ஹிஜாப் என்பது அல்லாஹ்வுக்கும், அவன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் அடிபணிந்து நடக்கும் ஒரு செயலாகும். அல்லாஹ் அதனைத் தனக்கும் தன் தூதருக்கும் அடிபணியும் ஒரு கடமையாக ஆக்கி வைத்துள்ளான்,
அவன் கூறுகிறான்:
33:36. மேலும், அல்லாஹ்வும்அவனுடைய தூதரும்ஒரு காரியத்தைப்பற்றிக்
கட்டளையிட்டு விட்டால்,அவர்களுடைய அக்காரியத்தில்வேறு அபிப்பிராயம்
கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ளஎந்தஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை;ஆகவே, அல்லாஹ்வுக்கும்அவனுடைய ரஸூலுக்கும்
எவரேனும் மாறு செய்தால்நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான
வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
அவன் மீண்டும் கூறுகிறான்:
4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக,அவர்கள் தங்களிடையே எழுந்த
சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக,ஏற்றுப் பின்னர் நீர்
தீர்ப்பு செய்தது பற்றி எத்தகையஅதிருப்தியையும் தம் மனங்களில்
கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும்ஏற்றுக் கொள்ளாத வரையில்,
அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்ஆகமாட்டார்கள்.
பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் அல்லாஹ்வின் கட்டளையாகும்.
அவனது கட்டளை அல் குர்ஆனில் இவ்வாறு இருக்கின்றது:
24:31. இன்னும்; முஃமினானபெண்களுக்கும் நீர் கூறுவீராக:
அவர்கள் தங்கள் பார்வைகளைத்தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள்
வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக்கொள்ள வேண்டும்; தங்கள்
அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாகவெளியில்) தெரியக் கூடியதைத் தவிர(வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள்
முன்றானைகளால் அவர்கள் தங்கள்மார்புகளை மறைத்துக் கொள்ள
வேண்டும்; மேலும், (முஃமினானபெண்கள்) தம் கணவர்கள்,
அல்லது தம் தந்தையர்கள்,அல்லது தம் கணவர்களின்தந்தையர்கள் அல்லது தம்புதல்வர்கள் அல்லது தம்கணவர்களின் புதல்வர்கள்,அல்லது தம் சகோதரர்கள்அல்லது தம் சகோதரர்களின்புதல்வர்கள், அல்லது தம்
சகோதரிகளின் புதல்வர்கள்,அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள்சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,அல்லது ஆடவர்களில்தம்மை அண்டி வாழும்(பெண்களை விரும்ப முடியாதஅளவு வயதானவர்கள்) பெண்களின்மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள்
ஆகிய இவர்களைத் தவிர,(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய
அழகலங்காரத்தை வெளிப்படுத்தக்கூடாது; மேலும், தாங்கள்
மறைத்து வைக்கும்அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள்
கால்களை (பூமியில்) தட்டி நடக்கவேண்டாம்; மேலும், முஃமின்களே!
(இதில் உங்களிடம் ஏதேனும்தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள்
தவ்பா செய்து (பிழை பொறுக்கத்தேடி), நீங்கள் வெற்றி பெறும்
பொருட்டு, நீங்கள் அனைவரும்அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
அல்லாஹ்வின் பார்வையில் , யாரேனும் தமது அழகை கவர்ச்சியாக காட்டுவது அறியாமை சார்ந்த செயலாகும் எனக் கொள்ளப்படுகின்றது,
அவன் அறிவுறை வழங்குகிறான்:
33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள்உங்கள்வீடுகளிலேயே தங்கியிருங்கள்;
முன்னர் அஞ்ஞான காலத்தில்(பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப்
போல் நீங்கள் திரியாதீர்கள்;தொழுகையை முறைப்படி உறுதியுடன்
கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும்கொடுத்து வாருங்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனுடையதூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்)
வீட்டையுடையவர்களே!உங்களை விட்டும்அசுத்தங்களை நீக்கி,
உங்களை முற்றிலும்பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ்நாடுகிறான்.
33:53. முஃமின்களே! (உங்களுடையநபி) உங்களை உணவு அருந்த
அழைத்தாலன்றியும்,அது சமையலாவதை எதிர்பார்த்தும்(முன்னதாகவே) நபியுடையவீடுகளில் பிரவேசிக்காதீர்கள்;ஆனால், நீங்கள்
அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே)பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள்
உணவருந்தி விட்டால் (உடன்)கலைந்து போய் விடுங்கள்;பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக(அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்;நிச்சயமாக
இது நபியை நோவினை செய்வதாகும்;இதனை உங்களிடம் கூற அவர்
வெட்கப்படுவார்; ஆனால்உண்மையைக் கூற அல்லாஹ்
வெட்கப்படுவதில்லை; நபியுடையமனைவிகளிடம்
ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்)கேட்டால்,திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக்கேளுங்கள். அதுவே உங்கள்இருதயங்களையும் அவர்கள்
இருதயங்களையும்தூய்மையாக்கி வைக்கும்;அல்லாஹ்வின்
தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல;அன்றியும் அவருடையமனைவிகளை அவருக்குப் பின்னர்நீங்கள் மணப்பது ஒருபோதும்
கூடாது; நிச்சயமாகஇது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும்(பாவ) காரியமாகும்.
மேற்காணும் வசனம் நபி(ஸல்) அவர்களின் மனைவியருக்கு மட்டுத் வரையறுக்கப் பட்டதன்று. அது விசுவாசிகளான எல்லாப் பெண்களுக்கும் உரியது. கீழ்க்காணும் மறை வசனம் மேலும் தெளிவைத் தருவதாக அமைகின்றது,,
33:59. நபியே! நீர் உம்மனைவிகளுக்கும், உம்பெண்மக்களுக்கும் ஈமான்கொண்டவர்களின் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள்தலைமுன்றானைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள்(கண்ணியமானவர்கள் என)அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்கஇது சுலபமான வழியாகும். மேலும்
அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்கஅன்புடையவன்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"பெண் மறைப்பிற்குரியவள் (பாதுகாக்கப்பட வேண்டியவள்). என்று கூறினார்கள்.
ஆதாரம் நூல் திர்மிதி
ஹிஜாப் என்பது இஃப்ஃபாஹ் (அடக்கம், நாணம்) சார்ந்தது,
அல்லாஹ் ஹிஜாபை பெண்களின் கற்பு.அடக்கம்,நாணம் போன்றவற்றே கெண்டுவரும் ஒரு வழிமுறையாக ஆக்கியுள்ளான் . அதனை அச்சொட்டாகப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் அவற்றைப் பெற முடியும். இல்லாவிட்டால் சங்கடங்கள் வருவது திண்ணம்.
அல்லாஹ் அறிவுறுத்துகிறான்:
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின்பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத்தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள்
(கண்ணியமானவர்கள் என)அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க
இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிகமன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.எனினும் அனைத்து கவர்ச்சிகளையும் இழந்துவிட்ட வயதான பெண்கள் தமது மேலாடைகளைக் கழற்றி வைக்கவும்,தமது முகம்,கைகள் என்பன வெளியில் தெரியக்கூடிய வகையில் இருக்கவும் , இறைமறை இணக்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை,நாணமும் வலியுறுத்தப்படுவது கவனித்திற் கொள்ளபடல் வேண்டும். தப்ஸ்
24:60. மேலும், பெண்களில் விவாகத்தை நாடமுடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்டபெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு)
வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள்மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள்மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள்
தவிர்த்து) ஒழுங்கைப்பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக
இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்;நன்கறிபவன்.
உண்மையில், வயதான பெண்களாயினும் தமது நாணத்தைப் பாதுகாத்து வாழ்வதே சிறப்பு, மேன்மை என்பது அல்லாஹ்வின் கூற்று . அவ்வாறாயின் இள நங்கைகளையிட்டு எத்தகைய முடிவுக்கு நாம் வரவேண்டும் என்பதை நன்கு சிந்தித்து, நடவடிக்கை எடுப்பது நன்று.
3-ஹிஜாப் என்பது தஹாரா(பரிசுத்தம்) சார்ந்தது!
அல்லாஹ் ஹிஜாபை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் தனது ஹிக்மாவை(ஞானத்தை) வெளிப்படுத்தியுள்ளான்.
(33:53) நபியுடையமனைவிகளிடம்ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்)
கேட்டால்,திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக்கேளுங்கள். அதுவே உங்கள்
இருதயங்களையும் அவர்கள்இருதயங்களையும்தூய்மையாக்கி வைக்கும்;
விசுவாசிகளான ஆண்களினதும் பெண்களினதும் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதில் ஹிஜாப் பெரும் பங்கு வகிக்கின்றது.கண்கள் எதனையும் காணாதபோது உள்ளமும் அதில் விருப்பம் கொள்வது இல்லை. அதேவேளை, கண்கள் கானும் எதிலும் உள்ளம் விருப்பம் கொள்ளலாம்; அல்லது விருப்பம் கொள்ளாமலும் இருக்கலாம். எது எப்படியோ (ஹிஜாப் மூலம்) பார்வைக்குத் திரையிடுவதானது உள்ளதைத் தூய்மைப் படுத்தி, ஃபித்னா (தீய நடத்தை) விளைவதைத் தடுக்கத் துனை புரிகின்றது; அதோடு நோயுற்ற உள்ளங்களுக்கு வேலியாகவும் அமைகின்றது. காலக் கிரமத்தில் அவ்வுள்ளங்கள்கூட திருந்தி தூய்மையடைய இது வழி வகுக்கின்றது.
அல்லாஹ் கூறுகிறான்:
(33:32) நீங்கள்இறையச்சத்தோடு இருக்கவிரும்பினால், (அந்நியருடன் நடத்தும்)பேச்சில் நளினம் காட்டாதீர்கள்.ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய்
(தவறான நோக்கம்) இருக்கின்றதோ,அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்.
தொகுப்பு : தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment