இன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவு, அவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள். 'முதலீடு வேண்டுமோ? தன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ?’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்து, நமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போல, பள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாக, நமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, மற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள், தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.
தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல், படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவு, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்!'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்!
இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால் அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க!
புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்!
- தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்
- வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்
- திட்ட அறிக்கை
- தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரித்தல்
- சந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை தயாரித்தல்
- நேரடி கணினி வழி குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பதிவுகள்
- மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் குறித்த தகவல்கள்
- திறன் மேம்பாட்டுப் பயிற்சி
உங்களுக்காக இவை...
நாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால், புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சத்தியமங்கலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்குwww.nstedb.com என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!
அரசு கடனுதவித் திட்டங்கள்..
மத்திய அரசு
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!
மாநில அரசு
வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும், இது பற்றி தகவல் அறிய, விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!
மதுரையில் இலவச சுய தொழில் முனைவோர் பயிற்சி!!
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான் .
கவரிங் நகைகள் விற்பனை செய்து மாதம் 15க்கும் மேல் வருமானம் பெறலாம்.
ReplyDeleteகூடுதல் விபரங்களுக்கு.....
ராசி கோல்டு கவரிங் சிதம்பரம்.
செல்.9751881542