Thursday, 12 March 2020

கொரோனா வைரஸ் (CoronaVirus) பற்றிய விழிப்புணர்வு பதிவு !!

கொரோனா வைரஸ்(CoronaVirus)

கொரோனா வைரஸ் என்பது தடிமன் முதல் மிகவும் கடுமையான நோய்கள் வரை (உ-ம் கடுமையான சுவாச நோய் அறிகுறிகள் SARS) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படுத்தக் கூடிய மிகப்பெரிய வைரஸ் குடும்பமாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



  • கொரோனோ வைரஸின் அறிகுறிகள்!
  • கொரோனோ வைரஸால் ஏற்படும் பாதிப்புகள்!
  • தடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்!
  • கொரோனா சந்தேகங்களும் உலகசுகாதார நிறுவனத்தின் விளக்கங்களும்!
  • கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்தும் தவறுகள்!
  • கொரோனா தொற்றாமலிருக்க தொடாமல் தவிர்க்க வேண்டிய பொருள்கள்!



No photo description available.
மனித கொரோனா வைரஸ் வகைகள்...

இவ் வைரஸ்களின் மேற்பரப்பு கிரீடம் போன்ற கூர்முனைகளைக் கொண்டிருப்பதனால் கொரோனா வைரஸ்கள் என அழைக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ்கள் பிரதானமாக 4 கூட்டங்களாக காணப்படுகின்றன அவையாவன,

  •  அல்பா
  •  பீட்டா
  •  காமா
  •  டெல்டா

மனித கொரோனா வைரஸ் முதன் முதலாக 1960 களின் நடுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

7 வகையான கொரோனா வைரஸ் வகைகள் மனிதர்களைத் தாக்ககூடியவை என அறியப்பட்டுள்ளது.


No photo description available.



பொதுவான மனித கொரோனா வைரஸ் வகைகள்..

1 ) 229E (அல்பா கொரோனா வைரஸ்)
2) NL63 (அல்பா கொரோனா வைரஸ்)
3) OC43 (பீட்டா கொரோனா வைரஸ்)
4) HK01 (பீட்டா கொரோனா வைரஸ்)

ஏனய மனித கொரோனா வைரஸ் வகைகள்

5) MERS-CoV (பீட்டா கொரோனா வைரஸ்)
6) SARS-CoV (பீட்டா கொரோனா வைரஸ்)
7) 2019nCoV 2019 novel கொரோனா வைரஸ்

பொதுவாக உலகலாவிய ரீதியில் 229E, NL63, OC43 மற்றும் HK01 போன்ற கொரோனா வைரஸ்களின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

SARS-CoV (Severe Acute Respiratory Syndrome )

Severe acute respiratory syndrome corona virus முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. இவ் வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் 2002-2003 காலப்பகுதியில் கிட்டத்தட்ட 8098 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 774 பேர் மரணமடைந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் உலகலாவிய ரீதியில் இவ் வைரஸின் தாக்கம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

MERS-CoV (Middle East Respiratory Syndrome Coronavirus )

Middle East Respiratory Syndrome Coronavirus முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு சவுதி ஆரேபியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் பல பிற நாட்டைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் அனைவரும் சவுதி அரேபிய தீகபற்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019nCoV (2019 novel Coronavirus )

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சீனாவில் novel (new) கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டது. இவ் வைரசின் தாக்கம் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரத்தில் அதிகளவு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

அறிகுறிகள் மற்றும்நோயை கண்டறிதல்

அறிகுறிகள் :பொதுவான மனித கொரோனா வைரஸ்களான 229E,NL63,OC43 மற்றும் HKU1 இனால் பொதுவாக தடிமன் போன்ற இலேசான சுவாச குழுாய் நோய்களை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய்கள் பொதுவாக ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.

அறிகுறிகளாவன,

  •  மூக்கு ஒழுகுதல்
  •  தலைவலி
  •  இருமல்
  •  தொண்டைவலி
  •  காய்ச்சல்
  •  உடல் நிலை சரியில்லாதது போன்ற உணர்வு

மனித கொரோனா வைரஸ்கள் சில நேரங்களில் நிமோனியா ,மூச்சுக்குழல் அழற்சி போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்தும்.இருதய நோய் உள்ளவர்கள்,பலவீனமான நோய்எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள்,கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இலகுவாக இந் நோய்த் தாக்கத்திற்குள்ளாவார்கள்.

