கொரோனா கொடுத்திருக்கும் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது.
ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்குச் சொல்கின்றது
1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலமை மாறியது
குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்தது
உலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம்,
அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது
இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்
ஆம் பப்கள் என இரவெல்லாம் குடியும் ஆட்டமும் பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன,
மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது
மது குடி மையங்கள் மூடிக்கிடக்கின்றன,
மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன
இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த தமிழக திரையுலகம் மூடிக் கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றன
அவர்களை ஆட்டிவைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன
ஐரோப்பிய நிலை இன்ன்னும் மோசம்
ஆயுத கம்பெனிகள் அடைபட்டு கிடக்கின்றன, போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களைத் தாங்களே குணமாக்குகின்றனர்
அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை
பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா அட ஆமாம் ஆமாம் என ஒப்புக்கொள்கின்றது மங்கையர் இனம்
அரை டவுசர் போடும் வெள்ளைக்காரி முதல் புடவைக்காய் சுற்றும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மங்கையருக்கும் அவரவருக்கான உண்மை தேவை புரிகின்றது
ஆடம்பரம்
ஆட்டம்பாட்டம்
வெட்டி பந்தா
நிலையா அழகு வற்றிவிடும் செல்வம் என பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது
பணம் , பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது
மழலைக் கூட்டம்,
நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்
பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடப்படுகின்றன
தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று
அண்டார்டிக்கா பனிப்பாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று
ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால்விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்துவிட்டது காலம்
தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது
உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான்,
எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது
கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது
தன் திட்டம்/ கனவு/ வேகம்/ ஆசை/ எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன்
பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது
அடங்கா யானையினை தனி செல்லில் பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனைப் போல மனிதனைக் கட்டிவைத்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றது காலம்
ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்
தமிழகம் முருகப் பெருமானையும் அம்மனையும் ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது
ஐரோப்பாவோ எல்லாம் கோவில்களை காலியாக்கிய பாவம் என கண்களை துடைத்து ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது
சிரிய துருக்கி போர்,
சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும் பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது
போர்வெறிக் கூட்டம் காலமோஇயற்கையோ
கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை.
காலம் நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தைச் சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது
ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்
அதில் மெல்ல ஞானம் பெற்றுக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக.
ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்
அதில் மெல்ல ஞானம் பெற்றுக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக.
கொரோனா வைரஸ் குறித்த முழு எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
21 நாட்கள் லாக் டவுன் என்பது சேதத்தை குறைக்க அல்லது தள்ளிப்போட அல்லது அதற்குள் நாம் தயாராக
ஆகியவற்றுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் நேரமாகும்
தயவு செய்து சமூக இடைவெளி எனும் வலுவான ஆயுதத்தை மட்டும் வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றுவிட வேண்டாம்.
ஒருவருக்கு இன்னொருவருக்கும் இடையே ஆறடி இடைவெளி எப்போதும் அவசியம்
அநாவசியமாக கூட்டம் கூடுவது தவறு
கைகளை சோப் போட்டு அடிக்கடி கழுவிக்கொண்டே இருக்க வேண்டும்
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இப்போது அனைவரும் மாஸ்க் அணிவது குறித்த அறிவுரையை வழங்கியிருக்கிறது இது தொற்று நோய் பரவுவதை பெருமளவு குறைக்கிறது என்று சான்று பகர்கிறது. எனவே துணியால் செய்த மாஸ்க் அணிந்து அடுத்த மூன்று மாதங்கள் வெளியே செல்வது சிறப்பு
கட்டாயம் 60+ வயதுடைய தாத்தா பாட்டிமார்களுக்கு அடுத்த மூன்று மாத்ஙகளும் லாக்டவுன் என்றே மனதில் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய தேவையற்ற மருத்துவமனை விஜயங்கள் கூடாது.
அத்தியாவசிய தேவையற்ற மருத்துவமனை விஜயங்கள் கூடாது.
உக்கிரமான காலம் ஏப்ரல், மே, ஜூன்
சில கொள்ளை நோய் முன்னோக்கும் ஆய்வுகள்- ஜூன் மாதம் மூன்றாவது வாரம் இந்தியாவில் பீக் என்று அழைக்கப்படும் கொள்ளை நோய் உச்சி நிகழ்வு நிகழும் என்று கணிக்கின்றன
இந்த மூன்று மாதங்களை நாம் கடப்பதைக் கொண்டு நம்மால் இந்த போரில் எத்தகைய நிலையையும் வெற்றியையும் அடைய முடியும் என்று கூற முடியும்.
- சமூக இடைவெளி
- கைக்குட்டை / துணி மாஸ்க் அணிவது
- முதியோர்களை காப்பது
- கைகளை கழுவுவது
- நம் வீடு/ அலுவலகங்களை தொற்று நீக்கம் செய்வது
இனி நமது பதிவுகளில் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சிகளையும் பதிவுகளையும் காணலாம்..
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment