Wednesday, 29 August 2012

காதலில் சிக்கி ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு!!-ஒரு விழிப்புணர்வு ஆய்வு ..

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். 

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடி
போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, சகோதரி களே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை மற்றும் சகோதரிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோஅல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள்.

 ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.

கடந்த மாதம்  முன்பு நடந்த ஒரு கொடூரத்தை சொல்கிறேன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அழகாண இஸ்லாமிய பெண், ஒரு காபிரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்தால், அவனும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து தான் அவளை திருமணம் செய்தான். ஆனால், அந்தஇன்பம் 40 நாட்களுக்குள் அவளுக்கு முடிவுக்கு வந்தது . ஆம், அவளை ஒரு அறையில் அடைத்து கொடூரமாககொன்று , நகை, பணங்கள் எடுத்து ஓடிவிட்டான், 3 நாட்களுக்கு பிறகு காவலர்கள் உதவிடன் அறையை திறக்கும்
போது, உடல் அழுகிய நிலையில் அவளின் பிணம், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவள் கற்பமாக உள்ளாள் என்பது குறிப்பிட தக்கது, இந்த சம்பவத்தை ஊடகங்கள் மறைத்தது அதை விட கொடுமையானது.



ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்,தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்..

இது பற்றிய இஸ்லாம் கூறுவது.....



இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
 

நினைவில் கொள்க ! நீங்கள் ஒவ்வொரு வரும் பொருப்பாளியே . உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொருப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் . ஆட்சித் தலைவர் மக்களின் பொருப்பாளராவார் . அவர் தன் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் . ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொருப்பாளன் ஆவான் . அவன் , தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான் . பெண் தன் கணவனின் வீட்டாருக்கும் , அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள் . அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள் . ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான் . அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான் . நினைவில் கொள்க ! உங்களில்ஒவ்வொருவரும் பொருப்பாளியே ! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் .
(ஆதாரம் ஷஹீஹில் புஹாரி பாகம் 7 , அத்தியாயம் 93 எண் 7138)

அல் குரான் கூறுவது...
                                    நரகத்தில் நெருப்புக்கு அதிகமான உணவு பெண்கள் தான் என்றும், தமது கணவருக்கு மாறு செய்யும் பெண்களுக்குசொர்க்கம் ஹராம் என்றும், அழகும்,பணமும்,ஆரோக்யமும் நிறைந்த ஒரு காபிரை விட, இது எல்லாம் இல்லாத ஒருசாதாரண மூமினை தான் திருமணம் பண்ணவேண்டும் என்றும், சூரத்துல் அல்-பகரா , அந்நிஸா போன்றஅத்தியாயங்களில் கடுமையாக கட்டளையிட்டு நம்மை எச்சரிக்கின்றான்.


ஆக்கம் : மு.அஜ்மல் கான்.

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளைப் புற்றுநோய் வருமாம்!- ஒரு விழிப்புணர்வு ஆய்வு


மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.

புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் இப்போதுசெல்போனசேர்வதாலஎன்னநேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை.

ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.

அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது.

2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்! உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.

எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன.

அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம்.

ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது. அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது.

இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது.

ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாநிலம்- ஒரு பார்வை...


 அமெரிக்காவில் உள்ள  நியூ மெக்ஸிகோ மாநிலம் பற்றி நாம் தெரிந்து  கொள்வோமே !  இந்த மாநிலம், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களை  விட ரொம்ப வித்தியாசமாக இருக்கும். Santa Fe யில் உள்ள Adobe ஸ்டைல் வீடுகள் பற்றி சொல்லி இருந்தேன்.

 இன்று,  அந்த மாநிலத்தில் உள்ள "White Sands National Monument Park" பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்.  பதிவு நீளமாக தெரிவதற்கு படங்கள் தான் காரணம்.  நான் எடுத்த படங்களை போடாமல், கூகிள் தலையில பாரத்தை போடுறேன். ஏன்னு நீங்களே அப்புறம் தெரிஞ்சுக்குவீங்க..... ;-)


275 சதுர மைல்களுக்கு,  வெள்ளை பாலைவனமாக அழகு மிளிர காட்சி அளிக்கும் இடம் இது.  பனி மாதிரி எங்கு பார்த்தாலும்  வெள்ளை மணல். .......  உலகத்திலேயே பெரிய ஜிப்சம்  மணல் மேடுகள் இதுதான் என்று சொல்லிக்கிறாங்க... (World's largest Gypsum Dune Field)


அங்கு அதிகமாக கிடைக்கும் சுத்தமான ஜிப்சம் (Hydrous Calcium Sulfate)  , காற்றினால்  கொண்டு வரப்பட்டு இப்படி மணல் மேடுகளாக டெபாசிட் ஆகி விடுகிறதாம்.  அதீத குளிரும் வெயிலும் உள்ள இந்த இடத்தில் கூட சில தாவரங்களும் மிருகங்களும் தங்களுக்கு ஏற்ற இடமாக adopt செய்து கொண்டு நிம்மதியாக இருக்குதுங்க...


 இப்படிப்பட்ட இடத்தை பற்றி மேலும் தகவல் வேணும்னு நினைக்கிறவங்க - அது எப்படி உருவாகியது?  என்ன என்ன இருக்குது? எதனால் இருக்கிறது?  லொட்டு லொசுக்குனு  - கேள்வி கணைகளை தொடுக்கிறவங்க :
http://www.nature.nps.gov/geology/parks/whsa/index.cfm  
அமெரிக்க govt .  கொடுத்து இருக்கிற மேல  உள்ள லிங்க் கிளிக் பண்ணி முழு விவரங்களும்  தெரிஞ்சிக்கோங்க.  
மற்றவங்க, மேற்கொண்டு வாசிங்க.....


மற்ற சமயங்களில் குடும்ப படத்தை பார்க்க வர்ற மாதிரி கூட்டம் வந்தாலும்,  இங்கே வெள்ளை மணல் மேடுகள் பின்னே,  பௌர்ணமி அன்று நிலா  உதிக்கும் நேரம் - அந்த கவித்துவமான அழகை காண romantic ஜோடிகள்  வருகை தருகிறார்கள்.  நம்ம தமிழ் படங்கள்ல வர மாதிரி,  chorus ஹம்மிங் உள்ள  background music தான் மிஸ்ஸிங் ஆக இருந்துச்சு....


சூரிய அஸ்தமனம் நேரத்தில்,  அங்கே வாக்கிங் போக வசதி பண்ணி வச்சுருக்காங்க.  அந்த நேரம்,   மாலை நேர சூரிய ஒளி பட்டு, வெள்ளை மணல் மேடுகள் எல்லாம் மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என்று பல நிறங்களில் நிறம் மாறி மாறி ,  இருளை தழுவி கொண்டது. சிறிது நேரத்தில்,  வெள்ளி மின்னல் வெளிச்சம் போல,  முழு நிலா எழும்பி பிரகாசிக்க வைத்தது ........ அதை பழமொழி மாதிரி ஆராயக் கூடாது.... அனுபவிக்கணும்.  சூப்பரோ சூப்பர்!


அப்படியே டூயட் பாடலாமானு நினைச்சா.... அடுத்து கேள்விப்பட்ட நியூஸ்  ஏதோ மணிரத்தினம் சார் படங்கள் "ரோஜா"  - "Dil Se" -   மாதிரி   சீனை மாத்திடுச்சு.   மென்மையான  காதல் கதை சொல்லிக்கிட்டு இருக்கிற போது, மிலிட்டரி என்ட்ரி ஆகிற  மாதிரி,   கதை  தீம் போய்டுச்சு ....  காதல் ரசம் போய் கார்கில் ரசம் ஊத்துச்சு...... வெள்ளை மணல் உருகி,    சிவப்பு தடம் பதிக்கிற  மாதிரி மாறிச்சு.   ..... (அப்பாடி, அர்த்தம் இருக்குதோ இல்லையோ,  ஒரு flow ல  பதிவுக்கு வச்ச டைட்டில் வந்துடுச்சு..... மேல சொல்றேன், கேளுங்க......)
 


 அங்கே பார்க் நடவடிக்கைகளை மேற்பார்வை பார்க்க வந்த ஒரு   Ranger இடம், பேசும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் சொன்ன தகவல் -  இங்கே எல்லா நேரமும் இப்படி அழகை ரசிக்க  முடியாது  என்று  ஒரு குண்டை தூக்கி போட்டார். இந்த பார்க், 40 % தான் பொது மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டு இருக்கிறது.  60 % இடம்,  அமெரிக்க மிலிட்டரிக்கு  சொந்தமானது.  பொது மக்கள், அங்கே போக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


அது மட்டும் இல்லைப்பா, இந்த ஏரியாவில்  மக்கள் விசிட் அடிக்கிறாங்களே தவிர,  வீடு கட்டி வாழ்றது இல்லை.  ஏன் தெரியுமா?  .... ஷ்ஷ்ஷ்....... யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க..... குறிப்பாக தீவிரவாதிகள் யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.... காதை கொடுங்க... உங்களை நம்பி ராணுவ ரகசியம் மாதிரி இருக்கிற மேட்டர் சொல்றேன். "இங்கேதான் மிலிடரி அப்போ அப்போ Missile Testing எல்லாம் பண்றாங்க..... புதுசா செய்ற பாம் எல்லாம் வெடிச்சு சோதிச்சு பார்க்கிறாங்க..... "  அந்த மாதிரி குண்டு வெடிப்பு சோதனை நேரங்களில், பார்க் ஏரியா மட்டும் இல்லை,  அந்த  ஊரு பக்கம்  முழுவதும் யாரும் போக விட மாட்டாங்க....  எல்லாம் ரோடுகளும் க்ளோஸ் பண்ணி - மிலிட்டரி  காவல் போட்டு விடுறாங்க.... சோதனைகள் முடிந்த பின் தான் திறந்து விடுவாங்க...

 ....  சமாதான வெள்ளை நிற  மணல் பக்கம்,   ஒரு  யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு! 



டெஸ்டிங் இல்லாத நேரங்களில் கூட,  இந்த பார்க் பக்கம் போகும் போது,   திடீர்னு செக் போஸ்ட்  வச்சு நம்மை பற்றிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்டு செக் பண்றாங்க.... முதல் வாட்டி, இப்படியெல்லாம் க்ளோஸ் அப்புல, ஆர்மி ஆட்கள் -  மெஷின்  கன்ஸ் பார்த்தேனா ...... கொஞ்சம் டென்ஷன் ஆகி போச்சு.... நல்ல வேளை,  கையில பாஸ்போர்ட்ல இருந்து  எல்லாம் ரெடி ஆக இருந்ததுனால திரும்பி வந்து இங்கே ப்லாக் எழுதி கிட்டு இருக்கேன்..... இல்லைனா, பிடிச்சுட்டு  போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ?  எம்மாடி!  (பில்ட் அப் கொடுக்க வேண்டியதுதான் ...... அதுக்காக இப்படியா என்று யாரும் கேலி பண்ணாதீங்க. அப்புறம் உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)



என்ன சொல்ல வரேன்னா - இந்த இடத்தை எத்தனை அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போய் பார்த்து இருப்பாங்க என்று தெரியல..... பார்க்காதவங்க, மிலிடரி குண்டு போட்டு டெஸ்ட் பண்ணி பார்க்காத நேரத்துல போய் பார்த்துட்டு பத்திரமாக வாங்க....  அப்புறம், நான் வார்னிங் கொடுக்கலைன்னு சொல்லாதீங்க.....



விரைவில்,  நியூ மெக்ஸிகோவில் உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா?   

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 28 August 2012

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?- ஒரு சிறப்பு பார்வை...

File:Pookalam2009onam.jpgகேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம்.
ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி
பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள்
வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை
ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில்
இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை
அறுவடைத் திருநாளாக கொண்டாடினர்.
தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே
மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு
விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா
நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த
குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையைஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.

ஓணம் பண்டிகை...
நட்சத்திரங்களிலேயே இரண்டு நட்சத்திரங்கள்தான் மிகவும் மரியாதை பெற்றவை. ஒன்று திருவாதிரை. மற்றொன்று திருவோணம். இந்த இரண்டு நட்சத்திரங்களுக்குமட்டுமே திரு என்ற அடைமொழி உண்டு. இவற்றில், திருவோணம் கேரளத்தில்மட்டுமல்லாது, மலையாளி அன்பர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணியில் உத்திர நட்சத்திரநாள் தொடங்கி திருவோணம் வரை பதினோரு நாட்கள், வீடுகள் தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. என்னதான் ஏழையாக இருந்தாலும் இந்த நாட்களில் அவர்கள் அடுத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள்.ஓணத்தை ஒட்டிப் பழமொழிகளும் உண்டு. ‘உத்திரம் கறுத்தால் ஓணம் வெளுக்கும்; ஓணம் கறுத்தால் உத்திரம் வெளுக்கும்’ என்பது பழமொழி. அதாவது, உத்திரத்தன்று மழை பெய்தால், ஓணத்தன்று மழை இருக்காது; ஓணத்தன்று மழை பெய்தால், உத்திரத்தன்று மழை இருக்காது.


 மன்னனுக்கான கொண்டாட்டம்..

மகாபலி சக்கரவர்த்தியின் கதை நம் அனைவருக்குமே தெரியும். மூன்றடி மண் கேட்ட பரவாசுதேவனுக்கு, ‘‘தருகிறேன்’’ என்றார், மகாபலி. சுவாமியோ, ஆகாயம் உட்பட எல்லா உலகங்களையும் இரண்டு அடிகளிலேயே அளந்து விட்டார். மூன்றாவது அடிக்கு இடம் கொடுக்க முடியாத மகாபலி சக்கரவர்த்தியை, சுவாமி, தன் அடியால் அழுத்தி பாதாள உலகத்திற்கு அனுப்பி விட்டார். 

அப்படிப்போன மகாபலி, ஒவ்வோர் ஆண்டும் ஆவணித் திருவோணத்தன்றுபாதாள உலகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார். அவர் வெளிப்படும் இடம் கேரளம்.அப்படி வெளிப்பட்ட மகாபலியை வரவேற்கும் முகமாகவே இப்பண்டிகைகொண்டாடப்படுகிறது. ‘‘மூன்றடி மண்ணை, ஆண்டவனுக்கே தருவேன்.கடவுளே வந்து என்னிடம் கை நீட்டி யாசகம் கேட்கிறார் என்றால், அதைவிடஎன்ன வேண்டும்?’’ என்று ஆணவம் பிடித்துப் பேசிய மகாபலியின் ஆணவத்தை,சுவாமி அடக்கினார்.ஆகவே, ஆணவ நீக்கமே ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பார்கள் பெரியோர்கள்.

அத்தப்பூக்கோலம்..

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.



சிறப்பு உணவுகள்..

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை,அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய்,சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.

புலிக்களி

"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

மலையாளப் பண்டிகையான ஓணம் திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு எனது  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

நன்றி : தினமலர்,தினத்தந்தி.தமிழ் விக்கிப்பீடியா
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

World’s Tallest Buildings, Currently under Construction..

The dream of all architects is to build something memorable that will last for centuries, buildings to be known by everyone, and how you can make yourself more famous than building the tallest building in the world. Thus, they seem to target the infinite with their skyscrapers.
High Standards
World’s Tallest Buildings
Let’s see the highest buildings that are currently under construction worldwide, according to Business Insider.
Their average height is going to be more than 1,853 feet (or 565 meters).
China leads in this top with 6 buildings to be completed.
Khalifa Tower
Burj Khalifa
However, none of these buildings will not exceed Burj Khalifa, Dubai, the building that is for the moment, the tallest building in the world with 2716.54 feet (or 828 meters).
With is height Burj Khalifa is:
1, City Ranking: #1 tallest in Dubai;
2, National Ranking: #1 tallest in the United Arab Emirates (UAE);
3, Regional Ranking: #1 tallest in the Middle East;
4, Global Ranking: #1 tallest in the World.
The Burj Khalifa or Khalifa Tower skyscraper is perhaps one of the most  famous world-class destination and the magnificent centerpiece of Dubai. Burj Khalifa is one of the world’s architectural jewel, surpassing expectations and limits. It rises gracefully from the desert heart and honours this Persian Gulf Emirate with a new glow. Burj Khalifa is at the heart of Dubai people.


1,  Busan Lotte Town Tower – South Korea:
Busan Tower - South Korea

2,Pentominiun – Dubai:
The Pentominium
The Pentominium – Dubai
When this tower will be completed in 2016, it will have 1673 feet (510 meters) height. The construction site is situated on a prominent waterfront in Busan, South Korea.In fact, it will be a mixed building, hotel, condominiums, entertainment facilities, retail and underground parking. The mixed-use tower will add more than 6.3 million square feet to this South Korean port city. It will be indeed the gateway of East Asia.






Trident International Holdings has created unique alliances with different premium brands from around the world for its brand new 516 meter-tall skyscraper that will be the ‘defined height of luxury’.
The top floors of the Pentominium will contain a Sky Pool, Sky Lounge,  a private observation deck and Business Center  along with health clubs, a banqueting hall, squash courts, private theater and a cigar lounge.
Every condominium unit will take up the complete floor level of the tower providing more than 6500 sq.ft. of living space.
In fact, Pentominium is defined as “height of luxury”. Why?
Because Pentominium Tower has taken the luxury living concept to an entirely new level.
3, Greenland Dalian Center – Dalian, Liaoning, China:
Greenland Dalian Center - Dalian, Liaoning, ChinaThe Pentominium will provide unique world class residential units.
Dalian Greenland Center is an under construction building in Dalian, Liaoning, China, designed to be almost 1,700 feet  (518.00 meters) height. It will be the tallest building in Northeast China. This tower, funded by Greenland Group, which is a leading developer in China, will cover a total area of 645,834.62 square feet(60,000 square meters) and a total building area of 6,178,484.5 square feet (574,000 square).





4, CTF Tower – Tianjin, China:
CTF Tower - Tianjin
The 96-story-height CTF Tianjin Tower will become a bold monolithic architectural expression on the skyline outside Tianjin, China. This 1,740 feet (530 meters) height tower will contain 300 service apartments, offices and a 5-star hotel beneath its arched top.






The New World Trade Center5, World Trade Center - New York:

One World Trade Center, ors 1 WTC is known as the Freedom Tower, and will be the lead building of the new World Trade Center complex in Manhattan, New York. The 104-story, almost  1775 feet (541 meters) tall tower will be constructed in the corner of the World Trade Center site, occupying exactly the location where once, the original World Trade Center stood.



6, Goldin Finance 117 – Tianjin, China:
Goldin Finance
Goldin Finance 117 will be part of Tianjin Goldin Metropolitan and is another skyscraper building under construction in China. Its construction began in 2009, and it and is estimated to be completed in 2015. the structural material is composite and it will have an utilization as hotel/office building.
Goldin Finance 117 will be a quite tall building with its 1957 feet (596.6 meters).





7, Makkah Clock Royal Tower – Makkah, Saudi Arabia
Makkah Clock Royal Tower - Saudi Arabia



The Makkah Royal Clock Tower, with its 76 floors and 1893 feet (577 meters) will be the the second tallest tower in the world. It will feature a 40 meters clock that will be more larger than  Big Ben (more than five times).
The Clock will be bright lit and visible from 16 maybe 17 kilometers away at night and more than 10, 12 km during the day.




8, Shanghai Tower – Shanghai, China
The Shanghai Tower, China
The steel structure of this tower will rise to almost 2074 feet (632 meters) wrapped around a  1855.64 feet (565.6 meters) height central concrete core. In total Shanghai Tower will have 127 floors, an internal area of  about 558,806 square meters. It will have an utilization as a luxury hotel, offices and retail.
Its construction has started in December 2008 with completion in 2014. Once finished it will be perhaps, China’s tallest building.



9, Ping An International Finance Center  Shenzhen, China
The Ping An International Finance Center Tower


The Ping An International Finance Center Tower is a 2,126 feet (648 meters) and 115-stories super tall tower under construction in Shenzhen, Guangdong province, China. This building is expected to be completed in 2015. It is currently one of the the tallest building under construction.






10, India Tower – Mumbai, India
Dynamix Balwas TowerThe building has a total gross floor area of almost 4 millions square feet (378,600 square meters) plus a basement area of 968,752 square feet (90,000 square meters). This building will consist of supporting facilities, offices, parking and a conference center.India Tower  is also well known as Dynamix Balwas Tower (DB Tower) and  is a super tall building skyscraper currently under construction in Mumbai City, India. When completed, this skyscraper will be the second tallest structure in the world after the Burj Khalifa.
It will reach a height of 2297 feet (700 meters) and it will have 125 floors.





Collection by M.Ajmal Khan.

உங்கள் தளத்தை ஒரே நிமிடத்தில் 100+ Search Engineல் இணைக்க


நாம் நம்முடைய பிளாக்கை பிரபல படுத்த 
பல எண்ணற்ற வழிகளை கையாள்கிறோம். 
அதில் முக்கியமானது இந்த SEO எனப்படும் 
தேடியதிரங்களில் நம் பதிவை இணைப்பது.

  இணைய உலகில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தேடியந்திரங்கள்
 இருப்பது நாம் அறிந்ததே இவை அனைத்திலும் நாம் ஒவ்வொன்றாக
 தேடி தேடி நம் பிளாக்கை இணைப்பதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுவோம். 
அதை தவிர்க்கவே இந்த பதிவு.

 

இந்த வேலையை சுலபமாக்க நமக்கு ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று 
உங்கள் தளத்தின் முகவரி மற்றும் உங்கள் மெயில் ஐடி மட்டும் கொடுத்தால் 
போதும் அடுத்த ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து 
தேடியந்திரங்களிலும் இணைக்க பட்டு விடும்.  கீழே என் தளத்தை இனைததர்க்கான 
முடிவை கொடுத்துள்ளேன். இதில் சரியாக 106 தளங்கள் உள்ளன.


இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு முதலில் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதலில் Website என்ற இடத்தில் உங்கள் தளத்தின் முகவரியை கொடுக்கவும்
  • அதற்கு அடுத்து உள்ள Email என்ற கட்டத்தில் உங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை 
  • தரவும்.(இதில் நீங்கள் முக்கியமாக உபயோகிக்கும் மெயில் ஐடி தரவேண்டாம் இதர 
  • மெயில் ஐடி தரவும். ஏனென்றால் இந்த தளங்கள் உங்களுக்கு Spam message அனுப்பும்
  •  வாய்ப்பு உள்ளது.) 
  • அடுத்து உங்களுக்கு எந்தெந்த தேடியந்திரங்களில் இணைக்க வேண்டாம் என்று 
  • நினைக்கின்றீர்களோ அந்த தளத்திற்கு நேராக இருக்கும் டிக் மார்க் எடுத்து விடுங்கள்.
  • இறுதியாக நீங்கள் Submit என்ற பட்டனை அழுத்தினால் போதும் அடுத்த ஒரு சில 
  • வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து தேடியந்திரங்களிலும் இணைக்கப்பட்டு 
  • விடும். உங்களுக்கு கீழே இருப்பதை போன்ற முடிவு வரும்.
  1. Google.com : Submitted
  2. Google PK : Submitted
  3. Google SA : Submitted
  4. WhatUseek.com : Submitted
  5. InfoTiger.com : Submitted
  6. Rediff.com : Submitted
  7. ScrubTheWeb.com : Submitted
  8. EntireWeb.com : Submitted
  9. SearchIt.com : Submitted
  10. SusySearch.com : Submitted
  11. Abacho.co.uk : Submitted
  12. SearchUK.com : Submitted
  13. AxxaSearch : Submitted
  14. Al-Bawaba(Arabic) : Submitted
  15. AllTheWeb.com : Submitted
  16. Altavista.com : Submitted
  17. Altavista DE : Submitted
  18. Altavista UK : Submitted
  19. Anzwers : Submitted
  20. Canada : Submitted
  21. Direct Hit : Submitted
  22. Excite : Submitted
  23. Excite UK : Submitted
  24. Fireball : Submitted
  25. Go : Submitted
  26. Hotbot : Submitted
  27. Infomak : Submitted
  28. Infoseek : Submitted
  29. Lycos : Submitted
  30. Lycos EU : Submitted
  31. National Dir : Submitted
  32. Northernlight : Submitted
  33. Voila : Submitted
  34. Web Crawle : Submitted
  35. Web Top : Submitted
  36. Web Wombat : Submitted
  37. Abacho : Submitted
  38. Abacho.de : Submitted
  39. Aesop.com : Submitted
  40. Active7 : Submitted
  41. Aeiwi : Submitted
  42. Al-Bawaba : Submitted
  43. Alexa : Submitted
  44. Amfibi : Submitted
  45. Amidalla : Submitted
  46. AxxaSearch : Submitted
  47. Beena.com : Submitted
  48. BestYellow : Submitted
  49. BigFinder : Submitted
  50. Blinkx.com : Submitted
  51. Claymont.com : Submitted
  52. Cipinet.com : Submitted
  53. CozyCabin : Submitted
  54. CurryGuide : Submitted
  55. Crucesonline.com : Submitted
  56. Debra4homes : Submitted
  57. Derfinder.at : Submitted
  58. DMchat : Submitted
  59. EntireWeb : Submitted
  60. Epicurus.com : Submitted
  61. Evisum.com : Submitted
  62. Free-1.com : Submitted
  63. Gigablast : Submitted
  64. Google : Submitted
  65. Hawaianportal : Submitted
  66. Hitseek.de : Submitted
  67. Hypermaze.com : Submitted
  68. Iguana.com.mx : Submitted
  69. Internet Cruiser : Submitted
  70. Internetvitrine.de : Submitted
  71. InfoProbe.net : Submitted
  72. InfoSniff : Submitted
  73. InfoTiger : Submitted
  74. Jerkasmarknad : Submitted
  75. Kaufen.ch : Submitted
  76. Kel.nl : Submitted
  77. KnowBe : Submitted
  78. List-Team : Submitted
  79. Linkball.de : Submitted
  80. Logo22.de : Submitted
  81. Lookseek.com : Submitted
  82. Maxishop.de : Submitted
  83. Meet.de : Submitted
  84. Metaeureka.com : Submitted
  85. MixCat : Submitted
  86. MSN (BCentral) : Submitted
  87. MyProwler : Submitted
  88. Nathan.de : Submitted
  89. Noago : Submitted
  90. Objects Search : Submitted
  91. Paginanl.nl : Submitted
  92. Promosearch.de : Submitted
  93. Quicksurfer.de : Submitted
  94. Railler.nl : Submitted
  95. Ravencom.net : Submitted
  96. Rediff.com : Submitted
  97. Search.ch : Submitted
  98. Search2003.de : Submitted
  99. Search Ave : Submitted
  100. Searchdepo.com : Submitted
  101. SearchEngine : Submitted
  102. SearchIt : Submitted
  103. Searchmaster.de : Submitted
  104. Searchmax.de : Submitted
  105. Search-o-rama : Submitted
  106. Searchramp.com : Submitted
இது என் தளத்தை இணைத்ததர்க்கான முடிவு. அவ்வளவு தான் உங்களுடைய தளம் 
நூற்றிற்கும் மேற்ப்பட்ட தளங்களில் இணைக்கப்பட்டு விட்டது. அதுவும் ஒரு 
நிமிடத்திற்குள்ளாகவே. 

அந்த தளம் செல்வதற்கான லிங்க் - http://www.seoscores.info/submit/


நன்றி : திரு பி.கணேஷமூர்த்தி.