மற்றய மனித கொரோனா வைரஸ்களான MERS-CoV, SARS-CoV ஆகியவை கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியவை. MERS-CoV அறிகுறிகளில் பொதுவாக காய்ச்சல்,இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை அடங்குவதுடன் அவை பெரும்பாலும் நிமோனியாவுக்கு முன்னேறும். MERS-CoV தொற்றுக்குள்ளானவர்களின் 10 பேரில் 3-4 பேர் மரணமடைந்துள்ளனர்.

SARS-CoV அறிகுறிகளில் பெரும்பாலும் காய்ச்சல் தடிமன் மற்றும் உடல் வலி என்பவை அடங்குவதுடன் அவை பெரும்பாலும் நிமோனியாவுக்கு முன்னேறும்.

உலகெங்கிலும் 2004 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை SARS-CoV வைரஸ் தொற்று பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகளை கண்டறிதல்

உங்களுக்கு கடுமையான நோய்த்தாக்கம் அல்லது MERS இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் உங்களுடைய சுவாச மாதிரிகள் மற்றும் இரத்தத்தின் ஒரு பகுதியை ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வைத்தியரினால் ஆலோசனை வழங்கப்படலாம்.

அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுடைய சமீபத்திய பயண விபரங்கள் மற்றும் விலங்குகளுடனான தொடர்பு பற்றி வைத்தியரிடம் தெரிவித்தல் வேண்டும்.

அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் பெரும்பாலான MERS-CoV நோய்த் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன எனவே MERS-CoV கண்டறிய முயற்சிக்கும் போது பயண வரலாறு, ஒட்டகங்கள் மற்றும் ஒட்டக தயாரிப்புக்களின் பயன்பாடு தொடர்பான விபரங்களை வைத்தியரிற்கு தெரிவிப்பது அத்தியாவசியமானதாகும்.

பரவலடையும்முறை

மனித கொரோனா வைரஸ்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பரவுகின்றது.

  •  இருமல் மற்றும் தும்முவதனால் காற்றில் பரவுகின்றது.
  •  தனிப்பட்ட நெருங்கிய தொடர்புகள் மற்றும் கைகொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம்
  •  வைரஸ் உடைய பொருட்கள் மேற்பரப்பைத் தொடுதல் கைகளை கழுவும் முன் வாய்,மூக்கு,கண்கைளை தொடுவதன் மூலம்.
  •  மல மாசுபாடு (அரிதாக)


No photo description available.



எப்படிபாதுகாத்துக் கொள்வது?

மனித கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாப்தற்கு தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை

பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் தொற்று அபாயத்தைக் குறைக்க முடியும்.

  •  குறைந்தது 20 விநாடிகள் சவர்காரம் இட்டு அடிக்கடி உங்கள் கைகளை கழுவுதல் வேண்டும்.
  •  கழுவப்படாத கைகளால் உங்கள் கண்கள் மூக்கு வாய் தொடுவதை தவிர்க்கவும்.
  • நோய்வாய்பட்டவர்களுடனான நெருங்கிய தொடர்பை தவிர்த்தல்

மற்றவர்களை எப்படிபாதுகாத்துக்கொள்வது?


உங்களுக்கு தடிமன் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் மற்றவர்களைப் பாதுகாக்க முடியும்.

  • நீங்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள்.
  • மற்றயவர்களுடனான நெருங்கிய தொடர்புகளை தவிர்தல்
  • நீங்கள் இருமும் போது அல்லது தும்மும் போது உங்களின் வாயையும் மூக்கையும் திசுவினால் மூடி இருமுங்கள் அல்லது தும்முங்கள் பின் அத் திசுத்தாளை குப்பையில் இட்டு கைகளைக் கழுவுங்கள்.
  • பொருட்கள் மற்றும் மேற்பரப்புக்களை தொற்றுநீக்கியினால் தொற்றுநீக்கம் செய்தல்சிகிச்சை

Image may contain: text
மனித கொரோனா வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. இவ் நோய்கள் தாமாகவே குணமடையும் இருப்பினும் பின்வரும் விடயங்களை மேற்கொள்வதன் மூலம் போக்க முடியும்.

  • வலி மற்றும் காய்ச்சலிற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். (எச்சரிக்கை- குழந்தைகளுக்கு அஸ்பிரின் வழங்க வேண்டாம்)
  • தொண்டைப் புண் மற்றும் இருமலைக் குறைக்க ஈரப்பதமூட்டிய அறை அல்லது சூடான நீரில் குளித்தல்

நீங்கள் இலேசாக நோய்வாய்ப் பட்டிருந்தால்


  •  ஏராளமான நீராகாரங்களை எடுக்கவும்
  •  வீட்டில் தங்கி ஓய்வெடுக்கவும்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.


  தொகுப்பு  : மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment