இந்தியாவில் ஆண்டுதோறும் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பைத் தரும் துறை டெக்ஸ்டைல் தான்.கடந்த சில ஆண்டுகளில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளின் பயன்பாட்டை டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறை அதிகம் எடுத்துக் கொள்கிறது. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறிவிடுகிறது. இதனால் தான் உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் சரி டெக்ஸ்டைல் பொருட்கள் கடுமையான முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன.
ஸ்பின்னிங், வீவிங், கார்மென்ட் மேனுபேக்சரிங், டெக்ஸ்டைல் மெசினரி மேனுபேக்சரிங், விற்பனை மற்றும் சேவை, குவாலிடி கன்ட்ரோல் என டெக்ஸ்டைல் டெக்னாலஜி பல பிரிவுகளை கொண்டிருக்கிறது. இத்துறையில் பட்டப்படிப்பும், பட்டமேற்படிப்பும் உள்ளன. டில்லி ஐ.ஐ.டி., இதில் ஒன்றரை ஆண்டு பட்ட மேற்படிப்பை தருகிறது.
கெமிகல் பிராசசிங், மெசின் டிசைன்,
டெக்ஸ்டைல் புராடக்ட் இன்ஜினியரிங் ,
சில்க் டெக்னாலஜி.
ஆகிய பாடங்கள் டெக்ஸ்டைல்பிரிவில் காணப்படுகின்றன.
காட்டன் யார்ன் தயாரிக்கும் கழகங்கள், ஆய்வகங்கள், குவாலிட்டி கன்ட்ரோல், அக்ரோ டெக்ஸ்டைல், மெடிக்கல் டெக்ஸ்டைல், ஸ்பின்னிங் மில் போன்றவற்றில் எண்ணற்ற டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் தேவைகள் இருக்கின்றன. சுயமாக நிட்வேர் தயாரிப்பதிலும் இப்படிப்பை முடிப்பவர்கள் ஈடுபடலாம். சைசிங் யூனிட், டெக்ஸ்டரிங் யூனிட், பிராசஸ் ஹவுஸ், பினிசிங் யூனிட் போன்றவற்றையும் சுயமாக தொடங்கலாம்.
இப்படிப்பை முடிப்பவருக்கு தொடக்க சம்பளம், நிறுவனங்களைப் பொறுத்து, மாதம் ரூபாய் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தரப்படுகிறது. திறமையானவர்களுக்கு, தொடக்க சம்பளமே ரூபாய் 20 ஆயிரம் வரை தரப்படுகிறது.
சில முக்கிய கல்வி பயிலும் நிறுவனங்கள்..
பிளஸ் 2 முடித்த பின் அந்தந்த கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற்று பட்டப்படிப்புகளில் சேர முடியும்.
* ஐ.ஐ.டி., டில்லி (web.iitd.ac.in)
* பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (www.psgtech.edu)
* குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (www.kct.ac.in)
* பாவேந்தர் பாரதிதாசன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி (www.pabcet.com)
* டெக்னாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ஸ்டைல் , அரியானா (www.titsbhiwani.ac.in)
* ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை (www.jec.ac.in)
*சமிஸ்ரா சிந்தடிக் மற்றும் பட்டு ஆலை ஆராய்ச்சி கூட்டமைப்பு, மும்பை.
* எல்.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆமதாபாத்.
* அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, சென்னை.
* ஐ.ஐ.டி., டில்லி (web.iitd.ac.in)
* பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (www.psgtech.edu)
* குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (www.kct.ac.in)
* பாவேந்தர் பாரதிதாசன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி (www.pabcet.com)
* டெக்னாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ஸ்டைல் , அரியானா (www.titsbhiwani.ac.in)
* ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை (www.jec.ac.in)
*
* எல்.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆமதாபாத்.
* அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, சென்னை.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment