அமெரிக்காவில் நாய் கூட மதிக்காத ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை எதுன்னு கேட்டீங்கன்னா, அது நம்மூரில் கொடி கட்டிப் பறப்பதா நான் கேள்விப்பட்ட KFC. அந்தக் கடைகளுக்குள்ளே போகும் ஆட்களைப் பார்த்தாலே. அதன் தரம் தெரிஞ்சிடும். அதுக்காக.. ரொம்ப டீஸண்டா தெரியும் மத்தக் கடைகள் எல்லாம். நம்ம உணவை ISI முத்திரையோடவா தயாரிக்கறாங்கன்னு நினைக்கறீங்க?
கே.எப்.சி/.KFC (Kentucky Fried Chicken) நாம் எல்லோராலும் நன்கு அறியப்படும் ஒரு பொழுதுபோக்கு உண்டிச்சாலை ஆகும். கசாப்பு கடைகளில் கோழி கறிகளை வாங்கி வீட்டில் சமைத்து உண்டோம் ஒரு காலத்தில், ஆனால் இப்போது சிக்கன் என்றாலே கே எப் சி என்றாகிவிட்டது. மேலும் அங்கு சுவையும் அருமையாக இருக்கிறதாம்.
நாம் அந்த சுவையான சிக்கனை சுவைத்து உண்கிறோம், ஆனால் அந்த சுவையான சிக்கனை கே எப் சி எப்படி தயரிக்கிராகள் என்று யாருக்கும் தெரியாது. கசாப்பு கடைகளில் கூட கோழிகளை ஒரு வித மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்வார்கள் ஆனால் கே எப் சி அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்று கேட்ப்பார்கள் போல.
எண்ணிக்கையின்றி சிறு சிறு கோழி குஞ்சிகளின் அலகுகளை இயந்திரத்தின் மூலம் உடைத்து விடுகிறார்கள் காரணம் அப்போதுதான் அவைகள் அதிகாமாக தீனிகளை உண்ணும்.
பிறகு அக்கோழி குஞ்சிகளை எல்லாம் ஒரே இடத்தில் அடைகிறார்கள், அங்கு அவைகளால் சுற்றித்திரிய கூட முடியாது. மேலும் குஞ்சிகள் கொலு கொலுவென்று வலர எதோ ஒரு தீவனத்தை அவைகளுக்கு கொடுக்கிறார்கள். அத்தீவனத்தை உண்டு வளரும் குஞ்சிகள் தங்கள் இயல்பான இடையை விட அதிகமான இடையை கொண்ட கொலு கொலு கோழியாக வளருகின்றன. அந்த கொலு கொலு கோழிகள் தங்கள் அதிக இடை காரணத்தால் நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுகின்றன.
முழுமையான வளர்ச்சி அடைந்த கோழிகளை தொழிற்சாலைக்குள் அவைகளை சுவையான சிக்கெனாக மாற்றுகிறார்கள். இங்கு இயந்திரத்தின் மூலம் ரோமத்தை பிரிக்கிறார்கள் கோழிகள் உயிருடன் இருக்கும் நிலையில். பிறகு சுழற்றும் மெல்லிய தகுடுகளின் மூலம் வரிசைகளில் வரும் கோழிகளை இரக்கமின்றி கொள்கிறார்கள். இத்தனை கொடுமைகலுக்கு பின்னரே அவற்றை சுவையான சிக்கன்களாக நமக்கு பறிமாறுகிறார்கள்.
துரித உணவுகள் என்பவை நவீன வாழ்க்கையில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறி வருகிறது!
இத்தகைய உணவுகளால் என்ன ஏற்படுகிறது?
உடல் எடை அதிகரிப்பு,சர்க்கரை நோய்,மார்பகப்புற்று நோய்,இதய நோய்கள்,இரத்த அழுத்தம்.கடந்த 30 வருடங்களில் எடை அதிகமான குழந்தைகள் 30% அதிகரித்துள்ளனர்.
மேலும் 60% அமெரிக்கர்கள்,13% குழந்தை,இளைஞர்கள் எடை அதிகம் ஆகியுள்ளனர்.
கடந்த வருடம் 115 பில்லியன் டாலர்கள் துரித உணவுக்காக அமெரிக்கர்கள் செலவிட்டுள்ளனர். இது அவர்கள் கார் வாங்க,கம்புயூட்டர் வாங்க,உயர்படிப்புக்கு செலவு செய்த தொகையைவிட அதிகம்!!
KFC கோழி / Brosted விரைவு உணவுகளிள் உள்ள பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.
1.ஆடோலய்ச்ட் ஈஸ்ட்(Autolyzed Yeast): ஈஸ்ட் என்பவை நம் குடலில் காணப்படும் உயிரிகள். ஆனால் விரைவு உணவுகள் குடலில் அதிக ஈஸ்டை உருவாக்கி அந்த அதிகமான நச்சுப் பொருட்கள் குடலின் மேற்பரப்பை பாதிக்கின்றன.
2. மோனோ சோடியம் குளூட்டமேட்Monosodium Glutamate:இது சுவைகூட்ட உபயோகிக்கப்படுகிறது. இது ஒரு நரம்புமண்டலத்தைத் தாக்கும் நச்சு. அல்சீமர்,பார்கின்ஸன்,கற்கும் திறன் குறைதல் ஆகியவற்றுக்கும் இந்தப் பொருளுக்கும் தொடர்பு உள்ளது.
3. Partially Hydrogenated Soybean and Cottonseed Oil: சோயா,பருத்தி எண்ணைகளில் ஒமேகா6 கொழுப்பு அதிகமாக உள்ளது. அதிக அளவு இந்த எண்ணை ஒமேகா6 கொழுப்பு இதய நோய்,புற்றுநோய்,மூளை செயல் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும்.
4.சுத்திகரித்த உப்பு: இயற்கையான கடல் உப்பு உடலுக்கு நல்லது. இதனை சுத்திகரிக்கும்போது சேர்க்கும் ரசாயனங்கள் உடலுக்கு உகந்ததல்ல! மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உப்பு பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
5.மால்டோ டெக்ஸ்ட்ரின்: இது ஒருவகை இனிப்பு. இது அதிகமாக சேர்க்கப்படுவதால் இனிப்பு சம்பந்தமான பிரச்சினைகள் வருகின்றன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். மேலும் உடல் பருமனை அதிகரிக்கும்.
5.K F C -உருளைக்கிழங்கு மசித்த உணவு the mashed potato Bowl with Gravy- கலோரி சத்து 690 ,31 கிராம் கொழுப்புச்சத்து.
மேலும் இந்த உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் மேலைநாட்டுக்குழந்தைகளிடம் அதிகம் இருப்பதால் குழந்தைகளே உடல் பருமன் நோய்களால் பாதிக்கப் படுகிறார்கள்!!
KFC சாப்பிட்டா ல் மூளை பாதிப்பு :
(கே.எப்.சி/KFC ) சாப்பிட்டதால், மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டாலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி.,நிறுவனத்துக்கு, ஆஸ்திரேலிய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.,க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி., நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு, 7, உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்களை முடங்கிபோயின. விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால், இந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, கே.எப்.சி.,நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி.,மறுத்தது.இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட், மோனிகாவுக்கு, 80 லட்சம் டாலர் இழப்பீடு அளிக்கும் படி நேற்று உத்தரவிட்டது.
பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு :
புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன! என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை. அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில் லை. இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும். அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவ ையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!! அந்தவகைக் கோழிகளின் சில படங்கள் கீழே... இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!
என்னுரை :
நீங்கள் மாதம் ஒரு முறை சென்றால் தவறில்லை. இந்த துரித உணவுகள் மூளையைத் தூண்டி எண்டார்பின்,என்கெபலின் களின் சுரப்பை அதிகரிப்பதால் அந்த உணவுகளிம் மேல் அதிக விருப்பமும், அதை உண்ண அதிகத்தூண்டுதலும் ஏற்படுகிறது.இவற்றில் அதிக ளவு கலோரி,கொழுப்பு,இனிப்பு,உப்பு சோடியம்,மாவுச்சத்து,புரதம்காணப்படுவதே இவற்றை நாம் உண்ணக்கூடாது என்பதற்கான காரணங்கள்.கற்றுக்கொள்ளும் திறன் குறைவுபுத்திசாலித்தனம். மேலும் இது 1கிலோ கிரில் இறைச்சி =600 சிகரெட்டுகளலுக்கு சமம். 1 கிரில் ட்ரம்ஸ்டிக்= 80 சிகரெட்டுகளலுக்கு சமம். உங்க வீட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல்.KFC.ல் உண்ணும் முன் இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும். உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும்....
ஆக்கம் & தொகுப்பு : மு .அஜ்மல் கான்.
No comments:
Post a Comment