Wednesday, 16 September 2015

மக்கா கிரேன் விபத்தை தொடர்ந்து வரலாறு காணாத நஷ்ட ஈடு !! சவுதி மன்னர் சல்மானின் அதிரடி ஆணைகள்..

1
உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.


இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு...

புனித கஅபா ஆலயத்தின் மீது போர்த்தப்பட்டுள்ள கிஷ்வா துணியை ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் மாற்றுவது வழக்கம், இந்த ஆண்டு அதற்கான துணியை தயாரித்தவர்களிடம் பெற்றுக்கொண்டு ஹாஜிகளின் விபத்து குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


உயிரிழந்த ஹாஜிகளின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இரத்தபணமாக தலா 3 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 53 லட்சம்) வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 1 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் ரூ1.70 கோடி) வழங்கப்படும் என்றும்,

படுகாயம் அடைந்த ஹாஜிகளுக்கு நிவாரண தொகையாக தலா 5 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 87 லட்சம்) வழங்கப்படும் என்றும்,

இறந்தோரின் குடும்பத்திலிருந்து இருவர் மன்னரின் விருந்தாளிகளாக அடுத்த வருடம் 2016 ஹஜ்ஜுக்கு வந்து செல்லும் முழு செலவையும் சவூதி அரசு ஏற்கும் என்றும்,

காயம்பட்டு இம்முறை ஹஜ் செய்ய இயலாமல் போனவர்கள், குணமடைந்து அடுத்து வருடம் ஹஜ் செய்வதற்கான அனைத்து செலவையும் சவூதி அரசு ஏற்கும் என்றும்,

தற்போது காயம் பட்டு மருத்துவமனை படுக்கையில் சிகிச்சையிலுள்ள நோயாளியை கவனித்துக்கொள்ள அவரின் குடும்ப உறவினர் இருவருக்கு ஸ்பெஷல் விசிட் விசா தந்து வரவழைக்கப்படுவர்கள்...

இதுவே மன்னரின் இறுதி உத்தரவு...

ஹஜ்ஜின் காலம் முடியும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தவும், அதை நிர்வகிக்கும் பின்லாடன் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது...


விபத்து தொடர்பான விசாரனை முடியும் வரை பின்லாடன் நிறுவன உரிமையாளர் மற்றும் உயரதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment