ஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.
முன்னுரை....
தினமும் நிறைய ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது இதன் மூலம் பாதளத்துக்கு செல்லும் மக்களின் மனநிலையை என்ன வென்று சொல்வது மல்டி லெவல் மார்க்கெட்டிங்அடிப்படையிலே, ஒருவரிடம் பணம் வாங்கி, அதன் அடுத்தவருக்கு(பொருளாக) கொடுத்து பெருக்கிகொண்டிருந்த இந்த திட்டம் வெற்றிபெறவாய்ப்பே இல்லை என்று எத்தனையோ நல்லுள்ளங்கள் எச்சரித்தும், சீக்கிரம் லட்சாதிபதி, கோடீஸ்வரன் ஆகிவிட வேண்டும் என்ற ஆசைதான் இதற்கு காரணம்.
ஆசைதான் இதற்கு காரணம்....
ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பார்கள் மீண்டும் அது உண்மையாகிவிட்டது.. கலைமகள் சபாவின் மரம் வளர்ப்பு, தேக்குமரம் வளர்ப்பு, காந்தப்படுக்கை, பியர்லஸ் போன்ற நிறைய ஏமாற்று தொழில்கள் ஆரம்பிக்கும் போது அதிக பரபரப்பாக பேசப்படும், கொஞ்ச நாட்கள் கழித்து அதைப்பற்றியான முறைகேடுகள் அதிகமாகி அந்த தொழில் செய்தவர்கள் ஊரைக்காலி செய்திருப்பர் இல்லை எனில் மஞ்சள் நோட்டீஸ் வாங்கி என்னிடம் ஒன்றும் இல்லை என்று கையை விரித்துவிடுவர்..
கடந்த 6 வருடத்திற்கு முன் ஈரோட்டில் கம்ப்யூட்டரில் 5 ஆயிரம் கொடுத்தால் 4 ஆயிரத்துக்கு டேட்டா தருகிறேன் நீங்கள் சரியாக முடித்துக்கொடுத்தால் மாதம் 4 ஆயிரம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி 100 கோடிக்கு மேல் ஏமாறினர். அதில் என் ஒருவர் 25 இலட்சம் கட்டி ஏமாந்தார் இது நடந்ததும் ஈரோட்டு அருகே தான்.
கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு பகுதியில் அதிக மக்களை கவர்ந்து இழுத்தது ஈமு கோழி விளம்பரம் நீங்கள் 1 லட்சம் முதலீடு செய்தால் நாங்கள் மாதம் 10000 தருகிறோம் ஊதியமாக என்று கவர்ச்சியான வார்த்தைகள், கவர்ச்சியான விளம்பரங்கள், பிரபல நடிகர்கள் பலரின் பேச்சு, ஊரெங்கும் பேனர், தட்டிகள், திருவிழா என்றால் ப்ளக்ஸ் பேனர்கள், திருவிழாவிற்கு நன்கொடைகள் போன்றவைகளை நம்பி சிறுக சிறுக குருவி சேர்த்தாற்போல் பணத்தை சேர்த்தவர்கள் எல்லாம் முதலீடு செய்ய ஆரம்பித்தனர் ஈமு கோழியில்.
ஈமு வின் பயன்கள் என அதற்காக தனி பட்டியலிட்டு ஈமுவில் இருந்து என்ன தயாரிக்கலாம் அதன் பயன்பாடு என்ன வென்று விளாவாரியாக சொல்லி ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் போன்ற பொன்மொழிகள் மட்டுமல்லாமல் ஒரு ஈமு கோழி 30000க்கு விற்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற ஆரம்பித்தனர்.

நம் மக்களும் 1 இலட்சம் முதலீடு செய்கிறோம் அதற்கு 6 ஈமு கோழிகள் தருகின்றனர் ஒரு கோழி 30000 என்று கணக்கிட்டால் 6 ஈமுவுக்கு 1,80,000 கிடைக்கும் அதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று பகல் கனவு கண்டு முதலீடு செய்கிதுள்னர். இவர்கள் முதலீடு செய்தது மட்டுமின்றி பக்த்து வீடு, எதிர்த்த வீடு, மாமன், மச்சான், பங்காளி என கேன்வாஸ் செய்கின்றனர் அதற்கு தனி ஊக்கத் தொகை பெற்று அதில் அக மகிழ்ந்தனர்.
ஈமு கோழி ஆஸ்த்திரேலிய பறவை என்கின்றனர் ஆனால் அங்கு இருக்கும் கோழியை விட ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் கோழிகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகம் இருக்கும். சேலம் பைபாசில் செல்லும் போது ஈமு பண்ணைகளை பார்த்ததும் பெருந்துறை வந்துவிட்டோம் என்று சொல்லும் அளவிற்கு பண்ணைகள் பெருகி இருக்கின்றன.
இந்த பண்ணை நிறுவனர்கள் இடத்தையும் முதலீடை மற்றும் கொடுங்கள் நாங்களே செட் அமைத்து கொள்கிறோம், கோழி தருகிறோம், அதற்கு தீவனம் மற்றும் மருத்துவ செலவுகளை பார்த்து கொள்கிறோம் என்று ஈர்க்கும் வசனத்தை பேசி மூதலீட்டை பெறுகின்றனர்.
தினசரி நாளிதழ், வார இதழ், விவசாய இதழ் மற்றும் லோக்கல் தொலைக்காட்சி கடைசியில் உலகம் முழுவதும் தெரியும் தொலைக்காட்சி என்று விளம்பரமாக கொடுத்து காசுக்கு ஆசைபட்ட நம்மக்களை ஈர்க்கின்றனர். விளம்பரங்களில் ஊக்கத்தொகை, மாதசம்பளம், வருட ஊக்கத்தொகை என ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி நம் மனதில் ஆசையை கிளப்பி பணத்தை பிடுங்குகின்றனர்.
1 இலட்சத்திற்கு 3 ரூபாய் வட்டி என்றால் 3 ஆயிரம் தான் ஆகிறது இவர்கள் 10000 தருகிறார்கள் என்றால் மனதில் ஆசை அசைபோடத்தானே செய்யும் ஆசை அதிகமானதன் விளைவுதான் தான் சம்பாரித்த பணத்தை அடுத்தவனுக்கு முதலாக கொடுத்து இப்போது ஐயோ பணம் போச்சே என்று ஒப்பாரி வைப்பது தொடங்கி உள்ளது.
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நடிகர்களின் பகட்டு விளம்பரத்தால் லட்சக்கணக்கில் முதலீடு செய்த பொதுமக்கள் தற்போது குப்பாடு போடுகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் ரூ.200 கோடி மோசடி செய்ததே இந்த குப்பாடுக்கு காரணம்.
தமிழக நடிகர், நடிகைகளிள் விளம்பர மோசடி ....
புதிய பொருட்களை தயாரித்து சந்தைக்கு கொண்டு வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் பொருட்களை பிரபலப்படுத்த நடிகை, நடிகர்களை நாடுகின்றனர். இப்படி விளம்பரத்தில் வரும் நடிகர்களை நம்பி பொதுமக்களும் அந்த பொருட்களை வாங்கி விடுகின்றனர். கடைசியில்தான் தெரிகிறது அந்த பொருட்கள் அனைத்தும் போலியானவை என்று. அதேபோலதான் தற்போது ஈமு கோழி வளர்ப்பு விளம்பரமும்.
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கலாம் என்று ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் தமிழக நடிகர், நடிகைகள் வைத்து பிரபலப்படுத்தியது. இந்த விளம்பரத்தில் அதிக பணத்தை வாங்கிக் கொண்டு நம்ம நடிகர், நடிகைகள் நடித்து விடுகின்றனர். அந்த வகையில் ஈமு கோழி விளம்பரத்தில் நடிகர்கள் பார்த்தீபன், பாக்கியராஜ், தலைவாசல் விஜய், பறவை முனியம்மா, டெல்லி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இதில், நடிகர் பார்த்திபன் சேல் மாவட்டம் மேட்டூரில் உள்ள 'பேபி ஈமு பாம்ஸ் மேட்டூர் டேம்' என்ற தனியார் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரம், வாழ்க்கை வாழத்தான், வாழ்ந்து ஜெயிக்கத்தான் என்ற பாடலுடன் தொடங்குகிறது. பின்னர், முட்டையில் இருந்து கோழி வந்திச்சா, கோழியிலிருந்து குஞ்சு வந்திச்சா என்று குழந்தைகள் கேட்க அதற்கு நடிகர் பார்த்தீபன், முட்டையில் இருந்து கோழி வந்திருக்கலாம் ஆனா ஈமு கோழியில் இருந்துதான் இலாபம் வந்தது என்கிறார்.
பின்னர், ருக்கு ருக்கு ஈமு, கோடி கோடி கொட்டுதுங்கு இலாபம், கொக்கரக்ரோ கொக்கோ என்ற பாடலுடன் 'கோழினா ஈமு பேபினா இலாபம்' விளம்பரத்தை முடித்து வைக்கிறார் பார்த்தீபன்.
இப்படி பிரபல நடிகர்கள் நடித்துள்ள விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் நம்பி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு 5 நிமிட விளம்பரத்தில் நடித்து விட்டு சென்று விடுகின்றனர் நடிகர்கள். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்தான்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர்பொதுமக்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான சுசி ஈமு கோழிப்பண்ணையும், அதன் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் பல லட்சம் முதலீடு செய்திருந்தனர். இவர்களுக்கு ஈமு கோழி வளர்க்க நிறுவனத்தின் மூலம் செட் அமைத்து கொடுக்கப்பட்டு, வளர்ப்பதற்கு கூலியாக மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அரசு நடவடிக்கை ...
விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், ஈமு கோழி நிறுவனத்தால், 72 லட்சம் ரூபாய் செலுத்தியதை மோசடி செய்ததாக, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
பெருந்துறையில் உள்ள ஈமு கோழி நிறுவனத்தில், 7.50 லட்சம் ரூபாய் செலுத்தி ஏமாற்றப்பட்டதாக, காரியாபட்டி விவசாயி சுரேஷ்குமார் பொருளாதார குற்றபிரிவில் புகார் செய்தார். இவரைப் போல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 பேர், ஈமு கோழி நிறுவனம் தங்களிடம் 72 லட்சம் ரூபாய் வரை பெற்ற கொண்டு, இது வரை ஈமு கோழி குஞ்சுகள் வளர்ப்பதற்கான ஷெட்டு, மாதமாதம் தருவதாக கூறிய ஆறாயிரம் ரூபாய் கொடுக்கவில்லை, என புகார் தெரிவித்துள்ளனர். இதுவரை 500 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக சுசி ஈமு நிறுவனத்தின் மீது அதிக அளவில் மோசடி புகார்கள் வந்துள்ளன. இதில் ஈரோட்டில் 4, கோவையில் 2, கடலூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்குகள் என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், குயின் ஈமு நிறுவனத்தின் மேலாளர் அன்பழகனை பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், திருச்சி மன்னார்புரம் பல்துறை அலுவலகக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம்.
இதன் தொலைபேசி எண். 0431-2422220 என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசைக்கோர் அளவில்லை ...
ஈமு கோழியின் விலை அதிகம் என்பதும், இதன் இறைச்சி, எண்ணெய், நகங்கள் எல்லாமும் விலை போகும் என்பதும் உண்மைதான். ஆனால், இதை யார் வாங்குகிறார்கள், சந்தையின் தேவைஅளவு என்ன என்று எந்த உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல், முதலீடு செய்தவர்களின் அறியாமைதான் மோசடி செய்தவர்களின் முதலீடு.
"விவசாயத்தில் நஷ்டம். ஆகவே இதிலாவது கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்றுதான் ஈமு கோழி வளர்ப்புக்கு ஆட்பட்டோம்' என்று அப்பாவித்தனமாக மக்கள் சொல்கிறார்கள். விவசாயம் பொய்த்தது என்பதற்காக பொய்யான திட்டங்களில் முதலீடு செய்யலமா? வானம் ஒருமுறை பொய்த்தாலும் மறுமுறை அள்ளிக்கொடுக்கும். இந்த மோசடிக்காரர்கள் இருந்த அனைத்து முதலீட்டையும் அல்லவா துடைத்துச் சென்றுவிட்டனர்.
விழிப்புணர்வு...
தேக்கு மரம் வளர்த்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதை வெட்டிப் பணம் தருகிறோம் என்கிற திட்டத்தில் ஒரு கன்றுக்கு சிறிய தொகை செலுத்தினால் போதும் என்றார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரம் இருக்குமா, நாம் இருப்போமோ, அல்லது அந்த நிறுவனம்தான் இருக்குமா என்று எதையுமே யோசிக்காமல் முதலீடு செய்தார்கள் தமிழர்கள்.
வட்டியைக் காட்டி, மரத்தைக் காட்டி, தங்கத்தைக் காட்டி, இறைச்சியைக் காட்டி ஏமாற்றியவர்கள் இப்போது மண்ணைக் காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது வேளாண் நிலமா, வீட்டுமனைக்கான அங்கீகாரம் பெற்றிருப்பது உண்மையானதுதானா? என்கின்ற எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் மனைகளை விற்கிறார்கள். "மண்ணுல போட்டா வீண் போகாது' என்பது விவசாயத்துக்கான பழமொழி. வீட்டுமனைக்கானது அல்ல.
'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா... கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா’ என்ற வரிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். அறிவும் இல்லை!
முடிவுரை:
முதலில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டிய விசயம் நம்மிடம் பணம் வாங்கி அந்த பணத்தை முதலீடாக பயன்படுத்தி அதற்கு ஆசைக்கும் அதிகமான வட்டி கொடுக்கிறேன் என்று நம்பவைத்து செய்யும் தொழில்கள் இன்று வரை வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.
யார் சொந்தமாக தொழில் செய்து அதை விற்பனைக்கு கொண்டு சென்று வியாபார உத்தியில் விற்பனையை பெருக்குகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
யார் சொந்தமாக தொழில் செய்து அதை விற்பனைக்கு கொண்டு சென்று வியாபார உத்தியில் விற்பனையை பெருக்குகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment