Saturday, 12 September 2015

உங்கள் அல்லாஹ் மக்காவில் கூடும் மக்களைக் கூடகாக்க முடியாதவரா ?

மக்காவில் நேற்று நடைபெற்ற கிரேன் விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இறந்து விட்டதாக வநத செய்தியை வைத்து இப்படி ஒரு கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்!

முதலில் இது அறிவுப்பூர்வமான கேள்வியா ? 
Image result for மக்காவில் நடந்த விபத்தில்விபத்துகள் அன்றாடம் நிகழும் உலகில் மனிதத் தவறுகளால் விபத்துஎனபது நிகழத்தான் செய்யும்! இயற்கை பேரிடர்களால் நிகழத்தான் செய்யும்!இப்படி விபத்து நிகழாது என இஸ்லாம் கூறவில்லை ! மேலும் இப்படி நிகழும் விபத்தை இறைப் பாதையில் உயிர் நீக்கும் உயர்ந்த அந்தஸ்தாக இஸ்லாம் கூறுகிறது !
அப்படிப்பட்ட மரணத்தின் மேல் ஆசை வைக்கும் மனிதனாக ஒவ்வொரு முஸ்லிமையும் உருவாக்குகிறது இஸ்லாம்!மேலும் மக்காவுக்கு செல்லும் யாரும் வாழ்வதற்காக செல்லவில்லை ! மரணத்தை நினைவு கூறத்தான் செல்கிறார்கள்! இறந்தவர்களுக்கு அணியும் தைக்காத வெள்ளை ஆடையை அணிந்துதான் செல்கிறார்கள்! நாளை மறுமையில் நியாயத் தீர்ப்பு நாளை நினைவு கூறும் அந்த மைதானத்தில் நிற்பதுதான் அதன் தத்துவம்!திரும்பி வரமாட்டோம் எனும் எண்ணத்தில்தான் சொந்தபந்தங்களிடம் மட்டுமின்றி சண்டைக் காரர்களிடம் கூட சொல்லி விட்டு வழக்கம் முஸ்லிம்களிடம் உள்ளது! அதனால் தான் அதை இறுதிக் கடமை என்றும் இறுதிப் பயணம் எனும் எண்ணம் முஸ்லிம்களிடம் உள்ளது!
மேலும் சிலர் அது அபயமளிக்கப்பட்ட பூமி அங்கு விபத்து நிகழலாமா ? அப்படியானால் இறைவனின் வாக்கு பொய்யா?என்றும் சிலர் கேட்கின்றனர் !அபயமளிக்கப்பட்ட பூமியில் இதுவரை யாருமே இறக்க வில்லையா ? நபிகளாரின் குடும்பத்தார் உள்பட இந்த மார்க்கத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தை உடைய எத்தனயோ பேர் அங்கே இறந்துள்ளார்கள்!அபய பூமி என்றால் எதிரிகளின் போர் அபாயத்தில் இருந்து காக்கப்பட்ட பூமி என்றுதான் பொருள்!
இதை வரலாறில் கண்கூடாகக் காணலாம் ! அபய பூமி என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பாதுகாக்கப் படுவதை அறியலாம்!சிலுவைப் போர்களிலும் சரி, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களிலும் சரி, உலகம் முழுவதையும் கைப்பற்றிய இங்கிலாந்து, பிரெஞ்சு, போர்ச்ச்கீசியர்கள் மக்காவின் பக்கம் செல்லவே இல்லை என்பதிலும் இன்றளவும் எதிரிகளின் போர் அச்சத்தில் இருந்து அபயம் பெற்ற பூமியாகவே மக்கா உள்ளதை உணராலாம் !முஸ்லிமகள் நாங்கள்மறுமையை யோசிப்பவர்கள்மரணத்தை நேசிப்பவர்கள்ஆகையால் தான் இறப்பு செய்தியைக் கேட்டதும் மற்ற மதத்தவரைப் போல் இல்லாமல்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’
எனக் கூறுவோம் இதன் பொருள் நாங்களும் இறைவனுக்குரியர்கள்!இறைவனிடமே திரும்பச் செல்வோம் !-
2:155 وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ2:155
. (நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.
2:156 الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ2:156.
(சோதனைக்குள்ளாகும்)
அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் “நிச்சயமாக நாம்அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்” எனக் கூறுவார்கள்.
ஹரம் ஷரீப்பில் ஏற்பட்ட விபத்துகாற்றை அனுப்பியவனும் அவனே,
மழையை பொழியச்செய்தவனும் அவனே,
உயிரை தந்தவனும் அவனே,
உயிரைக் கைப்பற்றியவனும்அவனே
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
2:154. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.
2:155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!3:200. நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்


யா அல்லாஹ்! மக்காவில் ஷஹீதாகிய அனைத்து முஸ்லிம்களுக்கும் ஜென்னத்துள் பிர்தவ்ஸ் சுவனத்தை வழங்குவாயாக! ஷஹீத்களின் அந்தஸ்த்தை பெற்றுக்கொண்ட ஹாஜிகளின் மண்ணறையை அல்லாஹ் சுவனச்சோலையாக மாற்றியருள் புரிவானாக..!!
நபிகளாரின் பாதம்பட்ட பூமியில் விதைக்கப்பட இருக்கிறார்கள்.

தன் உயிர் இறையில்லத்தில் இறைவனுக்காக இறைவனால் தியாகம் செய்யப்பட்டிருக்கிறது.
இறைவா!
உன் இறையில்லத்தில் மரணிப்பது எங்களின் பாக்கியம் என்றிருந்தாலும் கூட,
விபத்துகளின் மூலம் ஏற்பட விருக்கும் மரணத்தை நாங்கள் அஞ்சுகிறோம்.
நிம்மதியான,அமைதியான மரணத்தை எங்களுக்கு நல்குவாயாக..!!
கலிமா தய்யிபாவை சொல்லிய வண்ணம் எங்கள் ரூஹு பிரிய நீ பேரருள் புரிவாயாக!!!"
.
விபத்தில் காயமடைந்துள்ள அனைத்து மக்களுக்கும் விரைவான சுகத்தை வழங்குவாயாக!
.
எமது துஆவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டால் ஏற்றுக்கொள்வாயாக! ஆமீன். 


தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment