Thursday, 23 August 2012

கிராமமாக இருந்து மாநகரமான சென்னை இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.


Hotel image
இன்று மாநகரமாக உள்ள சென்னை ஒரு காலத்தில் சிறுசிறு கிராமங்களாக இருந்தது. அவற்றை பல்லவசோழபாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் ஆண்டனர். மன்னர் ஆட்சி நடக்கையில் வெளிநாட்டு வர்த்தகர்களும்மதபோதகர்களும் கப்பல் மூலம் சென்னை கடற்கரையில் வந்திறங்கினர். அப்போது சென்னைசென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. 

 சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.


தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.


தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.


சென்னைக்கு செல்லும் வழி: இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.


இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது.


சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது.


செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.  

வரலாற்றில் சென்னை
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.

1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையின் பூகோள மற்றும் சீதோஷ்ண நிலை:

Hotel image
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.

இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திரவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆற்ற�ப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல்ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மக்கள் தொகை
சென்னை நகரின் மக்கள் தொகை 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 லட்சமாக இருந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 64 லட்சத்தைத் தொடுகிறது. சென்னையில் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரள மாநில மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் தமிழும் பெரும்பலோருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும்.

சென்னை பொருளாதாரம்
சென்னையில் வளம் கொழிக்கும் பொருளாதார நிலை நிலவுகிறது. கார்த் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உட்பட பல துறைகளிலும் சென்னை பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது. இந்திய பொருளாதாரத்தில் தடைகள் அகற்றப்பட்டபின் கம்ப்யூட்டர் துறை, வர்த்தகம் மற்றும் அவுட்சோர்சிங் துறைகள் பெரிய வளர்ச்சி காண ஆரம்பித்தன.

டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ், சத்யம், ஐ.பி.எம்., ஆக்சன்சர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்.சி.எல்., மற்றும் இதர கம்ப்யூட்டர் நிறவனங்கள் சென்னையில் காலூன்றின. டெல், நோக்கியா, மோட்டோரோலா, சிஸ்கோ, சாம்சங், சைமன்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.

இவற்றில சில நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தங்கள் கிளைகளைத் துவக்க உள்ளன. சென்னை நகரில் தற்போது 2 உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன.

சென்னையில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்த் தொழிற்சாலைகள் உள்ளன. ஹுண்டாய், மிட்சுபி, போர்டு, டி.வி.எஸ்., அசோக் லேலேண்டு, ராயல் என்பீல்டு, டாபே, டன்லப், எம்.ஆர்.எப்., போன்ற தொழிற்சாலைகள் சென்�யை ஒட்டி அமைந்துள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகினறன.

பாங்கிங் மற்றும் நிதித் துறையிலும் இந்தியாவில் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது. பணம் கொழிக்கும் தமிழ்த் திரைப்படத் தலைநகராகவும் சென்னை திகழ்கிறது.


      சென்னை தினம் கொண்டாடப்படும் இன்றுடன் சென்னை உருவாகி 373 ஆண்டுகள் நிறைவு பெறுகிறதுஇந்தியாவின் அடையாளமாகவும், தமிழ்நாட்டின் சின்னமாகவும் விளங்கும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • சென்னையின் பரப்பளவு: 200 சதுர கிலோமீட்டர் (இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது)
  • சென்னையின் மக்கள் தொகை: 46,81,087
  • ஆண்களின் எண்ணிக்கை: 23,57,633
  • பெண்களின் எண்ணிக்கை: 23,23,454
  • ஆண்/பெண் விகிதம்: 1000 ஆண்களுக்கு 986 பெண்கள்.
சென்னை நகரம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது என்றாலும் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னை பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் கொண்டதாக விளங்குகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது.

சென்னையின் சிறப்புகள்
  • சென்னையில் ஆண்டு தோறும் 35,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது.
  • சென்னை, ஆட்டோமொபைல் துறையில் 40 சதவீத பங்களிப்பை கொண்டிருப்பதால் இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுகிறது.
  • சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.
  • இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரம் சென்னை.
  • உலகின் 50 முக்கியமான நகரங்களில் சென்னை 35 இடத்தில் உள்ளது.
  • இந்தியாவிலேயே அதிக இரு சக்கர வாகனங்கள் (two wheeler) ஓடும் நகரம் சென்னை.
  • இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் மக்கள் தொகையை விட அதிக வாகனங்கள் ( 20 லட்சம்) உபயோகப்படுத்தப்படும் நகரம் சென்னை.
  • 1855 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவிலேயே முதல் உயிரியல் பூங்காவான வண்டலூர் உயிரியல் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.
  • மும்பையை அடுத்த மிகப்பெரிய திரைப்படத்துறை நகரம் சென்னையாகும்.
சென்னையில் உள்ள முக்கிய இடங்கள்
மெரினா கடற்கரை
உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட கடற்கரை என்ற பெருமையை கொண்டது மெரினா கடற்கரை. ரம்யமான இந்த கடற்கரையை காண தினமும் பல ஆயிரம் சுற்றுலாவாசிகள் இங்கு வருகின்றனர். இக் கடற்கரையில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சமாதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித ஜார்ஜ் கோட்டை
புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. கி.பி.1639 ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோட்டை பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது.

வள்ளுவர் கோட்டம்
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். முன்னால் அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பெரியதும், சிறியதுமாக உள்ள நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை. இங்குள்ள குறள் மணி மாடத்தில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பெற்றுள்ளன. வேயா மாடத்தில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.

கிண்டி தேசிய பூங்கா
குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று ஒரு நாள் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம் கிண்டி தேசிய பூங்கா. கிண்டியில் உள்ள தேசிய பூங்கா விலங்குகள், பறவைகள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் என நம்மை மற்றோர் உலகிற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு விதமான மரங்களும், இதுவரை பார்த்திராத பறவை இனங்களும், அரிதான விலங்கினங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பலவும் இங்கு தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளை அழைத்துச் சென்று காண இது ஏற்ற இடம் என்பதில் சந்தேகமில்லை.


பிர்லா கோளரங்கம் (Birla Planetarium)
பிர்லா கோளரங்கம் சென்னை புறநகர் பகுதியான கோட்டூர்புறத்தில் உள்ள முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட ஒரு கோளரங்கம் . இது தெனிந்திய மாநிலமான தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றான பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஒரு பகுதி. இது காந்தி மண்டபம் அருகில் கோட்டூர்புரம் பேருந்து மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ளது. இது 1988 ல் சென்னை பெரியார் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப மையத்தால் ஒரு திட்டமாக தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் சிந்தனையாளர் பி.எம்.பிர்லா நினைவாக கட்டப்பட்டது. இதில் காடப்படும் ஒலி ,ஒளி காட்சிகள் அறிவையும், வானவில் நிகழ்வுகள் பற்றிய ஆர்வத்தையும் வளர்க்கும்படி உள்ளது. இதில் குளிர் சாதன வசதி கொண்ட 235 பேர் அமரக்கூடிய அரங்கம் உள்ளது.

கபாலீஸ்வரர் கோவில்
கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.

பார்த்தசாரதி கோவில்
8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் முதன்மை கடவுள் வெங்கட கிருஷ்ணர் (பார்த்தசாரதி) ஆவார். இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இக்கோவில் வைணவர்களின் 108 திவ்விய (தெய்வத் தன்மை வாய்ந்த) தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் வேங்கடக் கிருஷ்ணர் மகாபாரதப் போரின்போது பார்த்தனின் (அர்ஜுனன்) சாரதி (தேரோட்டி) வடிவில் காட்சி அளிக்கிறார்.

மதராஸ் பட்டணம் என்ற பெயரில் உருவான தற்போதைய சென்னை நகரத்திற்கு இன்று 373வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நகர் முழுவதும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை அருங்காட்சியகத்தில், புகைப்பட மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மாநகரின் பாரம்பரியத்தை விளக்கும் பல்வேறு கலைப் பொருட்களும், அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம், கடந்த 1639ம் ஆண்டு இதே தினத்தில் உருவானது. தமிழகத்தின் தலைநகராகவும், பல்வேறு நிறுவனங்களின் தலைமையகமாகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் இன்றைய சென்னை, அன்று பல்வேறு கிராமங்களாகப் பிரிந்து கிடந்தது.
ஆங்கிலேயர்களின் குடியிருப்பு பகுதியாக உருவாக்கப்பட்ட மதராஸ் பட்டணத்தில், ஓராண்டுக்குப் பின்னர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உருவாக்கப்பட்டு பின்னர் திருவல்லிக்கேணி, எழும்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு போன்ற பகுதிகள் உருவாகின.
1947ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக இருந்த சென்னை, 1956ம் ஆண்டு தமிழகத்தின் தலைநகராகவும் உருவெடுத்தது. பின்னர் 1996ம் ஆண்டு சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த நகரம், அனைத்து தரப்பு மொழி பேசும் மக்களை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நகராகவே திகழ்ந்து வருகிறது.


சென்னை மாநகரத்தின் இன்றைய வயது 373. இதனையோட்டி ஏவிஎம் சரவணன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
1639 ஆம் ஆண்டு சென்ன கேசவ நாயக்கரிடமிருந்து ஆங்கிலேயர்கள் இடத்தை வாங்கி கட்டிய சென்னை புனித ஜார்ஜ் கோட்டைதான் இன்று, தமிழ்நாடு அரசு தலைமை செயலமாக இயங்கி வருகிறது. சென்னையின் அடையாளமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன், தலைமை செயலகம், சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆகியவைகள் விளங்குவது குறிப்பிடத் தக்கது. தற்போதைய சென்னை அண்ணா சாலை அப்போது சென்னை தாமஸ் மவுன்டை இணைக்கும் சாலையாக இருந்ததாலேயே மவுன்ட் ரோட் என்று அழைக்கப் பட்டது.

1639ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டேஆண்ட்ரூ கோகன் சென்னப்பட்டிணத்தில் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்பு கட்ட முடிவு செய்தனர். பின்னர் ஓராண்டு கழித்து புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து தான் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த காரணத்தால் சென்னப்பட்டிணத்தை சுற்றி இருந்த திருவல்லிக்கேணிபுரசைவாக்கம்,எழும்பூர்சேத்துப்பட்டு போன்ற கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

தொடர்ந்து 1688ம் ஆண்டு சென்னையை முதல் நகரசபையாக அறிவித்தார் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை ஆன பெருமை சென்னைக்கு கிடைத்தது.

இந்நிலையில் 1746ல் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை நகரை பிரான்ஸ் நாட்டினர் கைப்பற்றினர். பின்னர் 1749ம் ஆண்டு அவை மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இரண்டாம் முறை சென்னை ஆங்கிலேயர்கள் கைக்கு வந்த பிறகே அதீத வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களை சென்னையுடன் இணைக்க ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. 

கிராமமாக இருந்த சென்னப்பட்டிணம் மதராஸ் மாகாணம் மற்றும் மதராஸ்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மகாணாத்தின் தலைநகரானது சென்னை.

பின்னர் 1956ம் ஆண்டு இந்திய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். கடந்த 1996ம் ஆண்டு மதராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை என்று அழைக்கப்பட்டது. பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் காஸ்மோபாலிடன் நகரமாக உள்ளது சென்னை. 


    
சென்னையின் வயது 373 , இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்துக்கள் கூறுவோம்.



நன்றி : தினமலர் ,ஒன் இந்தியா 
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment