.
1931 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை. இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர். 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
அறிவியல் துறையில் ராக்கெட் தொழில்நுட்பம் தவிர, வேறு பல துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, எடை குறைந்த செயற்கை கால்களை கண்டுபிடித்த கலாமின் சாதனை மிகப்பெரியது. அது தவிர, இதய நோயாளி களின் நலனுக்காக, குறைந்த விலையிலான ஸ்டென்ட்களை பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து தயாரித்தார் .இதற்கு, 'கலாம் - ராஜு ஸ்டென்ட்' என, பெயரிடப்பட்டது. இது வெளிச்சந்தையில், 40 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெறும் 7,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்தனர்.
அறிவியல் துறையில் ராக்கெட் தொழில்நுட்பம் தவிர, வேறு பல துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, எடை குறைந்த செயற்கை கால்களை கண்டுபிடித்த கலாமின் சாதனை மிகப்பெரியது. அது தவிர, இதய நோயாளி களின் நலனுக்காக, குறைந்த விலையிலான ஸ்டென்ட்களை பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து தயாரித்தார் .இதற்கு, 'கலாம் - ராஜு ஸ்டென்ட்' என, பெயரிடப்பட்டது. இது வெளிச்சந்தையில், 40 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெறும் 7,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்தனர்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானதுஎன்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்தஉலகம்mஇயங்குகிறது.மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
கனவுகளை கலைத்து அப்துல்கலாமை அவமதித்தவர்கள்-
நாடே போற்றும் அப்துல்கலாமை அவமதித்தவர்கள் உண்டெனில் அது சோனியாகாந்தியும் கருணாநிதியும் தான் இருக்க முடியும்.2007 ல்நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட விரும்பியபொழுது அன்றைய ஆளும்கட்சியான காங்கிரசின் தலைமைபீடமான சோனியாகாந்தியினால் தடுக்கப்பட்டு இந்திராகாந்தி குடும்பத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமே வேலை பார்த்த பிரதீபாபட்டேல் என்ற மகாராஸ்டிரா பெண்மணிக்கு கொடுக்கபட்டது.
திமுக நினைத்திருந்தால் அன்று காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அப்துல்கலாமை முன்னிறுத்தி இருக்க முடியும்.ஆனால் குடும்ப நலன்களுக்கு முன் நாடாவது கொள்கையாவது..
நாட்டைபற்றி வாய் கிழிய மேடை போட்டு பேசும் மற்றகட்சிகள் அப்துல்கலாமை விட எந்த விதத்தில் பிரதீபா பட்டீல் உயர்ந்தவர் என்று போராடாமல் சொந்த அரசியல் லாபங்களுக்காக அப்துல் கலாம் மீது சோனியாவிற்கு இருந்த வன்மம் நிறைவேற பிரதீபா பட்டேலை தேர்ந்தெடுத்தார்கள்.
தமிழகத்தில் கோவையில் 2010ல் நடைபெற்ற உலக செம்மொழி
தமிழ்மாநாட்டிற்கு சிறந்த மொழிஅறிஞரும் பார் போற்றும் தமிழரான அப்துல்கலாமை அழைத்து கவுரவிக்காமல் வேண்டுமென்றே அவமதித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
தமிழ்மாநாட்டிற்கு சிறந்த மொழிஅறிஞரும் பார் போற்றும் தமிழரான அப்துல்கலாமை அழைத்து கவுரவிக்காமல் வேண்டுமென்றே அவமதித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
அது மட்டுமின்றி 2012 ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மீண்டும் அப்துல்கலாம் பெயர் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மற்றும் சிலரால் பேசப்பட்டபட்டபொழுது..
"கலாம் என்றாலே கலகம்" என்று பொருள் உள்ளது அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் கலகம் உண்டாகியுள்ளது என்று அந்த உயர்ந்த மனிதரை காயப்படுத்தி மீண்டும் ஒரு சிறந்த ஜனாதிபதி கிடைப்பதை தடுத்தவர் கருணாநிதி.
"கலாம் என்றாலே கலகம்" என்று பொருள் உள்ளது அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் கலகம் உண்டாகியுள்ளது என்று அந்த உயர்ந்த மனிதரை காயப்படுத்தி மீண்டும் ஒரு சிறந்த ஜனாதிபதி கிடைப்பதை தடுத்தவர் கருணாநிதி.
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம்,
பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
வாங்கிய விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்,
இந்தியா 2012எழுச்சி,
தீபங்கள்அப்புறம் பிறந்தது
ஒரு புதிய குழந்தை
இந்தியா 2012எழுச்சி,
தீபங்கள்அப்புறம் பிறந்தது
ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.என் கருத்து :
இந்த நூற்றாண்டில் கிடைத்த அறிய மாமனிதர், இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உரக்க கூறியவர், ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி பதவியை பெருமைக்குரியதாய் மாற்றியவர் என்றால் அது அப்துல் கலாம் அவர்கள் தான். அமெரிக்காவின் கண்ணிலேயே மண்ணை தூவிவிட்டு அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி வெற்றி கொண்ட வெற்றி நாயகன், பதவி இழந்தபின்னும் இளைய சமுதாயத்தின் வளர்ச்சிகாக உழைத்தவர்.
ஜனாப் டாக்டர் .எ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன்.எனக்கு மட்டும் அல்ல, தமிழகத்திற்கு மட்டும் அல்ல,இந்தியாவிற்கு மட்டும் அல்ல... உலகில் யார் எல்லாம் அன்பையும் அமைதியையும்... நேசித்தார்களோ ...விரும்பினர்களோ ......அவர்கள் அனைவருக்கும் இழப்பே.......கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தார்களுக்கும் , இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் . (எந்த ஒரு ஆத்மாவும் அதன் இறுதி நேரம் வந்து விட்டால் ஒரு நிமிடம் முந்தவோ, பிந்தவோ படாது. அதை கைப்பற்றுவேன்” என இறைவன் கூறுவதாக அல்குர்ஆன் கூறுகிறது) அந்த அடிப்படையில் இறைவன் அவரின் ஆத்மாவை அல்லா கைப்பற்றி விட்டான்.
இன்றைய அவரது இழப்பு அணைத்து முஸ்லிம்களுக்கும் நம் பாரத இந்திய திருநாட்டிற்கும், அறிவு சார்ந்த உலகத்திற்கும் பேரிழப்பு. அவர் ஒரு ஆலமரம் அறிவுதேடலுக்காக அவரிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்கும் அவரது சொல்லை செயலாகவும் செயலை சரித்திரமாகவும் மாற்றும் அவரது தலைமையின் கீழ் இயங்கிய பல குழுவினருக்கும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த ஒரு இந்தியர்.... ஒரு ஒழுக்கமான தமிழன். இந்திய ஜனாதிபதியாக இருந்தபொழுது அரசு செலவுகளை குறைத்தும், ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும் , மாணவ மாணவியர்களிடம் அன்பை காட்டியவரும்,அரசியலில் நேர்மை , தூய்மை என்று இருந்தவரும் தான் Dr. APJ அப்துல்கலாம். அணு விஞ்ஞானி, ஒப்பற்ற ஆசிரியர், வாழ்க்கை முழுதும் கல்விப்பணி செய்த அறிவியல் மேதை. கனவு காணுங்கள் அதுதான் உங்களை உயர்விக்கும்,என மாணவர்களை வழி நடத்திய மகான் மர்ஹும் கலாம் அவர்களின் மறைவு அனைத்து இந்திய மக்களுக்கும் ஓர் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. இன்னா லில்லாஹி வ இன்னா லிஐஹி ராஜிஊன் எல்லாம் வல்ல இறைவன் அவரின் குற்றங்கள், குறைகள் , பிழைகள் யாவற்றையும் மன்னித்து அவரின் மண்ணறையை சுவன பூங்காவனமாக மாற்றி, இம்மை,மறுமை என ஈருலகிலும் வெற்றி பெற்றவராக ஆக்கி வைப்பானாக ஆமீன் !!
ஆக்கம் மற்றும் & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .
ஆக்கம் மற்றும் & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .
No comments:
Post a Comment