இந்த நிலையில் உலகிலேயே மிகப் பெரிய ஏசுநாதர் மணல் சிற்பத்தை புரி கடற்கரையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்த மணல் சிற்பம் 75 அடிக்கு 35 அடி அளவு கொண்டது. சாதாரண மணலுடன் வண்ண நிற மணலையும் கலந்து ஆயிரம் டன் எடையில் அவர் உருவாக்கியிருக்கும் இந்த மணல் சிலையில் ஏசுநாதர், மேரியம்மை, சாந்தா கிளாஸ் சிற்பங்கள் அடங்கியுள்ளன.
புரி சுதர்சன் மணல் சிற்பக் கலைக்கூடத்தில் பயிலும் தனது மாணவர்கள் 25 பேர் உதவியுடன் 3 நாட்கள் உழைத்து இந்த பிரம்மாண்ட சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார.
புரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கடற்கரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட சிற்பத்தைக் கண்டுகளித்து சென்றனர்.
சுதர்சன் இதற்கு முன் 7 உலக சாதனைகளைப் படைத்திருக்கிறார். லிம்கா சாதனை புத்தகங்கள் அவை இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய ஏசுநாதர் மணல் சிற்பத்தை உருவாக்குவதைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு லிம்கா சாதனைப் புத்தகத்தின் மூத்த ஆசிரியர் முத்தன்ன சிங் எனக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 2010ல் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் உலக சினிமாவும், கலைஞர்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற 2-வது உலக மணல் சிற்பப் போட்டியில் சுதர்ஸன் கலந்துகொண்டார். இதில் சுதர்ஸன் உருவாக்கிய ஹிந்தி நடிகர் ராஜ் கபூரின் மணல் சிற்பத்துக்கு முதல் பரிசு கிடைத்தது.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள், 10 டன் மணல் கொண்டு, 30 மணி நேரத்தில் மணல் சிற்பம் செய்ய வேண்டும். இதில் தனிநபர் மணல் சிற்ப போட்டியில் ‘‘மரங்களைக் காப்போம்: உலகை காப்போம்’’ என்ற தலைப்பில் சுதர்சன் பட்நாயக் வடித்த சிற்பத்துக்கு பரிசு தரப்பட்டது. இந்த பரிசை அட்லான்டிக் நகரின் மேயர் இவருக்கு அளித்தார். இரட்டையர் போட்டியில் சுதர்சன், மேத்யூ ராய் டிபர்ட் உடன் இணைந்து செய்த சிற்பத்துக்கு 5வது பரிசு கிடைத்துள்ளது. 37 வயதான பட்நாயக்குக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. சமுதாய விழிப்புணர்வோடு, மக்களின் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து இவர் செய்யும் மணல் சிற்பங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment