Wednesday 30 September 2015

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்காக மதுரை மக்களின் வாக்கெடுப்பு !! ஒரு தவகல்..


நகர்ப்புற கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 476 நகரங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மதுரை இடம் பெற்றுள்ளதால், அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.  

முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் 1,800 கோடி ரூபாயில் மதுரையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்கள் மக்களுக்கு பயன் தராமல் போயின. அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செய்து, மக்களுக்குத் தேவையான திட்டங்கள் குறித்து அறிக்கைகளை பெற்று வருகிறது.

மாநகராட்சி வேகம்:மதுரை மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களை ஒருங்கிணைக்கும் 'ஐ டெக்' நிறுவன கண்காணிப்பில், மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் மூன்று நாட்கள் நடந்தன. கவுன்சிலர்களுக்காக இரண்டு கூட்டங்கள் நடந்துள்ளன.

இவை தவிர பொதுப்பணி, சுற்றுலா, நெடுஞ்சாலை, தொல்லியல், அறநிலையத்துறை என பல்வேறு துறைகளின் கருத்துக்களும் கேட்கப்படுகின்றன.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு மக்களுக்கான திட்டங்களை மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இதில் எந்த பணிகளுக்கு முன்னுரிமை அளித்து முதற் கட்டமாக நிறைவேற்றுவது என்பது குறித்து பொதுமக்களின் வாக்கெடுப்பு செப்., 28 முதல் 25 மையங்களிலும், ஆன்லைனிலும் நடந்து வருகிறது. நேற்று (செப்., 29) ஆன்லைனில் 35,000 க்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகின. 3,00,000 வாக்குகள் பதிவாகும் என்ற எதிர்பார்ப்பில் மாநகராட்சி உள்ளது.

எந்த திட்டத்திற்கு முதலிடம்:இத்திட்டத்தில் ஐந்தாண்டுகளில் ரூ.500 கோடி மத்திய அரசும், ரூ.500 கோடி மாநில அரசும் ஒதுக்கீடு செய்யும். முதலாண்டில் ரூ.200 கோடிக்கான பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும் என மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஒரு சில வார்டுகளை உள்ளடக்கிய திட்டமாக இருந்தால் அவற்றை சிறப்பாக செய்ய முடியும். அதன் அடிப்படையில் மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம், வண்டியூர் கண்மாய், தெப்பக்குளம் என குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு பகுதியை மட்டும் தேர்வு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளது. இதில் மீனாட்சி கோயில் பகுதிக்கு முன்னுரிமை வழங்கும் வாய்ப்பு உள்ளது.

இவை தவிர அனைத்து வார்டுகளுக்கும் ஒருங்கிணைந்த குடிநீர், பாதாளசாக்கடை திட்டங்களும் உள்ளன.
மாநகராட்சி நிர்வாகம் தயாரித்த இதுகுறித்த வாக்காளர் படிவத்தில் பெயர், அலைபேசி எண், வயது, தொழில், முகவரி இவற்றை குறிப்பிட்டு 17 திட்டங்களின் பட்டியலும், பிற திட்டங்களை விரும்பினால் அதில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இணையதளம் மூலம் வாக்களிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்பு இன்று மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேயர் ராஜன்செல்லப்பா கூறுகையில், ''நேற்று 50 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இன்றும் வாக்களிக்கலாம். இணையதளத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் அதன் மூலம் வாக்களிக்கலாம்,'' என்றார்.

நகர் பொறியாளர் மதுரம், ''மாநகராட்சி மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஓட்டளித்தால் பணிகளை விரைவாக நடத்த அரசு முன்னுரிமை அளிக்கும். மூன்று லட்சம் வாக்குகள் பதிவாகலாம்,'' என்றார்.வாக்கு பதிவில் ஒருவர் ஒரு வாக்கு தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், பலர் பல வாக்குகளை பதிவு செய்கின்றனர். இவையும் கணக்கில் எடுக்கப்படும். இந்த வாக்குகள் அடிப்படையில் பணிகளை ஒருங்கிணைப்பு செய்யும் 'ஐ டெக்' நிறுவனம் பரிந்துரைக்கும்.

அக். 4ம் தேதி வரை வாக்களிக்கலாம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் எந்த பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து பொதுமக்கள் வாக்களிக்க செப்., 28, 29 என இரண்டு நாட்கள் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் சார்பில் 30ம் தேதி நடைபெறும்
கூட்டத்தில் தெரிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ளது. இதனால் பொதுமக்கள் அக்., 3 மதியம் 1 மணி வரை வாக்களிக்கலாம். ஆன்லைனில் வாக்களிப்போர் ஞாயிறு (அக்., 4) மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 
ஆன்லைனில் வாக்களிக்க www.maduraismartcity.in.


மாநகராட்சி நிர்வாகம் தயாரித்த இதுகுறித்த வாக்காளர் படிவத்தில் பெயர், அலைபேசி எண், வயது, தொழில், முகவரி இவற்றை குறிப்பிட்டு 17 திட்டங்களின் பட்டியலும், பிற திட்டங்களை விரும்பினால் அதில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இணையதளம் மூலம் வாக்களிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்பு இன்று மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேயர் ராஜன்செல்லப்பா கூறுகையில், ''நேற்று 50 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இன்றும் வாக்களிக்கலாம். இணையதளத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் அதன் மூலம் வாக்களிக்கலாம்,'' என்றார்.

நகர் பொறியாளர் மதுரம், ''மாநகராட்சி மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஓட்டளித்தால் பணிகளை விரைவாக நடத்த அரசு முன்னுரிமை அளிக்கும். மூன்று லட்சம் வாக்குகள் பதிவாகலாம்,'' என்றார்.

வாக்கு பதிவில் ஒருவர் ஒரு வாக்கு தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், பலர் பல வாக்குகளை பதிவு செய்கின்றனர். இவையும் கணக்கில் எடுக்கப்படும். இந்த வாக்குகள் அடிப்படையில் பணிகளை ஒருங்கிணைப்பு செய்யும் 'ஐ டெக்' நிறுவனம் பரிந்துரைக்கும்.


தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment