Wednesday, 1 July 2015

தராவீஹ் தொழுது நோன்பு வைத்தவா்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!

Image may contain: crowdரமலானின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது ஒவ்வொரு நாளும்
தராவீஹ் தொழுது நோன்பு
வைத்தவா்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!
*முதல் நாள் இரவில்* தராவீஹ் தொழுத நோன்பு வைத்தவர் அன்று பிறந்த பாலகனைப் போல் ஆகிவிடுகிறார்.
*2 ம் இரவில்* தராவீஹ்தொழுதவா்
அவரின் பெற்றோரின் பாவமும்,அவரின் பாவமும் மன்னிக்கப் படுகின்றன,
*3 ம் இரவில்* தராவீஹ் தொழுதவருக்கு
அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்,
*4 ம் இரவில்*தராவீஹ் தொழுதவருக்கு
தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், *குர்ஆன்*ஓதிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.
*5 ம் இரவில்*தராவீஹ்
தொழுதவருக்கு புனித கஃபாவிலும்,மஸ்ஜித் நவபி,மஸ்ஜிதுல் அக்ஸா
விலும் தொழுத நன்மைகள் கிடைக்கும்.
*6 ம் இரவில்* தொழுதவருக்கு
பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும் அவருக்காக அனைத்து வஸ்துகளும் பிழை பொருக்க தேடுகின்றன.
*7 ம் இரவில்* தொழுதவருக்கு நபி மூஸா(அலை)அவர்களின்
சிறப்பு வழங்கப்படுகிறது.
*8 ம் இரவில்* தொழுதவருக்கு நபி இப்ராஹீம்(அலை)அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது.
*9 ம் இரவில்* தொழுதவருக்கு
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இபாதத் செய்த நன்மைகள் கிடைக்கும்.
*10 ம் இரவில்* தொழுதவருக்கு
துன்யா, ஆகிரத் இரண்டிலும் நல்ல வசதிகள் வழங்கப்படுகிறது.
*11 ம் இரவில்* தொழுதவருக்கு
தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பாவமற்ற பாலகனைப்போல் துன்யாவிலுருந்து வெளியேறுவர்.
*12 ம் இரவில்* தொழுதவருக்கு
மறுமையில் 14ம் இரவு பவுர்ணமி நிலவைப் போல் பிறகாசமாக ஆக்கப்படுவர்.
*13ம் இரவில்* தொழுதவருக்கு
அனைத்து தீங்குகளைவிட்டுபாதுகாக்கப்பட்டு நிம்மதி பெற்றவராவர்.
*14ம் இரவில்* தொழுதவருக்கு
மலக்குமார்கள் இவரை கேள்வி கணக்குஇல்லாமல் சொர்கம் நுழையுங்கள் என்று சோபணம் சொல்கிறார்கள்.
*15 ம் இரவில்* தொழுதவருக்கு
அர்ஷ்,குர்ஷியை சுமக்கும்
மலக்குகளும் சேர்ந்து தொழுகிறார்கள்.
*16ம் இரவில்* தொழுதவருக்கு நரகிலிருந்து விடுதலைப்பெற்று சொர்கம் நுழைவிக்கப்படுவர்.
*17 ம் இரவில்* தொழுதவருக்கு
நபிமார்களுடைய நன்மைகள் வழங்கப்படுகிறது.
*18 ம் இரவில்* தொழுதவருக்கு
உம்மையும், உம் பெற்றோர்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று மலக்குகள் நற் சோபணம் கூறுகிறார்கள்.
*19 ம் இரவில்* தொழுதவருக்கு உயர்வான பிர்தவ்ஸ் எனும் சொர்கம் வழங்கப்படுகிறது.
*t20 ம் இரவில்* தொழுதவருக்கு சுஹதாக்கள், ஸாலிஹீன்களின் நன்மைகள் வழங்கப்படுகிறது.
*21ம் இரவில்* தொழுதவருக்கு சொர்கத்தில் பேரொளியால் ஆன மாளிகையை வழங்கப்படுகிறது.
*22 ம் இரவில்* தொழுதவருக்கு மறுமையில் துக்கம்,கவலை சிறமங்களைவிட்டு பாதுகாக்கப்படுவர்.
*23 ம் இரவில்* தொழுதவருக்கு அழகிய பட்டணம் சொர்கத்தில் உருவாக்கப்படுகிறது.
*24 ம் இரவில்* தொழுதவருக்கு
(24வகையான) கோரிக்கைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
*25 ம் இரவில்* தொழுதவருக்கு
கப்ரில் ஏற்ப்படும் வேதனைகளை அல்லாஹ் நீக்கி விடுகிறான்.
*26 ம் இரவில்* தொழுதவருக்கு
(40 வருடம்)வணங்கிய நன்மைகள் வழங்கப்படுகிறது.
*27 ம் இரவில்* தொழுதவருக்கு மறுமையில் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கும்படி செய்யப்படுகிறார்.
*28 ம் இரவில்* தொழுதவருக்கு அல்லாஹ் சொர்கத்தில் ஆயிரம் அந்தஸ்துகளை வழங்குகிறான் .
*29 ம் இரவில்* தொழுதவருக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஹஜ்ஜுகள் செய்த
நன்மைகள் எழுதப்படுகிறது.
*30 ம் இரவில்* தொழுதவரைப்பார்த்து அடியானே சொர்ககனியை
சாப்பிடுவாயாக ஹவ்துல் கவ்தர் நீரை அருந்துவாயாக நீயே என் அடிமை,நான் உனது ரப்பு என அல்லாஹ் சோபணம்
கூறுகிறான்.
தராவீஹ் தொழுகையின் சிறப்புகளைப்பற்றி நபி (ஸல்)அவர்கள் கூறியதாக
அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆதாரம்:(தன்பீஹுல் காபிலீன்)அன்புள்ளம் கொண்டேரே இறைவனின்
பேரருள் எனக்கும்,உங்களுக்கும் கிடைக்க தராவீஹ், தொழுது நோன்பு வைத்து ரமலானின் அனைத்து நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்.

No comments:

Post a Comment