Tuesday, 10 June 2014

உ.பி.யில் இரு பெண்களை கற்பழித்து தூக்கில் ஏற்றிய கொடூரம்!! ஒரு சமூக சிறப்பு பார்வை...


 இந்தியாவின் வட மாநிலமான உத்தர பிரதேசம் பாடாவுன் மாவட்டம் சத்கஞ்ச் கிராமத்தில் இரண்டு இளம் பெண்கள்பலரால்கூட்டாக கற்பழிக்கப்பட்டு பிறகு அவர்களை தூக்கில் ஏற்றி உள்ளனர் காம கொடூரர்கள். இது அந்த கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களுக்குமே 14 லிருந்து 15 வயது வரைதான் ஆகிறது.
வீட்டிலிருந்து இயற்கை கடன்களை கழிக்க சற்று தூரம் உள்ள மறைவான இடத்துக்கு இந்த இரண்டு பெண்களும் சென்றுள்ளனர். இரவாகியும் திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு கிராம மக்கள் காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். ஆனால் காவல்துறையோ எந்த ஒரு விசாரணைக்கும் உத்தரவிடாமல் தட்டிக் கழித்துள்ளது. கூட்டு கற்பழிப்பானதால் அந்த இரு பெண்களும் வலி தாங்காமல் இறந்துள்ளனர். இறந்த அந்த இரண்டு உடல்களையும் மறுநாள் ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டு 'கற்பழிப்பால் தற்கொலை' என்று கேஸை மூடப் பார்க்கிறது காவல் துறை என்கின்றனர் கிராம மக்கள்.
கிராம மக்களின் போராட்டத்தால் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. சர்வேஷ் யாதவ் என்ற இளைஞரையும் போலீஸ் கைது செய்துள்ளது. பணியில் அசட்டையாக இருந்ததால் நான்கு காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் மிகவும் கேள்விக் குறியாக மாறி வருகிறது. தலித் மக்களை உயர் சாதி இளைஞர்கள் கூட்டு வன் புணர்வு செய்வது பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது. அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலரின் பிள்ளைகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதிப்படைந்த மக்கள் கூறுகின்றனர்.
உத்திரபிரதேச போலீஸ் கருத்து 
சிறுமிகள் கொலை செய்யப்பட்டது குறித்து, உத்திரபிரதேச டி.ஜி.பி. ஆனந்த் லால் பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது, கொலை செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் கற்பழிக்கப்பட்டார் என்பது உறுதியாகவில்லை.அவர் சொத்துபிரச்சினையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஏனெனில், அந்த சிறுமி அந்த குடும்பத்தின் ஒரே வாரிசு ஆவார்.
உத்திரபிரதேச அரசியல்வாதிகளின்  கருத்து 
  ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவோ, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.உத்தரபிரதேசம் மிகப்பெரிய மாநிலம். எனவே பலாத்காரம் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணமாக எடுக்க கூடாது. இதில் அரசை குறை கூறவழியில்லை என்று ஆளும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மோசின் கான் தெரிவித்துள்ளார்.மாநில முதல்வர் அகிலேஷ் யாதவோ, எல்லா மாநிலத்திலும் இப்படித்தான் நடக்கிறது என்று கூறியிருந்தார். சமாஜ்வாடி கட்சியினரின் இந்த பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும்  அக்கட்சியின் மூத்த தலைவர் மோசின்கான் கூறுகையில், "காதலர்கள் தங்களுக்குள் உடல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டு பிரச்சினை என்று வரும்போது பாலியல் பலாத்காரம் என்று அதை புகாராக அளிக்கிறார்கள்' என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சர் மேனகா காந்தி
பாலியல் பலாத்கார விவகார நடவடிக்கை மையம்: இதனிடையே, "பாலியல் பலாத்கார வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க பாலியல் பலாத்கார விவகார நடவடிக்கை மையம் விரைவில் தொடங்கப்படும்' என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

 என் கருத்து :
பெண்களுக்கு எதிராக கூற முடியாத வன்முறைகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. உ.பி.யில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது. குறிப்பாக தலித் மக்களின் வீடுகளில் அறவே கிடையாது. இதனால் காலைக்கடன்களை பல பெண்கள் இரவில் கழிக்கவேண்டி உள்ளது. இதற்காக, அவர்கள் தேடிச் செல்லும் இருட்டு மற்றும் ஒதுக்குப்புறங்கள் அவர்களின் பலி களமாகிவிடுகிறது.
கழிப்பிடம் செல்லும் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாவது நாட்டில் இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஏப்ரலில் ஹரியானாவின் பகானா கிராமத்தில் 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
உலகின் எல்லா இடங்களிலும் அமைதியையும் முன்னேற்றத்தையும் காண முடியாது.இந்தக் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.பெண்களின் உடை பழக்கங்களில் நிறைய மாற்றம் வந்தது ஒரு முக்கிய காரணம் அது மட்டுமல்லாமல் அவர்கள் ஆண்களை ஈர்க்கும் விதமாக நடந்துகொள்வதும் ஒரு காரணம்.மூன்று முறைகளைப் பெண்கள் பேண வேண்டும். ஒழுக்கமான ஆடைகளை அணிந்து உடலை மறைக்க வேண்டும். நாம் யாருடன் செல்கிறோம், எந்த நேரத்தில் செல்கிறோம் என்பதை கவனமாக முடிவு செய்ய வேண்டும்.
மனிதம் பேசும் மக்களே கட்சிகளே அமைதி ஏன் ? தாழ்த்தப்பட்ட சகோதரிகள் என்பதாலா ?? இரு பெண்களை கற்பழித்து தூக்கில் ஏற்றிய கொடூரம்!  பெண்கள் இடையே பாரபட்சம் மற்றும் விதி மீறல்கள் நடைபெறும் நிலையில்,  இந்தக் குற்றவாளிகள் மீது காலம் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.இஸ்லாமிய (சரியா ) சட்டங்களை இணைத்து, குற்றவாளிகளையும்  தூக்கில் ஏற்றினால்தான் இது போன்ற கற்பழிப்புகளும் கொலைகளும் குறையும். 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment