரு போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்களேன்" என்று யாரோ சொல்ல அதற்கான முயற்சியில் இறங்குகிறார். அதற்காக passport visa எல்லாம் வாங்க வேண்டும் என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

தன்னுடைய 10th, +2 marksheetஐ அடமானம் வைத்து கொஞ்சம் பணம் பெநுகிறார். பல்வேறு நபர்கள் (College friends, professors) முடிந்தவரையில் இவருக்கு உதவுகிறார்கள்.  ஒருவழியாக
Tatkalல் passport visa எல்லாம் வாங்கி விட்டார். ஆனால் ஆணிவேரை அசைக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.

ஜப்பானில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு  Professor Phdயிடம் இவரது project report எல்லாம் சமர்ப்பித்து Approval வாங்க வேண்டும். அதற்காக சென்னைக்கு கிளம்புகிறார். கையில் இருப்பதோ வெறும் 300 ரூபாய்தான்.

 புண்ணியம் கட்டிக் கொண்ட சென்னை

சென்னையோ இவருக்கு புதிது. ஒரு வழியாக professor வீட்டைக் கண்டுபிடித்து கேட்டால் அவர்  வீட்டில் இல்லை. தொடர்ந்து 4 நாட்களாக படையெடுக்கிறார்.

கையில் காசு கரைந்து கொண்டே இருக்கிறது. Public toiletல் துணியை துவைத்து (ஒரே ஒரு Dressதான் கைவசம். அதைத்தான் துவைத்து மறுநாள் உடுத்த வேண்டும் ) central railway stationல் platformல் உறங்கி.... இப்படி போகிறது வாழ்க்கை. கடைசியாக professorஐ சந்திக்கிறார். Project reportஐ பார்த்த அந்த professor புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.
"நீயோ BSc Arts Group. உன் படிப்புக்கும் நீ பண்ணுகின்ற இந்த projectக்கும் என்ன சம்பந்தம்? கையெழுத்து போட மறுத்து விடுகின்றார். மறுபடியும் Back to Square 1. Drone project வேறு பாதியில் நிற்கிறது. அதையும் ready பண்ண வேண்டும். தொடர்ந்து 31 நாட்கள்  Professor கையெழுத்துக்காக படை எடுக்கிறார். காலை tiffinக்கும் இரவு dinnerக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டுதான்(Rs.5/-). மற்ற நேரத்திற்கு தண்ணீர்தான் உணவு.
14 நாட்களுக்குள் கையில் உள்ள பணம் அனைத்தும் காலி. ரொட்டிக்கு கூட வழி இல்லை. கடைசியில் 31 நாட்கள் கழித்து எப்படியோ Signature வாங்கியபின் Mysoreக்கு திரும்புகிறார்.

 ஜப்பான் பயணம்

இந்திய நாட்டின் சார்பாக  இந்த போட்டியில்  கலந்து கொள்ள பயணச்செலவு  (குறைந்தபட்சம்) Rs.60000  தேவைப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பலமுறை mail போட்டும் ஒன்றும் பயனில்லை.
மைசூரில் உள்ள  கருணை உள்ளம் கொண்ட ஒரு சுவாமிஜி Flight ticket எடுத்துக் கொடுக்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும் பணம் பற்றாமல் தன் தாயின் தாலிக்கொடியை விற்று இதர பயண செலவுகளை சமாளிக்கிறார்.

Bangalore busstandயே பார்க்காத தனக்கு முதல் விமானப்பயணமே International flight. அதுவும் Transfer  flight வேறு.  மிகவும் சிரமப்பட்டு திக்கி திணறி ஒரு வழியாக தன்னந்தனியாக  TOKYOல் போய்  இறங்குகிறார்.

 பாகம் 3
 Tokyo Exibition Centre

கையில் இருப்பதோ வெறும் Rs.1400தான். Airportவ் இருந்து
Exibition Centreக்கு  Bullet trainல போனால் 2 மணி நேரம்தான் ஆகும். அதிக செலவு ஆகும் என்பதால் Normal trainல போகலாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் ஒரு பிரச்சினை. 16 Station மாற வேண்டும். ஒவ்வொரு  Stationலயும் அத்தனை LIFTடையும் Elevatorயும் platformயும் கடந்து லக்கேஜோட Train மாற வேண்டும். எதுவும் சாப்பிடவில்லை. கடைசி Station வந்தாயிற்று. Exibition Centre அங்கிருந்து 8 km . மறுபடியும் அனைத்து Boxயும் தூக்கி பின் இறக்கி வைத்து இப்படியே 8 KM நடந்து
ஒரு வழியாக 5 நாட்கள் கழித்து Exibition Centreஐ அடைகிறார்.

 இறுதிச்சுற்று

127+ நாடுகள் பங்கேற்கிற அந்த Expoவில் எப்படியாவது 70வது இடத்தையாவது பிடித்துவிடவேண்டும் என்று வெறியுடன் Resultஐ பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

 இவர் பேர் வரவில்லை.

50வது இடமாவது வருகிறதா 
என்று Resultஐ பார்க்கிறார்.

 இவர் பேர் வரவில்லை.

30வது இடமாவது வருகிறதா 
என்று Resultஐ பார்க்கிறார்.
இதில் Chinese universityதான் ஆதிக்கம் செலுத்துகின்றது.

 இவர் பேர் வரவில்லை.

20வது இடமாவது வருகிறதா 
என்று Resultஐ பார்க்கிறார்.
இதில் Europe மற்றும் German  universityகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது.

நம்பிக்கையற்ற நிலையில்
எல்லாவற்றையும் Repack பண்ணுகிறார்.  தான் பட்ட கஷ்டம் எல்லாம் கண்முன்னே நிழல் ஆடுகிறது. வேற வழி தெரியாமல் கடைசி rowல் போய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார்.

Top 10 பட்டியல்  அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதில் Americaவின் top universityகள்தான்  ஆதிக்கம் செலுத்துகின்றன.

எப்படியும் STANFORD Universityதான் FIRST PRIZE என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
2nd prize STANFORD University என்று Announce பண்ணியவுடனே அப்போ யார் 1st prize?

"Please welcome Mr.Pratap GOLD MEDALIST from INDIA"
நம்ம ஆளுக்கு அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்.

INDIA கொடி மேலேயும் AMERICA கொடி கீழேயும் இறங்குவதை பார்த்ததும்

"கண்முன்னே அம்மாவின் தாலி  வந்து போகின்றது"

10000$ REWARDஆக  தருகின்றார்கள்.
அதற்கப்புறம் என்ன ஒரே ஆரவாரம் கொண்டாட்டம்தான்.

மோடி கூப்பிடுகிறார்.
Karnataka MLA MP எல்லோரும் இவருடைய வீட்டுக்கு படை எடுக்கிறார்கள்.

FRANCEலும் போய் அங்கேயும் First prize.உலக நாடுகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றது.

"FRANCE Countryல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம்.5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது. ஆனால் மறுத்து விட்டார்"

Friday, 21 February 2020

முஸ்லிம்களின் சமூக வாழ்வை மறுபரிசீலனை செய்யும் நேரம் !!

இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (4)1857 க்கு முன்பாக இந்தியா முழுவதும் வியாபித்திருந்த அரபு மதரஸாக்களின் பாடத்திட்டத்தில் வேளாண்மை, உணவு, மருத்துவம் இவை கட்டாயப் பாடமாக இணைக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகள் கல்வி காலம் முழுமையாக முடித்த பட்டதாரிகளான ஆலிம்கள் அனைவரும் மார்க்க சட்டங்களை சொல்வதற்கு மட்டுமல்ல மருத்துவம் பார்ப்பதற்கும் அரசின் அங்கீகாரம் பெற்றவர்களாக வெளிவந்தனர்.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பணிநியமனம் பெற்ற ஆலிம்கள் தங்களது சொற்பொழிவுகளில் உடல்நலத்தின் அவசியத்தையும் நோய்எதிர்ப்புத் திறனின் முக்கியத்தையும் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு பயிற்றுவித்தனர். காலை மாலை நேரங்களில் சாதிமத வேறுபாடு இல்லாமல் யுனானி மருத்துவத்தின் ஏறக்குறைய 20 வகையான சிகிச்சை முறைகளை (Therapies) கொண்டு மக்களில் தேவையுடையோருக்கு பள்ளி வளாகத்திலேயே சிகிச்சை அளித்தனர்.
இறைவனின் விருப்பத்திற்குரிய பிரதிநிதியான மனிதனுக்கும் அவனுக்குத் துணையாக சிலபோது உணவாக படைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதை எல்லாம் வல்ல இறைவனுக்கு செய்யும் வணக்கங்களில் ஒன்றாக ஆலிம்கள் கருதினர். அன்றாட வழிபாடுகளோடு இந்த வணக்கத்தை நிறைவேற்றுவதும் மஹல்லா ஜமாத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக அது முஸ்லிம்களின் அழகிய வாழ்வியலோடு ஒன்றுகலந்திருந்தது.
ஊர்மக்களில் யாருக்காவது உடல்நல கோளாறு ஏற்பட்டால் பள்ளிவாசலுக்குத் தான் முதலில் வருவார்கள். பலநூறு ஆண்டுகளாக தொடரும் இந்த வழக்கத்தின் மிச்சசொச்சம் தான் இன்றும் காலை மாலை வேலைகளில் மக்கள் பள்ளிவாசலுக்கு வரும் காட்சிகள்.
நமது அறியாமையால் முயற்சியின்மையால் விட்டுப்போன இந்த உயர்வான கலாச்சாரத்தை மெல்ல மெல்ல மீட்டெடுக்கும் வேலைகளை நாம் துவங்க வேண்டும்.
இடவசதிமிக்க மஹல்லா பள்ளிவாசலில் ஒரு சித்தா அல்லது யுனானி இலவச சிகிச்சை மையத்தை மிகச்சிறிய அளவில் துவங்கினால் போதும். அதுதான் மறுமலர்ச்சிக்கான முதல் வெளிச்சம். சில ஆண்டுகளில் அதை ஆண்கள் அல்லது பெண்கள் அரபு மதரஸாவோடு இணைந்த ஒரு ஆயுஷ் மருத்துவக்கல்லூரியாக உருவாக்கிட வேண்டும் என்ற தொலைநோக்கு சமூக இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும்.
விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் விசாலமனதுடைய ஒருசிலரால் மட்டுமே இந்த பூமியில் வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இறைபொருத்தத்திற்காக மட்டுமே என்ற உயர்ந்த மனதுடைய ஒன்றிரண்டு தனவந்தர்கள் முன்வந்தால் போதும் அது தமிழக முஸ்லிம்களுக்கு மகத்தான முன்மாதிரியாக மாறிவிடும். பொதுமக்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட்டு சொத்துக்கள் பறிபோகமால் காப்பாற்ற முடியும்.
மனிதசமூகத்தில் அறிவு வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் எதார்த்தமானவை. அவை மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்களை தங்களின் கலாச்சார தனித்தன்மைக்கு ஏற்ப உள்வாங்கி நம்மை மேம்படுத்திக் கொண்டே இருப்பது தான் பின்தொடருதல் (Followers) என்ற நிலையிலிருந்து முன்னிலை வகித்தல் (Leaders) என்ற இஸ்லாமிய இயல்புநிலைக்கு உம்மத்தை மாற்றும்.
இப்போது நெருக்கடியான காலமாக மாறிவிட்டது, நீண்டகால திட்டங்களுக்கு அவகாசம் இல்லை என்ற கருத்தை அதிகமாக உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.
நாளையே பூமி அழிந்துவிடும் என்று தெரிந்தாலும் நம்பிக்கையோடு இன்று ஒரு மரத்தை நடுங்கள் என்பது அகலத்தின் அருட்கொடையான எம்பெருமானார் (ஸல்) அவர்களின் சத்திய செய்தி.
செவிமெடுத்தோம் கட்டுப்பட்டோம்.அதுதான் நமது வேலை...

Thursday, 20 February 2020

நாம் சிறுவயதிலேயே குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய ஒழுக்கங்கள்.!!


1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.


2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,
மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.



4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள்
மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய  ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்
கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம்
அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்
கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச்செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்கஅறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்யகற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. 

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப்பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!

நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.