Monday 30 March 2020

கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்தியாவில் முதல் பலி !!

என்னடா இந்த நேரத்தில் மோடியை விமர்சிக்கானே.. என்று நாக்குப்பூச்சி கை நரம்புகளில் ஓட கொதிக்கும் சங்கியாக இல்லாமல் இந்த பதிவை பொறுமையாக படிக்கவும்*..
PM Modi to address the nation today on measures to combat ...கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி மார்ச் 12-ம் தேதி. கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்ற 76 வயதானவர் கொரோனா தாக்கி இறந்தார்.
அவர் சவுதி அரேபியா சென்று, பிப்.29ம் தேதி இந்தியா திரும்பினார்.
இந்த அபாய சங்குக்கு முன்னதாகவே இந்தியா குறட்டைத்தூக்கத்திலிருந்து முழித்திருக்க வேண்டும்.
அதாவது சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலில் டிசம்பர் மாத தொடக்கத்திலே உயிரிழப்புகள் ஆரம்பித்தன. அதை டிசம்பர் மாதம் இறுதியில் தான் சீனா உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், வுகான் நகரில் படித்த கேரளாவின் திருச்சூர் மாணவி ஜனவரி மாதம் இந்தியா திரும்பினார். அந்த நாள் ஜனவரி 30.
அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து வந்த கேரள மக்கள் 3 பேருக்கு கொரோனா தாக்கியது.
ஜனவரி 30ம் தேதி தொடங்கி, மார்ச் 3ம் தேதி வரை 33 நாட்களில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை வெறும் 9 தான். அதாவது ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்ததை மோடி அரசின் அதிகாரிகள் எப்படி கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.
நமது பக்கத்து நாடு சீனா….
அந்த நாட்டிலிருந்து வெவ்வேறு கண்டங்களில் இருக்கும் இத்தாலி, பிரான்ஸ், தென் கொரியா, ஈரான் என தாவி , அமெரிக்கா வரை கொரோனா தாக்கி இருக்கிறது.
இந்த நிலையில், மோடி அரசின் அதிகாரிகள் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்களா என்ற கேள்வி எப்படி எழாமல் இருக்கும்?
பக்கத்து நாட்டில் இருக்கும் நமக்கு எத்தகைய அச்சுறுத்தல் வரும் என்பதை இந்திய அரசின் ஐ.பி. மற்றும் ரா அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு சொல்லவில்லையா…?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர். இவர் வெளியுறவுத்துறை செயலராக சீனாவில் மட்டும் 7 அல்லது 8 வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு எத்தனை தகவல்கள் வந்து கொட்டியிருக்கும். அவருக்கு, இதைவிட முக்கியமான பணி காத்திருந்தது.
ஜனவரி முதல் பிப்ரவரி வரை கேரளா, மகாராஷ்டிரா, ஆக்ரா, ஜெய்ப்பூர் என கொரோனா தாக்கப்பட்டவர்கள் எல்லாருமே வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர்கள். அல்லது சுற்றுலா வந்த வெளிநாட்டினர்.
இது போதாதா…? வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்களோ அல்லது சுற்றுலா பயணிகளோ தான் கொரோனாவை பரப்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள.
என்ன செய்திருக்க வேண்டும்…. இந்திய அரசு?
பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்தே மத்திய அரசு , கொரோனாவை எதிர்க்க தயாராகி இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு வரும் சர்வதேச விமானங்களை இறக்குவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்க வேண்டும்.
 முதலில் சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று தடை விதித்திருக்க வேண்டும்.
#அடுத்து,
சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியர்களே இந்தியாவுக்குள் வரவேண்டும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
 மூன்றாவது :சர்வதேச விமானங்கள் டெல்லி, மும்பை, கொல்கட்டா, ஐதராபாத், சென்னை ஆகிய ஐந்து விமான நிலையங்களில் மட்டுமே தரையிறங்க முடியும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
இந்த ஐந்து விமான நிலையங்களில் வந்து இறங்கும் அத்தனை பேரையும் ராணுவ முகாம் போல இயங்கும் மையத்துக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அங்கேயே 21 நாட்கள் தங்க வைத்து சிகிச்சை முடிவில், கொரோனா இல்லை என்ற உறுதியின் பேரில் அவர்களது வீட்டுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
இப்படி அறிவித்திருந்தால், இந்நேரம் கொரோனாவின் தாக்குதலை பாதி முறியடித்திருக்கலாம்.
சரி என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் மோடியின் அதிகாரிகள்…
யாருக்குமே கொரோனா குறித்த விவரமும் அச்சமும் தெரியாதா…
தெரியும்…. இருந்தாலும் அதை விட முக்கியமானதுக்கு
அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக, இந்திய வெளியுறவுத்துறையின் புலி அமைச்சர் ஜெயசங்கர் துடித்துக்கொண்டிருந்தார்…
அவர் மட்டுமல்ல…
ஜனவரி முதல் பிப்ரவரி வரை மோடியும் அவரது ஒட்டுமொத்த அதிகாரிகளும் துடித்துக்கொண்டிருந்தது யாருக்காக…
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்காக….
அவர் பிப்ரவரி 24-25ம் தேதிகளில் இந்தியா வருகைக்காக ஒரு மாதமாக இந்திய அரசும், இந்திய அதிகாரிகளும் இரவு பகலாக வேலை பார்த்தார்கள்.
ஒன்றுக்கும் உதவாத கிரிக்கெட் மைதானத்தை சீரமைத்தார்கள்.
ஏழைகள் வசிக்கும் சேரிக்கும் சீமான்கள் வசிக்கும் பகுதிக்கு இடையே சுவர் எழுப்பினார்கள். அதாவது, அகமதாபாத் குடிசைப்பகுதிகளை டிரம்ப் கண்ணிலிருந்து மறைக்க, 80 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டினார்கள்.
அமெரிக்க அதிபர் வந்து சென்றதுமே மார்ச் 1ம் தேதியாவது இது போன்ற பணிகளை முடுக்கிவிட்டார்களா?
இல்லையே!
இந்தியாவின் முதல் கொரோனா பலி மார்ச் 12.
அதன் பிறகாவது மோடியின் அதிகாரிகள் துடித்தார்களா…. இல்லையே.
என்ன மாதிரியான விளைவுகள் வரலாம் என்று மோடிக்கு அவர்கள் ரிப்போர்ட் கொடுத்தார்களா என்றால்… யாருக்கும் தெரியாது.
திடிரென…. நம் மன்னர் மோடி வியாழக்கிழமை அதாவது 19.3.20 அன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சிகளில் தோன்றினார் .
’’வரும் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு…. வீட்டிலேயே இருக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எங்கேயும் செல்ல வேண்டாம். மாலை 5 மணிக்கு டாக்டர்களை பாராட்ட, கைத்தட்டுங்கள்’’ என்றார்.
ஆனால், 19-ம் தேதியே மோடி ஒரு விஷயத்தை தெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
இனி வரும் நாட்களில் தொடர் ஊரடங்கு உத்தரவு வரலாம்…
அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும்.
இதற்கு தேதி குறித்துவிட்டாகிவிட்டது.
அந்த நாள்………24.3.20 – செவ்வாய்க்கிழமை.
அதற்குள் உங்கள் சொந்த ஊருக்கு செல்பவர்கள் செல்லலாம்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து ரயில்களும் இலவசமாக இயக்கப்படும்.
மாநிலங்கள் பஸ்கள் இலவசம்.
அதுமட்டுமில்லை…. வருடம் 1 லட்சம் வருவாய்க்கு கீழே இருப்பவர்களுக்கு…..
இன்று முதல் (19ம் தேதி) 24ம்தேதிக்குள் 3 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் சேர்ந்துவிடும். அதை வைத்து தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு, வீட்டுக்குள்ளே அடைந்துகிடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.
ஆனால், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், 24ம்தேதி இரவு 8 மணிக்கு தோன்றினார்.
’’இன்று இரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு’’ என்றார்.
எத்தனை மக்கள் அடித்துப்பிடித்து பஸ்களில் ஊர்ப் போய் சேர்ந்தார்கள். அக்கொடுமைத்தான் பார்த்தோம்.
24-ம்தேதி இரவு அவர் அறிவித்த 21 நாள் முடக்கத்தில், இந்தியா முழுவதும் சரக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர்கள் –கிளினர்களின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா….’
ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று மனமுருக பேசினீர்களே..
அவர்கள் எப்படி ஊர் போய் சேருவார்கள். அல்லது அந்தந்த மாநிலங்களில் சரக்குகளை இறக்கிவிட்டு, அவர்கள் தங்க அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்த்தீர்களா…?
மக்கள் நன்மை செய்ய வேண்டிய பணியில்
ஏதோ பாகிஸ்தான் மீது தொடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் போலவே தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஒரு நாள் இரவில் பழைய ரூபாய் நோட்டுக்கள் ரத்து என்று சொல்வது போலவே செயல்படுகிறது….
130 கோடி மக்களின் நலன் காக்க வேண்டிய செயல்திட்டங்களில் என்ன செய்திருக்க வேண்டுமோ அத்தனையும் மோடியின் அதிகாரிகள் செய்யவில்லை….
இது யார் தவறு….?
மோடியின் அதிகாரிகள் தவறா….
ஒரு வேளை அதிகாரிகள் எடுத்துரைத்தும் மோடி அவர்கள்
கண்டும் காணாமல் இருந்தாரா….?
இனி ஒரு வைரஸ் இது போன்று தாக்குதலை எந்த நாட்டில் தொடங்கினாலும்…
இந்திய குடிமக்களை கூட காப்பாற்ற வேண்டாம்…
மோடியையும் மோடி சுற்றி, இந்தியாவின் நலனையே சிந்தித்துக் கொண்டிருக்கும் அதிகாரிகளை காப்பாற்றிக்கொள்ளவாவது அந்த அதிகாரிகளிடமே
நல்ல நடிவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய்
கோரிக்கை வைக்கிறோம்.
வாழ்க மோடி அவர்கள்….
வாழ்க மோடியின் அதிகாரிகள்….
நன்றி : க.குபேந்திரன்(பத்திரிகையாளர்)

No comments:

Post a Comment