மின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனிமனித வருமானம் வேலைவாய்ப்பின் மூலம் பெறப்படுகிறது. வேலைவாய்ப்புகள் அநேக தொழிற்சாலைகள் மூலமாக பெறப்படுகிறது. ஆனால் தொழிற்சாலைகள் பெருகவேண்டுமானால் அதற்கு மூலப் பொருளாக மின்சாரம் தேவைப்படுகிறது.
மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது .
1 . அனல் மின் நிலையங்கள்
2 . நீர் மின்நிலையங்கள்
3 . காற்றாலைகள் .
4 . சூரிய ஒளி மின் ஆலைகள்
5 . அணுமின் நிலையங்கள் .
இப்படி இத்தனை வழிகள் இருக்கும் போது அணுமின்சாரம் தற்பொழுது நாட்டிற்கு தேவையா என்பது தான் அநேகம் பேரின் வாதம். குழப்பம் என்று கூட சொல்லலாம் . அதனால் இந்த வழிகளை பற்றி கொஞ்சம் எழுத வேண்டியது அவசியம் என கண்ட படியால் இந்த பதிவை எழுத் துணிந்தேன் . நண்பர்கள் உங்களின் ஆரோக்கியமான கருத்துகளை எழுதுவதால் நம் கருத்துகள் மேம்படும்.
1 . அனல் மின் நிலையங்கள் : நமது நாட்டின் அனல் மின் நிலையங்கள் தேசிய அனல் மின் நிர்வாகத்தால் அருவக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 30 , 2011 ன் படி 1 ,15 , 649 . 48 MWe மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது . இது கிட்டத்தட்ட தேசிய மின் தேவையில் 66 சதவீதமாகும்.
2011 - 2012 - வருடத்தில் இந்தியாவின் மொத்த நிலக்கரி தேவை 696 மில்லியன் டன் . ஆனால் உள்நாட்டில் இருந்து 554 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதி 114 மில்லியன் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்பது தான் உண்மை ( நன்றி : http://www.goldenocean.no/?menu=2&id=175 )
இதனால் இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களில் தேவையான அளவு மின்னுற்பத்தி செய்யமுடியவில்லை எனபது தான் திண்ணம். இந்த பதிவு எழுதப்படும் போது அனல் மின் நிலையங்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு தான் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று நிலக்கரித்துறை அமைச்சரின் கூற்றை நினைத்து பார்க்கிறேன்.
இந்நிலையில் 2040 வருடத்திற்குள் இந்தியாவின் மொத்த நிலக்கரியும் தீர்ந்துவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது . தகவலுக்கு http://www.business-standard.com/india/storypage.php?autono=333749
பெருகி வரும் மின் தேவைகள் ஒரு பக்கம் இருக்க , எப்படி வருங்காலத்தில் அனல் மின் நிலையங்கள் எதிர்பார்த்த மின்சாரத்தை கொடுக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வி தான். 5 . 78 % சதவீத CO2 ( மொத்த உலகத்தின் ) இந்தியாவில் இருந்து வெளியிடப்படுகிறது . ( தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_carbon_dioxide_emissions ) அதனால் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு புகையை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயத்திலும் நாம் உள்ளோம் என்பது மறுக்க இயலாது.
2 . நீர் மின் நிலையங்கள் : இன்யாவில் தற்பொழுது நீர் மின் நிலையங்களின் உருவாக்கு திறன் கிட்டத்தட்ட 30,920 Mwe . நீர் மின்சாரங்கள் இருக்கும் இடங்களை கீழே பார்க்கலாம்
(நன்றி : http://www.eai.in/ref/ae/hyd/hyd.html)
ஆனால் இந்த நீர்மின் நிலையங்களிலும் பெரும்பாலானவற்றில் மின்சாரம் சரிவர தயாரிக்க முடியவில்லை என்பது தான் உண்மை . ஏன் என்றால் இவையும் இயற்கையை சார்ந்து ( மழையை ) இருக்கிறது. உலகின் அதிக மலை பொழியும் பிரதேசம் என்று கருதப்படும் சிரபுஞ்சியில் கடந்த 5 வருடங்களாக மழை இல்லை என்றால் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா .. தற்பொழுது 26 சதவீத மின்சாரம் நீர் மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது.
3 . காற்றாலைகள் : இது ஒரு தூய்மையான் மின் சக்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 31 மார்ச் 2011 கணக்கின் படி இந்தியாவின் மொத்த காற்றாலைகளின் உற்பத்தி திறன் 14550 Mwe . அதிலும் தமிழ்நாடு அதிகபட்சமாக 6007 Mwe உற்பத்தி திறனை கொண்டுள்ளது . இன்னும் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு கொண்டே இருக்கின்றன.( நன்றி : http://en.wikipedia.org/wiki/Wind_power_in_India ))
ஆனால் ஏன் இப்பொழுது மின்சார தட்டுப்பாடு வருகிறது மே , ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் மாத்திரம் WIND TURBINE சுழற்றுவதற்கு தேவையான காற்று வேகம் உள்ளது . அதாவது 11 KM /H ல் இருந்து 19 KM / H வரை உள்ளது . மற்று தருணங்களில் மிகவும் குறைவாக காற்று வீசுவதால் தேவையான் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை . ( தகவலுக்கு : http://rangareddy.nic.in/profile-pdfs/91.pdf ) . இதற்க்கு அரசை குறை சொல்லுவதிலும் எந்த லாபமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
4 . சூரிய ஒளி மின் ஆலைகள் : சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அனைத்து நாடுகளும் யோசிக்க தான் செய்கிறது . ஏன் எனில் , இதில் தயாரிக்கப்படும் மின்சாரம் பசுமையானது . இதற்க்கு எந்த மூலப் பொருளும் தேவை இல்லை. மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு தேவையான மின் கம்பங்கள் இல்லாத போது அந்த வீடுகளுக்கு சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் அற்புதமானது.
ஆனால் சில பிரதிகூலங்களும் உள்ளன. இதனை நிறுவுவதற்கு ஆகும் செலவு அதிகம். உலகின் மாசு காரணமாகவும் சூரியன் இல்லாத தருணங்களிலும் மின்சார உற்பத்தி குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுகிற அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை. இந்தியாயவின் பெரிய சோலார் மின் உற்பத்தி 40 Mwe ( Adani Bitta Solar Plant,குஜராத் ) என்பது ஆச்சரியம் தானே.
5 . அணு மின் நிலையங்கள் : இப்பொழுது தான் இந்தியா இந்த துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது என்று நாம் நினைக்க கூடாது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய அணுசக்தி தந்தை என்று அழைக்கப்படுகிற ஹோமி பாபா அவர்களின் கனவுகளோடு அணு சக்தி திட்டங்கள் 1956 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 20 அணு மின் நிலையங்கள் மூலம் 4780 Mwe மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் அணுமின்சாரத்தின் அளவு வெறும் 3 சதவீதம் என்பது தான் அநேகரின் கேள்விக்கு காரணம். ஏன் இந்த அணு மின்சாரம் நமக்கு தேவை.? இது ஒரு நியாயமான கேள்வி என்பதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. மேற்குறிப்பட்ட எல்லா மின்சார வழிகளும் நிரந்தரமான ஒரு மின்சாரத்தை வகை செய்யாத போது அணு மின் நிலையங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் , எல்லா காலங்களிலும் மின்சாரத்தை கொடுக்கும் என்ற நிலை நாம் அதை தேட செய்கிறது.
உலகின் பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் எல்லாம் அணு மின்சாரத்தை பெரும் அளவில் பயன்படுத்துகிறது என்பது தான் உண்மை . அமெரிக்காவில் 104 அணு உலைகள் மூலம் 101119 Mwe மின்சாரமும் , பிரான்ஸ் 63473 Mwe மின்சாரமும் , ஜப்பான் 48900 Mwe மின்சாரமும் அணுமின் நிலையங்களில் இருந்து பெறுகின்றன. அப்படியெனில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்று தான் அர்த்தம்.
இந்தியா தன்னுடைய அணுமின்சார தேவையை 2050 ஆவது வருடத்தில் மொத்த மின்தேவையில் 50 சதவீதமாக உயர்த்த திட்டம் கொண்டுள்ளது . அதற்காக மக்களுக்கு தீங்கு விளைவிக்கலாமா என்பது ஏன் பதிவுலக நண்பர்கள் பலரின் கேள்வி. நான் மறுபடியும் உங்களுக்கு சொல்லுகிறேன் " முதாலவது பாதுகாப்பு , பிறகு உற்பத்தி " என்ற கொள்கையை தான் இந்திய அணு சக்தி துறை பின்பற்று வருகிறது. அதனால் தான் கடந்த 50 வருடங்களாக அணு மின் திட்டங்களை நிறைவேன்றி வருகிறோம் என்ற அணு சக்தி ஆணையத்தின் கூற்றை நாம் புறம் தள்ள முடியவில்லை.
அணு மின் நிலையங்களில் இருந்து சுற்று சூழலை தடுக்கும் எந்த நச்சு புகையும் வெளியிடப்படாது என்பது கூடுத தகவல் . பசுமையின் திட்டமாகிய அணு மின் திட்டங்களை குறித்த அச்சங்கள் விளக்கப்பட வேண்டும் என்பது இந்த பதிவனின் நோக்கம் கூட. 24 மணி நேரமும் , எந்த காலத்திலும் மின்சாரத்தை கொடுக்கும் அணு மின் நிலையங்களை நாம் ஏன் வரவேற்க கூடாது ?

No comments:
Post a Comment