Sunday, 6 April 2014

தமிழகத்தில் போலி டாக்டர்கள் பற்றிய விழிப்புணர்வு பார்வை...

மருத்துவ சுகாதார பணிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.தமிழகம் முழுவதும் 30,000 போலி மருத்துவர்களுக்கு மேல் உள்ளதாகவும், கிராமங்கள் கிராமப்புறம் மட்டுமின்றி நகர்புறங்களில் கூட போலி டாக்டர்களின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. முறையாக எம்.பி.பி.எஸ் படிக்காமல் டாக்டரிடம் கம்பவுண்டர், வார்டுபாய் போன்ற வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போலி டாக்டர்கள் சிறிய அளவில் கிளினிங் நடத்தி வருகின்றனர். ஏழை மக்களின் உயிருடன் விளையாடும் இவர்களுக்கு கிராமப்புறங்களில் மவுசும் அதிகமாக உள்ளது. போலி டாக்டர்கள் கைது என்று செய்தித்தாள்களில் அவ்வப்போது பார்க்கலாம். சில நாட்களிலேயே அந்த பரபரப்பு ஓய்ந்துவிடும். மக்களும் அதை மறந்து விடுவர். சமீபத்திலும் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படி சில மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போலி டாக்டர்களை அடையாளம் காணும் பணிகள் நடக்கின்றனவா என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் இப்போது அவரவர் எல்லையைத் தாண்டி அலோபதி சிகிச்சை செய்து வருகின்றனர்.

எம்பிபிஎஸ் முடிப்பதுடன், குழந்தை, மகப்பேறு, காசநோய் என பல்வேறு சிறப்பு மருத்துவ படிப்புகளையும், முதுநிலை சிறப்பு மருத்துவமும் படித்துவிட்டு தனியாக மருத்துவமனை  நடத்துபவர்களை விட அதிக வருமானம் பெறுபவர்களாக கிராமப்புறங்களுக்கு புற்றீசல் போல படையெடுக்கும் போலி டாக்டர்கள் உள்ளனர்.. ஒருவர் சராசரியாக 8ம் வகுப்போ, 10ம் வகுப்போ, பிளஸ் 2 படிப்போ அல்லது டிப்ளமோ இன் பார்மஸி முடித்துவிட்டு மருந்துக்கடைகளில் சேல்ஸ் மேனாகவோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாகவோ பல ஆண்டுகள் வேலை செய்த பின்னர், தங்களுக்கு தெரிந்த மருந்துகள் எந்தெந்த வியாதிகளுக்கு வழங்கப்படுகிறது என்ற அனுபவத்தை கொண்டு தனியாக கிளினிக் நடத்துபவர்களே போலி டாக்டர்கள் என்று அடையாளம் காட்டப்படுகின்றனர். மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களிலேதான் கிளினிக்கை தொடங்குகின்றனர். ஜுரம், தலைவலி, வயிற்றுப்போக்கு, உடல்வலி, மூட்டு வலி என்று சாதாரண வியாதிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு இவர்கள் அளிக்கும் வீரியம்மிக்க மருந்துகளின் தன்மையால் வியாதி உடனே குணமாவதால் கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளுக்கு வரும் நம்பிக்கையே மூலதனமாகும். சாதாரண பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டாலே குணமாகும் ஜூரம், தலைவலிக்கு கூட அதனுடன் ஸ்டீராய்டு வகை மருந்துகளை கலந்து வழங்குகின்றனர். இதனால் விரைவில் நோய் குணமாவதால் அடுத்தடுத்து இவர்களிடம் கிராமத்தினரே அதிகமாக வருகின்றனர். அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அவர்களுக்கு தெரிவதில்லை.

 ஸ்டீராய்டு வகை மருந்துகள்..

பொதுவாக ஸ்டீராய்டு வகை மருந்துகள் அத்தியாவசியமான உயிர்காக்கும் மருந்துகள் ஆகும். நமது உடலிலேயே ஸ்டீராய்டு சுரப்பிகள் உள்ளன. இவைகள் நாம் உடல் உபாதைக்காக எடுத்துக் கொள்ளும் மருந்தை கிரகித்துக் கொள்ள உதவுவது. இந்த ஸ்டீராய்டு வகை மருந்துகள் ஆபத்தான காலங்களிலோ அல்லது அத்தியாவசியமான நேரங்களிலோ நோயாளிகளுக்கு டாக்டர்களால் பயன்படுத்தப்படும். இந்த வகை மருந்துகளை அடையாளம் காண, அந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த மருந்து அட்டைகள் மீதோ அல்லது பெட்டிகள் மீதோ சிவப்பு கோடு போட்டிருக்கும். இந்த மருந்துகளை கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனைப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாசகம் இடம்பெற்றிருக்கும். உதாரணத்துக்கு, டெக்ஸா மெத்தசோன், குளோரோபெனரமின் போன்ற மருந்துகள். இவைகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் என்றால் குறிப்பிட்ட நகர்ப்புற மருந்து கடைகளும், கிராமப்புற மருந்துக்கடைகளும் கூட கிளினிக்குகளாக மாறி சிகிச்சை அளிப்பதும் மறுபுறம் நடந்து வருகிறது. இதனை மருந்துக்கடைக்காரர்கள் கவுன்டர் சேல்ஸ் என்பார்கள். உரிய மூலப்பொருள் அளவு இல்லாத சாதாரண கம்பெனிகளின் மருந்துகளை இவர்கள் தங்களிடம் ஜுரம், உடல்வலி, கால் மூட்டு வலி, காயம் என்று வரும் அப்பாவிகளுக்கு அளித்து பணத்தை பிடுங்கும் வேலையை செய்கின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1 லட்சம் பேர் குறைந்த கல்வித்தகுதியுடன் கிராமங்களில்தான் அலோபதி சிகிச்சை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. கிராம மக்களின் விழிப்புணர்வின்மையை பயன்படுத்தி போலியான டாக்டர்கள் புற்றீசல்கள் போல கிராமங்களை நோக்கியே படையெடுக்கிறார்கள். 

இவர்கள் தங்களது கிளினிக்குகளில் ஆஐஎம்பி, பிஎம்பி, எம்எம்பி என்பன போன்ற சான்றிதழ்களை பிரேம் போட்டு பார்வைக்கு வைத்திருப்பர். அந்த சான்றிதழ்களில் குறிப்பிடப்படும் கல்வி நிறுவனங்களின் உண்மை தன்மை என்பது கேள்விக்குறி. கிராமப்புற மக்களின் உயிரோடு விளையாடும் இந்த போலி டாக்டர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத்துறையோ, காவல்துறையோ அல்லது இந்திய மருத்துவ சங்கமோ, போலி டாக்டர்களை கண்டறியும் குழுவோ கண்மூடி மவுனம் சாதிப்பது எதற்காக? என்று சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வியாகும். இதுகுறித்து அரசு டாக்டர்கள் சிலரிடம் கேட்டபோது, போலி டாக்டர்கள் சாதாரண நோய்களுக்கு அளிக்கும் மருந்துகள் எல்லாம் சரியான அளவுதானா என்பது கேள்விக்குறி. நோயை சரியாக கணிக்காமல் அளிக்கும் மருந்து என்றால் சிக்கல்தான். 

நோயாளிகளுக்கு அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப, முறையாக படித்து பட்டம் பெற்று, மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற அலோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியும். இதுபோன்ற பணி செய்த அனுபவத்தை கொண்ட போலி டாக்டர்களால் உயிருக்கு ஆபத்துதான் மிஞ்சும். குறிப்பாக, நாங்களே நோயாளிக்கு வழங்க தயங்கும் மருந்துகளை கூட, குறிப்பாக ஸ்டீராய்டு வகை மருந்துகளை இவர்கள் தாராளமாக வழங்குகின்றனர். 

பொதுமக்களும் இவர்களிடம் சென்று எதிர்கால விளைவுகளை பற்றி அறியாமல் சிகிச்சை எடுக்கின்றனர். எம்.பி.பி.எஸ் பட்டம் பெறாமல் அலோபதி சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது அரசு உரிய நடவடிக்கையை தொடர்ந்து நிரந்தரமாக எடுத்து கட்டுப்படுத்த  வேண்டும். அதோடு சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி படித்தவர்கள் அலோபதி மருத்துவமான ஆங்கில மருத்துவமுறையை கையாளக்கூடாது என்பது மருத்துவ விதி. அதேபோல், அலோபதி டாக்டர்களும் மேற்கண்ட பாரம்பரிய சிகிச்சை முறைகளை கையாளக்கூடாது. இவ்வாறு இருக்கும்போது, மருத்துவமே படிக்காதவர்கள் நாங்கள் பாரம்பரிய ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் என்றுகூறிக் கொள்வதும், அந்த முகமூடியுடன் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம். 

மேலும்   போலி டாக்டர்கள் பற்றி  அறிய....

 போலி டாக்டர் கைது: மாத்திரைகள் 26 மே 2010 
போலி டாக்டர் கைது: மாத்திரைகள் பறிமுதல். 

http://www.dinamalar.com/News_Detail.asp?id=6624

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் 5 மே 2010 விசாரணையில்,வர் போலிடாக்டர்என்பதுஉறுதி
செய்யப்பட்டதால்கைது செய்தனர். அவரிடம் நடத்திய
விசாரணையில் 

http://www.dinamalar.com/News_Detail.asp?id=1602
ரூ.1 கோடி மோசடி செய்த போலி டாக்டர் 6 நவம்பர் 2011  கோவை : போலியான டிரஸ்ட் பெயரில், 1 கோடி ரூபாய்
 வரை பண மோசடி செய்த, போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். 

http://www.dinamalar.com/testing/2011/News_Detail.asp?Id=344207

போலி டாக்டர் கைது Dinamalar5 மார்ச் 2011  மேலும்,
 இவர் போலி டாக்டர் என்பதும் தெரிந்தது. போலி டாக்டர்சக்தியை,
 தலைவாசல் போலீஸார் நேற்று கைது செய்து, சிறையில் 

http://www.dinamalar.com/news_Detail.asp?Id=200018
மணவாளக்குறிச்சியில் போலி டாக்டர் 12 ஜூன் 2010  மணவாளக்குறிச்சி: மணவாளக்குறிச்சியில் பல ஆண்டுகளாக
 ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். 

www.dinamalar.com/News_Detail.asp?Id=17524
போலி டாக்டர் கைது21 ஜூன் 2011  லாலாப்பேட்டை போலீஸார்,
போலி டாக்டர் கிருஷ்ண மூர்த்தியைகைது செய்தனர். லாலாப்பேட்டை
 போலீஸ் எஸ்.ஐ., சுமதி 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=261921&Print=1
நோயாளியாக வந்து சிகிச்சை பெற்றவர் 28 செப்டம்பர் 2010 
தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி » இந்தியா. நோயாளியாக
 வந்து சிகிச்சை பெற்றவர் டாக்டரானார்: போலி டாக்டர் கைது 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95087
செஞ்சியில் போலி டாக்டர் கைது Dinamalar26 ஜூலை 2010 
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் போலி
டாக்டர்
 ஒருவர்கைது செய்யப்பட்டார்.
மேல்மலையனூர் வளத்தி பகுதியில் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=47720
போலி டாக்டர் கைது Dinamalar5 மே 2010  கவரைப்பேட்டை
போலீசார், போலி டாக்டர் ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து
 வருகின்றனர். மேலும் சம்பவம் செய்திகள்: 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=1618
அச்சன்புதூர் அருகே 2 போலி டாக்டர் 13 ஜூன் 2010 
நெல்லை மாவட்டத்தில் பரவலாக போலி டாக்டர்கள்
கைதுசெய்யப்பட்டுள்ளனர். அச்சன்புதூர் அருகே வடகரை
தைக்கா தெருவில் காஜா 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=18359
செங்கல்பட்டில் போலி டாக்டர் கைது8 நவம்பர் 2011 
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், பொது மக்களுக்கு மருத்துவ
 சிகிச்சை அளித்த மருந்தாளுனரை(பார்மசிஸ்ட்), போலீசார் கைது 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=345453&Print=1
நெல்லையில் போலி டாக்டர் கைது - Dinamalar1 செப்டம்பர் 2010  திருநெல்வேலி : நெல்லையில்
 போலி டாக்டர் ஒருவர்
கைதுசெய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடையம்
பகுதியைச் சேர்ந்தவர் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75215
போலி டாக்டர் கைது Dinamalar13 ஜூலை 2010  ஸி.,
 படித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.மேச்சேரி தபால்
அலுவலகம் அருகே கணேசன் என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். 

http://www.dinamalar.com/News_detail.asp?Id=38486
கன்னியாகுமரியில் போலி டாக்டர் கைது 13 ஜூன் 2010  கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கிளினிக்
நடத்திவந்தபோலிடாக்டரை போலீசார் கைது செய்தனர். போலியான சான்றிதழ்கள் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=18072
27 ஆண்டுகளாக கிளீனிக் நடத்திய போலி 18 நவம்பர் 2010 
ஊசி, குளுக்கோஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்த
 போலீஸார், போலி டாக்டர் ராஜாவையும் கைது செய்தனர். 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=128945
33 ஆண்டுகள் மருத்துவம் பார்த்த போலி 19 ஜூலை 2010  தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி » தமிழ்நாடு.
 33 ஆண்டுகள் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42860
போலி டாக்டர் கைது Dinamalar1 செப்டம்பர் 2010  Dinamalar
updated the top news every hour which includes top news stories,
top headlines news, world top news, top online news, updated
 top business news, latest news, top sports news and covering
virtual tour hindu 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=74702

சிவகங்கையில் 12 போலி டாக்டர் கைது 12 ஜூன் 2010 
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த சோதனையில்,
 பள்ளத்தூரை சேர்ந்த போலி டாக்டர் மகேஷ்வரன் (52), மதகுபட்டி 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17463
 Dinamalar updated the top news every hour which includes
 top news stories, top headlines news, world top news, 
top online news, updated top business news, latest news, 
top sports news and covering virtual tour hindu 

போலி பெண் டாக்டர் கைது! – Dinamalar17 ஜூன் 2010 
சோதனைக்கு சென்ற போலீசுக்கு ஊசி: போலி பெண்
 டாக்டர் கைது! தேனி மாவட்டத்தில் இது வரை
 43 போலி டாக்டர்கள் கைது செய்யப் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=21049&Print=1

போலி டாக்டர் கைது Dinamalar2 செப்டம்பர் 2010  திருநெல்வேலி :
 நெல்லையில் பிளஸ் 2 படித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
 நெல்லை மாவட்டம், கடையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே 


போலி பெண் டாக்டர் கைது! – Dinamalar17 ஜூன் 2010  சோதனைக்கு
சென்ற போலீசுக்கு ஊசி: போலி பெண் டாக்டர் கைது! தேனி மாவட்டத்தில் இது வரை 43 போலி டாக்டர்கள் கைது செய்யப் 
போலி டாக்டர் கைது Dinamalar2 செப்டம்பர் 2010  திருநெல்வேலி :
 நெல்லையில் பிளஸ் 2 படித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
 நெல்லை மாவட்டம், கடையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே http://www.youtube.com/watch?v=4KtjiBQXR94


என்னுரை :

 போலி டாக்டர்கள் கைது என்பது தமிழகத்தில் சாதாரணமான விஷயமாகி விட்டது. மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவிற்கு டாக்டர்கள் / மருத்துவர்கள் இல்லை என்பது தான் உண்மை. நகரங்களில் டாக்டர்கள் இருக்கலாம், கிளினிக்குகள், சோதனை நிலையங்கள் முதலிய வசதிகள் இருக்கலாம். ஆனால், எல்லோரும் அவ்வாறு பணத்தை செலவழித்துக் கொண்டு செல்ல முடியாது. பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கின்றனர். ஆனால், அரசு மற்றும் பொது மருத்துவமனைகளின் நிலை என்னவென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அவசரத்திற்கு என்றால், முக்கியமான டாக்டர், மருந்து, உபகரணம், இருக்காது, வேலை செய்யாது. இதனால் நோயாளியின் கதி அதோகதிதான்.

 இந்நிலையை மாற்ற நாம் மற்றும் மருத்துவர்கள் என்ன செய்ய வேண்டும்?.

  1. முதலில் மருத்துவப் படிப்பு என்பது பணக்காரர்களுக்கு அல்லது லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் சீட் கிடைக்கும் என்ற நிலையினையும் மாற்ற வேண்டும். படிக்க வேண்டும் என்ற ஆசை, மனப்பாங்கு, தகுந்த பாவம் உள்ளவர்களை நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படலாம். அப்பொழுது அந்த பணபலம் குறையும்.
  2. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவேண்டும். நூற்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இல்லை, உணவு சுத்தமாக ஆரோக்யமாக இருக்க வேண்டும்.
  3. மருத்துவர்கள் தங்களது பொதுநல சேவை, தார்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  4. பணம் சம்பாதிக்க வேண்டும், ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்ற லாபநோக்கில் இருக்கும் போது, அவர்களால் நிச்சயமாக தங்களது மருத்துவத் தொழிலை நியாமாக செய்ய முடியாது.
  5. அரசு / பொது மருத்துவ மனைகள் அதிகமாக்கப் பட வேண்டும். நகரங்களைத் தவிர, நகர் புறங்கள், கிராமங்களில் மருத்துவ மனைகள் அதிகமாக்கப் படவேண்டும்.
  6. டாக்டர்கள் மாதத்திற்கு ஒருதடவை அங்கு சென்று மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். மருந்து கம்பெனிகள் அதற்கு “ஸ்பான்சர்” செய்ய வேண்டும்.
  7. மருந்துகள், பரிசோதனைகள், சோதனைகள் முதலியவற்றின் விலை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது அரசு அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும். இதில் ஏகப்பட்ட ஊழல்கள் / மோசடிகள் / வரியேய்ப்புகள் நடந்து வருகின்றன. அவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
  8. ஆயுர்வேத, சித்தா, யுனானி, அக்குபஞ்சர்  முறைகளிலும் நவீனமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு உபயோகமாக செயல்படுத்த வேண்டும். “கிளினிகல்” முறைகள் பின்பற்றப்படவேண்டும். நோயாளிகளின் “மருத்துவ சிகிச்சை சரித்திரம்” (கேஸ் ஹிஸ்டரி) பாதுகாக்கப்படவேண்டும்.
  9. கடுமையான தண்டனைகள் மற்றும் சட்டங்கள் இல்லாதது மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் தான் போலி மருத்துவர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. போலி மருத்துவர்களாக அடையாளம் கண்டு கைது செய்யப்படுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது மற்றும் 6 மாத சிறை தண்டணை மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எளிதாக அபராதத்தை கட்டி விட்டு மீண்டும் வேறு இடங்களுக்கு சென்று முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். போலி மருத்துவர்கள் குறித்த குற்றச்சாட்டு எழும்போது மட்டுமே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.  போலி மருத்துவர்களை கூண்டோடு ஒழிக்க போலி மருத்துவர்கள் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து 3 வருட தண்டணை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் போலி மருத்துவர்களை ஒழிக்க முடியும்.
  10. மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் மருத்துவ வசதியை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் போலி டாக்டர்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்...
ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment