ஆண்டுதோறும் ஹஜ் பயணம் ..
இருப்பினும், முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு சென்றவண்ணம் உள்ளனர். வழக்கம்போல், இந்த ஆண்டும் 25 லட்சம் முஸ்லிம்கள் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு தங்கள் ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக, அந்த மசூதியில் கட்டிடத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிக்காக மிகப்பெரிய கிரேன் ஒன்று மசூதி வளாகத்தில் மர்வா கேட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கிரேன் முறிந்து விழுந்தது..
அதைத் தொடர்ந்து, பெரிய மசூதியில் வெளியே உள்ள மர்வா கேட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன், காற்றின் வேகத்தால் திடீரென முறிந்து விழுந்தது. மசூதியின் கூரைப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அதனால், கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. அப்போது அருகில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் 2 துண்டாக முறிந்து மசூதி மீது விழுந்ததில் உள்ளே இருந்த 118 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த கிரேன் விபத்துக்கு பலத்த காற்று வீசியதே காரணம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
.
118 பேர் ‘ஹஜ்’ யாத்ரீகர்கள் சாவு..
மெக்காவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள் அங்குள்ள பெரிய மசூதியில் குழுமியிருந்தனர். இதனால், மசூதிக்குள் இருந்த நூற்றுக்கணக்கான ‘ஹஜ்’ யாத்ரீகர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில், 118 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியானார்கள். 300–க்கும் அதிகமானோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்தவுடன், சவுதி செம்பிறைச் சங்கத்தைச் சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரண படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியானவர்களின் உடல்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தன. அந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அவை, பார்த்தவர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தன. இதில் பலியானவர்களில் 2 இந்தியர்கள் மற்றும் படுகாயம் அடைந்த 238 பேரில் 15 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களை பாதுகாக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மக்காவில் நடந்த விபத்தில் காயம் மற்றும் வாபாதானவ்ர்களை பற்றி அறிய கிழே உள்ள நம்பரில் ஜிதாஹ் இந்திய தூதரதிர்க்கு அழைக்கவும்,
24 மணி நேர சேவை போன் :00966125458000
மொபைல் : 00966125496000
டோல் ப்ரீ நம்பர் : 8002477786
மக்காவில் நடந்த விபத்தில் காயம் மற்றும் வாபாதானவ்ர்களை பற்றி அறிய கிழே உள்ள நம்பரில் ஜிதாஹ் இந்திய தூதரதிர்க்கு அழைக்கவும்,
24 மணி நேர சேவை போன் :00966125458000
மொபைல் : 00966125496000
டோல் ப்ரீ நம்பர் : 8002477786
இந்த விபத்தை நீங்கள் நேராக கிழே பார்க்கலாம்
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.
No comments:
Post a Comment