2) கியாமுல்லைல் + வித்ரு
3) தஹஜ்ஜத்து + வித்ரு
4) தராவீஹ் + வித்ரு
இவ்வாறு நான்குப் பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே தொழுகையை தான் என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெளிவாகவில்லை.. மேற்கண்ட எல்லா தொழுகையிலும் வித்ரு சேர்ந்து வருவதே இது ஒரே தொழுகை தான் என்பதை விளக்கிவிடும்.
நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் வெவ்வேறு தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள வெவ்வேறு பெயர்கள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.
தூங்கியெழுந்து தொழுதால் தஹஜ்ஜுத் என்கிறோம். ரமழானில் தொழுதால் தராவீஹ் என்கிறோம்.ஆனால் இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.
இரவில் தொழுவதால் ‘ஸலாத்துல் லைல்’ இரவுத் தொழுகை என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் ‘கியாமுல் லைல்’ என்றும்,குர்ஆனில் ‘தஹஜ்ஜத்’என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் ‘தஹஜ்ஜத்’ என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் ‘வித்ரு’ என்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.
தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை.மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.
தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை.மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.
இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழமுடியாமல் போகும் என அஞ்சுபவர் அதன் ஆரம்பப் பகுதியில் ஒற்றைப்படையாகத் தொழட்டும். யார் இரவின் கடைசிப் பகுதியில் தொழ ஆர்வங்கொள்கிறாரோ அவர் அதன் கடைசிப் பகுதியிலேயே ஒற்றைப்படையாகத் தொழட்டும் ஏனெனில் இரவின் கடைசிப் பகுதியின் தொழுதல் சாட்சி கூறப்படும் அதுவே சிறந்தது” என நபியவர்கள் கூறினார்கள்
ஆதாரம் : முஸ்லிம் 1802.
ஆதாரம் : முஸ்லிம் 1802.
தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.
”நபி(ஸல்)அவர்கள் இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களே… ஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..” என்று சந்தேகம் வரலாம்.
‘வித்ரு’ என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.‘உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்’ என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் ‘வித்ரு’ என்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
‘வித்ரு’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றை’ அல்லது ‘ஒற்றைப்படை’ என்று பொருள்.உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.
எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி – தராவிஹ் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் “வித்ரு- ஒற்றைப்படை” இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.
வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.
எல்லாம் வேறு வேறு தொழுகை என்றால் எல்லா தொழுகை முடிவிலும் கடைசி தொழுகையாக “ஒற்றைப்படை - வித்ரு” தொழுகை எப்படி வரும்.?
நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – திர்மிதி 419)
மேற்கண்ட ஹதீஸ் மூலமாக.. இரவு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் இரவின்முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் தொழுதிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரே தொழுகை தான் வேறு வேறு நேரங்களில் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இரவில் தஹுஜ்ஜத் தொழுகையைக் கடைப்பிடியும்! இது நீர் செய்ய வேண்டிய அதிகப்படியான தொழுகையாகும்!” (அல்குர்ஆன் 17:79)
அல்லாஹ் ஜல்ல ஷானுஹுத் தஆலா அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் அவர்களை இரவில் எழுந்திரித்து தொழுமாறு கட்டளையிட்டுள்ளான். தஹஜ் ஜுத் என்றால் இரவில் தூங்கிப் பின் எழுந்திரிப்பது என்பது பொருள் ஆகும். இஸ்லாத்தில் இரவுத் தொழுகைக்கென தனி சிறப்பிடம் கௌரவமான நன்மைகள் உள்ளன.
ஒருமுறை அண்ணலாரிடம் கடமையான தொழுகைக்குப் பிறகு எந்தத் தொழுகை சிறப் பானது? என்று வினவப்பட்டது. அதற்கு எம்பெருமானார் இரவுத் தொழுகை எனப் பதில் அளித் தார்கள்.
“நாம் இந்த அமானிதத்தை வானங்கள்? பூமி, மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்தபோது அவை இதனை ஏற்கத் தயாராகவில்லை. இதனைக் கண்டு பயப்பட்டன. ஆனால் மனிதனோ இதனை ஏற்றுக் கொண்டான்.” (33:72)
“இறைவனின் பக்கம் அழைப்பது” என்பது மிகவும் சிரமமான தொரு பணியாகும் என்பதே (மக்கள் எதிர்ப்பு) அதன் தன்மையாகும். எனவே இத்தகைய கடினமான பணியைச் செவ்வனே நிறை வேற்ற வேண்டுமானால் இரவுத் தொழுகை தொழுது வந்தால் தான் சத்தியம்!... அல்லாஹ் ஜல்ல ஷானுஹுத் தஆலா அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லிம் அவர்களை இரவில் எழுந்திரித்து தொழுமாறு கட்டளையிட்டுள்ளான். தஹஜ் ஜுத் என்றால் இரவில் தூங்கிப் பின் எழுந்திரிப்பது என்பது பொருள் ஆகும். இஸ்லாத்தில் இரவுத் தொழுகைக்கென தனி சிறப்பிடம் கௌரவமான நன்மைகள் உள்ளன.
ஒருமுறை அண்ணலாரிடம் கடமையான தொழுகைக்குப் பிறகு எந்தத் தொழுகை சிறப் பானது? என்று வினவப்பட்டது. அதற்கு எம்பெருமானார் இரவுத் தொழுகை எனப் பதில் அளித் தார்கள்.
“நாம் இந்த அமானிதத்தை வானங்கள்? பூமி, மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்தபோது அவை இதனை ஏற்கத் தயாராகவில்லை. இதனைக் கண்டு பயப்பட்டன. ஆனால் மனிதனோ இதனை ஏற்றுக் கொண்டான்.” (33:72)
தொகுப்பு: மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment