Monday, June 23, 2014

வெண்புள்ளியை போக்க இலவச மூலிகை மருந்து கண்டுபிடிப்பு !! ஒரு விழிப்புணர்வு தவகல்...

என் அருமை நண்பர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், சமூக நலனில் அக்கறை கொண்ட, மனித நேயம் மிகுந்த என் நண்பர்கள் இந்த பதிவினை பகிர்ந்து பலருக்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வெண்குஷ்டம், தொற்றுநோய், தீரா வியாதி, பரம்பரை நோய்... இப்படி ‘வெண்புள்ளி’ பற்றி ஏகப்பட்ட கற்பிதங்கள். சமூகத் தூற்றுதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் தன்னம்பிக்கை குலைந்து, அழகு  சிதைந்து, வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. வெண்புள்ளி பாதித்தோரின் வாழ்க்கை மிகவும் துயரமானது. 
உடலில் வெண்புள்ளி எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம் எனும் நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.
இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர். இவர்கள் படித்து எவ்வளவு நல்ல நிலைக்கு உயர்ந்தாலும் திருமணம் என்று வரும்போது பல இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைப்போன்றே முழு உடல் ஆரோக்கியம் உடையவர்கள் எனும் தெளிவு நம் மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே காரணம்.

முதலில் உடலின் ஏதோவொரு பாகத்தில் சிறியதாக கிளம்பும் வெண்புள்ளி, சில வருடங்களிலேயே உடம்பைச் சூழ்ந்து விடுகிறது. இந்த திடீர் தாக்குதல் ஒட்டு மொத்த இயக்கத்தையும் முடக்கிப் போட்டுவிடுகிறது. சிலர் மட்டுமே இதைக் கடந்து வாழப் பழகு கிறார்கள். வெண்புள்ளிகளைத் தடுக்க வாய்ப்பில்லை. எப்படியாவது குணமாகிவிடாதா என்று ஏங்குபவர்களின் மனநிலையை சாதகமாக்கி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகி விட்டன. 

உண்மையில், வெண்புள்ளி என்பது ஒரு நோயே அல்ல. இது ஒரு குறைபாடு. ஏதாவது நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் போர்க்கோலம் பூண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. சிலரின் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், குருட்டாம்போக்கில் நம் உடலுக்குத் தேவையான மெலனோசைட் என்ற செல்லையும் சேர்த்து அழித்து விடுகின்றன. இந்த மெலனோசைட் செல்கள்தான் நம் உடலுக்கு நிறம் தரும் மெலனின் என்ற நிறமி சுரக்க காரணம். மெலனோசைட் அழிக்கப் பட்டு மெலனின் சுரக்காததால் உடல் வெண்மை நிறத்துக்கு மாறுகிறது. இதுதான் வெண்புள்ளிகளுக்கான பூர்வ சரித்திரம். 

உலக அளவில் 100ல் 2 பேர் வெண்புள்ளியால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 100ல் 4 பேர். ஜாதி, மதம், இனம், மொழி, வசதி... எந்த வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறிய, அவர்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை முன்னுதாரணமாக விளங்குகிறார், உமாபதி. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு, மத்திய அரசின் மூலிகை தயாரிப்புக்கான பட்டயப் படிப்பைப் படித்து, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவராக தன்னைப் போல் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவும் நோக்கத்தோடு, 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் - இந்தியா’ என்கிற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் மூலமாக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக விழிப்பு உணர்வு, ஆலோசனை மற்றும் மருந்துகளையும் வழங்கி வரும் ஹோமியோபதி மருத்துவர்தான் இந்த உமாபதி. 


வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு, மத்திய அரசின் மூலிகை தயாரிப்புக்கான பட்டயப் படிப்பைப் படித்து, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவராக தன்னைப் போல் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவும் நோக்கத்தோடு, 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் - இந்தியா’ என்கிற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் மூலமாக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக விழிப்பு உணர்வு, ஆலோசனை மற்றும் மருந்துகளையும் வழங்கி வரும் ஹோமியோபதி மருத்துவர்தான் இந்த உமாபதி. 

அதனால், இது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான்'' என்ற உமாபதி, ஆரம்பத்தில் 'வெண்குஷ்டம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாதிப்பை, 'வெண்புள்ளிகள்’ என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்து, 8 ஆண்டு தொடர்முயற்சிக்கு பிறகு, 2010-ம் ஆண்டு அதிலும் வெற்றியும் பெற்றுள்ளார்


எல்லா வயதினருக்கும் வரக்கூடும் என்றாலும் 13 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களையே வெண்புள்ளி அதிகம் தாக்குகிறது.  வெண்புள்ளிகளை குணப்படுத்த ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. எதுவும் தீர்வு தரவில்லை. முதன்முறையாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ‘லூகோஸ்கின்’   (Lukoskin) என்ற மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளது. ‘‘தொடர்ந்து இதைப் பயன்படுத்தினால் முழுமையான குணம் கிடைக்கிறது’’ என்கிறார் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் உமாபதி.  

‘‘வெண்புள்ளிகளுக்கு தற்போது தரப்படும் எல்லா சிகிச்சைகளுமே கடும் பக்க விளைவுகளை உண்டாக்குபவை. ஸ்டீராய்டு சிகிச்சையில் ஊக்க மருந்தை உடலில் செலுத்தி செயற்கை மெலனினை உருவாக்குவார்கள். ஊசி போட்டவுடன் வெண்புள்ளிகள் மறையத் தொடங்கும். பிறகு வந்துவிடும். கூடவே, சிறுநீரகம் மற்றும் நரம்புப் பிரச்னைகளும் வந்துவிடும். புற ஊதாக் கதிர்கள் மூலம் ஒருசிகிச்சை வழங்கப் படுகிறது. அது எல்லோருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. இயல்பான தோலின் செல்களை எடுத்து வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வைத்து வளர்க்கும் ஸ்கின் கிராஃப்டிங் சிகிச்சையும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

ஆனால் லூகோஸ்கின் மாற்றம் தரக்கூடியதாக இருக்கிறது. துளசி, கார்போகி அரிசி, சோற்றுக் கற்றாழை, எருக்கு ஆகிய மூலிகைகள் அடங்கிய மருந்து இது. டானிக்கும், கிரீமும் அடங்கிய இந்த மருந்தை 300 முதல் 400 நாட்கள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் காலத்தில் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அசைவம், தக்காளி, நெல்லிக்காய் உள்ளிட்ட வைட்டமின் சி அடங்கிய பொருட்கள் சாப்பிடக்கூடாது. 

சோப்பு பயன்படுத்தக் கூடாது. 3 மாதங்களுக்கு வரும் காம்போ பேக் 1915 ரூபாய். இந்த மருந்தை வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்திடமே வாங்கிக் கொள்ளலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது என பயிற்சியும் அளிக்கிறோம்’’ என்கிறார் உமாபதி. மத்திய அரசு நிறுவனம் கண்டறிந்த இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தரலாமே? 


இந்த துயரத்தைப் போக்குவதற்காக மத்திய அரசின் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஒரு மூலிகை மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது. இவற்றை   


'பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையில். சிறுவயதில் சருமத்தில் எந்த மாறுபாடுகளும் இல்லை. திருமணத்துக்குப் பின், சின்னச் சின்னதாக உடம்பில் வெண்புள்ளிகள் வர ஆரம்பித்தன. என் குடும்பத்தினர் பெரிது படுத்தவில்லை என்றாலும், சமுதாயத்தில் என்னை வித்தியாசமாக, வேடிக்கையாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால், 'நமக்கு ஏன் இப்படி வந்திருக்கிறது’ என்பதை தெரிந்துகொள்ளும் முயற்சிகளில் இறங்கி னேன். இன்டர்நெட் வசதி இல்லாத அந்தக் காலத்தில், இது சம்பந்தமான புத்தகங்களைத் தேடி அலைந்து படித்தபோது, இது ஒரு நோயே இல்லை... உடலில் ஏற்படும் நிறமி இழப்பு என்பதை தெரிந்துகொண்டேன். இன்னும் விரிவாகத் தெரிந்துகொண்டு, ஆதாரப்பூர்வமாக மற்றவர்களுக்கு விளக்க விரும்பினேன்...'' என்றவர், அதற்காகவே வெண்புள்ளி குறித்த மருத்துவப் படிப்பை படித்திருக்கிறார்.இது குறித்த மேலும் விபரங்களுக்கு,

வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா,
எண்.6 காமாட்சிராவ் தெரு,பட்டேல் நகர்.
மேற்கு தாம்பரம்,சென்னை-600045.
தொலைபேசி : 044- 22265507, 65381157.
மின் அஞ்சல் : leucodermafree@yahoo.in
website. www.lam-india.org.

குறிப்பு : 

இந்த குறைபாடு உடையவர்களுக்கு மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (defence research and development organisation DRDO) மருந்தினை கண்டுபிடித்துள்ளது.இந்த மருந்தினை 300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்,இது குறித்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியிலும் ஃபோனிலும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.


வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்..
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா? வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.

உலக வெண்புள்ளி தினம் மற்றும் விழிப்புணர்வு முகாம்..

சென்னையில் 25ஆம் தேதி  விழிப்புணர்வு முகாம்  சென்னை, ஜூன் 23- 

உலக வெண்புள்ளி தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 25ஆம் தேதி 

கடைப் பிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் 

உள்ள ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், 

வரும் 25ஆம் தேதி வெண்புள்ளி நோய் விழிப்புணர்வு முகாம் 

நடத்தப்படுகிறது.  இந்த முகாம், ராயப்பேட்டை  ஹேமமாலினி திருமண 

மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 

நடைபெறுகிறது. முகாமில் கலந்துகொள்ளும் வெண்புள்ளி நோயாளி 

களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்விற்கும், மருத்துவ ஆலோ சனைகளும் 

பிரபல ஹோமியோபதி டாக்டர்களால் வழங்கப்பட இருக்கிறது. மேலும், 

வெண்புள்ளி நோய் பற்றிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் 

இலவசமாக வழங்கப்பட உள்ளன..என்னுரை :

''வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கும், தற்கொலைவரை கூட போவதற்கும் காரணம், அதைப் பற்றி இங்கு பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள்தான். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரையும் இந்த சமூகம் ஒதுக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்கு வதே எங்கள் நோக்கம். அதற்கான விழிப்பு உணர்வுக்கு தொடர்ந்து செயல்படுவோம்!'


நமக்கு தெரிந்தவர்களுக்கு,அறிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு,உறவினர்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்,அவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமே!!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

1 comment:

 1. வெண் குஷ்டம் என்னும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த மருந்து -அவல்குஜாதி லேபம்-Avalgujadhi Lepamஉபயோகிக்கும் விதம்:

  பசுவின் மூத்திரம், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கார்போக அரிசி கஷாயம் இவைகளுடன் கலந்து மேலே பூசவும்.

  பயன்படுத்தும் முறை:

  வெளி உபயோகத்திற்கு மட்டும்.

  தீரும் நோய்கள்:


  வெண்குஷ்டம் (ஸ்வித்ர), உடல் நிறம் மங்கல் (அ) மாற்றம் (வர்ணவிக்ருதி), சொறி (கண்டு), படை (விஸர்ச்சிகா), தோல் வெடிப்பு (விபாடிகா), புண்கள் (வ்ரண).
  நல்லெண்ணெய்யுடன் கலந்து பூச சொறி, நமைச்சல் தீரும், தேங்காயெண்ணெய்யுடன் கலந்து பூச தோல் வெடிப்பில் நலம் பயக்கும். புரசம்பூ (பலாஸ) கஷாயத்துடன் இதனைக் கலந்து பூச படைகள் ஒழியும். வெண்குட்டம் போன்ற நிலைகளில் கார்போக அரிசிக் (பாகுசி) கஷாயத்துடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. புண்கள் விரைவில் ஆறவும் உதவுகிறது.

  குறிப்பு:

  சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாமல் தோல் எரிச்சல் உண்டாகி தோல் வெடிப்பும் நேரலாம். அந்த நேரங்களில் இதனைத் தவிர்த்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் நெய்யினைத் தடவி வரலாம்.

  தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. எல்லா வகையான வெண் புள்ளிகள் மற்றும் -வெள்ளையாகும் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து இதை விட வேறு இல்லை
  2. வெண் புள்ளிகளுக்கு -உள் மருந்தாக ஆயுர்வேதத்தில் சித்ரக லேஹியம் ,சித்ரகாசவம் போன்ற மருந்துகளும் சித்த மருத்துவத்தில் கார்போகி மாத்திரை ,சிவனார் வேம்பு சூர்ணம் ,சிவனார் வேம்பு குழி தைலம் ,அன்ன பேதி செந்தூரம் ,அய காந்த செந்தூரம் ,ஹோமியோ மருந்தில் ஆர்ஸ் அல்ப், ஆர்ஸ் சல்ப் ப்லேவஸ் (ASF) பெரைட்டா மூர் ,பெரைடா கார்ப் போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்

  ReplyDelete