Monday 30 June 2014

ரயில் கட்டணம் உயர்வு தேவையா ? ஒரு சிறப்பு பார்வை..

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறை மட்டுமே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.ரயில் கட்டண உயர்வு என்பது அவ்வப்போது நடைபெறுவதுதான். ரயில் கட்டணம் உயர்த்தாமல் இருக்கமுடியாது. ஆனால் இப்போதைய ரயில் கட்டண உயர்வை நீங்கள் பார்க்க வேண்டும். அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே அமைச்சர் ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வரவு எப்படி உயர்த்துவது செலவை எப்படி குறைப்பது என்பது பற்றியெல்லாம் சில குறிப்புகளை எழுதிவைத்துவிட்டுச் சென்றார்.  

தேர்தலுக்குப்பிறகு ரயில் கட்டண உயர்வை அன்றை சூழலை கருத்தில் கொண்டு, அன்றைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை தீர்மானிக் கலாம் என்றும் அன்றைய ரயில்வே அமைச்சர் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

இன்றை ஆட்சியாளர்கள் என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்?.
காங்கிரஸே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் இருக்கக்கூடாது என்றார்கள். காங்கிரஸ் தான் இந்த நாட்டை சீரழித்துவிட்டது என்று பேசினார்கள்.அப்படிச்சொல்லி ஆட்சிக்கு வந்தவர்தார்கள். இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் இருக்கக்கூடாது என்றார்கள். காங்கிரஸ் தான் இந்த நாட்டை சீரழித்துவிட்டது என்று பேசினார்கள்.

அப்படிச்சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை ரயில்வேயில் எந்த சீர் திருத்தத்தை செய்யப்போகிறோம் என்று இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பயணி களுக்கு என்ன சலுகைகள், புதிய ரயில்கள் என்ன?, புதிய ரயில் தடங்கள் என்ன?, ரயில்வேயில் செலவை எப்படிக்குறைப்பது?, எப்படி சீர்திருத்தங்கள் மேற்கொள்வது என்பது பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூட கிடையாது.

ஆனால் எந்த சீர்திருத்தத்தையும் அறிவிக்காமல் ரயில் கட்டண உயர்வை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம், சரக்குக் கட்டண உயர்வு 6.5 சதவீதம் என கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்கள். எந்தக் காலத்திலும் இந்த அளவுக்கு கடினமான, மோசமான ரயில் கட்டண உயர்வை எந்த ஆட்சியிலும் அறிவித்தது கிடையாது என்பதை நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 2 சதவீதம், 3 சதவீதம் உயர்த்தலாம். ஏன் 5 சதவீதம் கூட உயர்த்தலாம். ஒரே நிலையிலே 14.2 சதவீதம் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் கட்டணத்தை உயர்த்தும் போது மொத்த பொருளாதார சூழ்நிலையை கணக்கில் எடுத்திருக்கவேண்டும். பணவீக்கத்தை கணக்கில் கொண்டு இந்த நேரத்திலே ரயில் கட்டணத்தை உயர்த்திருப்பது சரியா தவறா என்று சீர்தூக்கிப்பார்த்திருக்கவேண்டும். பணவீக்கம்குறைந்துவரும் காலத்தில் ரயில்வே கட்டணத்தை உயர்த்துவது என்பதோ, பணவீக்கம் அதிகரித்துவரும் காலத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது என்பதோ என எதையும் சீர்தூக்கிப்பார்க்காமல், சீர்திருத்தத்தை அறிவிக்காமல், பணவீக்கத்தை கணக்கிலே கொள்ளாமல் அனைத்து விலைகளும் உயரும் நேரத்திலே மிக மோசமான ரயில் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் இந்த அரசை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்பாட்டம்காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும் அன்க்கே காங்கிரஸ் கட்சி  மற்றும்மாநில எதிர் கட்சி சார்பில்  நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.


எனது கருத்து :
மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் பா.ஜ., அரசு, "தேர்தல் வாக்குறுதியில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்போம். விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவோம்' என்று தெரிவித்தது. ஆனால், காஸ், மண்ணெண்ணெய் உட்பட பல்வேறு விலையேற்றம் தற்போது நடந்துள்ளது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில் மத்திய  அரசு ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது .இந்த அரசு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதை விட்டு விட்டு, ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் தேவையில்லை. வருவாய் பெருக்கக் கூடிய எத்தனையோ வழிகள் இருக்கும் போது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் கட்டண உயர்வு தேவையில்லாதது.ரயில் கட்டணம் உயர்வு, அன்றாடம் ரயிலை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு தான். வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி கவலையில்லை  என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை. (சில அரசியல் வாதிகள் உட்பட.) நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.தெற்கு இந்தியாவில்  90%  விழுக்காடு  மக்கள் டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்கள். ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு கடைபிடித்த கொள்கை காரணமாக, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, பொதுமக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தில் மக்கள் தவிக்கும் போது, ரயில் கட்டண உயர்வால் மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய  அரசு கட்டண உயர்வு காரணமாக கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி, ரயில் சர்வீஸை அதிகப்படுத்தணும். ரயிலில் மேம்பாட்டு பணிகளை தரமாக மேம்படுத்தணும் என்பதே நமது அனைவரின் நோக்கமாக உள்ளது.

 ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment